நீதி விழித்துக் கொண்டிருக்கிறதா....?
-----------------------------------------------------
நான் பொதுவாகவே அரசியலைப்பற்றிப்பதிவு எழுதுவதில்லை என்னும் தீர்மானத்தில் இருக்கிறேன் ஆனால்
வரவர இந்த நீதித்துறையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை1991-1996 வரை ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது வருவாய்க்கு மீறியசொத்துக் குவித்தார் என்று வழக்கு போடப்பட்டு அந்தவழக்கு தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப் பட்டு ஒரு ஸ்பெஷல் கோர்ட் ஏற்படுத்த்ப் பட்டு பல இழுத்தடிப்புகளுக்கிடையேயும் வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்தது உண்மையே என்றும் அதற்கு தண்டனையாக நான்காண்டு சிறைதண்டனையும் . நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கபட ஜெயலலிதா தன் சட்டசபை உறுப்பினர் பதவியைத் துறக்க வேண்டி வந்ததில் முதலமைச்சர் பதவியும் போயிற்று. அவர் மேல் முறையீடு செய்ய அது முடியும் வரை உச்சநீதி மன்றம் தண்டனையைத் தள்ளி வைத்து ஜாமீனும் வழங்கியது.கர்நாடகா உயர் நீதி மன்றம் அந்த வழக்கை தினமும் நடத்துமாறும் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பு வழங்குமாறும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தது.ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த பி. வி. ஆச்சார்யா தனக்கு இழைக்கப்படும் பல தொந்தரவுகளின் காரணமாகதான் ராஜினாமா செய்வதாகக் கூறினார் திரு பவானி சிங் அந்தப் பொறுப்புக்கு வந்தார்
கேஸ் மேல் முறையீட்டில் கர்நாடகா உயர் நீதி மன்றத்துக்கு வந்தபோது பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராகத் தொடரக் கூடாதென்று வாதி தரப்பில் அன்பழகன் ஒரு மனு கொடுத்திருந்தார் அதன் பேரில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுக்கும் முன்பாகவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க ரெடியாயிருந்தது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உச்ச நீதி மன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னே பவானி சிங் அரசு வழக்கறிஞராய் இருப்பது தவறு என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க மீண்டும் ஆச்சார்யாவே அரசு வழக்கறிஞரானார். ஆனால் என்ன.... இவர் ஆஜரில்லாமலேயே வழக்கின் தீர்ப்பு வழங்கப் பட்டு ஜெயலலிதா குற்ற மற்றவர் என்று விடுவிக்கப் பட்டுள்ளார்
இப்பொழுது நான் முதலில் கூறி இருந்ததற்கு வருகிறேன் நீதித் துறையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 18 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வரவில்லையோ என்னும் சந்தேகம் எழுகிறது.விசாரணக் கோர்ட்டில் சொத்து கணக்கிடப்பட்ட விதம் சரியில்லை என்று கூறி ஜெயலலிதாவின் வருவாய்க்கு அதிகமான சொத்து சுமார் 8 1/2 சதவீதமே என்றும் அது தண்டனை வழங்கப் போதாது என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது இந்தத் தீர்ப்புக்கு மேல் முறையீடு கர்நாடகா அரசுதான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.ஆனால் கர்நாடகா அரசு இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது அப்படியானால் இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கே வரமுடியாதா. என்னைப் போன்றவர்கள் தீர்ப்பில் பல சந்தேகங்கள் உச்ச நீதிமன்றத்தாலேயே வழங்க முடியும் என்று நினைக்கிறோம் உச்ச நீதி மன்றம் ஊழல் வழக்குகளில் ஜீரோ tolerance என்றும் கூறி இருக்கிறார்கள்’ மேலும் இன்னொரு சந்தேகம் அவர்கள் உண்மைகள் தளத்தில் குறிப்பிட்டிருந்தது போல் விசாரணை நீதிபதி மேல் முறையீடு செய்து மான நஷ்ட வழக்குப் போட வழி இருக்கிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது
எனக்கென்னவோ ஜெயலலிதா தன் மீது நல்லெண்ணத்தை வளர்க்கவே தனது இரண்டாம் முறையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து நல்ல பெயரெடுத்திருக்கிறார் அது இந்தத் தீர்ப்பில் ஜனங்களின் முக்கியமாக அஅதிமுக வினரின் சந்தோஷப் பூரிப்பில் தெரிகிறது இரண்டாம் முறையாக சட்டத்தின் பிடியிலிருந்து ஜெயலலிதா நழுவி இருக்கிறார். உண்மையிலேயே வழக்கு விசாரணைகளும் தீர்ப்புகளும் நேர்மையாய் நடந்திருக்கிறது என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பே முடிவு செய்ய வேண்டும்
என்னவோ போங்க!
