Saturday, May 30, 2015

விஷ்ணு சஹஸ்ரநாமம் .


                                      விஸ்ணு சஹஸ்ரநாமம்
                                       ---------------------------------
 இந்த மாதம் பதினேழாம் தேதி  ஞாயிற்றுக் கிழமை என் மனைவியுடன் வயாலிக்காவல் வெங்கடேச பெருமாள் கோவில்கல்யாண மண்டபத்தில்  விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள் ஒருங்கிணைத்து நடத்திய நக்ஷத்திர பாராயணத்துக்கு சென்றிருந்தேன். அதாவது நக்ஷத்திரத்துக்கு ஒரு முறை வீதம் 27 நக்ஷத்திரங்களுக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பெங்களூருவில் 250-க்கும் மேற்பட்ட மண்டலிகள் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இம்மாதிரி அகில இந்தியாவிலும் ஆயிரக் கணக்கான மண்டலிகள் இருப்பதாகவும் இதையே ஒரு க்ளோபல் இயக்கமாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறினார்கள். ஒரு முறை பாராயணம் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் என்று கணக்கிட்டாலேயே 27 முறை பாராயணம் செய்ய  ஒன்பது மணிநேரத்துக்கும் மேல் ஆகிறது. காலை எட்டுமணி சுமாருக்குத் துவங்கிய பாராயணம் மாலை ஐந்து மணிவரைத் தொடரலாம். அன்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்வருபவர்கள் வீட்டில் இருப்போரின் நக்ஷத்திரங்களுக்குப் பாராயணம் முடியும் வரை இருக்கின்றனர். வந்த அனைவருக்கும் காலை டிஃபன்  மதிய உணவு எல்லாம் இலவசமாகக் கொடுக்கப் பட்டது
எந்த நேரத்திலும் அகில உலகில் 24 மணிநேரமும் எங்காவது இந்தப் பாராயணம் நடக்குமாறு செய்ய வேண்டும் என்பதே குறி என்றனர்
இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய சில செய்திகள் தமிழ் விக்கிப் பீடியாவிலிருந்து
இது சத்வகுணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரைஅம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.
யுதிஷ்திரர் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கிறார்
 1. இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?
 2. அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?
 3. எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?
 4. எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?
 5. எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?
 6. எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?
இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
திருமதி M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடியுள்ள விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் புகழ் பெற்றது
பகவத் கீதையைத் தமிழில் படிக்க வாய்ப்பு இல்லாததால்கீதையைப் பற்றிக் கேட்டிருந்தும் அதை முழுவதும் வாசித்திராதவர்களுக்காக கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழில் பதிவிட்டேன். அதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பரவலாகப் பாராயணம் செய்யப் பட்டாலும் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதால் பலருக்கும் பொருள் தெரிவதில்லை. தமிழில் இருக்கும் பல இறைவணக்கங்களுக்குமே பொருள் தெரிவதில்லை என்று சொல்லத் தயங்குகிறோம் பின் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் இந்த துதிக்கு பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்யப் படுகிறது என்று நான் சொன்னால் பலர் நம்பலாம். சிலர் மறுக்கலாம் அன்று நான் அங்கு சென்று கேட்டபோது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. மேலும் தமிழ்மட்டுமே படித்தவர்களுக்கு அந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு வருவது மிகவும் சிரமம் எனக்கு நான் தை ஏன் தமிழ் அர்த்தங்களை எழுதக் கூடாது என்று தோன்றியது. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் அங்கும் இங்கும் தேடி பொருள் கண்டு எழுதலாம்தான் இருந்தாலும் தயக்கமாக இருக்கிறது. அது ஒரு பெரிய ப்ராஜெக்டாக இருக்கும். எனக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.தயக்கத்துக்கு இன்னோர் காரணம் கீதைக்கு கிடைத்த வரவேற்பும் இதற்குக் கிடைக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சம்ஸ்கிருத மொழி கற்காததால் அந்த மொழியில் இருக்கும் பல விஷயங்கள் தமிழ் மூலமே கற்க வேண்டி உள்ளது முடிவெடுக்க முடியாமல் தயக்கத்தோடு இருக்கிறேன் . பார்ப்போம்.

