Sunday, May 10, 2015

அன்னையர் தின எண்ண ஓட்டங்கள்


                    அன்னையர் தின எண்ண ஓட்டங்கள்
                    --------------------------------------------------------


பிரதி வருடமும் மேமாத இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. சிறு வயதிலேயே அன்னையை இழந்த எனக்கு மகளிர் அனைவருமே அன்னையரே. அவர்களனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்னையைப் பற்றிய என் பேரனின் ஆங்கில எழுத்துக்களையும் அதை நான் தமிழ்ப் படுத்தி எழுதி இருந்ததையும் மீள் பதிவாக்குகிறேன்
பேரனின் ஆங்கிலக் கவிதை
--------------------------
When I was home alone
I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
LOVE YOU MOM
  
என் தமிழாக்கம்
-----------------
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

.!இன்றைய அன்னையரைப் பற்றிய என் ஒரு பதிவையும் அதற்குப் பின்னூட்டமாக வந்த சுந்தர்ஜியின் எண்ணங்களையும் பதிவாக்குகிறேன்

நீ எங்கே இருக்கிறாய் அம்மா
----------------------------

நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.

நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.

நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.

கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.

நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.

நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.

என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.

காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.

தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.

நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.

என் அம்மாவாக  நீ எங்கே இருக்கிறாய் அம்மா.? 
-------------------------------------------- 

இதற்கு பின்னூட்டமாய் வந்த சுந்தர்ஜியின் கவிதை

எப்போ வருவாயோ?
அம்மாவின் வருகை
இருமணிகள் தாமதிக்க
அப்பாவுக்கோ இன்னும்
வரும்நேரம் தெரியவில்லை.
பூட்டிய கதவுகளைத்
திறந்து வைக்க யாருமில்லை.
சாப்பிட்டாயா கேட்டிடவும்
என்னெதிரில் யாருமில்லை.
இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை.
காஸ் சிலிண்டர் மாற்றிடவோ
இன்னும் நான் கற்கவில்லை.
சூடாய்ச் சாப்பிடவும்
என்றுமே வாய்த்ததில்லை.
ஹோம்ஒர்க் குழப்பங்களோ
தீர்த்துவைக்க வழியுமில்லை.
வகுப்பில் நடந்த சாகசங்கள்
கேட்க இங்கே யாருமில்லை.
பள்ளி விட்டுத் திரும்பிடவே
ஒருநாளும் பிடிக்கவில்லை.
ஞாயிறன்றி வேறொருநாள்
வாரத்திலே விருப்பமில்லை.
அப்பாவோ அம்மாவோ
எப்போது வருவாயோ?
எங்கும் இனிப் போகாமல்
என்னோடே இருப்பாயோ?

இப்படி ஒரு கவிதை 2010ல் எழுதினேன்.
http://sundargprakash.blogspot.in/2010/12/blog-post_30.html

மீண்டும் அது கிளர்ந்தெழுகிறது. என் நெஞ்சை அடைக்கிறது.

 

  ..

 

  

28 comments:

 1. அன்னையைப் போலொரு தெய்வம் அகிலத்தில் இல்லை.

  ReplyDelete
 2. அன்னையைப் போற்றும் நல்ல கவிதை.

  ReplyDelete
 3. சிறப்பு...

  என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. அருமை ஐயா
  அன்னையர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பொருத்தமான நாளில் பொருத்தமான கவிதை. தங்கள் பேரனின் ஆங்கிலக்கவிதையையும் தங்களின் பெயர்ப்பையும் ரசித்துப் படித்தேன். நன்றி.

  ReplyDelete
 7. பேரனின் கவிதையில் நல்ல ரைமிங் இருக்கிறது.
  சுந்தர்ஜியின் கவிதை சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete

 8. @ அன்னையைப்போல் ஒரு தெய்வம் உலகத்தில் இல்லை.இரண்டாவது கவிதையில் வேறொரு கோணம் காட்டி இருக்கிறேனே. வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 9. @ டாக்டர் கந்தசாமி
  பாராட்டுக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 10. @ திண்டுக்கல் தனபாலன்
  அன்னையர்களுக்கல்லவா வாழ்த்துக்கள் இருந்திருக்க வேண்டும் நன்றி டிடி.

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று இருந்திருக்க வேண்டுமோ.? வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete

 12. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 13. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 14. @ டி.என். முரளிதரன்
  வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி முரளி.

  ReplyDelete

 15. வணக்கம் ஐயா அன்னையர் தின வாழ்த்துகள் கவிதை அருமையாக இருந்தது அனைத்து மனிதனுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.
  இந்தப்பதிவு எனது டேஷ்போர்ட்டில் வரவில்லை தமிழ் மணம் மூலம் வந்தேன் நன்றி.

  ReplyDelete
 16. அருமை.

  அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

 17. @ கில்லர்ஜி
  கவிதைகளைப் பாராட்டியதற்கு நன்றி ஜிமுதல் இரண்டும் பேரனின் கவிதை ஆங்கிலத்திலும் என் தமிழாக்கமும் . பின்னிரண்டும் இன்றைய அன்னையரை நினைவு கூறும் பதிவுகள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 18. @ வெங்கட் நாகராஜ்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 19. அருமையான கவிதையை இயற்றிய தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. தங்கள் பேரனின் கைவண்ணம் அருமை!..

  இனியதாக - தங்களின் மொழிபெயர்ப்பு..

  நினைவில் நிற்கும் பதிவு!..

  ReplyDelete
 21. சிறப்பாக அமைந்துள்ள அன்னையர் நாள்
  சிறப்புப் பதிவுகள் என்பேன் - எவரும்
  எந்நாளும் மறவாத ஒருவர் - அந்த
  அன்னையே!

  ReplyDelete

 22. @ வே.நடனசபாபதி
  உள்ளத்தில் இருந்து எழுதுவது கவிதையாகலாம் என்று என் பேரனிடம் கற்றேன் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 23. @ துரை செல்வராஜு
  வருகை தந்துபதிவினைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 24. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  இளவயதிலேயே அன்னையை இழந்தவன். அன்னை இல்லாதவன். ஆனால் அன்னை இருந்தும் அவரது அருகாமைக்கு ஏங்கும் ஒருவரின் எண்ண ஓட்டமே இரண்டாம் கவிதை ஆயிற்று. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 25. அன்னையர் தினக்கவிதைகள் அருமை. மிகவும் யோசிக்க வைத்துவிட்டது..

  ReplyDelete

 26. @ தேனம்மை லக்ஷ்மணன்
  என் கவிதைகள் சிந்திக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 27. பேரனின் கவிதை அருமை.
  உங்கள் கவிதையும், சுந்தர்ஜி அவர்களின் கவிதையும் வேலைக்கு பொகும் அன்னையை தேடும் குழந்தையின் ஏக்கம் என்று தெரிகிறது. வேலைக்கு போகும் நிர்பந்தம் இருப்பவர்கள் மட்டும் போகலாம் மற்றவர்கள் குழந்தைகளுடன் இருக்கல்லாம், வேலைக்கு போய் வந்தவுடன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம். வேறு என்ன செய்வதூ?

  ReplyDelete
  Replies
  1. நான்கொடுத்த சுட்டி மூலம் வந்து கருத்திட்டதற்கு நன்றி மேம்

   Delete