இப்படியும் இருக்கலாமோ..? ( ஒரு சிறுகதை.)
-------------------------------------
இவளுக்கு பெயர் சூட்ட விரும்பவில்லை. பெயர் தெரியாமலேயே அபலையாக, ஆனால் எல்லோராலும் பேசப்படுபவர்களில் இவளும் ஒருத்தி.. இவள் இவளாகவே அறியப் படட்டும்.இவளுக்குப் பெயர்தான் கொடுக்கவில்லையே தவிர இவ்ளைப் பற்றி பலரும் பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்த விஷயங்கள் எல்லாம் இவளுக்கு மட்டும்தான் உண்மையாய்த் தெரியும். பாதிக்கப் பட்டவள் ஆயிற்றே. காலம் கடந்தபின் ஏதேதோ நிகழ்வுகளுக்குப்பின் இவளும் முக்கிய செய்தி ஆகிவிட்டாள். இவள் தைரியசாலி என்றோ வீராங்கனை என்றோ அழைக்கப் படுவதில்லை.. அப்படி அழைக்கப் படுவதை இவள் விரும்புவதுமில்லை.இவளை உபயோகித்தவர்கள் இவள் உயிரை எடுக்க வில்லையே. அப்படி நேர்ந்திருந்தால் இவளும் வீராங்கனையாகக் கருதப் படுவாளோ.? இப்போது அதுவா பிரச்சனை. ஆண்டுகள் பல கழிந்துவிட்டது. இவளையும் இவளுக்கு நேர்ந்ததையும் நாடே அசைபோடுகிறது. இதெல்லாவற்றுக்கும் ஆரம்பம்தான் என்ன.?நினைவுகள் சுழல்கிறது.
“ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல”
என்று பாடவைத்தவன். பேசியே மயக்கியவன். இவளும் பெண்தானே. அம்சமாய் இருந்தாள். பருவம் பலரையும் சுண்டி இழுத்தது. ஆனால் இவள் விழுந்தது அவன் மிடுக்கில், தோரணையில்,நடையில் பேச்சில். சுருங்கச் சொன்னால் எப்போதும் அவனை நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திப் பாதுகாத்து.வந்தாள். சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலை. கனவு காணும் பருவம். அவனுக்கோ இவள் மேல் காதலிருந்தாலும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையும் இருந்தது. கண்ணும் கண்ணும் கலந்தாயிற்று. காதலின் முதல் படி அது. கையும் கையும் சேர வேண்டும். வேகம் பிறக்க வேண்டும். உடலில் வெப்பம் ஏறவேண்டும். அவளை அடைய வேண்டும். பிறகு யோசிக்கலாம் என்ன செய்வதென்று. மனம் கணக்குப் போட திட்டங்கள் உருவாக்க வேண்டும். அவனுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும், திட்டமிட்டதைச் செய்யவேண்டும்.. இலக்கு நல்லதாக இருந்தால் நல்ல விஷயம்தான்.
அவனைப் பொறுத்தவரை முதலில் இவளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இவள் அவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றால் அவனுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் செய்து விட்டால் போயிற்று. என்று கணக்குப் போட்டவன் சாதாரணமாகப் பெண்கள் விழும் குழியைப் பறிக்கத் திட்டமிட்டான். முகஸ்துதிக்கு மயங்காதவரே இல்லாதபோது, காதலனின் புகழ்ச்சி பேச்சில் பருவப் பெண் விழுந்துவிட்டாள்.
“ உனக்கு உன் கழுத்தே அழகு சேர்க்கிறது. நீளமான கழுத்துள்ள பெண்கள் அழகானவர்கள்.”
முதல் அத்திரம். பாய்ந்தது. பொதுவாக தரை நோக்கி நடப்பவள் தலை நிமிர்ந்து ( கழுத்து தெரியும்படி) நடக்க ஆரம்பித்தாள்.
”பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது கூந்தல்தான்.. உனக்கென்ன..கூந்தல் இருக்கும் மகராசி. பின்னி விட்டால் என்ன... அள்ளி முடிந்தால் என்ன.எல்லாமே அழகுதான்..”
“ உன் தலைக்குப் பூ வைக்காதே. பூவில் வண்டுகள் மொய்க்கும்போது உன் கண்கள் எங்கே என்று தேடவைக்கிறது.”
”உனக்கு இருப்பது கண்ணா ?உன் முகத்தில் வண்டுகள் ஆடுகிறதே என்றல்லவா நினைத்தேன்.”
வித்தை தெரிந்தவன் ஆட்டிப் படைக்க விழுந்துவிட்டாள் பேதைப் பெண். ஓரிரண்டு நாட்கள் இவளைக்காண வராமல் இருந்தான். மனம் சஞ்சலப்பட இவளுக்கு “ வேரூன்றி வளருமென்று விதை விதைத்தேன் இரு விழியாலெ பார்த்திருந்து நீருமிறைத்தேன், பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசிக் காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்”. என்ற பாடல் பின்னணியில் இசைக்கத் தொடங்கியது.
கண்ணும் கண்ணும் பேசியது காதலிசைப் பாடல் வரை வந்துவிட்டது. பெண்மனத்தில் தீபமும் ஏற்றியாகிவிட்டது. இனி என்ன.? கையும் கையும் இணைந்து உதடுகள் உராய்ந்து தீப் பிடிக்க வேண்டும். சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் அமைக்க வேண்டும்.
ஒரு நாள் மாலை. அந்திசாயும் நேரம் வண்டாடும் விழியாலே வலைவீசி வழிநோக்கிக் காத்திருந்தாள். அவன் வருகை கண்டு இவள் எழ , தோளிலிருந்து துகில் சரிந்து விழ. பின்னிருந்த கூந்தல் முன்னால் சரிந்து, விண்ணென்று புடைத்திருந்த சாயாத இரு கொம்புகளைக் காண விடாமல் தடுத்தது. வந்தவன் வார்த்தைகளால் விளையாடி அவளை சரித்துவிட்டான். ஏந்திழையும் தன்னை ஆட்க்கொள்ளப் போகிறவன் தானே என்று வளைந்து கொடுத்தாள். சந்தர்ப்பம் சரியாய் அமைய இவள் அவன் கைகளில். பிறகென்ன. ? உடல் சூடேற இருவரும் முனைந்து வெப்பத்தை அடக்கினர்.
அன்று நடந்ததை இவள் தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா.? ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லையே. அன்று நடந்தது இன்று நினைத்தாலும் இன்பம் தருகிறதே.விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ இணைந்தாயிற்று. இணைகையில் இன்பம் துய்த்ததும் உண்மை. காலம் கடந்து குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவதால் என்ன லாபம்.. இருந்தாலும் இப்படி ஏமாற்றப் படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“ எனக்கு நீ உனக்கு நான் என்று முடிவாகிவிட்டது.ஆனால் இந்தப் பாழும் உலகம் திருமணம் இல்லாமல் இருப்பதை ஏற்காதே. நாம் யாரும் காணாத இடத்துக்குப் போய்விடுவோம். ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் ஊரார்முன் வந்து ஊர் அறிய மணமுடித்துக் கொள்வோம்” என்றான் அவன்.
“ மணம் முடித்துக் கொண்ட பிறகு போவோமே” என்றாள் இவள்.