முயற்சி செய்து பார்த்தேன் யுதிஷ்திரரின் கேள்விகளும் பீஷ்மப் பிதாமகரின் பதில்களுமாக எழுதிப் பார்த்தேன் எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய புரிதல் ஏதுமில்லாததாலும் அங்கு இங்கு என்று ப்ல இடங்களில் இருந்து தேடி எடுத்து பதிவாக்கினேன் . குறைகள் இருந்தால் அதன் முழுப் பொறுப்பும் எனதே. இருந்தாலும் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது முழு ஈடுபாடும் வருவதில்லை.பெரும்பாலானவர் பாராயணம் செய்தால் போதும் பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவோரே.இந்த ஸ்தோத்திரமே அவனது ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும் அபிப்பிராயம் உடையவர்களே   

Q.-1 Kim ekam daivatam loke?
கிம் ஏகம் தைவதம் லோகே
உலகிலேயே  ஒரே சிறந்தகடவுள் எனப்படுபவர் யார்
Ans.-Pavitraanaam pavitram yo Mangalaanaam cha mangalam
Daivatam devataanam cha Bhootaanam yo avyayah pitaa.
சாந்நித்தியத்தையே சாந்நித்தியம் செய்பவர் மங்களமே உருவானவர்.என்றும் நிலைத்திருக்கும் அனைத்துக்கும் பிதா தந்தை ஒரேகடவுள் விஷ்ணு.
Q.2.- Kim vaapyekam paraayanam?
கிம் வாப்யேகம் பாராயணம்
அனைவருக்கும் போக்கிடம் கதி யார்
Paramam yo mahat-tejah Paramam yo mahat-tapah
Paramam yo mahat-brahma Paramam yah paraayanam
.
மிகுந்த தேஜஸ் உடையவன் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் உண்மையின் ஒளிவீசும் பிரஹ்மம், அடைய வேண்டிய ஒரே இலக்கு-விஷ்ணு.
Q.3- .  Stuvantam kam praapnuyuh (Maanavah subham)?
ஸ்துவந்தம் கம் ப்ராப்னியுஹ்( மானவ சுபம்
யார் புகழ் பாடினால் மானிடர் நலம் பெறுவார்கள்
Ans.
Jagat-prabhum deva-devam Anantam purushottamam
Stuvan naama-sahasrena Purushah satatotthitah.
ல்லோரது நலனுக்கும் எல்லாம் செய்யும் இந்த பிரபஞ்சத்தின் தலைவன் ஸ்ரீமஹா விஷ்ணு
Q.4 -Kam archantah) praapnuyuh  Maanavaah subham?
கமர் சந்த ப்ராப்னியூ மானவ சுபம்
எந்த தெய்வத்தை அகத்திலோ புறத்திலோ வைத்து வழிபட்டால் அமைதியும் நலனும் பயக்கும்
   Tameva cha archayan nityam Bhaktyaa purusham avyayam
Stuvan naama-sahasrena Purushah satatthitah.
தியானத்தாலும் அர்ச்சனையாலும் அதே புருஷ்னை வணங்குதலால் மனிதன் நலம் பெறுவான்
Q.5 , Ko dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர் ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின் நாமத்தைப் பஜிப்பதாலும் நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே சிறந்த நெறியாகும்

விஷ்ணு  சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

அண்டமெலாம் வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான் நினைத்தப்டி நடத்தி தன் வசம் வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம் தலைவர்,தன் நினைவாலேயே அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர், பிரபஞ்சமே தன்னைச் சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆதமாவாக இருப்பவர்,அனைத்துக்கும் அவரே உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.

( இது போல 108 இரண்டடி சுலோகங்கள்...... உனக்கு இது தேவையா என்னும் கேள்வி எழுகிறது)

.


 


  

44 comments:

 1. முயற்சி தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தினைப் பொருள் கூறி வழங்க திட்டமிட்டு இருக்கின்றீர்கள்!..

