Monday, February 1, 2016

தொடர்பயணம் (மதுரை) -2


                          தொடர்பயணம் ( மதுரை )-2
                           ------------------------------------------


மதுரையில் இரண்டாம் நாள் நாங்கள்சீக்கிரமாகவே பயணம் தொடர ஆயத்தமானோம் முதலில் திருப்பரங்குன்றம்(அன்று தைப்பூசம்.?)  அதன் பின் திரு மோகூர் அதற்குப் பின் வைகை அணை என்று திட்டமிட்டுக் கொண்டோம் திருப்பரங்குன்றத்துக்கு நான் ஏற்கனவே பலமுறை சென்றுள்ளதாலும் முருகனைத் தரிசிக்க படிகள் ஏற வேண்டுமென்பதாலும் நான் கீழேயே இருந்து கொண்டு தேர் வீதி உலாவைக் காண முடிவு செய்தேன்  எல்லோரும் முருகனைத் தரிசிக்க மலை ஏறினார்கள் நான் கீழே இருந்தபோது எடுத்த படங்களும் காணொளியும் பகிர்கிறேன் 
 
திருப்பரங்குன்றக் கோவில் முகப்பு
 
தேர் வீதி உலா
 
தேரின் முக்கிய அடித்தளம் (பேஸ்)


 
தேர் வீதி உலா
முருகனைத் தரிசிக்கச் சென்றவர்கள் ஆளுக்கு ரூபாய் நூறு கொடுத்து சிறப்பு தரிசனம் என்று  சீக்கிரம் தரிசனம் செய்தார்கள் திருப்பரங்குன்றத்தில் எக்கோ பார்க் மற்றும் வாட்டர்  ஃபௌண்டன்  மாலை ஆறு மணிக்கு மேல் இருக்கும் என்று திரு எஸ்பி  செந்தில்குமார் கூறி இருந்ததால்  நாங்கள் சென்றபோது அதைக் காண முடியவில்லை திருப்பரங்குன்றத்தில் இருந்து திருமோகூர் பயணப் பட்டோம் மதுரைக்கு பல முறை போயிருந்தும் நான் காணாத கோவில் அது திரு காள மேகப் பெருமாள் என்னும்  நாமத்துடன் நின்ற கோலத்திலும்  சயனபெருமாளாக படுத்த கோலத்திலும் இறைவன் காட்சி தருகிறார் 108 திவ்விய தேசங்களுள் ஒன்று திரு மோகூர் கோவிலைப் பற்றியும்  திவ்ய தேசம் பற்றியும் அர்ச்சகர் சொல்லிக் கொண்டே போனார்ின்றோலத்ில் இருக்கும்  பெருமாளைப் புகைப்பம் எடுக்காமா என்று கேட்டேன் எங்கத்ிரூட்டம் ுமிருக்கில்லை. கர்ப்பத்ில் இருக்கும்  குழந்தையை யாராவஃபோட்டொ எடுப்பார்கா என்று அர்ச்சர் கேட்டார். நான் அுவும் ான் நக்கிறே என்றேன் அால்ன் எுவும் சியாக அமைவில்லை என்றொன்னர் அர்ச்சர் க.ர்ப்பக் கிரத்ில் இருக்கும் குள்கைப் பம் எடுக்காமா பத்ிிக்கைகிலும் இணையத்ிலும் பங்கள் கிடைக்கின்ற. ? ோசொல்லித் ட்டிக் கிக்கிறார்கள் சிம்ப்லி ிப்போக்ராடிக்...! கேள்விகள் ும் கேட்கக்கூடஆமாம் சொல்லிிட்டேன் 
திருமோகூர் போகும் போது ஆனைமலை ஒரு தோற்றம் 
திருமோகூர் கோவில் முகப்பு
 
கோவில் உள்ளே ஒரு தோற்றம்
 
இன்னொரு தோற்றம்


வைகை அணை செல்லச் சற்று நேரம் ஆகும் என்பதாலும் போகும் வழியில்  காஃபி அருந்த வண்டியை நிறுத்தினோம் வீதியோர காஃபிக் கடையிலிருந்து  என் மச்சினனும் மச்சினி மகள் ஒருத்தியும் காஃபி வாங்கிக் கொடுத்தார்கள்
       
வைகை அணை மேல் வான் செல்ல அனுமதி இல்லை என்றும் மேலே போக விரும்புபவர்கள் நடந்துதான் போக வேண்டும் என்று கூறினார்கள்அணை மேல் ஏறிப்போக விருப்பம் இருந்தாலும் கைப்பிடி இல்லாமல் படி ஏறுவது எனக்குச் சிரமம் என்பதாலும் நானும் என் மனைவியும் அவள் சகோதரி ஒருத்தியும் கீழேயே பூங்காவில் நேரம் செலவழித்தோம்




