செல்லியும் BUDDY-யும்
---------------------------------
என் இளைய மகன் ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறான்கோல்டென் ரெட்ரீவர் என்னும் இனத்தைச் சேர்ந்தது. எங்களுக்கு நாயைச் செல்லமாக வளர்த்த அனுபவம் உண்டு, அது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பார்க்க செல்லி எங்கள் செல்லம் செல்லங்களைவளர்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் அடுக்கு மாடிக்குடி இருப்பில் ஏழாவது மாடியில் வசிக்கும் என் இளைய மகனின் மகனது தொந்தரவு பொறுக்காமல் வாங்கி விட்டான் நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் சில பிரச்சனைகள் உண்டு,.இளையமகன் வீட்டில் பகல் பொழுதில் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். மகனுக்கு அலுவலகம் மருமகளுக்கு ஆசிரியப் பணி பேத்திக்கு காலேஜ் பேரனுக்குப் பள்ளி என்று இருப்பதால் வீட்டில் செல்ல நாயுடன் யாரும் இருக்க முடியாது.இப்போது பரவாயில்லை. மருமகளும் பேரனும் விடு முறையில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் கழிந்து பேத்தியின் செமெஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் பிரச்சனை இருக்காது என்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள் இருந்தாலும் இன்னும் இருமாதங்களில் நாய்க்குட்டிக்கு நான்கே மாதங்கள்தான் பூர்த்தியாய் இருக்கும் நான் சொல்வது வழக்கம் அறிவுக்கும் மனதுக்கும் போராட்டம் என்று வந்தால் மனமே வெல்லும். இப்போதும் அதுதான் நடக்கிறது.இடைப்பட்ட காலத்தில்நாய்க்குட்டியை சிசுருஷை செய்வது சிரமம் கொடுக்கும். வாயில்லா பிராணிக்கு எதுவும் தெரியாது. சில பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும் நாய்க்குட்டி ஒரு சிறு குழந்தை மாதிரி. கண்ட இடத்தில் ஒன்றுக்குப் போகும் மலமிடும். என்னதான் பழக்கினாலும் அந்தந்த நேரத்தில் ஏழாவது மாடியில் இருந்து அதைக் கீழே கூட்டிவருதல் என்பது சிரமம் கொடுக்கும் அனுபவமாகப் போகிறது
இதனிடையில் நான்கைந்து நாட்களுக்கு என் மருமகள் அவளது தந்தையின் பிறந்த நாளுக்குக் கேரளா சென்றிருந்தாள். பேரன் பேத்தி நாய் சகிதம் என் வீட்டிற்கு வந்தார்கள். நாய்க்குட்டி கொள்ளை அழகு. சில தொந்தரவுகளை நினைக்காவிட்டால்நாய்க்குட்டி இருப்பது மகிழ்ச்சியே. இந்த நாய்க்குட்டிக்கு பட்டி ( buddy) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அதற்கு எதையாவது கவ்வ வேண்டும்போல் இருந்தால் என் மனைவியின் புடவை,என் லுங்கி, என் சப்பல் என்று கவ்வ ஆரம்பித்து விடும். எங்களுக்கு வயதாகி வருவதால் அதன் விளையாட்டுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாக இருந்தது. எங்காவது கடித்து விடுமோஎன்னும் பயமும் கூடவே.நன்கு பழகி விட்டால் நாயைப் போல் ஒரு நண்பன் கிடையாது. பார்ப்போம் நாய்க்குட்டியின் விளையாட்டை சிறு காணொளியாகப் பகிர்கிறேன்
..
பதிலளிநீக்குநாய் பழகி விட்டால் நல்ல நண்பன்தான் ஐயா மலையாளத்தில் நாயை பட்டி என்றுதானே ஐயா அழைப்பார்கள்.
ம்ம்ம்ம்ம், எங்களுக்கும் நாலைந்து நாய்களை வளர்த்த அனுபவம் உண்டு. அப்புறமா ரொம்பச் சிரமமாக இருக்கவே வேண்டாம்னு விட்டுட்டோம். முக்கியக்காரணம் அதன் பிரிவு தாங்க முடியாமல் எனக்கு ரொம்பவே உடம்பும், மனசும் படுத்தி எடுத்து விட்டது. சரியாக இரு வருடங்கள் பிடித்தன. :)
பதிலளிநீக்குமுழுமையான கவனம் செலுத்த முடியாதவர்கள் நாய் வளர்க்கக் கூடாது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் சிரமங்களைப் பொருட்படுத்தாவிட்டால் சுவாரஸ்யம்தான். நாய்கள் எனக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குநல்ல நட்பினைப் பற்றிய பதிவாக உள்ளது இந்தப் பதிவு. நாயிடம் பழக்கம் என்பதானது அலாதியானது.