  ஸ்ரீ ஹரிபரந்தாமன் துணையிருக்கட்டும்!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
 3. ராமகிருஷ்ணா மடத்தின் "அண்ணா" அவர்கள் விளக்கத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் உரையோடு கிடைக்கும். எங்களுடையதைப் பெண்ணுக்குக் கொடுத்தோம். ஆகையால் தற்சமயம் பொருளோடு கூடிய சஹஸ்ரநாமாவளிப் புத்தகம் கை வசம் இல்லை. ஆனால் ராமகிருஷ்ணா மடத்தில் கிடைக்கும்.

  ReplyDelete
 4. சாப்பிட அவசரமாகக் கிளம்பியதால் முன்னர் போட்ட கருத்துரையில் இதைச் சேர்க்க விட்டுப் போயிற்று. :) மூட நினைத்தவள் கருத்துரையைக் க்ளிக் செய்து விட்டேன். ஆகவே ஒரு வரி கருத்து மட்டும் முன்னால் வந்து விட்டது. :)

  ReplyDelete
 5. மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ உங்களுக்கு நன்றாகப் பாடம் ஆகுமல்லவா? அதுவே பெரிய லாபமல்லவா?

  ReplyDelete
 6. மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ உங்களுக்கு நன்றாகப் பாடம் ஆகுமல்லவா? அதுவே பெரிய லாபமல்லவா?

  ReplyDelete

 7. @ கீதா சாம்பசிவம்
  /முயற்சி தொடர வாழ்த்துகிறீர்கள்/ஆனால் எனக்கு அந்த உத்வேகம் வரவில்லை. பொருள் தேடி எடுக்கலாம் எங்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கு இந்த பாராயணம் ஒருமுறை கூட செய்து பழக்கமில்லை. என் மனைவி சொல்லுவாள். என் அண்ணாமார்கள் சொல்வார்கள். எனக்கு அதைப்பாராயணம் செய்து பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. இருந்தாலும் பாராயணம் செய்பவர்கள்பொருள் தெரியாமலேயே செய்கிறார்களே என்னும் ஆதங்கம் இருந்தது,உரை படித்துப் பார்க்கும் போது அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றபடி சொல்லிப்போகிறார்கள் என்று புரிந்தது. முடிந்தால் முயற்சி செய்தால் என் மனைவி பேரில் நானும் சஹஸ்ர நாமங்கள் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. வாசகர்களுக்காக எழுதலாம் என்று தோன்றியது உண்மை. ஆனால் அதற்கான சிரமமும் பலனும் மேட்ச் ஆகாது போல் தோன்றுகிறது

  ReplyDelete

 8. @ துரை செல்வராஜு
  முதலில் திட்டமாகத் தென்பட்டது இப்போது கைவிடப் படுகிறது வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete

 9. @ டாக்டர் கந்தசாமி
  பாடமாகிப்போகும் அளவுக்குப் படிக்கும் எண்ணம் இல்லை சார். லாபம் கருதி எழுத முற்படவில்லை. சார்

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete

 11. புதுமையான பதிவு புதிய விடயம்.

  ReplyDelete
 12. ஐயா...வணக்கம்
  தொடருங்கள்....தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம். தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நம்பிக்கையை விட மன திருப்தி முக்கியம் ஐயா...

  ReplyDelete

 14. @ கில்லர்ஜி
  இதில் நீங்கள் மட்டும் தனித்து இருப்பவர் அல்ல. பலர் சொல்லத் தயங்குவார்கள். நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 15. //புதுமையான பதிவு புதிய விடயம்.//

  விஷ்ணு சஹஸ்ரநாமாவளிகளுக்கு உரை ஏற்கெனவே இருப்பதால் புதிய விஷயம் இல்லை. அவரவர் மனப் போக்குக்கும் கொண்டிருக்கும் கருத்துக்கும் ஏற்ப மாறுபடலாம். அவ்வளவே! திரு ஜிஎம்பி அவர்களின் முயற்சி கட்டாயம் பாராட்டத்தக்கது. ஆனால் இதில் உள்ளதை உள்ளபடியே எழுத ஆழ்ந்த வடமொழி அறிவு தேவை. அது இல்லை என அவரே ஒப்புக் கொள்கிறார். :))))

  ReplyDelete

 16. @ உமையாள் காயத்ரி
  முதல்(?) வருகைக்கு நன்றி. இதைவிட அக்கறையுடன் கீதைக்கு தமிழில் பொருள் எழுதினேன். வருகை தந்தோரும் கருத்திட்டோரும் எண்ணுக்கையில் மிகக் குறைவே. நீங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்திருக்கிறீர்களா. ?

