Saturday, February 13, 2016

தொடர் பயணம் நாகர் கோவில் -2


                               தொடர் பயணம் நாகர் கோவில் -2
                                --------------------------------------------------
சுற்றுலாவின் கடைசி நாள் நாகர் கோவிலிலிருந்து திருச்செந்தூர் செல்லத் திட்டம். காலையில் எழுந்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் இன்றுடன் சுற்றுலா முடியப் போவது எண்ணி சற்றே வருத்தம் காலையில் காஃபி குடித்து பின் திருச் செந்தூர் நோக்கிப் புறப்பட்டோம் சற்றே நீண்ட பயணம் முதலில் செந்தூர் சென்றதும் காலை உணவு உண்டு பின் சுவாமி தரிசனம்செய்யக் குறை ஏதும் இல்லை. ஆங்காங்குதான் அதற்கான ஆட்கள் இருக்கிறார்களே சிறப்பு தரிசனம் என்று ஆளுக்கு ரூபாய் நூறு என்றும் அழைத்துச் செல்ல அவருக்கு ரூபாய் நானூறு என்று மொத்தமாக ரூபாய் 1500-/ கை மாறியது அதிக சிரமம் இல்லாமல் முருகனை அருகில் இருந்து கண்டோம்  அங்கிருந்து பஞ்ச லிங்க தரிசனம்  நான் சில முறை செந்தூர் சென்றிருந்தாலும் இந்த பஞ்ச லிங்க தரிசனம் இதுவே முதல் தடவை  குனிந்து பணிவாகச் செல்ல என்றே இருந்த வழி.  அங்கே ஒருவர் தெய்வத்தின் முன்னால்  நின்று கொண்டு கதறி அழுது கொண்டிருந்தார்  அவருக்கு என்ன குறையோ  மனம் விட்டுக் குறைகளைக் கூறி மனப் பாரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார் அதில் ஒரு மன சமாதானம் பாரம் குறைக்க இதுவும் வழிதான்  சக மனிதனிடம் சொல்லிக் குறை பட்டுக் கொண்டால்  நிம்மதி கிடைப்பதில்லைஅவனும் காது கொடுத்துக் கேட்பது சந்தேகம்  கடவுளிடம்  கொட்டித் தீர்த்தால் ஒரு நிம்மதி.
திருச்செந்தூர் கோவில் முகப்பு 
தரிசனம் முடிந்து வெளியே வரும்போது முருகனின் படம் தருகிறார்கள் ஆனால் அதுவும் ரூபாய் பத்து கொடுப்பவருக்கு மட்டுமே  என் மனைவிக்குக் கிடைத்தது எனக்கில்லை வெளியே பிரசாதமாகப் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொள்கிறார்கள்   நாங்கள் முன்பு சென்றிருந்த போது கோவிலின் பின்புறம் வள்ளிக்குகை பார்த்திருக்கிறோம்  அது பற்றி நான் சொன்னபோது சுற்றிப் போய்ப் பார்க்க யாரும்  ஆவல் காட்ட வில்லை.  செந்தூர்க் கடலோரத்தில் சிறிது நேரம் செலவழித்தோம் கடல் அலைகள் வந்து போகுமிடம் சிலர் கரையோரத்தில் பள்ளம் பறிக்கிறார்கள் அந்தப் பள்ளத்தில் சிப்பிகள் வந்து விழ வாய்ப்புண்டாம்
கடலில் குளித்தபின் நல்ல நீரில் நீராட என்றே அங்கே  நாழிக் கிணறு என்று இருக்கிறது அதற்கும் ஏகப்பட்ட கூட்டம் எங்களில் யாரும் கடலில் குளிக்க வில்லையாதலால்  நாழிக்கிணறை  நாட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அங்கே என்ன எதிர்பார்க்கலாம் என்று கூறியதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது. 


நாழிக் கிணறு காண ஆவலில்லாமல் ( போகும் வழியில் )