“ மணம் என்பது ஒரு சடங்கு. உனக்கு என்னைவிட சடங்கில் நம்பிக்கையா.? திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்” என்று ஏதேதோ கூறி இவளை சம்மதிக்க வைத்து ஊரை விட்டுக் கூட்டிப்போனான். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து விட்டது. இருக்க இடம் உண்ண உணவு மிகவும் அத்தியாவசியத் தேவை அல்லவா. நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உடலோடு உறவாடி அவனுக்கு இவள் என்று நிரூபித்துக் கொண்டிருந்தாள்.இருக்க இடத்துக்கு வாடகை கொடுக்க இயலாத போது நண்பன் ஒருவனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். வேலை தேடி ஒருநாள் வெளியே போனவன் அன்றிரவு வரவில்லை. நண்பனின் வீட்டில் அவனுடன் தனியே. இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பன் மிகவும் பதவிசாக நடந்து கொண்டான்.மறுநாளும் இவளது காதலன் வரவில்லை. இரண்டாம் நாளும் நண்பன் நல்லவனாகவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்களுமே நல்லவர்கள்தான்.ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் இருக்க நண்பன் ஒன்றும் சாமியாரில்லையே. இந்தக் காலத்தில் சாமியார்களையே நம்ப முடியவில்லையே. வயிற்றுப் பசியைத் தணிக்கும் நண்பனுக்குக் கடன் பட்டதுபோல் உணர்ந்தாள். காதலன் இன்று வருவான் நாளை வருவான் எனும் நம்பிக்கையில் நாட்கள் நகர. இவளுக்கு இவளது கடன்சுமை அதிகரிப்பதுபோல் தெரிந்தது. நெருப்பும் பஞ்சும் அருகருகே. கடனை அடைக்க தன்னையே நண்பனுக்குக் கொடுத்தாள். கரும்பு தின்னக் கூலியா. முதலில்
தான் தவறு செய்கிறோமோ என்று எண்ணியவள். தவற்றிலும் சுகம் இருப்பது உணர்ந்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். நாட்கள் வாரங்களாகியும் காதலன் வராததால் இவளும் இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.நண்பனின் குடும்பம் அவனிருக்குமிடத்துக்கு வரும் என்று தெரிந்ததும் நண்பன் இவளை இன்னோர் இடத்தில் குடியிருத்தினான். இவளுக்கும் வேறு போக்கிடம் தெரியவில்லை. ஊருக்குப் போனால் குடும்பத்தாரிடம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தும் , காதலன் வரும்வரை எப்படியாவது தன் காலிலே நிற்பதே சரி என்றும் தனக்குத்தானே வாதிட்டுக் கொண்டாள். மனசாட்சி என்பது அவ்வ்ப்போது குரல் கொடுத்து தான் இருக்கிறேன் என்று உணர்த்தும். மனசாட்சி என்பதே இஷ்டப்படி வளைந்து கொடுக்கக் கூடியதுதானே. செய்வது சரி என்று நிரூபிக்க ஆயிரம் காரணங்கள் கூறிக் கொள்ளலாம். பிறகு மனசாட்சியைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
நண்பனுக்கு தன் குடும்பத்தையும் இவளையும் சேர்த்துப் பராமரிக்க முடியாமல் இவளை இன்னும் பலருக்கு அறிமுகப் படுத்தினான். ஒரு முறை சோரம் போனவளுக்கு மறுபடியும் மறுபடியும் பிறருக்கு இன்பம் அளிப்பது தவறாகப் படவில்லை. பின் என்ன. ? நாளொரு கணவன் பொழுதொரு காதலன் என்று இவள் வாழ்க்கை இவள் அறியாமலேயே ஓடத்துவங்கியது. உடலின்பம் என்பது கொடுப்பது மட்டுமல்ல. பெறுவதிலும் இருக்கிறது என்பதை இவள் உணரத் துவங்கினாள். வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தினர். அவரவர்கள் காரியத்துக்கு ஈடு செய்ய இவள் பணயம் வைக்கப் பட்டாள். இள வயதினர், நடுவயதினர் முதியவர்கள் என்றும் , அதிகாரிகள். காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்றும் பலரும் இவளிடம் இன்பம் தூய்த்தனர். இவளது வாழ்க்கையும் ஒரு திசையில் போக ஆரம்பிக்க. பின் எப்போது பிரச்சனை துவங்கியது.?
