Tuesday, November 6, 2012

பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்....


                      பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்
                       ----------------------------------------------------------


வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
                                                --- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
                                      ---எச். எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
                                      
மனைவிக்குக் கார் கதவை ஒருவன் திறந்து விடும்போது. ஒன்று நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.
நான் என் மனைவியை எங்கு அழைத்துச் சென்றாலும் தவறாமல் வீட்டுக்கு திரும்பி  வந்து விடுகிறாள்.
நான் என் மனைவியை எங்கள் திருமணநாள் விழாவுக்கு எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத இடத்துக்கு என்றாள். அப்படியானால் “ சமையல் அறைக்கு ?என்றேன்.
                                                  -----யாரோ--
எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால் ஷாப்பிங்  போய்விடுவாள்.
குப்பைத் வண்டி பின்னால் நான் தாமதமாகி விட்டேனா?என்று கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள் ‘ என்றேன்.

அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப் படுகிறான் என்று சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்

உன் மனைவி முன் வாசலில் இருந்தும்  உன் செல்ல நாய் பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்? . நிச்சயமாய் என் நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.                 ----- யாரோ----
ஒருவன் ஒரு வேண்டுதல் கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக கிணற்றுக்குள் எய்யிப் பார்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “ அட... இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே “

( புன்னகை ஒரு சிறந்த நகை. இதைப் படிப்பவரும் அதை அணிந்து கொள்ளட்டுமே )      












15 comments:

 1. சார் நீங்களுமா.....

  எல்லாம் படித்தவைதான். இருப்பினும் மீண்டும் ஒரு முறை ரசித்தேன்.

  ReplyDelete
 2. ரசிக்க வைத்த பொன்மொழிகள்! சில சிரிப்பையும் வரவழைத்தன! நன்றி!

  ReplyDelete
 3. ஏன் இந்த கொலைவெறி!!!!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 5. கோபம் வந்தால்தானே
  மன்னிக்க வேண்டும்,
  ரசித்துப் படித்தால்....
  சுவாரஸ்யமான ஜாலிப் பதிவுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. "வேண்டுதல்' செம சிரிப்பு.

  ReplyDelete
 7. ஆனாலும் ஐயாவுக்குக் குசும்பு அதிகம்!
  ரசித்தேன்.

  ReplyDelete
 8. 'பெண்களும் மனைவியரும்' எவ்வளவு குழப்பமான தலைப்பு!

  ReplyDelete
 9. எல்லாம் படித்தவைதான். இருப்பினும் மீண்டும் ஒரு முறை ரசித்தேன்.\\ Same blood.

  ReplyDelete
 10. ஏய்...யாரங்கே? இந்த'யாரோ'வுக்கு ரொம்பத்தான் ஆகிக்கிடக்கு!!!!!

  என்ன ஒரு தைரியம்!!!!

  பெண்களுக்கு(ம்) நகை(சுவை) பிடிக்கும்:-)))))

  ReplyDelete

 11. @ ஆதிரா,
  @ எஸ்.சுரேஷ்,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ ஈசி 2 மலர்.
  @ திண்டுக்கல் தனபாலன்,
  @ ஒட்டி தமிழ்,
  @ ரமணி.
  @ மாதேவி,
  @ யோஹன் பாரிஸ் ,
  @ ஜீவி ,
  @ ஜெயதேவ் தாஸ்
  @ துளசி கோபால்
  பதிவின் கடைசியில் எழுதி இருந்தது போல் படித்தவர் புன்னகை அணிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்தப் பதிவு சில புதிய வாசகர்களை பெற்றுத் தந்து இருக்கிறது , பதிவுக்கு வந்து படித்து பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 12. பொன் நகையைவிட
  பெண்கள் புன்னகையை ரசிப்பார்கள்.

  ReplyDelete