Thursday, May 22, 2014

கல்யாணம் எங்கள் வீட்டுக் கல்யாணம் ....!


                    கல்யாணம் ,எங்கள் வீட்டுக் கல்யாணம் ......!
                   ------------------------------------------------------------



 எனக்கு நானே சில கேள்விகள் கேட்பது வழக்கம். ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது. அது தவிர வேறென்ன மாற்றம் உன் வாழ்வில் நிகழ்த்துகிறாய், ? மாற்றங்கள்தானே மாறாதது. நான் என்ன புதிதாய் நிகழ்த்த. முன்பே வாழ்க்கையின் பகுதிகளை எட்டெட்டாய்ப் பிரித்து எந்த எட்டு மகிழ்ச்சி தந்தது என்று கேட்டு விடையும் அளித்திருந்தேன் அம்மாதிரி வாழ்க்கையின் நிகழ்வுகளை அசைபோடும் போது அவற்றில் சில இடுகைக்கான எண்ணங்களை விளைக்கிறது. அது தவிர இந்தமாதிரி சுய சிந்தனைகளைப் படிப்போருக்கு சில விஷயங்கள் புதிதாய் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. சில விஷயங்கள் என் மனதை உறுத்தும். அவற்றை இடுகையாக்கினால் என்  எண்ணங்களின் தீவிரம் எழுத்துக்களில் பதிவாகாததாலோ, இல்லை ஏதோகாரணத்தால் சரியான இலக்கை எட்டுவதில்லை என்பது பின்னூட்டங்களின் மூலம் தெரியவரும். எழுத்தைவெறும் பொழுது போக்கும் வழியாக நான் எண்ணுவதில்லை இருந்தாலும் நானும் கலந்து கட்டி எழுதி வருகிறேன் எழுத்தின் திசை சீரியஸ்பாதையை நோக்கிப் போகிறது. தவிர்க்கிறேன்
சில சம்பவங்களை நினைவு கூறும் போது மனதின் வேதனை கிளறப்ப் படுகிறது. வேதனைக்குக் காரணமானவர்களின் அடையாளங்களைத் தவிர்க்கிறேன் இந்த நினைவோட்டம் என் மூத்தமகனுக்குப் பெண்பார்த்து திருமணம் செய்வித்தவற்றின் தொகுப்பு.

நாங்கள் திருச்சியில் குடியிருப்பில் இருந்தோம். என் மூத்தமகன் B.Sc. MBA  முடித்து பணியில் அமர்ந்திருந்தான் சீக்கிரமே அவனுக்கத் திருமணம் செய்தால் அவனது நடுத்தர வயதுக்குள் அவனால் பொறுப்புகளை முடிக்க முடியும் பலரும் ரிடையர்ட் ஆகி வீடு வரும்போது பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பதையும் அவர்களுக்கான கடமைகளை செய்ய இவர் படும் அவஸ்தைகளையும் கண்டிருக்கிறேன் ஆகவே விரைவில் திருமணம் என்பது என் கொள்கையாக இருந்தது ஆனால் ஒன்று திருமண சமயத்தில் அவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதி பெற்றிருக்கவேண்டும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது திருமணம் என்னும் பொறுப்பும் கூடினால் உலகியல் values புரியும். இதுஎன் கருத்து. மாறுபடுவொர் பலரும் இருக்கலாம்

