Monday, August 22, 2016

கண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு


                                             கண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு
                                             _________________________________________

சில துணுக்குச் செய்திகள்
காலையில் எழுந்ததும் கணவனை வணங்கி பின் குளித்துப் பூசை செய்து தளதளவென சேலை கட்டி, தலை நிறையப் பூச்சூடி  கணவனை எழுப்பி காஃபி போட்டுக் கொடுத்து  டிபனும்  கொடுத்து அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்tது என்னத்தான் என்று கேட்கும்   பாரத நாரி என்று நினைத்தாயோ
நான் பொண்டாட்டிடா    !  (கபாலி படம் பார்த்துப் படுத்ததன் விளைவு இது)
                    ----------------------------------------
ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வாங்கவில்லை  பாட்மிண்டனில் தங்கம் வாங்கவில்லை.  துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்  வாங்கவில்லை. வில்வித்தையில் தங்கம் வாங்கவில்லை குஸ்தியிலோ பாக்சிங்கிலோ தங்கம் வாங்கவில்லை ...... ஏன் தெரியுமா ?
நாம் இந்தியர்கள் ஆடி மாதத்தில் தங்கம் வாங்குவதில்லை புரியுதா?
                        *************************************

நான் இந்த முறை சென்னை சென்றிருந்தபோது  தெருப் பெயர் எழுதி இருக்கும் பதாகைகளில் அந்த இடத்துக்குப் பொறுப்புள்ள கவுன்சிலர் பெயர் தொலை பேசி எண் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் நம் இடத்தில் நிகழும் சில காரியங்களுக்கு யாரிடம் குறையைச் சொல்வது என்று தவிக்க வேண்டாம் அல்லவா ஒரு நல்ல விஷயம் பாராட்டுவோம்  இங்கு பெங்களூரிலும் அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
                        ************************************************


 இராமன் இருக்குமிடம் அயோத்தி என்று  நினைத்து சீதை அவனுடன் காட்டுக்குப் போனாள் என்பது கதை. இப்படியும் இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது அயோத்தியில் இருந்தால் மூன்று மாமியார்களையும்  சமாளிக்க வேண்டி இருந்திருக்கும் இராமனுடன்  போவதில் இரண்டு பலன்கள்  நல்ல பெயருக்கு நல்ல பெயர்.  மாமியார்களிடம் இருந்து தப்பிக்கவும் அதுவே வழி  இது எப்படி இருக்கு ?
                        **********************************************

 சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது  ஏறத்தாழ ஓராண்டு காலம்  கழிந்தும் அடுத்த பதிவர் சந்திப்பு எங்கே எப்போது என்று தெரியாத நிலை. இருக்கிறது  இதனை நான் எழுதக் காரணம் ஒரு மைய அமைப்பு இருந்தால் சில முடிவுகளை  எடுக்கும்  வாய்ப்பு அதிகம்  ஏ டி எஸ் அம்பர்நாத் அலும்னி அசோசியேஷன் சந்திப்பு இந்த ஆண்டு ஃபெப்ருவரியில்  நடந்தது பற்றி எழுதி இருக்கிறேன்  மைய அமைப்பு உள்ள அந்த அசோசியேஷனின் அடுத்த சந்திப்பு நாக்பூரில் அடுத்த ஆண்டு ஃபெப்ருவரியில்  19-20 தேதிகளில்  நடக்கப் போகிறது  சந்திப்புக்கு வருகை கோரும் அழைப்பும் வந்து விட்டது வலைப்பதிவர் சந்திப்பு குறித்த முடிவும்  சீக்கிரமே எடுக்கப்படும்  எனும் நம்பிக்கை இருக்கிறது 
                   ******************************************
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணிருக்கிறாள் என்று சொல்வார்கள் அதையே ரியோ ஒலிம்பிக்ஸுக்குப் பின்  மாற்றிக் கூறலாம்  ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண் இருக்கிறார்  உ-ம் தீபாகர்மார்க்கருக்குப் பின்னால் பிபேஷ்வர், சாக்க்ஷிக்குப்பின்னால்  குப்தீப்,  சிந்துவிற்குப் பின்னால்  கோபிசந்த்
ஒரு ஆணின் பேச்சைக் கேட்கத்துவங்கினால் பெண்கள்  முன்னேறலாம்
                     ******************************************* 
             

  

32 comments:

 1. #ஒரு ஆணின் பேச்சைக் கேட்கத்துவங்கினால் பெண்கள் முன்னேறலாம்#
  ஆயிரத்தில் ஒரு வார்த்தை சார் :)

  ReplyDelete
 2. ஆடி மாதம் தங்கம் வாங்கக்கூடாது. நல்ல சென்டிமென்ட்.