ஆம். இவளால் இன்பம் அனுபவிக்க முடிந்தவர்களால் தொந்தரவு இருக்கவில்லை. ஆனால் இன்பம் அனுபவிக்க இயலாதவர்கள் வக்கிர செயல்களில் இறங்கியபோதுதான். இவளுக்கு இதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது. வேதனைதான் மிஞ்சியது. பலருடன் இவளும் சேர்ந்து இன்பம் அனுபவித்தவள்தான். ஆனால் வக்கிர செயல்கள் அத்து மீறியபோது அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அங்கிருந்து ஓடுவதுதான். எங்கு போவது.?அப்போதுதான் இவளுக்கு தன் குடும்பத்தார்பற்றிய நினைப்பு வந்தது. அவர்கள் கேள்வி கேட்பார்களே. தான் வஞ்சிக்கப்பட்டதையும் தன்னை பலரும் உபயோகித்துத் தூக்கி எறிந்ததாகவும் கூறலாம்.பெண் என்றால் பேயும் இரங்கும்.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் என்று பலரும் அடையாளம் காட்டப் பட்டனர். வழக்கு தள்ளுபடியாகலாம். குற்றவாளிகள் என்று கருதப் படுபவர்கள் தண்டிக்கப் படலாம். இவளுக்கு ஆதரவு வெகுவாகக் கிடைக்கலாம். உயிருடன் தப்பி வந்து விட்டதால் வீராங்கனை என்ற பட்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்னொரு வீராங்கனையின் தயவால் இவளுக்கு அபலை , ஆணாதிக்க வர்க்கத்தால் சீரழிக்கப் பட்டவள் என்ற அனுதாபம் கிடைக்கலாம். ஆனால் உண்மை இவளுக்கு மட்டுமே தெரியும்.
( அண்மையில் தலை நகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப் பட நாடே ஆர்பரித்து எழுந்தது . சட்ட திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும்என்னும் கோரிக்கைகள் பல எழுந்துள்ளன. இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. Consensual sex , prostitution, போன்றவை பாலியல் பலாத்காரம் என்று கற்பிக்கப் படும் அபாயம் தோன்றவே இந்தக் கற்பனை எழுந்தது. .ஒரு சிறுகதை வடிவில் எழுதி இருக்கிறேன். இது முழுக்க முழுக்கக் கற்பனையே. )
------------------------------------------------------------------------------------- . . .
ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து : இப்படியும் இருக்கலாமோ...?
பதிலளிநீக்குஇது சிறுகதையாகவே இருக்கலாமே...?
அபலைப் பெண்கள் என்றுதான் மீள்வார்களோ?
பதிலளிநீக்குஅட ராமா! கற்பனையா இது?
பதிலளிநீக்குமலரினும் மெலியது காமம்!அதனினும் மெலியது காதல்!காதலினும் மெலியது பெண்மை! அவள் என்ன செய்வாள் பாவம்!ஆணின் நூறு சதவீத தப்போ,அல்லது பெண்ணின் நூறு சதவீத தப்போ, அல்லது இருவரின் ஐம்பது,ஐம்பது சதவீத தப்போ..எதுவாயினும் சேதம் பெண்மைக்குத் தான்! அதனால் பெண் மீது கோபம் வரவில்லை!இரக்கம் தான் வருகிறது...
ஆண் என்றால், புறம்,வலிமை என்றும்.பெண் என்றால் அகம், மென்மை என்று திட்டம் போட்டு சட்டம் போட்ட சமூகத்தின் மீது தான் கோபம் வருகிறது..இந்த சிறுகதையைப் படித்ததும்!