பதிலளிநீக்குஎன்னவோ போங்க!
பதிலளிநீக்கு“மன்னுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?” என்னும் சுந்தரம்பிள்ளையின் குரல்தான் எனக்குக் கேட்கிறது உங்கள் பதிவூடாக..!
பதிலளிநீக்குசம தர்மம் என்றோ இல்லாமல் போய்விட்டது.
சட்டத்தின் முன் எல்லாரும் சமமில்லை.
நன்றி
ஒருவேளை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்லாவிடில் இந்த வழக்கை முதலில் தொடுத்த திரு சுப்ரமணிய சுவாமியோ அல்லது திரு அன்பழகனோ உச்ச நீதி மன்றத்தில் முறையிடலாம் என வழக்குறைஞர்கள் சொல்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
பதிலளிநீக்குஆசார்யா நியமனம் செய்யப்படும் முன்னரே வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்புக்குத் தயாராய்க் காத்திருந்தது. அப்படி இருக்கையில் ஆசார்யா திரும்பப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மறுபடியும் விசாரணையை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றம் கூறவில்லை.Benifit of doubt என்பதன் பேரில் விடுதலை செய்திருக்கலாம்.
பதிலளிநீக்குசட்ட வல்லுநர்கள் முடிவு செய்வார்கள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசட்டம் ஒரு இருட்டறை அதில் வாதிடுபவன் ஒரு குருடன் பார்வையாளர்களாகிய நாமெல்லாம் கண்ணிருந்தும் குருடர்கள்.
இது தொடரும் என்றே நினைக்கிறேன்...
பதிலளிநீக்குநீதி மன்றத்தில ஒரு பொம்மை தராசை கையில வச்சிட்டிருக்குமே, அதைப் பார்த்ததில்லையா நீங்க. அது கண்ணைக் கட்டிட்டுத்தான் இருக்கும். அப்பறம் "நீதி விழித்துக் கொண்டிருக்கிறதா?" என்கிற கேள்வி எதற்கு?
பதிலளிநீக்குஅசிங்கம். வேறே என்ன?!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
காலம் பதில் சொல்லும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன சொல்றது?
பதிலளிநீக்குரகுவீரன் என்னும் ஒருவர் என்ன சொல்றார்னா பகவான் பூஜைகளையெல்லாம் பார்த்து செவிசாய்த்துவிட்டாராம்.
இவரு ஏதோ இருபது கேள்வி கேட்டுப்புட்டாரு இவரு ரொம்ப நல்லவரு, நியாய்ஸ்தர்னு எல்லாரும் இவரைக் கொண்டாடினார்கள்.
இப்படி இவர் அநீதிக்கு துணை நிற்பார்னு நான் நினைக்கவே இல்லை.
எங்கே பார்த்தாலும் இவர்களிடம் வடிகட்டின சுயநலம்தான் தெரியுது. வெட்கமே இல்லாமல் கடவுளை துணைக்கு அழைக்கிறார்கள். கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து இவர்களுக்கு உதவச் சொல்லுகிறார்கள்.
அதாவது, கொள்ளை, கொலை, விபச்சாரம் எதுவேணா செய்துவிட்டு பகவானுக்கு செய்யவேண்டிய மரியாதையையும், பூஜைகளையும், யாகங்களையும் காணிக்கைகளையும் செலுத்திவிட்டால், பகவான் புகழுக்கு மயங்கி நீதிதேவதையின் கண்ணைக்கட்டி பக்தர்கள் வாயில் பாலை வார்த்துடுவாராம். ரகுவீரன் னு ஒரு ஆள் அப்படித்தான் உலகறிய வெட்கமே இல்லாமல் சொல்லுகிறார்.
Even terroristச் pray God and believe that God approve the act they do.
Shankar Raman death was also forgiven by God.