  ReplyDelete

 17. @ திண்டுக்கல் தனபாலன்
  நம்பிக்கையை விட ----எந்த நம்பிக்கையை விட. என் திருப்திக்கு மட்டும் எழுதுவதானால் வலைப்பூ எதற்கு. பலரும் படிக்க வேண்டும் கருத்து சொல்ல வேண்டும் தட்டிக் கொடுக்கவோ குட்ட்டிக் கொடுக்கவோ பல வாசகர்கள் வேண்டும் என்று நினைப்பதாலேயே பலரும் பதிவில் எழுதுகிறார்கள்.கருத்துக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 18. @ கீதாசாம்பசிவம்
  மேடம் கில்லர்ஜி புதுமையான பதிவு புதுமையான விடயம் என்று எழுதி இர்ருப்பது எனக்குப் பொருள் புரிந்தமட்டில் அவருக்கு இந்த விஷ்ணு சஹஸ்ரநாமமே புதிய விடயம் என்றே தோன்றுகிறது./ இதில் உள்ளதை உள்ளபடியே எழுத ஆழ்ந்த வடமொழி அறிவு தேவை/இல்லாததை எழுதினால் எதிர்ப்பு இருக்காதா.? அதற்கான காரணம் ஏதுமில்லையே. நானே கூறி இருப்பது போல் அங்கும் இங்கும் தேடித்தான் உரை எழுத வேண்டி இருக்கும் விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவர்கள் எத்தனை பேரிடம் உரை இருக்கிறது. பாராயணம் செய்பவர்கள் வலைப்பூ படிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதே பெரிய கேள்விக்குறி.நான் எழுதுவதற்கு வலைப்பூவில் எழுதுவதற்கு உந்துசக்தி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவே என் தயக்கத்துக்கு காரணம் மீள்வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. ஒரு சில ஸ்லோகங்கள் தெரியும். மொழிபெயர்ப்பு மிகப் பெரிய முயற்சி. :)

  சர்வம் கிருஷ்ணார்ப்பணம். :)

  ReplyDelete

 20. @ தேனம்மை லக்ஷ்மணன்
  வருகைக்கு நன்றி. மொழி பெயர்ப்பு செய்ய எனக்கு சம்ஸ்கிருதம் தெரிய வேண்டுமே. நான் கூறவந்தது அங்கும் இங்குமிருக்கும் மொழிபெயர்த்த வற்றை என் பதிவில் இடுவதே. இப்போதைக்கு அதுவும் shelved.

  ReplyDelete

 21. பொருள் உள்ள கருத்துக்கள் மொழி தெரியாத காரணத்தால் மக்களிடம் போய் சேரவில்லை. தங்களின் முயற்சி பாராட்டுக்குரியதே. உனக்கு இது தேவையா என்னும் கேள்வி உங்களுக்குள் எழத்தேவையே இல்லை.

  ReplyDelete
 22. ஒரு நல்ல முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளது அறிந்து மகிழ்கின்றேன். உங்களால் எங்களுக்கும் பயன் கிட்டப்போகிறது. கடந்த மூன்று வருடங்களாக தேவாரமும், திவ்யப்பிரபந்தமும் பொருளுடன் படித்துவருகிறேன். படித்து உணரும் போது கிட்டும் அந்த இறை உணர்வுக்கு இணையாக எதுவுமே இல்லை.

  நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

  ReplyDelete

 23. @ வே.நடனசபாபதி
  வாருங்கள் ஐயா. ஆயிரம் நாமங்களுக்குப் பொருள் தெரிந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை.எங்கும் நிறைந்தவர் அனைத்திலும் வியாபித்து இருப்பவர் போன்றஎண்ணங்களைக் கூறி அதுவே நாமாவளியாக இருக்கும் போது எந்த மொழியாய் இருந்தால் என்ன.? மேலும் நான் எழுதுவதற்கு குறைந்த அளவிலாவது வரவேற்பு இருக்குமா தெரியவில்லை. நான் என்னை பெரிய ஆத்திகனாகக் காண்பித்ததில்லை. அதுவும் காரணமாகலாம் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 24. தங்களுடைய ஆர்வத்துக்கும் இப்புதிய முயற்சிக்கும் வாழ்த்துகள் ஐயா. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணும் எல்லோருக்கும் அதன் பொருள் வரிக்கு வரி தெரிந்திருக்கவேண்டும் என்று நினைக்க நியாயமில்லை.. சமஸ்கிருதம் அறிந்தவர்கள் எளிதில் விளங்கிக்கொள்வார்கள். அறியாதவர்கள்.. அனைத்தும் விஷ்ணுவைப் போற்றும் சுலோகங்கள் என்ற வகையில் எப்படியும் கடவுளைப் போய்ச்சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் பாராயணம் செய்வார்கள். பாராயணத்தின் பொருள் புரிந்துகொண்டு கடவுளைத் துதிக்க நினைப்பவர்களுக்கு தங்களுடைய முயற்சி உதவலாம். அல்லது அப்படி என்னதான் அந்த சுலோகங்கள் சொல்கின்றன என்ற ஆர்வம் இருப்பவர்களுக்கு ஆர்வம் தணிக்க உதவும் வாய்ப்பாக இருக்கலாம். எனக்கு அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஒருவேளை தாங்கள் தொடர்ந்து எழுதினால் புதிதாய் ஒரு விஷயம் கற்ற மகிழ்வை அடைவேன்.

  ReplyDelete

 25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஐயா வருகைக்கு நன்றி. பின்னூட்ட மறுமொழிகளில் என் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன் இந்த தலைப்பில் தற்சமயம் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்

  ReplyDelete

 26. @ கீத மஞ்சரி
  வாருங்கள் மேடம் பின்னூட்டத்திற்கான என் மறு மொழிகளை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்நீங்களும் ஏறத்தாழ அதே கருத்துக்களைச் சொல்லி உள்ளீர்கள், வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 27. விஷ்ணு சகஸ்ரனாமத்திற்குத் தமிழில் பொருளுடன் புத்தகங்கள் உள்ளன. கிரி டிரேடிங்கில் கிடைக்கும். ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடும் உண்டு. கீதா பிரஸ் கோரக்பூரின் வெளியீடும் உண்டு. (௨) இம்மாதிரி மிக நீளமான சுலோகங்களைச் சொல்லி வழிபடும் அளவுக்கு இப்போது யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இருபது நிமிடத்தில் சொல்கிறேன், பத்து நிமிடத்தில் சொல்கிறேன் என்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதால் சுய பெருமையைத் தவிர வேறு பயன் உள்ளதா என்று தெரியவில்லை. அதற்குப் பதில் பஜகோவிந்தத்தைப படித்தாலே போதும். ஆதிசங்கரரே அதைத்தானே சொல்கிறார்! (௩) என்றாலும், விஷ்ணு சகஸ்ரநாமம், உரிய இன்குரல் உடையவர்கள் பொறுமையாகவும் பொருள் உணர்ந்தும் உச்சரிக்கும்போது, நிச்சயமாக மனதிற்கு அமைதி தருகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். - இராய செல்லப்பா சென்னை.

  ReplyDelete

 28. @ செல்லப்பா யக்ஞசாமி
  பொருளுடன் கூடிய புத்தகங்கள் இல்லை என்று கூறவில்லையே. திருமதி எம், எஸ்ஸின் விஷ்ணு சகஸ்ரநாமப் பாடல் முழுதும் கேட்க 30 நிமிடங்கள் எடுக்கிறது. நான் கேட்ட பாராயணம் 20 நிமிடங்கள் எடுத்தது ஓசை நயம் இருக்கும் எந்தப் பாடலும் அமைதி தரும். வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 29. சங்கரா தொலைக்காட்சியில் தினம் மாலை ஐந்திலிருந்து ஐந்தரை வரைக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமங்களின் பொருளோடு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மூலம் கன்னடத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இங்கே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. என்றாலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியின் பொருள் அருமையாக இருக்கிறது. எட்டிலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சொல்லிக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
 30. ஸ்லோகங்களைப் பொருள் தெரிந்து பாராயணம் செய்வது அரிது;ஆனால் அவ்வாறு செய்தால் அது சிறப்பே.அதற்கு உங்கள் பணி உதவும்.சொல்லப்போனால் வேதத்தையே பொருள் தெரியாது சொல்லக்கூடாதாம்(அனர்த்த:)!
  தொடருங்கள்

