Friday, February 8, 2013

சிறு பொறி காட்டுத்தீ.


                                            சிறு பொறி, காட்டுத்தீ. !
                                          -----------------------------------



எரிதழல் வாசன் AMWAY எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பனி பற்றி எழுதி இருந்தார். பலரும் அறியாமையின் விளைவாகவும் பேராசையின் காரணமாகவும் ஏமாறுகிறார்களே என்னும் ஆதங்கம் அவர் பதிவில் தெரிந்தது. அதைப் படிக்கும்போது எனக்கு இந்த மாதிரி விஷயங்களுக்கு முன்னோடி என்று நான் கருதுவதை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இந்த சிறு பொறியிலிருந்து mlm மாதிரியான வியாபார உத்திகள் உருவாகி இருக்கலாம் என்று கருதுகிறேன். 




அந்தக் காலத்தில் போஸ்ட் கார்டுகள் மூலம் பரவியது இந்த உத்தி. பத்து பேருக்கு அவர்களது முழு முகவரியுடன் கடிதம் வரும் அந்தக் கடிதத்தில் பத்து பேருடைய முகவரி இருக்கும். கடிதம் பெறுபவர் கடிதத்தில் இருக்கும் பத்து பேரின் முகவரிக்கு ஆளுக்கு ரூபாய் ஒன்று மணி ஆர்டர் செய்ய வேண்டும். பெறுபவர் இன்னும் பத்து பேருக்கு இதே மாதிரிக் கடிதம் எழுத வேண்டும். எழுதும் போது இவருக்கு வந்த கடிதத்தில் இருந்த கடைசி நபரின் பெயருக்குப் பதில் இவருடைய பெயரையும் முகவ்ரியையும் எழுதி அனுப்ப வேண்டும். இதனால் இவர் கடிதம் அனுப்பியவர்கள் மூலம் இவருக்கு ரூபாய் ஒன்று ஒவ்வொருவரிடமிருந்தும் வரும். இந்த செயினின் இணைப்பு துண்டிக்கப் படாமல் தொடர்ந்தால் சில நாட்களில் இவருக்கு முகமே தெரியாத பலரிட மிருந்தும் ரூபாய் ஒவ்வொன்றாக. வந்து கொண்டே இருக்கும். கணக்குப் போட்டுப் பாருங்கள் பத்து நூறு ஆயிரம் என்று பலரது கார்டுகளில் இவரது முகவரி இருக்கும். பணமும் வந்து கொண்டே இருக்கும். இதில் மிகவும் முக்கியம் என்னவென்றால் இணைப்பு துண்டிக்கப் படக் கூடாது.




மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், யாரும் யாரையும் ஏமாற்றுவது இல்லை. உங்களுக்கு செலவு ரூபாய் பத்தும், மணி  ஆர்டர் கமிஷனும், கார்டுக்கான செலவும் மட்டும்தான்.

ஆனால் இப்போது புரிகிறது. இது என்ன எனன விதமாகவோ பரிணாம மாற்றம் கொண்டு.மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்குக்கு வித்தாக இருந்திருக்கிறதோ என்று. பதிவைப் படிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். பகிரலாமே. 
---------------------------------------------------------    .           .              
 

 

6 comments:

  1. எனக்கு இந்த அனுபவம் இல்லை.
    ஆனால் இதில் சேர சொல்லி வந்து பேசியவர்க்ளால் இந்த விஷயம் தெரியும்.

    ReplyDelete
  2. ஒரு சின்ன திருத்தம்.

    செயினின் முதல் கண்ணியில், அதாவது ஆரம்பத்தில் கம்பெனிக்கு பத்து ரூபாய் அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு தான் நீங்கள் சொல்கிற மாதிரி அவரவருக்கு அவரவரே அனுப்புதலே ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  3. இந்த சிறு பொறியிலிருந்து mlm மாதிரியான வியாபார உத்திகள் உருவாகி இருக்கலாம் ..//

    சிறு பொறியின் அறிமுகம் .வியக்கவைத்தது ..

    ReplyDelete

  4. @ திண்டுக்கல் தனபாலன் -இந்தப் பதிவினைப் படித்து பகிர்வதற்கு நன்றி.
    @ கோமதி அரசு.-வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி.
    @ ஜீவி- -எனக்குத் தெரிந்தவரை கம்பெனி என்று ஏதும் இருந்ததாக நினைவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார்.
    @ இராஜராஜேஸ்வரி. mlm-இன் வித்தாக இருந்திருக்கலாமோ எனும் எண்ணமே பதிவிட வைத்தது. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அம்வே சுழலில் சிக்க வைக்கப் பல முயற்சிகள் நடந்தன. அண்டை வீட்டார் இதில் இணைந்திருந்ததினால் எங்களையும் வற்புறுத்தி ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கும் அழைத்துச் சென்றார்கள். ஏனோ எங்களால் இணைய முடியாமல் போனது.ஆனால் இன்னும் அவர்களின் முயற்சி மட்டும் தொடர்கிறது.

    ReplyDelete