மகனுக்கு மணம் முடிப்பது என்று தீர்மானத்துக்கு அவனது ஒப்புதலும் பெற்றோம் எனக்கு இந்த ஜாதக ஜோதிடங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் மணம் என்பது இரு விட்டார் பங்கு பெறுவது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தேன் ஓரிரு இடங்களில் இருந்து பதில் வந்தது. எதுவும் திருப்தி தரவில்லை
இம்மாதிரியான நேரத்தில் என் வீட்டின் கீழ்ப்பகுதி வீட்டுக்கு (குடியிருப்பில் ஒரு ப்ளாக்கில் மேல் இரண்டு கீழ் இரண்டு வீடுகள் இருந்தன )ஒரு பெண் சைக்கிளில் வந்து கீழ் வீட்டுப் பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் என் மனைவியிடம் அவள் யாரென்று கேட்டேன் . என் மனைவிக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் நம் மகனுக்குச் சரியாவாளா என்று என் மனைவியைக் கேட்டேன் அவள் யார் என்னவென்று தெரியாதபோது என்ன சொல்வது என்றாள்.எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்து விட்டது . விசாரிக்கலாம் என்றேன் கீழ் வீட்டில் இருக்கும் பெண்ணின் தோழி அவள். பட்டப் படிப்பு முடித்திருக்கிறாள் .மலையாளி என்றும் தெரியவந்தது. பெண்ணின் தந்தை பி.எச்.இ எல். ல் asst. foreman ஆக பணிபுரிகிறார் என்று தெரியவந்தது. நான் என் கேரள நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறி அவர்கள் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னேன். நான் பிறப்பால் ஒரு பிராமணன் என்றும் தமிழ் பேசுபவன் என்றும் என் மனைவி நாயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்குத் தெரியப் படுத்தச் சொன்னேன் .ஜாதகம் போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொல்லச் சொன்னேன்  நண்பன் எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூற அவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர் எனக்கு அவர்கள் எண்ணத்தில் ஆட்சேபணை இருக்கவில்லை. என் மகனின் ஜாதகம் ஒன்று கணினியில் தயாரானது. பெண்ணின் தந்தை என்னைக் காண வந்தார்.நாங்கள் பெண்ணின் ஜாதகம் கேட்கவில்லை. அவர் மறுநாள் வந்து ஜாதகம் பொருந்தி இருப்பதாகவும் ஜாதகப் படி திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் தவறினால் இரண்டு மூன்று வருடங்களுக்கும் மேல் தள்ளிப் போகும் என்றும் கூறினார். நாங்கள் முறைப்படி அவர்கள் வீட்டுக்குப் போய் எல்லா விஷயங்களையும் விவாதித்தோம். பெண்ணிடமும் என் மகனிடமும் இருவருக்கும் இதில் சம்மதமா என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டோம் திருமணத்தேதியையும் நிச்சயப் படுத்திக் கொண்டு உறவினர் அனைவருக்கும் திருமணத்தேதி உட்படத் தெரிவித்து நிச்சயதார்த்தம் உறவுகள் முன் நடக்க வேண்டுமென்றும் நிச்சயதார்த்த தேதி குறித்துத் தகவல் அனுப்பினோம். உறவினர் நண்பர்கள் என்று அயலூரில் இருந்து சுமார் 100 பேர் வந்திருந்தனர். நிச்சயம் முடிந்து மகிழ்ச்சியுடன் அனைவரும் திருமண நாளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றனர்
இது நடந்து ஒரு வாரத்தில் எனக்கு ஒரு கடிதம்வந்தது. எனக்கு மிகவும் வேண்டியவர் திருமணநாள் அன்று என்னைப் பெற்ற தாயாரின் திதி என்றும் அந்நாளில் திருமணம் நடப்பது உசிதமில்லை என்றும் எழுதி இருந்தார். நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு விடுக்கும்போதே திருமண நாள் இன்னது என்றும் குறிப்பிட்டிருந்தேன். நிச்சயதார்த்தத்துக்கும் வந்து முன் நின்று நடத்திய்வர் அப்போது அது பற்றி ஏதும் கூறாமல் ஊருக்குப் போய் எனக்கு எழுதியது மிகவும் வருத்தம் கொடுத்தது. எனக்கு இந்த திதி கொடுத்தல் போன்றவற்றில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. உயிருடன் இருக்கும்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதும் இறந்தபின் அவர்கள் விட்டுப்போன கடமைகளை முடிப்பதுமே சிறந்த நீத்தார் நினைவு என்று எண்ணி அதை அப்படியே செய்து வருபவன். இருந்தாலும் தாய் இறந்த நாளில் திருமண நிகழ்வு என்பது மனதை நெருடியது. முன்பே தெரிவித்திருந்தால் மாற்று நாள் வைக்கலாம். அதில்லாமல் விழாவில் கலந்து கொண்டு முன் நின்று நடத்திவிட்டு ஊர் போய் இப்படி எழுதியது சொல்லமுடியாத துயரம் கொடுத்தது. நான் பொதுவாக முக்கிய நாட்களை ஆங்கில காலண்டர் வழியேதான் நினைவு வைத்துக் கொள்வது.
மாற்று நாள் குறிக்க முடியாதபடி எல்லோரும் (பெண்வீட்டார் உட்பட) தயாராகிக் கொண்டிருந்தனர். நான் எனது மூத்த அண்ணாவிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் தாயின் திதி வரவில்லை என்றார். மனசுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது.

பிறகென்ன திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறியது தாயின் திதிநாளைப் பற்றி எனக்குத் தவறாகச் சொன்னவரும் வந்திருந்தார். நான் அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சிலருக்கு பிறர் மனம் வாடும்படிச் செய்வதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை என்றும் ஒரு பாடம் கற்றேன் .    .  





       
 



34 comments:

  1. நாம் என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும், முக்கியமான நிகழ்வுகளில் சிலர் இது மாதிரிதான் செய்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  2. எப்படியோ..
    நல்லவிதமாக திருமணம் நடந்ததில் மகிழ்ச்சி..
    மணமக்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ஆண்டொன்று போக
    அகவை ஒன்று குறைகிறது.!!