  ReplyDelete

 31. @ கீதா சாம்பசிவம்
  என் மனைவி சங்கரா தொலைக்காட்சி பார்ப்பாள். அதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது பார்த்திருக்கிறாள் பொருள் விளக்கப் படுகிறதா என்று நான் கவனிக்கவில்லை. பார்க்கிறேன் நன்றி

  ReplyDelete

 32. @ சென்னை பித்தன்
  ஐயா முதல் வருகைக்கு நன்றி. முதல் சுலோகத்துக்குப் பொருள் எழுதி இருக்கிறேன் இதுவரை பின்னூட்டமிட்டவர்களில் இது வரை யாரும் அபிப்பிராயம் சொல்லவில்லை. த்மிழில் இருக்கும் இறைப்பாடல்களுக்கே பலருக்கும் பொருள் தெரிவதில்லை including me. நான் பகவத் கீதை சுலோகங்களைத் தமிழில் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா, மீண்டும் நன்றி. .

  ReplyDelete
 33. தேவைதான் என்று நினைக்கிறேன். பொருள் அறியாமல் முணுமுணுக்கும் சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொண்டால் நல்லதுதானே?

  கீதா சொன்ன 'அண்ணா'வின் விளக்கத்தோடுள்ள புத்தகம் என்னிடமும் இருக்கிறது.

  முதல் ஸ்லோகத்துக்குப் பொருள் சரியாகத்தான் இருக்கு. மனம் நிறைந்த பாராட்டுகள்!

  ReplyDelete
 34. வேதத்தின் பொருளை நேரடியாக வேதம் கற்கையில் கற்பிப்பதில்லை என்று கேள்வி. அதன் பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே பல்வேறு உரைகள், பாஷ்யங்கள், இதிகாச புராணங்கள் என்று படிக்கிறார்கள். அவற்றையும் ஆழ்ந்து கற்றபின்னரே வேதத்தில் இந்த இடத்தில் சொல்லப்பட்ட மந்திரங்களுக்குக் குறிப்பிட்ட புராணம், அல்லது உரையில் இந்த முறையில் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது என்பது புரியும் என்பார்கள்.
  http://thamizhan-thiravidana.blogspot.in/2011/01/29.htmlhttp://
  thamizhan-thiravidana.blogspot.in/2011/01/30.html

  இந்த இரு சுட்டிகளும் வேதம் எப்படித் தப்பாகப் பொருள் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும். நான் பல வருடங்களாக இவரின் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன்.

  ReplyDelete

 35. @ துளசி கோபால்
  வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ,மேம் முதல் சுலோகத்துக்குப் பொருள் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறி உற்சாகப் படுத்துகிறீர்கள். அதெல்லாம் அங்கும் இங்குமிருந்து சேகரித்து எழுதியது. மீண்டும் நன்றி.