இப்படி பட்ட அபலை பெண்களுக்கு என்று தான் ஒரு நல்ல விடிவு காலம் வருமோ!!!சிறுகதை நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
G.M.B.sir ! It is exactly what haappened in suryaneelly case of Idukku dist.of Kerala! A Bus conductor eloped with a sixteen year old girl and sold her in a brothel! for forty days she was kept and presented to big wigs,govt.fficers,and politicians on demand! one of the politician is the present dy.chairman of rajya sabaha p.j.kurien ! in a case filed with ,the court released all the accused1 On appeal the S.C ordered for retrail. Now there is a demand thatr p.j.kuriean shoud resign and then only the bill on pprotection to wemen should be takenup for discussion in Rajaya saBha.Sir your story is not a fiction ! it is very much real.
பதிலளிநீக்குMy suguession is pl. rewrite the story! It is more like a report than a story1 It can be non narative. with greetings---kashyapan.
பெண் வளைந்து கொடுப்பதாலேயே ஆண் தவறு செய்கிறான் எனச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அந்தப்பெண் எப்போது காதலன் வரவில்லையோ அப்போதே உடனடியாக வெளியேறி இருக்கவேண்டும். மனக்கட்டுப்பாடு இல்லை. ஆனால் இத்தனைக்கும் பிறகு தான் வஞ்சிக்கப்பட்டவள் என எப்படி அவளால் சொல்ல முடிந்தது எனப் புரியவில்லை! :(((((
பதிலளிநீக்குஆனால் பல பெண்கள் விபசாரத்தில் இறங்கியதற்குக் காரணமே காதலும், வீட்டை விட்டு ஓடிப்போனதும், காதலன் நிர்க்கதியாய் விட்டதும் தான். அதில் மாற்றம் இல்லை.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்.--
இது சிறுகதையாய்த்தானே இருக்கிறது
வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி--
இந்தப் பெண் அபலையாகவா சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.? வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி,
/அதனால் பெண்மீது கோபம் வரவில்லை. இரக்கம்தான் வருகிறது/ அந்த தைரியத்தில்தானே (”பேயும் இரங்கும்”) இவள் திரும்பிவந்து வஞ்சிக்கப் பட்டவள் என்று கூறி நீதிமன்றம் வரை போகமுடிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ மலர் easy editorial calendar
இந்தக் கதையின் நாயகி அபலைபோல் தோன்றுவது,இவள் பெண் என்பதாலா.? வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ காஷ்யபன் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி./your story is not fiction.It is very much real/ஐயா இதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன் பத்திரிக்கை ஒன்றில் ஒரு பெண் ஈழப் போராளி எப்படி விபசாரத்துக்குத் தள்ளப் பட்டாள் என்று கூறியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.சில கருத்துக்களை கட்டுரை வடிவில் எழுதினால் எடுத்துக் கொள்ளப்படும் விதமும் கதையாக எழுதினால் எடுத்துக் கொள்ளப்படும் விதமும் வேறாகிறது. இந்தக் கதைக்கே இதுவரை வந்த கருத்துக்கள் ஒருபோல இல்லை. எப்போதும் ஒரு பெண் சொல்லும் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. நான் சொல்ல வந்த கருத்து சட்டத்தில் யாருக்கும் அனுகூலம் அதிகம் இருக்கக் கூடாது. பெண் ஒருத்தி தவறாக ஆண்மீது குற்றம் சாட்ட வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்லவே இந்த வேறு கோண அலசல்.சூரியனல்லி கேஸ் பற்றிய முழு உண்மையும் அந்தப் பெண்ணுக்கே தெரியும். மேலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு செய்தியை அணுகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். கடைபிடிக்கிறேன். உங்களுக்கு மீண்டும் நன்றி. அவ்வப்போது என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்டால் மகிழ்வேன்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம். கதைக்கான காரணங்களை விளக்கி இருக்கிறேன். இவளுக்கு மனம் ஒன்றியதால்தான் அவ்வளவு நாட்கள் அங்கிருந்திருக்கிறாள். கதையில் கூறப்பட்டதுபோல் இன்பம் கொடுப்பவர் இன்பம் பெறவும் செய்கிறார். இன்பம் பெறமுடியாமல் வக்கிர செயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் வெளியேறுகிறாள்.கடைசியில் கதைக்கான காரணம் எழுதி இருக்கிறேன். வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி. அடிக்கடி வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணா்வை அணைத்து!