    ஜாம் ஜாம் என திருமணம் நிகழ்ந்த
    மகிழ்ச்சியை மட்டும்
    மனதில் கொள்ள வேண்டியதுதான்..!!

    ReplyDelete
  4. அனுபவங்கள்.

    இப்போது அசைபோடும்போது சாதாரணமாக இருக்கும். அப்போது டென்ஷன் எகிறி இருக்கும்! :))))

    ReplyDelete
  5. கல்யாணம் பண்ணிப்பார்ப்பது சும்மா இல்லைதான்! எனது மூன்று தங்கைகளுக்கு திருமணம் செய்த அனுபவத்தை வைத்து கூறுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ஸ்ரீராம் சொன்ன விஷயம் தான் எனது மனதுக்குள்ளும் ஓடியது உங்கள் பதிவினை படிக்கும்போது.

    இப்போது சாதாரணமாக இருந்தாலும், அந்த நேரத்தில் எத்தனை பதட்டமாக இருந்திருக்கும்....

    ReplyDelete
  7. சிறப்பாக நடந்து முடிந்ததில் சந்தோசம் ஐயா...

    ReplyDelete
  8. நல்ல அனுபவம் ஐயா! இது போன்று நல்ல விஷயம் நடக்கும் போது ஏதாவது ஒரு தடங்கல் போல ஒன்று நடக்கும் என்பது எழுதப்படாத நியதியோ? ஏனென்றால் பலர் வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் நடந்திருக்கும்! உங்களுக்கு அச்சமயம் பதட்டம் இருந்திருக்கும் இல்லையா ஐயா!?எப்படியோ நல்லபடியாகத் திருமணம் நடந்தேறியதே அதை மட்டுமே அசை போட வேண்டும் ஐயா! பாடங்களும் நாம் கற்க இவை உதவுகின்றன!

    ReplyDelete
  9. ஒவ்வொருவரும் ஒரு பாடத்தினை கற்றுத் தருகிறார்கள்.
    திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது மகிழ்வு அளிக்கின்றது ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நினைவுகளே நம்மை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும். காரணம், அததகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழ்வதை தடுக்கவே நமது மூளை அதனை நினைவில் கொள்கிறது என்று நினைக்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி.

    ReplyDelete
  11. எங்க பெண்ணின் கல்யாணத்தின் போது நடந்தவற்றோடு பார்க்கையில் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. :)))) சில சமயம் இப்படி ஏற்படுவது உண்டு தான். பொதுவாக எல்லாத் திதிகளும் இரு முறை வரும்.அதில் நம் தாய், தந்தை இறந்தது கிருஷ்ண பக்ஷமா, சுக்ல பக்ஷமா எனக் கவனித்து வைத்துக் கொண்டால் திதிக் குழப்பம் வராது. ஒரு சிலர் ஏகாதசி திதி என்றால் எந்த ஏகாதசி அன்றுவேண்டுமானாலும் குறிப்பிட்ட மாதத்தில் திதி கொடுக்கின்றனர். அப்படிச் செய்யக் கூடாது. சுக்ல பக்ஷ ஏகாதசியா, கிருஷ்ண பக்ஷ ஏகாதசியா என்பதைக் கவனிக்க வேண்டும்.

    இதைப் புரோகிதர்களே ஒரு காகிதத்தில் எழுதி எத்தனை பிள்ளைகள் இருக்கின்றனரோ அத்தனை பேருக்கும் இறந்த பின்னர் காரியங்கள் செய்யும் அந்தப் பதின்மூன்று நாட்களிலேயே கொடுத்திருப்பார். அதை பத்திரமாக வைத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. :))))))))

    ReplyDelete
  12. //எனக்கு இந்த திதி கொடுத்தல் போன்றவற்றில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. உயிருடன் இருக்கும்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதும் இறந்தபின் அவர்கள் விட்டுப்போன கடமைகளை முடிப்பதுமே சிறந்த நீத்தார் நினைவு என்று எண்ணி அதை அப்படியே செய்து வருபவன்.//

    நினைவை விளிம்புகட்டி,
    கல்லில் வடித்து
    வையாதீர்;
    ‘வானத்து அமரன்
    வந்தான் காண்!
    வந்தது போல்
    போனான் காண்’ என்று
    புலம்பாதீர்;
    அத்தனையும் வேண்டாம்
    அடியேனை விட்டு விடும்.