செந்தூர்க் கோவில் முன் 
       
  
சுற்றுலா இனிதே முடிந்த மகிழ்ச்சியா
   
                                            செந்தூர்க் கடலோரம்  ஒரு காணொளி


                                            திருச்செந்தூர் கடல் ஒரு காட்சி


மேய்ப்பனுக்கு நன்றி  காணொளி

/உஷ் …! அப்பாடா …! ஒருவழியாய் தொடர் பயணமும் சுற்றுலாவும் முடிவுக்கு வருகிறது.  26-ம் தேதி காலை கன்னியாகுமரி பெங்களூரு எக்ஸ்பிரெசில் ஊர் திரும்புவோம்  25-ம் தேதி இரவு உணவு முடிந்தபின் குழுவில் இருந்தவர்களுக்கு  எப்படியாவது என் மச்சினன் மேய்ப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.  ஒவ்வொருவரிடமும் பயணம் பற்றிய அவர்களது கருத்தை ஒரு சிறிய தாளில் எழுதக் கேட்டார்கள்  அவற்றைச் சுருட்டி ஒரு மாலைபோல் செய்தார்கள் பெண்கள் எல்லோரும் சுடிதார் உடையில் ஒரு அறையில்அனைவரையும் வரச் சொன்னார்கள்பிறகு மச்சினனுக்கு அந்த மாலையை இட்டு அதில் எழுதி இருந்த வாசகங்களைப் படித்துக் காட்ட அவன் மகிழ்ச்சியில் திண்டாடிப்போனான் எனக்கும் என்னாலும் ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது ஊக்கமளித்தது
 மறுநாள் காலை பத்து மணி அளவில் ரயில் ஏறி மறுநாள் 27-ம் தேதி ஊர்வந்து சேர்ந்தோம்  இப்பதிவுகளின் மூலம் மீண்டுமொருமுறை பயணப்பட்ட உணர்வுடன்முடிக்கிறேன்
சுடிதார் உடையில் பெண்கள்
உடுப்பி கிருஷ்ணா ஹோட்டலில் ஒரு படம் நூறு யானைகளுக்கும் மேல் அணிவகுப்பு 
ஒரு அலங்கார மீன்தொட்டி

                                   ( முற்றும் )             

31 comments:

 1. நல்ல சுற்றுலா முடித்து விட்டீர்கள். எனக்கு டூர் என்றாலே அதிலுள்ள சிரமங்களை நினைத்து பயமாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல அருமையான பயணப் பகிர்வுகள். அனைத்தும் சுபமாக முடிந்ததுக்கு இறைவனுக்கு நன்றி.

  ReplyDelete
 3. தங்களால் நாங்களும் பல இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளமுடிந்தது..

  இனிதே பயணாம் நிறைவடைந்தது குறித்து மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. எதிர்க் கேள்வி கேட்காமல், கட்சி கட்டாமல் குறுக்கிடாமல் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க ஆள் இருந்தால் அவர்தான் கடவுள்! அதுதான் கோவில்களில் கூட்டம். கூட்டம் கூடுமிடத்தில்தான் வியாபாரம் சாத்தியம். மக்கள் பிழைக்க வேண்டுமே!

  ReplyDelete
 5. மிக நன்றி ஜி. உங்களுடன் பயணப்பட்டதில் உடல் நோகாமல் எல்லாம் பார்க்க முடிந்தது.சந்தோஷம்.

  ReplyDelete
 6. இனிமையான சுற்றுலா..... உங்களோடு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. நடுவில் சில பகுதிகளை படிக்க வில்லை. படித்து விடுவேன்...

  ReplyDelete
 7. அருமையான சுற்றுலா விளக்கம். முடிவில் மேய்ப்பருக்கு நன்றி சொல்லுதல் சிறப்பு. செந்தூரக் கடற்கரையில் அன்னாசி (பைன் ஆப்பிள்) சுவைக்கத் தவறி விட்டீர்களே, அதுவும் நல்ல அனுபவமாக இருந்திருக்குமே?

  ReplyDelete
 8. பிரமாண்டமான சுற்றுலா நாங்களும் உங்களுடன் வந்தோம் கடைசிவரை உங்களை யாருமே புகைப்படம் எடுக்க வில்லையே ஐயா.

  ReplyDelete
 9. யாரோ 'நீங்கள் இல்லையா புகைப்படத்தில்?' என்று கேட்டுக் கொண்டே இருந்தாரே?.. அவர் ஆசைக்கானும் 'செந்தூர்க் கோயில்' முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிக்கியிருக்கலாமே என்ற நினைப்பு வந்தாலும் சிக்காமல் இருந்ததிலும் ஒரு வித்தியாசத்தை உணரத் தான் முடிகிறது.

  ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓர் ஆற்றோட்டமான நடையில் உலா வந்திருக்கிறீர்கள்.. அதற்காகவே பிடியுங்கள், வாழ்த்துக்களை!

  இருக்கவே இருக்கு, இனி வழக்கமான பதிவுகளில் சந்திக்கலாம்...

  ReplyDelete

 10. நீங்கள் சென்றிருந்த இடங்களில் திருச்செந்தூர், மதுரை தவிர நான் மற்ற இடங்களுக்குச் சென்றதில்லை. அந்த இடங்களைப் படம் போட்டு, உங்கள் ஸ்டைலில் விவரித்திருக்கிறீர்கள். Good show.
  ஒரு நீண்ட நெடுந்தொடரை முடித்துவிட்டீர்கள். இவ்வளவு விஸ்தாரமான பயணத்திற்கு சரியாக ஏற்பாடுகள் செய்து, உங்களை எல்லாம் கூட்டிச்சென்று கொண்டுவந்து சேர்த்த உங்களது மைத்துனருக்கு ஒரு சிறிய தங்க மோதிரமே போட்டிருக்கலாம்!

