Thursday, May 21, 2015

காது வாங்கப் போனேன் ......


                                 காது வாங்கப் போனேன்.....( அனுபவங்கள்)
                                  ---------------------------------------------------------------உபாதைகள் பலவிதம் என்று எழுதி இருந்தேன். புலன்கள் பற்றியும் எழுதி இருந்தேன் புலன்கள் அதற்குள்ள பணிகளைச் சரியே செய்யவில்லை என்றால் அதை உபாதை என்று கூற முடியுமா தெரியவில்லை. எல்லாப் புலன்களும் ஒழுங்காக வேலை செய்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் பார்வை சரியாக இல்லாமல் அதைச் சரிசெய்யக் கண்ணாடி போடும் சாத்தியம் வந்து விட்டது பற்களில் பிரச்சனை காரணமாகப் பற்களை எடுத்து செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ளவும் முடிகிறது இந்த இரண்டு பிரச்சனைகளைச்சரிசெய்ய செயற்கை உறுப்புகளைப் போட்டுக் கொள்வதுமான பாக்கியமும்( ?) பெற்றாய்விட்டது காது சரியாகக் கேளாமை இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் நுண் அறுவைச் சிகிச்சை செய்து ஒரு காதை சரிசெயத அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறேன் அன்று அறுவைச் சிகிச்சைக்கு என்னை உட்படுத்திக் கொண்டபோது இரு காதுகளிலும் செய்திருக்க வேண்டும்  ஒரு  காது அறுவைச் சிகிச்சைக்குப்பின் பிரச்சனை ஓரளவு சரியானவுடன்  மற்ற காதுக்கும் செய்யாதது தவறு என்று தெரிந்தது. அறுவைச்சிகிச்சை ஆகாத காது 70 சதவீதத்துக்கும் அதிகமாக செயலிழந்து விட்டது. அறுவைச் சிகிச்சை செய்த காதும் சரியாகக் கேட்காமல் பிறர் பேசும் வார்த்தைகள் தெளிவாக விழாமல் அவர்கள் பேசும் போது அவர்கள் முகத்தையே பார்த்து பல நேரங்களில் வார்த்தைகளை guess செய்ய வேண்டி வந்தபோது ஒரு இடியட் போல என்னை உணர்ந்தேன். காதுக்கும் செயற்கை உறுப்பு பொருத்திக் கொள்ள ஆலோசனைகள் வந்தன.
கண்களுக்குக் கண்ணாடி போடுவது போல் காதுக்கும் ( காதாடி.?)அது ஆடி அல்லவே, செயற்கை காது பொருத்திக் கொள்ள என்னைத் தயார் செய்வது மிகவும் சிரமமாய் இருந்தது வயதாவது ஒரு செய்யாத குற்றத்துக்கு  ஒரு தண்டனை என்று எழுதி இருந்த நான் இந்த புலன்களின் பிரச்சனை பற்றி சிந்திக்கவே இல்லை. உயிருள்ளவரை  எல்லாப் புலன்களையும் முழுமையாக உபயோகிக்க முடியாமல் போய் விட்டாலும் இந்த செயற்கை உறுப்புகள் ஓரளவு அந்தக் குறையைப் போக்குகிறது
துளசிதரன் தில்லையகத்துக் கீதா மேடம் காது பொருத்திக் கொள்வதில் கவனம் வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.வியாபார அணுகுமுறையே அதிகம் தென்படுகிறது என்றும் எச்சரிக்கை கொடுத்திருந்தார். எல்லா அனுபவங்களும் பட்டால்தானே தெரிகிறது இந்த யொசனைக்குப் பிறகு என் காதுகளைப்பரிசோதிக்க ஒப்புதல் கொடுத்தேன் நானும் என் மனைவியும் இங்கிருந்த ஒரு பிரபல மருத்துவ மனைக்குச் சென்று காது மூக்குத் தொண்டை நிபுணரை அணுகினோம் ஆடியோமெட்ரிக் பரிசோதனை நடை பெற்றது. கேட்கும் திறன் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்னும் சோதனை காதுகளை வித விதமான ஓசைகளுக்கு உட்படுத்தி  ஒரு க்ராஃப் போல ஒன்று தருகிறார்கள். அதிலிருந்து எனக்கு ஏதும் விளங்கவில்லை. அந்த ரிபோர்ட்டுடன் மருத்துவரை அணுகியபோது ஹியரிங் எய்ட் பொருத்திக் கொள்வது தவிர வேறு வழியில்லை என்றார். அவரே அந்த சாதனம் கிடைக்கும் இடத்தையும் பரிந்துரைத்தார். ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு அங்கு போனோம் . ரூபாய் பத்தாயிரம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரை ஹியரிங் எய்டுகள் இருக்கின்றனவாம் அவற்றின் தரம் பற்றியோ செயல்பாடுகள் பற்றியோ ஏதும் தெரியாது. அந்தக் கடைக்காரர் எவ்வளவு சானல்கள் வரை அதிகரிக்கிறோமோ அவ்வளவு துல்லியமாகக் கேட்கும் என்று கூறினார். சாதாரணமாக( அதாவது என்னைப் போன்றவர்களுக்கு ) ஆறு சானல்வரையிலான எய்ட் சரியாக இருக்கும் என்றார். ரூபாய் 26000/ - செலவாகும் என்றும் ஓரிரண்டு முறை அங்கு வந்து போக வேண்டும் என்றும் கூறினார். பிறகு வருகிறோம் என்று சொல்லி வந்து விட்டொம். ஒரு முடிவெடுக்க நான் மிகவும் தயங்கினேன்  என் மாமா மகன் ஒரு டாக்டர். அவனிடம் கேட்டேன் அவன் புலன்கள் சரியாக வேண்டுமானால் செலவு பற்றி யோசிக்கக் கூடாது என்றான் மேலும் இன்னொரு ஒபினியனுக்காக பெங்களூருவில் இருக்கும் டாக்டர் சந்திரசேகரின் இன்ஸ்டிடுயூட்டின் ஸ்பீச் அண்ட் ஹியரிங் செண்டருக்குப் போய் செக் செய்யச் சொன்னான்  அங்கு போய் எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் செய்தோம் . அவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அங்கிருந்த கன்சல்டண்ட் இரு காதுகளுக்கும் ஹியரிங் எய்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். மீண்டும் பல ஆலோசனைகளுக்குப் பின் அறுவைசிகிச்சை செய்த காதுக்கு மட்டும் எய்ட் போட்டுக் கொள்வதென்று தீர்மானித்தேன் அங்கே படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் வீட்டுக்கே வந்து  எனக்குத் திருப்தி அளிக்கும் படி ஹியரிங் எய்ட் போட உதவுவார் என்றும் தெரிந்தது. எனக்கு பத்து கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள கடைக்கு இரண்டு மூன்று முறை போய் செக் செய்து கொள்வதைவிட என் வீட்டிலேயே வந்து ஹியரிங் எய்ட் போட்டுத்தர உதவும் இந்த சேவை திருப்திகரமாகத் தோன்றியதுஇரண்டு இளைஞர்கள் வந்தார்கள் செயற்கைக் காது பொருத்தி என் திருப்தியைக் கேட்டார்கள். நான் ஓரிரு நாட்கள் அதைப் போட்டுப் பார்த்துப் பின் சொல்கிறேன் என்றேன் சரி என்றார்கள் ஆறு சானல் கரெக்‌ஷன் என்றார்கள் பனிரெண்டு சானல் கரெக்‌ஷன் செய்தகருவியையும் சோதித்துப் பார்த்தேன். அதன் விலை 90 ஆயிரத்துக்கும் மேலாகும் என்றார்கள். எனக்குக் காது கேட்க வேண்டும் மிகத் துல்லியம் என்பதே கேள்விக்குரியது. மேலும் 77 வயது இளைஞனுக்கு அது தேவையா என்னும் கேள்வியும் எழுகிறது. நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன் டிஸ்கௌண்ட் எல்லாம் போக ஆறு சானல் கரெக்ட் செய்த ஒரு செயற்கைக்காதை  ரூ. 23000/ - கொடுத்து வாங்கி இருக்கிறேன் இரண்டு மூன்று முறை அவர்களும் வந்து என் திருப்தியைக் கேட்டுச் சென்றனர். கீதா மேடம் காதில் வலி என்று கூறி இருந்தார்கள். அந்த எய்டில் உள்ள குமிழ்களை அவ்வப் போது மாற்ற வேண்டும் என்று கீதா மேடம் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் அது தேவைப் படாது என்றும் என் திருப்திக்காக மூன்று ஸ்பேர் குமிழ்களையும் கொடுத்திருக்கிறார்கள்
இப்படியாகத்தானே கண்ணாடியுடனும் செயற்கைக் காதுடனும்  செயற்கைப் பற்களுடனும் வாழ்க்கையை வாழ எதிர் நோக்குகிறேன்  பதிவர் டாக்டர் கந்தசாமி அவர்கள்கண்களை மூடிக்கொள்ளவும் செவிகளாஈப் பொத்திக் கொள்ளவு வாயை மூடிக்கொள்ளவும் மூன்று குரங்குகளிண் படங்களுடன் பதிவெழுதி இருந்தார்  அவர் வேறு பொருளில் சொல்லி இருந்தாலும்  அவற்றை உபயோகிக்க முடியாமல் இருக்க முடியாது.