  ReplyDelete

 36. @ கீதா சாம்பசிவம்
  நான் பல விஷயங்களைப் படித்தாலும் அவற்றை முழுமையாக நம்புவதில்லை. படித்ததிலிருந்து என் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வேன் முதலில், வேதங்கள் உருவானபோது எழுத்துக்கள் இருக்கவில்லை. வாய்வழியே கூறப்பட்டு வந்தது. அம்மாதிரிக் கூறி வரும்போது த்வனி மாறி அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு. ஆகவே தான் உச்சரிப்புக்கு முதல் இடம் கொடுத்தார்கள் இருந்தாலும் முதலில் சொல்லப் பட்டு வந்ததைப் போல் இப்போதும் பின்பற்றப் படுகிறதா என்பதே கேள்விக்குறி. வட இந்தியாவில் இந்த வேதங்கள் ஓதப் படுவதற்கும் தென் இந்தியாவில் ஓதப் படுவதற்குமே வித்தியாசங்கள் த்வனியில் தெரியும் இந்த நிலையில் பொருள் தெரிந்து ஓதுதல் என்பதும் கேள்விக்குறியே. அவ்வாறு ஒரு சந்தேகம் வரக் கூடாது என்பதாலேயே பொருள் தெரியபாஷ்யங்களும் உரைகளும் தேவை என்றும் கூறிச் சென்றார்கள், இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நான் கிரகித்தவை. எந்த சுட்டியும் கொடுக்க இயலாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழன் திராவிடனா வலைத்தளம் எழுதியவர் மெத்தப் படித்தவர் போலும் சநாதன தர்மிஸ்ட் என்று அடையாளம் கூறிக்கொள்கிறார். முதல் சுட்டியைப் படித்தேன் எங்கெல்லாமோமேற்கோள் காட்டுகிறார். அவர் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்று நம்புவோம். மீண்டும் வருகைதந்து என்னை நானே மதிப்பிட உதவியதற்கு நன்றி.

  ReplyDelete
 37. துளசி கோபால் அவர்களின் பதிவின் மூலம் உங்கள் அறிமுகம் எனக்கு உண்டு . விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய மனசு முழுக்க எனக்கும் மிகுந்த ஆசை ,ஆனால் உச்சரிப்பும், அர்த்தமும் சரியாக தெரியாமல் , பாராயணம் செய்யும் முயற்சி எடுக்கவில்லை .
  உங்களின் பகவத் கீதை தமிழாக்கம் link அனுப்பினால் படித்து பயனடைவேன் .நன்றி

  ReplyDelete

 38. @ சசிகலா
  ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் தளத்தின் இணைப்பாளன் நான். பலமுறை வாசித்துக் கருத்திட்டிருக்கிறேன். ஆக எனக்கு உங்கள் தளம் அறிமுகமே என் பகவத் கீதைப் பதிவுகளின் இணைப்புகளை அனுப்ப எனக்கு உங்கள் மின் அஞ்சல் முகவரி தேவை. நான் எழுதிய கீதைப் பதிவுகள் அர்த்தங்களை மட்டுமேசொல்லிப் போகும் பாராயணம் செய்ய உதவாது உங்கள் ஆர்வத்துக்கு நன்றி

  ReplyDelete
 39. ஜிஎம்பி ஐயா,

  இவுங்க கவிதைப்பதிவர் சசிகலா இல்லை! பதிவரும் இல்லை. வாசகர்தான் இப்போதைக்கு. என்னுடன் சிலவருடங்களாகத் தொடர்பில் இருக்கின்றார்.

  ReplyDelete
 40. நான்முந்திரிக் கொட்டைபோல தென்றல் சசிகலாவின் தளத்துக்குப்போய்க் கருத்தும் எழுதிவிட்டேன் . இவர்களது பதிவுகள் பக்கம் போனால் கோகிள் ப்ளஸ் மட்டுமே வந்தது. இருந்தாலும் நான் ஏதாவது அனுப்ப மின் அஞ்சல் முகவரி தேவைதானே.வந்து தெளிவித்தமைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 41. என் பெயரால் வந்த குழப்பத்திற்கு மன்னிக்கவும்
  mailID அனுப்பியுள்ளேன்
  .@ துளசி . நன்றி துளசி!! , குழப்பத்தை தீர்த்தமைக்கு .

  ReplyDelete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. Sir,
  How do I send my Id with out getting pulished .

  ReplyDelete

 44. @ சசிகலா
  மேலும் ஒரு சின்ன குழப்பம் .மெயில் ஐ டி அனுப்பி இருப்பதாகக் கூறுகிறீர்கள், அதுஎங்கும் தென்படவில்லைகூடவே how do i send my id without getting published என்றும் எழுதி இருக்கிறீர்கள் சிம்பிள். எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் அது எனக்குத் தவிர எங்கும் பப்லிஷ் ஆகாது. என் மெயில் ஐ டி

  gmbat1649@gmail.com

  ReplyDelete