நான் என்ன நினைக்கிறேன்னா கடவுள்தான் மனிதனை தவறான வழியில் நடத்துகிறான். எல்லா அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கும் கடவுள் உறுதுணையாக இருக்கிறார். அவருக்கு செய்ய வேண்டிய புகழாரத்தை செய்துவிட்டால் போதும்! :)))
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கூறுவார்கள். ஆனால் நீதித்துறையில். ? என்னவோ போங்க என்று நினைக்க முடியவில்லையே, வருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ ஊமைவிழிகள்
அப்படித்தானே ஆகிவிட்டது. இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை ஒன்றுதான் கால தாமதமானாலும் நேர்மையாக இருந்தது என்ற எண்ணம் எனக்குண்டு. யானைக்கும் அடிசறுக்கும் என்று நினைக்கிறேன் மேல் முறையீடு அவசியம் வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ஊமைக்கனவுகளுக்குப் பதில் ஊமை விழிகள் என்னும் தவறுக்கு வருந்துகிறேன்
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
அவசியம் மேல் முறையீடு வேண்டும் இன்று பி வி ஆச்சார்யா கணக்கில் தவறு என்று சுட்டிக்காட்டி உள்ளதைக் கவனித்தீர்களா. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
18 ஆண்டுகள் வழக்கு நடந்து பெனெஃபிட் ஆஃப் டௌட் என்று கூற முடியாது. இன்னொரு விஷயம் கவனித்தீர்களா. நீதிபதி குமாரசாமிக்கு ரூ 2-/ கோடிக்கு மேல் வருவாய்க்கு மேல் சொத்து குவிந்திருப்பது தவறாகத் தோன்றவில்லை. 2 கோடி ரூபாய் ஏழைகள நினைத்தும் பார்க்கமுடியாது. இன்று கணக்கிடுவதில் தவறு என்று ஆச்சார்யா கூறி இருக்கிறார். நாம் எங்கே போகிறொம் வருகைக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
சட்ட நிபுணர்கள் சரி செய்யத்தான் வேண்டும் கர்நாடகா அரசு இன்னும் முடிவு செய்யவில்லை மீள் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
அப்படி எல்லாம் விட்டு விட கூடாதுஜி. சமூக வலைத்தளங்கள் மூலம் அபிப்பிராயங்கள் தோற்றுவிக்கப் படவேண்டும் வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
சட்டம் நிலை நிறுத்தபட வேண்டும் அநீதி ஒழிக்கப்படவேண்டும்
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
அசிங்கம் என்று கூறியது போதாது. சமூக வலைத் தளங்கள் மூலம் கருத்துக்கள் உருவாக்கப் பட வேண்டும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
அந்த சிலை ஒரு உருவகம் பாரபட்சமற்ற நீதியைக் குறிக்கும் . எல்லாவற்றையும் நகைசுவையாகவே எடுத்து கொள்ள முடியுமா. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ரூபன்
18 ஆண்டுகாலமாக பதிலை எதிர் நோக்கி இருக்க இப்போது இப்படியா.? வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ வருண்
எல்லாவற்றுக்கும் கண்காணாத கடவுளைக் குறை கூறுவது பலன் தராது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்
//இன்று கணக்கிடுவதில் தவறு என்று ஆச்சார்யா கூறி இருக்கிறார். //
பதிலளிநீக்குES Rama Chandran சொல்கிறார்:
கணக்கு பிழையை கண்டுபிடித்த கருணாநிதி வாழ்க!
தீர்ப்பு கணக்கீட்டில் எந்த தவறும் இல்லை .
அதாவது நீதிபதி குமாரசாமி 851ம்
பக்கத்தில் வழக்கிற்குறியவர் தனியாரிடமும் கடன் வாங்கியுள்ளார் நான் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று
குறிப்பிட்டுவிட்டார்..அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் மட்டுமே வாங்கிய கடனை கணக்கிட்டுள்ளார் .
பக்கம் 851ஐ படிக்காமல் 852ஐ மட்டுமே படித்து அதைமட்டும் கூட்டிவிட்டு எங்க 24 கோடி வரலியேனு கேட்டால் எப்படி?
பக்கம் 851ல் மட்டும் 15,50,53,172 தொகை
பக்கம் 852ல் மட்டும் 10,67,31,274 தொகை
மொத்தம் 26,17,84,446 தொகை வருகிறது.
சரி 24 கோடிக்கு ஏன் 26 கோடினு நீங்க
கேட்கலாம் இங்கு தான் நீதி அரசர் ப்ரைவேட் லோனை கணக்கில் கொள்ளவில்லை அந்த பிரைவேட் லோனை கழித்ததால் 24 கோடி .