கவிஞா் கி.பாரதிதாசன்
பிரான்சு
பதிலளிநீக்குவணக்கம்
உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணா்வை அணைத்து!
கவிஞா் கி.பாரதிதாசன்
பிரான்சு
கற்பனை என்றாலும் மனம் கலங்குகிறது
பதிலளிநீக்குPsychology யில் "Arrived Cases" என்று கூறுவார்கள். நான் கிட்ட தட்ட அந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு பேச/கேட்க/பார்க்க இனி ஏதும் இல்லை என்ற நிலை தான்... Only striving to 'accept' things/ status/ affairs as they are... Despite extremely provocative turn of events- day in/ day out. [Thulya nindha stutir mouni-santhushto aena kena chith (Bhagvad Gita:12-19)]
பதிலளிநீக்குபோதுவாகவே, "சிறுகதை" என்ற வடிவத்தில் ஏழுத்தாளர் தன்னுடைய கதா பாத்திரங்களை எதை வேண்டுமானாலும் செய்யவோ/ கூறவோ வைத்து விட முடியும். அந்த செயல்களையும், கூற்றுக்களையும் விமர்சனம் செய்வது கொஞ்சமும் பொருந்தாது. (நாம் என்ன சொன்னாலும் என் கதா பாத்திரம் அப்படி நடந்துகொண்டது என்கிற வாதத்திற்கு பதில் அளிப்பது கடினம்.). ஆகவே, கருத்துப் பரிமாற்றத்திற்கும் இடமில்லை. கதை மாந்தர்களின் செயல், அல்லது- கதை போக்கு, நம் மனத்திற்க்கு இதம் அளித்தால் சரி; மாறாக உள்ளக் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் கதை படித்த நேரம் விரயமானதுதான். ஆகவே, (நேர சிக்கனம் காரணமாக) 'சிறுகதை'களை விட 'கட்டுரை'களைப் படிப்பதையே விரும்புகிறேன்.
சில பல விஷயங்களில் எனக்கென்று ஒரு 'அவிப்ராயத்தை' ஏற்படுத்திக் கொண்டு குதிரைக்கு blinkers அணிவிப்பது போல அணிந்துகொண்டு- எனது தனிப்பட்ட குஹைக்குள் இருப்பதே சுகமாக இருக்கிறது. [Arathir jana samsadhi (Bhagavad Gita:13-10)]. இதுவும் கூட ஒரு வித 'தன்னலம்' தான்!
உதாரணமாக, நம்மை சுற்றியுள்ள சமூஹத்திலேயும் மேலும் அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிலும் கூட, சிலர் தவறான நடவடிக்கைகளை/ தீர்மானங்களை செய்துவிட்டு அவதிப் படுவதைக் காணும்போது நாம் 'வருத்தப்படுவதைத்' தவிர, வேறெதுவும் செய்ய முடிவதில்லை. அதுமாதிரியான நபர்களோடு (Eg: Alcoholics) நான் உரையாடுவதையும், பழகுவதையும் கூட தவிர்த்து விடுகிறேன்.
தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை- என்கிற கோணத்தில் பார்த்தால் திருமதி. கீதா சாம்பசிவம் கூறியிருப்பது போல இந்தச் சிறுகதையில் அந்த கதாபாத்திரம் அனுபவித்த எல்லா விபரீதங்களுக்கும் காரணம்- அவருக்கு basic discipline இல்லாததுதான். (Here, 'discipline' is the ability to distinguish between opportunities and temptations.)
நாம் கரையோரமாக ஒதுங்கி நின்று "ஆஹா! என்னே இறைவனின் திருவிளையாடல்!" என்று "வேடிக்கை" பார்த்திருக்கலாம் ('choice less awareness'). அல்லது, உள்ளம் மிகவும் அமைதி இழந்து தவித்தால், இந்த கதா பாத்திரத்திற்காக உண்மையாகவே 'பரிதாபப்' படலாம். யாருக்கு வேண்டும் உன் 'பரிதாபம்'?- என்றால்- அதுவும் தவிக்கும் என் உள்ளத்தை சமனப்படுத்துவதர்க்காகத்தான்.
-மாலி
சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் நல்லவர்களே....100 % உண்மை ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ மாலி-
உங்கள் பின்னூட்டம் பல சிந்தனைகளைக் கிளறுகிறது. தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்வது ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பது சீரணிக்க சற்றுக் கடினமாக இருக்கிறது.எனக்கும் சில விஷயங்களில் பொருள் புரியாமல் அறியாமை இருளுக்குள் இருப்பதே சுகம் என்றும் எழுதி இருக்கிறேன். நம் அபிப்பிராயங்களால் இந்த உலகத்தை மாற்றி விட முடியாதுதான். இருந்தாலும் பல முடிவுகளை எடுக்க பொதுவாக மக்களின் REACTIONS அவசியம் தேவை என்று நம்புகிறேன். அப்படியான ஒரு reaction தேடியே இக்கதை புனையப் பட்டது. திரு. காஷ்யபன் இதன் நிகழ்வுகளை சூரியநெல்லி நிகழ்வுகளோடு ஒத்துப் போவதாக எழுதி இருக்கிறார். ஆனால் எனக்கோ ஒரு ஈழப்பெண் போராளியின் கதை படித்து உதித்ததே இக்கரு. மேலும் சட்டங்கள் பல இயற்றும்போது எதிர்படக் கூடிய தடைக் கற்களையும் அடையாளம் காட்டி இருக்கிறேன். மற்றபடி என் கதாபாத்திரத்தின் செயல்கள் எதையும் சரி என்றோ தவறு என்றோ குறிப்பிடவில்லை என்றே எண்ணுகிறேன். எல்லாவற்றையும் மீறி இப்பதிவுக்குப் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
தப்பு சரி என்று moral judgment செய்ய முடியவில்லை. சாமர்த்தியமான பெண். she knew what she wanted. சில அபலைகளுக்கு இவள் மேல்.
பதிலளிநீக்கு(இதையோ இதைப்போலவோ முன்பே எழுதியிருக்கிறீர்கள் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது.)
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
/சாமர்த்தியமான பெண்.she knew what she wanted. சில அபலைகளுக்கு இவள் மேல்/ இந்த மாதிரி பெண்கள்சட்டத்தை அவர்களுக்குச் சாதக மாக பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. /இதையோ இதைப் போலவோ முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது/ ஒரு வேளை இதையே ஒன்றுக்கும் மேற்பட்டு படித்தீர்களோ என்னவோ. சான்ஸே இல்லை. அண்மைக் கால நிகழ்வுகளின் பாதிப்பே இக்கதை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கதையை வாசிக்க எப்போதோ அழைத்தீர்கள் நேர நெருக்கடிகாரணமாக தாமதமாகிவிட்டது அதற்கு மன்னிக்கவும்..
பதிலளிநீக்குஆணின் ஆசை வார்த்தையில் பெண் மயங்குவது இயல்பு ஆனால் சொந்தபுத்தி ஒன்று இருந்தால் இந்தவிபரீதம் இல்லை..கதாநாயகியின் நிலமை பரிதாபமாகவும் இருக்கிறது சற்றே கடுப்பாகவும் இருக்கிறது..ஆனால் அபலைகள் பலரின் எதார்த்த நிலை இதுதான் அதை அழகிய சிறுகதையாகக்கொண்டுபோயிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்!