அணையின் மேல் பாகத்துக்குச் சென்றவர்களால் நீர்த்தேக்கத்தை மட்டுமே கூடுதலாகப் பார்க்க முடிந்தது வைகை அணையைச் சுற்றிப் பார்த் பின் மீண்டும் அறையை நோக்கி வண்டி கிளம்பியது மாலை எட்டு மணி அளவில் அறைக்கு வந்து சேர்ந்தோம்  மறு நாள் விடியற்காலையில் நான்கு மணி சுமாருக்கு இராமேஸ்வரம் செல்ல ரயில் என்பதால்  சீக்கிரமே படுக்கச் சென்றோம் நாங்கள் மதுரையில் சுற்ற்ப் பயன்படுத்திய அதே வான் எங்களை காலையில் ரயில் நிலையத்துக்குச் செல்லவும் வந்தது  அனைவரும் ரயிலில் ஏறி சௌகரியப்படுத்திக் கொண்டோம்  டிக்கட்  பரிசோதகர் வந்தார்.   ( தொடரும் )









      
                                          

        











          
     

24 comments:

  1. தங்களுடன் பயணித்த உணர்வு
    பதிவில் சில வரிகள் எழுத்துரு மாறி உள்ளது ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. டிக்கெட் பரிசோதகர் வந்ததில் ஏதோ பிரச்னை போலும்! சஸ்பென்சாக நிறுத்தி இருக்கிறீர்கள். திருமோகூர் அருகே மாணிக்க வாசகர் பிறந்த இடமாகிய திருவாதவூர் செல்லவில்லையா? நல்ல இடமாச்சே.. திருமோகூர் செல்லும் வழியில் ஒரு கிறித்துவர் கட்டியிருக்கும் பெரிய பெரிய இந்து விக்ரகங்கள் சிலை இருக்குமே பார்க்கவில்லையா? இங்கெல்லாம் கூட கமெண்ட் அடிக்க சில வரிகள் கிடைத்திருக்கும்! திருப்பரங்குன்றத்துக்கு எதிரே உள்ள மலை மேல் ஏறுவது கூட விசேஷம்தான், இல்லை, இல்லை சுவாரஸ்யம்தான். மதுரையின் புகழ் பெற்ற உணவகங்கள் எதற்காவது சென்று (கோனார்க்கடை தவிர) ருசி பார்த்தீர்களா தெரியவில்லையே.. கங்குவாலாகடை, ஆரியபவன் பை நைட், மாடர்ன் ரெஸ்டாரன்ட்.. ஆரியபவன் அருகே விற்கும் மசாலாபால் சாப்பிட்டீர்களா!

    ReplyDelete
  3. இந்த ஆனைமலை அடிவாரத்தில்தான் மதுரை விவசாயக்கல்லூரி இருக்கிறது. அங்கு நான் ஐந்து வருடம் வேலை பார்த்தேன் (!976-80). திருமோகூர் பல தடவை போயிருக்கிறேன்.

    ReplyDelete
  4. பதிவும், படங்களும் சிறப்பாக இருக்கின்றன.

    // கர்ப்பக் கிரகத்தில் இருக்கும் கடவுள்களைப் படம் எடுக்காமலா பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் படங்கள் கிடைக்கின்றன. ? ஏதேதோசொல்லித் தட்டிக் கழிக்கிறார்கள் சிம்ப்லி ஹிப்போக்ராடிக்...! கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாது ஆமாம் சொல்லிவிட்டேன் //

    சரியாகச் சொன்னீர்கள். நானும் (படம் எடுக்காதே என்ற) இந்த தொல்லைகளை பட்டு இருக்கிறேன். போகிற போக்கைப் பார்த்தால் , இனிமேல் கோயில்களில் படம் எடுப்பதே ‘ரிஸ்க்’ ஆக மாறிவிடும் போலிருக்கிறது.

    ReplyDelete
  5. அருமையான பயணம் அய்யா!

    ReplyDelete
  6. வழக்கமான பாணியில் உங்களது பயணம் அருமை. உடன் வந்த உணர்வு. கோயில்களில் புகைப்படம் எடுக்கும்போது இவ்வாறான நானும் பல முறை சிரமப்பட்டுள்ளேன். நன்றி.

    ReplyDelete
  7. பதிவில் சில இடங்களில் எழுத்துகள் சரியாக வரவில்லையே.... எனக்கு மட்டும் தானா?

    இராமேஸ்வரம் போகும் ரயிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.

    தொடர்கிறேன்....

    ReplyDelete
  8. மதுரையில் பார்த்த இடங்களை சுருங்கச் சொன்னாலும் விளக்கமாக படங்கள் மூலம் சொல்லிவிட்டீர்கள். எனக்கும் ‘நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளை படம் எடுக்கலாமா என அர்ச்சகரிடம் நீங்கள் கேட்டதிலிருந்து கேள்விகள் ஏதும் கேட்கக் கூடாது. ஆமாம். சொல்லிவிட்டேன்.’ என்பது வரை எழுத்துக்கள் சரிவர இல்லை.

    தொடர்கிறேன். இரயிலில் நடந்தது அறிய!