பிரைவேட் லோனையும் சேர்த்து இருந்தால் சொத்துக்கு மேல் குவித்தது என நீதிபதி குறிப்பிட்ட 8.12% கூட இல்லாமல் குறைந்து போகும் .//
One Mr. E.S. Ramachandran shared this one in facebook Sir.ஆனைக்கும் அடி சறுக்கும். ஆசார்யா கணக்கிலும் தவறு நேரலாம் என்பதே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எனினும் பொறுத்திருந்து பார்க்காமல் அனைவரும் இவ்வளவு பொங்குவதன் காரணம் தான் புரியவில்லை.
பி.கு. நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அல்ல! :))))
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
இந்த E.S.Ramachandran யார்?நானும் முகநூலில் என் எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறேன் தொள்ளாயிரம் பக்கத்துக்கு மேற்பட்ட தீர்ப்பினை நான் படிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் கூறி இருப்பதையே நான் கூறினேன் மற்றபடி கடன் வாங்கிய பணம் சொத்தாகுமா என்றெல்லாம் தெரியாது. வரவுக்கு அதிகமான சொத்துநீதிபதியின் கணக்குப் படியே இரண்டு கோடிக்கு மேல் . இரண்டு கோடி ரூபாய் குறைந்த மதிப்புடையதில்லையே. என்னைப் போல் இருப்பவர்கள் கோடி ரூபாயைப் பார்த்தே இராதவர்கள்,உச்ச நீதி மன்றம் ஊழல் விஷ்யத்தில் ஜீரோ டாலரன்ஸ் என்று கூறி இருக்கிறதுஅதனால்தான் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு போக வேண்டும் என்கிறேன் பொது விஷயங்களில் கருத்துசொல்ல ஏதாவது கட்சிக்கு ஆதரவாளராக இருக்க வேண்டுமா. தெளிவு படுத்த அல்லது குழப்ப மீள் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி மேடம்
அசிங்கம். இது போல் அசிங்கமெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் நடக்குமோ?
பதிலளிநீக்கு////@ வருண்
பதிலளிநீக்குஎல்லாவற்றுக்கும் கண்காணாத கடவுளைக் குறை கூறுவது பலன் தராது.///
சார்: இது எனக்கு நீங்க கொடுத்த அறிவுரை.
நான் பொதுவாக கடவுளை எல்லாப் பஞ்சாய்த்துக்கும் அழைத்து வருவதில்லை.
அப்புறம் ஏன் இங்கே கடவுளைப் பத்தி பேசின வருண்? னு நீங்க கேட்காவிடினிலும் நான் சொல்லுறேன்..
தீர்ப்பு வந்த உடன் இந்த "அவியல் ரகுவீரன்"னின் ஸ்டேட்டஸ் ஒரு முகநூலில் வந்துள்ளது..
///Raghuveeran's Aviyal
7 hrs ·
கல் என்றால் அது கல்தான்
தெய்வமென்றால் அது தெய்வம்
எம் ஜி ஆர் நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுது தமிழகம் முழுவதும் அவருக்காக தெரு தெருவாக கோவில் கோவிலாக வேண்டியது. அது வீண் போகவில்லை. திரும்பி வந்து முதல்வரானார்.
இப்பொழுது கடந்த 8 மாதமாக ஜெயலலிதாவுக்காக எம் ஜி ஆரையும் மிஞ்சிவிடும் அளவிற்கு கோவில்களில் வேண்டுதல்கள், யாகங்கள், தானங்கள், இலவச திருமணங்கள் இன்னும் எவ்வளவோ செய்யப்பட்டன. பார்க்கமுடியாத கோவில்களையெல்லாம் ஜெயா டி வி யில் தரிசனம் செய்ய முடிந்தது.
எனக்கு ஜெயலலிதா அவர்கள் வருமானத்திற்குமேல் சொத்து சேர்த்தாரா இல்லையா என்பதைவிட இவ்வளவு வேண்டுதல்களுக்கும் கடவுள் செவிசாய்ப்பாரா மாட்டாரா என்ற கேள்வியே மேலோங்கி இருந்தது.
இவை அனைத்தையும் ஜெயலலிதா அவர்கள் தனது வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்.
இதற்கு பிரதி உபகாரமாக ஒரு ஊழலற்ற நல்லாட்சியை தருவது அவரது கடமை என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.///
எதற்கெடுத்தாளும் கடவுளை இழுத்து பகவான் நல்ல தீர்ப்பை வழ்ங்கிவிட்டார்னு சொல்லும் இந்த "அவியல் ரகுவீரனுக்கு" உங்களிடம் ஏதாவது அறிவுரை இருக்கிறதா?