26 comments:

 1. விரைவில் இதுவும் பழகி விடும். குறைகள் மறையாவிட்டாலும் அதை எதிர்கொள்வதே புத்திசாலித்தனம். ஆகவே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete

 2. பிரட்சினைகள் தீர்ந்து விடும் கவலை வேண்டாம் இறைவனிடம் வேண்டுகிறேன் ஐயா.

  ReplyDelete
 3. ஆஹா, காது குத்தியாகி விட்டதா? உங்கள் அனுபவத்தைப் பார்த்து விட்டு நானும் குத்திக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. என் அம்மா நாற்பது வயதில் இந்த நகையை அணிந்தார்கள். அதற்கு ஆரம்பத்தில் அவர் சாமிகிரி சித்தரிடம் அலைந்தது பெரிய கதை. இந்தக் கஷ்டங்களைப் பூராகவும் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. முதலில் சத்தங்களுக்கு காதுகள் பழகாமல் தலைவலி கூட வரும். வெகு சீக்கிரமே பழகி விடும்.

  ReplyDelete
 5. இதனால் என்ன பிரச்சினை வரும் என்றால் ,இனிமேல் காது கேட்கலேன்னு நடிக்க முடியாது :)

  ReplyDelete

 6. @ கீதா சாம்பசிவம்
  தோடு போட்டாகி விட்டது. பிரச்சனை ஏதுமில்லை .வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்

  ReplyDelete

 7. @ கில்லர் ஜி
  பிரச்சனைகள் ஏதுமில்லை ஜி. இறைவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் வருகைக்கு நன்றிஜி.

  ReplyDelete

 8. @ டாக்டர் கந்தசாமி
  நீங்களுமா.? ஆல் த பெஸ்ட். சார்

  ReplyDelete

 9. @ ஸ்ரீராம்
  எனக்குப் பிரச்சனைகள் ஏதுமில்லை ஸ்ரீ. முடிவெடுக்கவே நாளாகி விட்டது. இந்த அணி இருப்பதே தெரியவில்லை என்கிறார்கள். தீர்வுக்கு மருத்துவம் இருக்கும் போது சித்தரை எல்லாம் நாடமாட்டேன். வருகைக்கு நன்றி. இந்த அணியை சுமார் 12 மணிநேரம் அணிகிறேன். பழகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்லியிருக்கும் சம்பவம் எழுபதுகளின் பிற்பகுதியில் நடந்தது!

   Delete

 10. @ காது கேட்காததுபோல் ஏன் நடிக்கவேண்டும். கேட்கவில்லை என்றால் முகம் காட்டிக் கொடுத்துவிடும் வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 11. மேலதிகமான விவரங்களைப் பதிவு செய்தது - பயனுள்ளது..

  இந்த சிகிச்சை தங்களுக்கு முழுப் பயனுள்ளதாக அமைவதாக..

  ReplyDelete
 12. அனைத்துத் தடைகளையும் மீறி தாங்கள் சாதித்து வரும் நிலையில் இது தங்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை என்பதே என் கருத்து. நான் சொல்வதைத் தாங்கள் காதில் போட்டுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 13. புதிதாய் ஒரு பொருளை உபயோகிக்கும்போது சிறு சிறு சங்கடங்கள் வரத்தான் செய்யும், சந்தேகங்கள் தோன்றத்தான் செய்யும், பழகினால் சரியாகிவிடும் ஐயா
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன் ஐயா

  ReplyDelete
 15. பழக்கம் வழக்கமாகி விடும் ஐயா...

  இருந்தாலும் வருத்தப்படுகிறேன்...

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம்
  நான் ஏதாவது தவறாகக் கூறி விட்டேனா. எதற்கு இந்த க்லாரிஃபிகேஷன் புரியவில்லை.

  ReplyDelete

 17. @ துரை செல்வராஜு
  பிறருக்கு உபயோகமாகலாம் என்பதால்தான் இப்படி விலாவாரியாக எழுதினது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  காதில் போட்டுக் கொள்வதைவிட உள்வாங்கிக் கொள்வது நல்லதல்லவா. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ கரந்தை ஜெயக் குமார்
  சங்கடங்கள் பற்றியோ சந்தேகங்கள் பற்றியோ நான் எழுதவில்லையே. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 20. @ கரந்தை ஜெயக் குமார்
  சுற்றுலா சிறப்பாக இருந்ததா?வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 21. @ திண்டுக்கல் தனபாலன்
  இதில் நீங்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?வயதாகும் போது புலன்களின் செயல் திறன் குறைவது சகஜந்தானே.

  ReplyDelete
 22. வயதாகாக இது போன்ற பிரச்சினை அனேகருக்கு வரும். தொழில் நுட்பம் வல்ர்ச்சி அடைந்திருக்கும் இக்காலத்தில் அவைகள் மூலம் இழந்த திறன்களைப் பெறுவதில் தவறில்லை.

  ReplyDelete

 23. @ வே.நடனசபாபதி
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 24. மனிதரை வணஙகத் தோன்றுவது இதனால் தான்.

  ReplyDelete

 25. @ அப்பாதுரை
  எனக்கு கருத்துரையின் காண்டெக்ஸ்ட் புரியவில்லை. நன்றி

  ReplyDelete