பதிலளிநீக்குமனிதனுக்குத் தோழனாகிய முதல் விலங்கு - நாய்!..
பதிலளிநீக்குநன்றியறிதலுடன் கூடிய விலங்குகளுள் நாயும் ஒன்று..
இனிய பதிவு!..
"நன்கு பழகி விட்டால் நாயைப் போல் ஒரு நண்பன் கிடையாது." என்பது உண்மை தான்.
பதிலளிநீக்குநன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டு
நாய் தானே!
"நன்கு பழகி விட்டால் நாயைப் போல் ஒரு நண்பன் கிடையாது." என்பது உண்மை தான்.
பதிலளிநீக்குநன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டு
நாய் தானே!
Buddy.... நல்ல பெயர்.
பதிலளிநீக்குஉண்மையில் நல்ல தோழன் தான் அது.
டம்ளர் வைத்து Buddy விளையாடுவது அழகு.
சிறந்த நண்பன் தான் ஐயா...
பதிலளிநீக்குநாய்க்குட்டி டம்பளருடன் விளையாடுவதை இரசித்தேன். நாய்க்குட்டி வளர்ப்பது சிரமம் என்பதால் வளர்க்கவில்லை.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநாங்களும் இரண்டு நாய்களை வளர்த்தோம்...
ஐயா, வணக்கம். செல்லியை உங்கள் வீட்டில் ஒரு முறை கண்டதாக ஞாபகம், Buddy (ஒருவேளை Budweiserன் சுருக்கமாக இருக்குமோ?)பேரப்பிள்ளைகளின் தனிமையைப் போக்க வந்து (லீவு முடிந்தவுடன்) தனிமைப் படுத்தப்படுவது சோகம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
முதல் வருகைக்கு நன்றி ஜி மலையாளத்தில் பட்டி என்றால் பெண்நாயைக் குறிக்கும் இந்த நாய் பட்டியல்ல இதன் பெயர் buddy என்றால் நண்பன் என்று பொருள்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நான்கைந்து நாய்களா.....! ஒரே நேரத்திலா பல்வேறு காலங்களிலா. ?எனக்கு நாய் பிடிக்கும். கூடவே அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தெரியும் ஏழு வருடங்கள் இருந்த செல்லி வீட்டின் செல்லப் பெண்ணாக இருந்தாள்/ வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடே. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. பொருட்படுத்தாவிட்டால் நமக்கும் மற்றும் நாய்க்கும் பிரச்சனையே. வரவுக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ சோழநாட்டில் பௌத்தம்
நாய் நல்ல நண்பன்தான்வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
நாங்கள் வளர்த்த செல்லி பற்றிய பதிவைப் படித்தீர்களா?எங்கள் வாழ்வில் ஒன்றிப்போன பிராணி அது. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ யாழ்பாவாணன் காசி ராஜலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
நாய்க்குட்டி அழகுதான் அதன் விளையாட்டுக்கு ஈடு கொடுக்க எங்களுக்கு முடியவில்லை. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
இரண்டாம் கருத்தே இல்லைடிடி.
பதிலளிநீக்கு@ வே. நடன சபாபதி.
அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்பில் இன்னும் சிரமம் அதிகம் வந்து கருத்து பதித்ததற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ Mathu S
நல்ல அனுபவசாலிதான் நீங்கள். வருகைக்கு (முதல்?) நன்றி சார்.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
திருச்சியில் என்றால் செல்லியைக் கண்டிருக்க வாய்ப்புண்டு. நல்ல நண்பன் என்னும் அர்த்தத்தில்தான் பேரன் சூட்டிய பெயர். அதனைத் தனிமைப் படுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி உமேஷ்
வெவ்வேறு காலகட்டங்களிலும்தான் வளர்த்து வந்திருக்கிறோம். அநேகமாக நாங்கள் அம்பத்தூரில் இருந்தவரைக்கும் தெருநாய்கள் கூட எங்கள் வீட்டைத் தேடி வந்து குட்டிகளைப் போட்டுப் பாதுகாக்கும். அதே போல் பூனைகளும். இதைக் குறித்து நிறையப் பதிவுகள் எழுதி உள்ளேன். :)
பதிலளிநீக்குமனதிருந்தால் மாடு கூட வளர்க்கலாம் :)
பதிலளிநீக்குநாய்கள் நல்ல நண்பர்கள். மட்டுமல்ல வளர்க்க பொறுமை, நேரம் சூழல் இருந்தால் மட்டுமே வளர்ப்பது நல்லது. கீதாவின் வீட்டில் இரு பெண் நாய்கள். மகனே அதற்கு சர்ஜரி (ஸ்பேயிங்க்) செய்து வளர்ந்து வருகின்றார்கள். 7 வய்து. பப்பியாக இருந்த போது இரண்டும் செய்த அட்டகாசம் ஹப்பா....நாங்கள் மிகவும் எஞ்சாய் செய்தோம். பழக்கப்படுத்தி விட்டதால் அவை இரண்டுமே வீட்டில் எதுவுமே செய்தது இல்லை. யாரேனும் ஒருவர் வேண்டும் பார்த்துக் கொள்ள வெளியில் அவர்களது இயற்கை உபாதைகளை செய்து கொள்ள. இருப்பதால் இதுவரை கவலை இல்லை. இரண்டுமே மாங்க்ரல்ஸ். துளசியின் வீட்டிலும் ஒன்று உண்டு ஆண். ஒரு வயது. முடி நிறைய இருக்கும் கண்ணை மறைக்கும் அளவு....ஆனால் வீட்டில் வெளியில் கென்னலில்தான் ....பார்த்துக் கொள்ள பலர் இருப்பதால் பிரச்சனை இல்லை.....
பதிலளிநீக்குகாணொளி மிகவும் ரசித்தோம்...அட்டகாசம்தான்...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குwhat a playful puppy!
பதிலளிநீக்குGoldies are friendly. கடிக்கவெல்லாம் செய்யாது.
பகவான்ஜியின் மாடு வளர்க்கலாம் கமெந்ட் பிரமாதம்.
indoor training mats இப்ப சென்னைல கிடைக்குதே? மாடி ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டின் ஒரு ஓரத்தை தேர்வு செய்து பழக்கப் படுத்தினால் போதும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
/மனதிருந்தால் மாடு கூட வளர்க்கலாம்/ மாடி வீட்டிலும் என்று இருந்திருக்க வேண்டுமோ ஜி.?
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
காத்திருந்தேன் வந்து விட்டீர்கள் நன்றி. செல்லி என்றொரு காக்கர் ஸ்பானியல் பெண்நாய் வளர்த்திருந்தோம். சுட்டி கொடுத்திருக்கிறேன் என் மனைவி அதை தன் மாமியார் என்று கூறுவாள் மறைவைத் தாங்க நாட்கள் பல ஆயின.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
ஆம் அது ஒரு playful puppy தான் அதற்கு ஈடு கொடுக்க எங்களுக்கு முடியவில்லை. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
என் மகனும் அதுபோல் வாங்கி வைத்திருக்கிறான் அவை யூஸ் அண்ட் த்ரோ வகை. செலவு பற்றியும் யோசிக்க வேண்டுமே.
Washable mats are also available. but use and throw mats are safe and hygenic.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ அப்பாதுரை.
ஒரு செட் ஆஃப் யூஸ் அண்ட் த்ரொ மாட்ஸ் 24 எண்ணிக்கை கொண்டது ரூ720/- என்று கேட்ட நினைவு. என் மகனிடம் வாஷபிள் மாட்ஸ் பற்றிக் கூறுகிறேன் தகவலுக்கு நன்றி சார்
\\அறிவுக்கும் மனதுக்கும் போராட்டம் என்று வந்தால் மனமே வெல்லும்.\\
பதிலளிநீக்குஇதுதான் எப்போதுமே பிரச்சனை. என் பிள்ளைகளும் நாய் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். எனக்கோ நாய் பூனை போன்றவற்றின் ரோமம் ஒவ்வாமை தரும் என்பதால் வீட்டில் வளர்க்கக்கூடாது என்பது மருத்துவர் ஆலோசனை. பிள்ளைகள் வளர்ந்து அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளும் வரையில் கூடாது என்று சொல்லி இப்போதைக்கு தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஆனாலும் வளர்ப்பு நாய்களின் அன்பும் குறும்பு விளையாட்டும் பார்க்கப் பார்க்க பரவசம்தான்.
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
பழகப் பழகப் புரியும் நாய் வளர்த்த அனுபவம் இருந்ததால் எடுத்துரைத்தேன் நன்றாக வளர்த்தால் செல்லங்கள் நன்றே.