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
இதுபோல் அசிங்கமெல்லாம் இந்தியாவில்மட்டும்தான் நடக்குமோ/இந்தியாவில் நடப்பது மட்டும்தானே நமக்கு தெரிகிறது
பதிலளிநீக்கு@ வருண்
நமக்கு வேண்டியவர்கள் என்று நினைப்பவருக்கு மட்டுமே நம் எண்ணங்களைக் கூறுவோம். மற்றபடி அறிவுரை என்பதெல்லாம் கிடையாது. சரி ரகுவீரனின் ஸ்டேடஸுக்கு நீங்கள் என்ன எழுதினீர்கள். ?சும்மாதான் கேட்கிறேன்
***நமக்கு வேண்டியவர்கள் என்று நினைப்பவருக்கு மட்டுமே நம் எண்ணங்களைக் கூறுவோம்.***
பதிலளிநீக்குஉண்மைதான் சார். நானும் அப்படித்தான். ரகுவீரன் அவர் டைரியில் எழுதியிருந்தால் என்னை பாதித்து இருக்காது. ஊரறிய இப்படி ஒரு கருத்தை முன் வைக்கும்போது, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் வருகிறது. அதை அவர் முகநுலில்தான் சொல்லணும்னு இல்லை. எங்கே வேணா பேசலாம். சில நாட்கள் முன்னால் இவர் ஏதோ அப்பாவி யோக்கியன்னு பதிவுலகமே இவரை தூக்கி வைத்துக்கொண்டு ஆடியது. அதே ஆளின் சிந்தனைகள் இப்படித்தான் படுமட்டமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் வருகிறது.
தெரியாதவர்களுக்கு நம் கருத்தை சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் "அவியல் ரகுவீரன்" உங்களுக்குப் பரிச்சயமான நானாக இருந்தால், எதற்கெடுத்தாலும் பகவான் செவி சாய்த்துவிட்டார் என்று நான் சொன்னால்.. எனக்கு என்ன அறிவுரை சொல்லுவீங்க?
சரி விடுங்க, சார். நான் இதை எதற்கு கொண்டு வந்தேன் என்றால், கடவுளுக்கு தேவையில்லாமல் இதுபோல் "க்ரிடிட்" கொடுக்கப் படுகிறது.. அதை "பக்தர்கள்" செய்யவில்லை என்றால் கடவுளை விமர்சிக்க வேண்டிய அவசியமே வராது என்பதே. என் கருத்தை பகிர்ந்துகொள்ள விட்டதற்கு நன்றி, சார்.
இதெல்லாம் இங்கு நடப்பதுதானே...குற்றம் செய்யாதவர்கள் சிறையிலிருக்க...கொலை செய்தவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட.....ம்ம்ம் நீதி தேவதையின் கண்கள் அதனால்தான் மூடப்பட்டிருக்கின்றது கோர்ட்டில்...ஏன் கண்ணை மட்டும் மூடினார்கள் என்று தெரியவில்லை. காதும் கேட்காத வாறு செய்திருக்கலாம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
இதெல்லாம் இங்கு நடப்பதுதானே என்று நினைக்க முடியவில்லை துளசிதரன் சார். சமூக வலைத்தளங்களில் மக்களின் எண்ணங்கள் பிரதி பலிக்க வேண்டும் முக நூலில் for and against என்று நிறையவே பதிவுகள் வருகின்றன. நம் கண்களும் காதுகளும் திறந்துதானே இருக்கிறது வருகைக்கு நன்றி சார்
இதற்கெல்லாம் முடிவிருக்கிறதா? அசிங்கம்தான்...நமது சட்டம் என்ன செய்கின்றது என்று தெரியவில்லை...எதற்கு சட்டம் என்றும் தெரியவில்லை. சட்டம் எல்லாம் ஒரு வேளை நம்மைப் போன்ற் சாமானியர்களுக்குத்தானோ?!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து. மீள் வருகைக்கு நன்றி சார். வருவாய்க்கு மீறிய சொத்து உயர் நீதி மன்றத் தீர்ப்புப்படி இரண்ர்டு கோடி ரூபாய் அளவுதான் அது தண்டனைக்குரிய தொகை அல்ல என்பதே செரிக்க இயலவில்லை. இரண்டு கோடி ரூபாய் சிறிய தொகையா.?