    என்றார் புதுமைப் பித்தன் அவர்கள். இருக்கும்போது எதுவும் செய்யாமல் இறந்தபின் நினைவு நாளை கொண்டாடுவதில் என்ன பயன். தங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  13. சிலருக்கு பிறர் மனம் வாடும்படிச் செய்வதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை என்றும் ஒரு பாடம் கற்றேன் . .//

    இதைத்தான் காழ்ப்புணர்ச்சி என்கிறார்கள். சிலருக்கு இது கைவந்த கலை. எந்த சுபநிகழ்ச்சிகளிலும் உள்ளே புகுந்து எதையாவது சொல்லி அல்லது செய்து மனதில் கலவரத்தை உண்டுபண்ணுவதில் சமர்த்தர்கள். நீங்கள் சொல்வது போலவே ஜாதகம், நல்ல நாள், திதி என்பதில் எல்லாம் எனக்கும் எவ்வித நம்பிக்கையும் இல்லை. என்னுடைய மூத்த மகளுடைய திருமணமும் அப்படித்தான் நடந்தது. இளையவளுடையதும் அப்படித்தான் நடக்கும்.

    ReplyDelete

  14. @ தி. தமிழ் இளங்கோ
    மனம் வாடச்செய்ததுதான் மிச்சம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    ஆயிற்று 23 வருடங்களுக்கும் மேல். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  16. @ இராஜராஜேஸ்வரி
    ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது என்றல்லவா நினைத்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மேடம்

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    டென்ஷன் என்று சொல்லமுடியாது மனம் வேதனைப் பட்டதுதான் நிஜம் ஆனால் இது பற்றி இதுவரை என் மகன்களுக்கும் எதுவும் தெரியாது. நானும் மனைவியும் மட்டுமே மனம் நொந்தவர்கள்

    ReplyDelete

  18. @ தளிர் சுரேஷ்
    எனக்கு அந்த அளவு அனுபவம் இல்லை. இருவருமே மகன்கள். ஆனால் திருமணங்களில் தவிர்க்கக் கூடிய சம்பவங்கள் நடப்பதை நிறையவே பார்த்துவிட்டேன்

    ReplyDelete

  19. @ வெங்கட் நாகராஜ்
    மனக் கிலேசங்களை அப்போது யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.ஏனொ இப்போது வலையில் பகிரத் தோன்றியது.வருகைக்கு நன்றி

    ReplyDelete

  20. @ திண்டுக்கல் தனபாலன்
    சம்பவம் நடந்து 23 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ துளசிதரன் தில்லையகத்து
    தடங்கல் ஏதும்நிகழவில்லை. சற்று மன வேதனைதான் மிஞ்சியது. வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete

  22. @ கரந்தைஜெயக்குமார்
    வாழ்க்கையில் என்றும் கற்க வேண்டிய நாளே, வருகைக்கு நன்றி ஐயா,

    ReplyDelete

  23. @ பக்கிரிசாமி
    நினைக்கத்தெரிந்த மனதுக்கு மறக்கத் தெரியவில்லை. அவ்வப்போது தலை நீட்டும் நினைவுகள். வருகைக்கும் மேலான கருத்துப்பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete

  24. @ கீதா சாம்பசிவம்
    என் அனுபவம் பகிரப் பட்டது. வழக்கத்தில் இருக்கும் ஆங்கில நாட்களே எனக்கு நினைவு கொள்ளப்போதுமானது. குழப்பமில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  25. @ வே. நடனசபாபதி.
    நான் நினைப்பதை செயலில் காட்டுபவன்.என் எண்ணங்கள் பலரால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.நான் கவலைப்படுவதுமில்லை.புதுமைப் பித்தனின் இவ்வரிகள் நான் படித்ததில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  26. @ டி.பி.ஆர். ஜோசப்
    இப்படியும் சில மனிதர்கள் என்று விட்டுத் தள்ள வேண்டியதுதான். நான் சம்பந்தப் பட்டவரிடமே இது பற்றிப் பேசியதில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  27. "வீட்டை கட்டிப் பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்." என்ற பழமொழிக்கேற்ப உள்ளது தங்கள் பதிவு. திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  28. நாள், நேரம் பார்க்கவேண்டியது என்பதை ஓரளவில் வைத்துக்கொள்வது சரியாகும். அதீத நம்பிக்கை வைக்கும்போது சில சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு. பிறருக்குப் பாடமாக அமையும் உங்கள் பதிவு.

    ReplyDelete

  29. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

    ReplyDelete

  30. @ இல.கணேஷ்
    இரண்டும் செய்து பார்த்தாயிறு கணேஷ். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  31. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  32. இதை விடச் சிறப்பான ஒரு நினைவு நாள் அமையுமா?

    நம்பிக்கையற்றவரையும் லேசாய் உரசிப் பார்க்கும் தற்செயல் இல்லையா?

    ReplyDelete

  33. @ அப்பாதுரை
    சரியாகச் சொன்னீர்கள். லேசாய் உரசிப் பார்த்தது உண்மை. ஒருவேளை அந்தநாள் என் தாயின் திதி நாளாய் இருந்தாலும் இருந்திருந்தாலும் மணவிழா நடந்தே இருக்கும் என்பதும் உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    ReplyDelete