  ReplyDelete
 3. ராமன் - சீதை கதை மட்டும் புதிதாகப் பார்க்கிறேன். மற்றவை எல்லாம் எனக்கும் வந்துள்ளன!

  ReplyDelete
 4. சீதையின் சிந்தனை அப்படியும்
  இருக்கச் சாத்தியம் தானோ என
  எண்ண வைத்தது

  பதிவர் சந்திப்புக் குறித்தும்
  மைய அமைப்புக் குறித்தும்
  அதிகம் எழுதியும் போதிய
  ரெஸ்பான்ஸ் இல்லை
  குறிப்பாக ரெஸ்பாண்ட்
  செய்ய வேண்டியவர்களிடம் இருந்தும்

  ஈரோட்டிலிருந்து பதிவுகள்
  எழுதுபவர்கள் அதிகம் பேர் இல்லை
  எழுபவர்களில் முக்கியமான இருவருக்கு
  தனியாக மெயில் அனுப்பினேன்
  பதிலில்லை

  அடுத்து தஞ்சையில் நடத்துவதற்கு
  சாத்தியம் இருக்கிறது

  தொடர்ந்து எழுதுகிறவர்களும்
  நடத்தக் கூடிய ஆற்றலுள்ளவர்களும்
  அங்கு நிறைய இருக்கிறார்கள்

  பக்கத் துணையாய் ஒருபுறம்
  திருச்சியும் புதுகையும் இருப்பது
  கூடுதல் வாய்ப்பு

  அவர்களிடம் இருந்துதான் விருப்பம்
  தெரிவித்துப் பதிவுகள் வரவேண்டும்

  பார்ப்போம்

  ReplyDelete
 5. நானும் பகவான்ஜியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். இத்தனை நாட்களுக்குப் பிறகு சீதையின் திட்டம் புரிந்திற்று.

  ReplyDelete
 6. 1. ஏற்கெனவே இங்கே முகநூலில் 'பெண்டாட்டி டா' வந்து சக்கைப்போடு போட்டதே!

  2. இது பொம்பளைங்க சென்டிமென்ட். ஆம்பளைங்க ஆடி ஓடி தங்கம் வாங்கலாமுல்லே.... இலவசம்தானே :-)

  3. அட! ரொம்ப நல்ல விஷயம்.

  4. இப்படியாவது தனிக்குடித்தனம் போக வாய்ச்சதேன்னும் இருக்கலாம்:-)

  5. மதுரை பதிவர் மாநாட்டில் பார்த்தோமே.... புதுக்கோட்டைப் பதிவர்கள் எல்லோரும் அவுங்க ஊரில் அடுத்த மாநாடுன்னு அப்பவே எவ்ளோ ஆர்வமா உறுதிப்படுத்திக்கிட்டுப் போனாங்கன்னு! எக்கச்சக்கமான பதிவர்கள் அவுங்க ஏரியாவில்!
  மற்ற ஊர்களில் இருக்கும் பதிவர்கள் ஒன்று சேர்ந்து எதாவது முடிவு எடுப்பாங்கன்னு நம்புவோம்!

  6. ஆஹா.... வெளங்கிரும்...............

  ReplyDelete
 7. நான் பொண்டாட்டிடா.... - அந்தப் பெண் முகநூலில் மிகப் பிரபலமானார். சமீபத்தில் அவரை அழைத்து ரஜினி வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறார் என்றும் நேற்று படித்தேன்.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 8. நல்ல தொகுப்பு ஐயா
  நன்றி

  ReplyDelete
 9. நல்லாயிருக்கு...துணுக்குகள் ஐயா

  ReplyDelete
 10. கலகலப்பு..