    ReplyDelete

  9. @ கரந்தை ஜெயக் குமார்
    கூகிள் க்ரோமில் தேடும்போது எழுத்துக்கள் சில உரு மாறி வருகிறது சில பதிவுகளில் காணொளியும் வருவதில்லை. வலை நுட்பம் தெரியவில்லையே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  10. @ ஸ்ரீராம்
    மிகச்சரி. பார்க்க வேண்டிய இடங்கள் என்று சில இடங்களின் பெயர்களை ( உபயம் கீதா மேடம் எஸ்பி செந்தில்குமார்) என் மச்சினனிடம் கொடுத்திருந்தேன் மற்றபடி பயண நிரல்கள் அவனதே வான் ட்ரைவர் இருக்கும் நேரம் பெண்களின் விருப்பம் முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன் அவன்தான் எங்கள் மேய்ப்பன் கோனார் கடை பற்றி அவன் என் மகன் சொல்லக் கேட்டிருக்கிறான் அசைவ உணவகம் மற்றபடி எனக்கு சாப்பாட்டில் அத்தனை ஈடுபாடுகிடையாது மதுரை ஸ்பெஷல் ஜிகிர் தண்டா பற்றிமட்டும் நான் நினைவு படுத்தினேன் மலைஎல்லாம் ஏற உடலில் தெம்பு வேண்டுமே திருப்பரங்குன்றத்துக்கு மேலே ஒரு தர்க்கா இருப்பதைக் கேள்விப்பட்டேன் எதிரே மலையா. ? தெரியவில்லையே வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  11. @ டாக்டர் கந்தசாமி
    இந்தப் பதிவு உங்களை விவசாயக் கல்லூரி நினைவுகளை மீட்டிருக்கிறது மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  12. @ தி தமிழ் இளங்கோ
    நான் பெரும்பாலும் கோவில்களுக்குப் போகும் போது அங்குள்ள சிற்பங்களை ரசிப்பேன் அதை நினைவில் கொள்ள படம் எடுக்க முடியவில்லை என்றால் சரியாகத் தோன்றவில்லை. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  13. @ எஸ்பி செந்தில் குமார்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  15. @ வெங்கட் நாகராஜ்
    அது தேடும் உலவியால் என்று நினைக்கிறேன் வலை வல்லுனர்கள் தெரிவிக்க வேண்டும்

    ReplyDelete

  16. @ வே நடன சபாபதி
    பிரச்சனை புரிகிறது காரணம் தெரியவில்லையே வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  17. எழுத்துக்கள் சில இடங்களில் சரியாகத் தெரிவதில்லை.எந்தக் கோயிலிலும் கர்ப்பக்கிரஹக் கடவுளை யாரும் படம் எடுப்பது இல்லை. அனுமதிப்பதும் இல்லை. கும்பாபிஷேஹம் சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் அனுமதி கொடுப்பார்கள். பெரும்பாலான கர்ப்பகிரஹக் கடவுளரின் படங்கள் வரையப்பட்டவையே. மதுரையில் மீனாக்ஷி சந்நிதியில் திரு சில்பி அவர்கள் நாட்கணக்காக அர்த்த மண்டபத்தில் உட்கார்ந்து வரைவதை என் சிறு வயதில் கண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  18. சுவாரஸ்யமாக சென்றது முடிவில் சஸ்பென்ஸில் நிற்கிறதே... புகைப்படங்கள் ஸூப்பர் தொடர்கிறேன் ஐயா நானும்... சில இடங்களில் எழுத்துகள் புரியவில்லை.

    ReplyDelete
  19. @ கீதா சாம்பசிவம்
    எழுத்துக்கள் ஏன் அவ்வாறு சதிசெய்கின்றன என்பது எனக்கும் புரியவில்லை. மொஜில்லா ஃபயர் ஃபாக்ஸில் தேடினால் ஒரு வேளை சரியாகத் தெரியலாம் பதிவிட்ட எனக்கே காணொளிகள் தெரிய மாட்டேன் என்கிறது..! கர்ப்பக்கிரக கடவுளர்களின் படங்கள் (இணையத்தில் கிடைப்பவை) எல்லாம் வரையப்பட்டவை என்றோ பாலாலயம் எடுப்பிக்கையில் படமாக்கப்பட்டது என்றோ நம்பமுடியவில்லை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  20. @ கில்லர்ஜி.
    எழுத்துக்கள் எனக்கும்புதிராகத்தான் இருக்கிறது ஜி

    ReplyDelete
  21. திருப்பரங்குன்றம்...
    திருமோகூர்...
    வைகை அணை...
    ஆஹா மதுரையில் அருமையா உங்களுடன் சுற்றியாச்சு ஐயா...
    இனி ராமேஸ்வரம்... வாங்க... நாங்களும் வந்து சேர்ந்துக்கிறோம்....

    ஐயா...
    பதிவில் சில இடங்களில் எழுத்துக்கள் சரியாக வரவில்லை....
    பாருங்கள்...

    ReplyDelete

  22. @ பரிவை சே குமார்
    வருகைக்கும் உற்சாகமான பின்னூட்டத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  23. தேர் திருவிழா கண்டேன்.

    ReplyDelete
  24. சுட்டி பிடித்து வந்தமைக்கு நன்றி மேம்

    ReplyDelete