  ReplyDelete
 11. நன்கு விறுவிறுப்பாக உடன் வந்துகொண்டிருந்தபோது முற்றும் என தாங்கள் இட்டது சற்றே எங்களுக்கு வருத்தம். நல்ல பயணம், நல்ல வழிகாட்டல், நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 12. அருமையான பயணம்
  அழகானத் தொகுப்பு நிகழ்வுகள் ஐயா
  உடன் பயணித்த உணர்வு
  விரைவில் அடுத்தப் பயணத்திற்குத் தயாராகுங்கள்

  ReplyDelete

 13. @ டாக்டர் கந்தசாமி
  எனக்கும் முதலில் சற்று யோசனையாகவே இருந்தது. என் உடலை நான்அறிய இது ஒரு வாய்ப்பு என்றே எண்ணினேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 14. @ கீதா சாம்பசிவம்
  வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்

  ReplyDelete
 15. @ துரை செல்வராஜு
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 16. ! @ ஸ்ரீராம்
  ஒருவேளை நம்மைக் கேள்வி கேட்காது என்னும் தைரியமும் நம்பிக்கையும் தான் கல்லைக் கடவுளாகப் பாவித்துக் குறையிட வைக்கிறதோ வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 17. @ வல்லி சிம்ஹன்
  உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி தருகிறது மேம்

  ReplyDelete

 18. @ வெங்கட் நாகராஜ்
  விட்டுப்போன பகுதிகளையும் படித்தால் மகிழ்ச்சி சார்

  ReplyDelete

 19. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
  பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டாலேயே நன்றி சொல்கிறோம் கொண்டு நடத்திய மேய்ப்பனுக்கு நன்றி முறைதானே. செந்தூரில் அன்னாசி சுவைக்கா விட்டாலும் இராமேஸ்வரத்தில் ராமர் பாதம் சென்றபோது தர்பூஸ் சுவைத்தோம் அது பற்றி நான் குறிப்பிட வில்லை. வருகைக்கு நன்றி உமேஷ்

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி என் மச்சினன் என்னையும் சேர்த்து நிறையவேபடம் எடுத்திருந்தான் இருந்தாலும் என் பதிவில் நான் எடுத்த படங்களுக்கெ முன்னுரிமை தொடர்ந்து வந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 21. @ ஜீவி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. என் அடுத்த பதிவையும் பாருங்கள் ப்ளீஸ்

  ReplyDelete

 22. @ ஏகாந்தன்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் இதை விட நெடுந்தூரமும்நாட்களும் பயணப் பட்ட அனுபவம் இருக்கிறது இத்தனை வசதிகள் இல்லாத காலத்தில்

  ReplyDelete

 23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  FOR EVERY BEGINNING THERE HAS TO BE AN END இல்லையா ஐயா ? வருகைக்கு நன்றி

  ReplyDelete

 24. @ கரந்தை ஜெயக் குமார்
  வருகைக்கு பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 25. செந்தூர் அலை என் மேல் விழுந்து தெறித்தது போன்ற உணர்வு.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 26. செந்தூர் அலை என் மேல் விழுந்து தெறித்தது போன்ற உணர்வு.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

 27. @ சிவகுமாரன்
  வருகைக்கு நன்றி சிவகுமாரா.

  ReplyDelete
 28. அருமையான பயணத் தொடரை தந்ததற்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 29. அருமையான சுற்றுலா...அருமை என்று சொல்லுவதை விட மகிழ்வான சுற்றுலா அதுவும் இத்தனை பேருடன். அதாவது இந்த வயதிலும் மிகவும் உற்சாகமாகச் சென்று சுபமாக முடிந்த சுற்றுலா தங்களுக்கு மிகுந்த உற்சாக டானிக்தான். அடுத்த சுற்றுலா செல்லும் வரை உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். மேய்ப்பனுக்கு பரிசளித்த நிகழ்வை மிகவும் ரசித்தோம்...உங்கள் சந்தோஷமான குழு எங்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது...பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete

 30. @ எஸ்பி செந்தில் குமார்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 31. @ துளசிதரன் தில்லையகத்து
  சாதாரணமாக இல்லாததை அருமை என்று கூறலாம் இத்தொடரில் நான் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டிருந்ததாகப் பலரும் நினைக்கிறார்கள் கோவில்களுக்குப் போகிறவன் எல்லாம் ஆன்மீக வாதியா என்னும் கேள்வி எழுகிறதுயார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் இது ஒரு மகிழ்வான சுற்றுலாவாகவே இருந்தது. என்னாலும் ஏழெட்டு நாட்கள் பயணம் மேற்கொள்ள முடியும் என்னும் தென்பைத் தந்தது வருகைக்கு நன்றி துளசி/கீதா

  ReplyDelete