  நிறையவே ஓய்வு கிடைக்கும் போலிருக்கின்றது -
  இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு!..

  ReplyDelete
 11. எல்லாமே படித்தவை!

  ReplyDelete
 12. சீதை வனம் புகுந்த காரணம் இதுவா? ராமாயணத்தைக் கூட விடவில்லை நம் மக்கள்.

  ReplyDelete
 13. ஒவ்வொன்றும் முத்து போல உள்ள தொகுப்பு. அரிய செய்திப்பகிர்வு. நன்றி ஐயா.

  ReplyDelete

 14. @ பகவான் ஜி
  துளசி கோபாலின் பின்னூட்டத்தைப் பாருங்கள் ”ஆஹா..வெளங்கிரும் “ வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  இந்த செண்டிமெண்ட் பெண்களுக்குத்தான் ஆண்கள் தங்கம் வாங்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம்
  ராமன் சீதைத் துணுக்குத் தவிர்த்து எல்லாமே வந்திருக்க வாய்ப்பில்லை. பதிவைப் படித்தால் புரியும் வருகைக்கு நன்றிஸ்ரீ.

  ReplyDelete

 17. @ ரமணி
  பதிவர் சந்திப்பை யாரும் அவர்களாகவே முன் வந்து நடத்துவார்கள் என்று தோன்றவில்லை. எத்தனையோ பதிவுகளும் எழுதி விட்டேன் அடுத்த முறையும் புதுக் கோட்டை அன்பர்கள் நடத்துவதற்குத் தயாராயிருக்கலாம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ அருள்மொழிவர்மன்
  சீதையின் திட்டம் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 19. @ துளசி கோபால்
  ஒவ்வொரு துணுக்குக்கும் பின்னூட்டம் நன்றி. எனக்கு ஃபேஸ்புக்கில் நண்பர்கள் குறைவு. பொண்டாட்டிடா துணுக்கை என் மகன் அனுப்பி இருந்தான் ”ஆனால் வெளங்கிரும் “ விளங்கவில்லை. ஆண்கள் பேச்சை பெண்கள் கேட்கக் கூடாதா வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 20. @ வெங்கட் நாகராஜ்
  அதை எழுதியது பெண் என்பதும் ரஜினி பாராட்டியதும் புதிய செய்திகள் எனக்கு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 21. @ கரந்தை ஜெயக்குமார்
  நன்றி ஐயா

  ReplyDelete

 22. @ உமையாள் காயத்திரி
  துணுக்குகள் தவிர செய்திகளும் இருக்கிறதே . வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 23. @ துரை செல்வராஜு
  இதெல்லாம் ஓய்வில் சிந்தித்ததல்ல பகிரப் பட்டனவே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 24. @ கீதா சாம்பசிவம்
  எல்லாம் படித்தவையாக இருக்க வாய்ப்பில்லை. வருகைக்கு நன்றிமேம்

  ReplyDelete

 25. @ ராஜலக்ஷ்மிபரமசிவம்
  எதையும் விட்டு வைக்க மாட்டார்கள் நம் மக்கள் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  துணுக்குத் தொகுப்பு என்பதே சரி. செய்திகளும் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 27. @ கில்லர் ஜி
  பதிவுக்கு ஓக்கே சொன்னதற்கு நன்றி ஜி.

  ReplyDelete
 28. G.M Balasubramaniam said...

  @ பகவான் ஜி
  துளசி கோபாலின் பின்னூட்டத்தைப் பாருங்கள் ”ஆஹா..வெளங்கிரும் “ வருகைக்கு நன்றி ஜி
  இதுக்கு நீங்களோ ,நானோ பதில் சொல்ல முடியாது ,கோபால் மாமாதான் சொல்லணும் :)

  ReplyDelete
 29. சுவாரஸ்யமான துணுக்குச்செய்திகள்! நன்றி!

  ReplyDelete

 30. @ பகவான் ஜி
  விஷயம் தெரிந்தால்தானே கோபால் பதில் சொல்ல முடியும் மீள்வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 31. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete