புதன், 24 ஆகஸ்ட், 2016

கண்டேன் நான் கண்ணனை.........


                           கண்டேன் நான் கண்ணனை......
                         -----------------------------------------------



ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு. ஏன்  இந்த சந்தேகம் வீட்டில் இரண்டு காலண்டர்கள் ஒன்றில் கோகுலாஷ்டமி  இன்றைக்கு  மற்றதில் நாளைக்கு . அது சரி அஷ்டமி ரோகிணியில்  கண்ணனின் பிறந்த நாள் என்கிறார்கள்  நமக்கென்ன தெரியும் மனைவியைக் கேட்டேன்  இன்றும்  ஆகலாம் நாளையும் ஆகலாம் என்றாள் பெங்களூர்  இஸ்கான் கோவிலில் இரண்டு நாளைக்கும் கொண்டாடுகிறார்களாம் பதிவு எழுத உனக்கு அது முக்கியமில்லை என்று கூறிக் கொண்டு எழுதத் துவங்குகிறேன் சில ஆண்டுகளுக்கு முன்  மலையாளத் தொடர் ஒன்று வந்து கொண்டிருந்ததுஅதன் டைட்டில் சாங்  எனக்குப் பிடித்திருந்தது ‘” கண்டு  ஞான்  கண்ணனை  காயாம்பு வர்ணனை குருவாயூர் அம்பல நடையிலெ” என்னும் பாட்டு அது  அந்த நேரத்தில் கண்ணனனின் கேசாதி பாதம் வர்ணித்து  ஒரு பதிவு எழுத விரும்பினேன்  அதன்  துவக்கத்தில் “கண்டேன்  நான் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் குருவாயூர் கோவில் நடையில்” என்று துவங்கி  எழுதினேன் அதையே இன்று மீள் பதிவாக்குகிறேன் கண்ணனின்  கேசாதி பாத வர்ணனைக்கு  காலமுண்டோ  ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)




    





42 கருத்துகள்:

  1. அநேகமாய் ,இந்த பாடலை சுப்புத் தாத்தா பாடிக் காட்டுவார் என நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் உள்ளார்ந்த பக்தி வியக்க வைக்கிறது. ஏற்கெனவே இதைப் படிச்சிருக்கேன். மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. @ பகவான் ஜி
    அதற்கு சுப்புத்தாத்தா இதைப் பார்க்கணுமே வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  4. @ கீதா சாம்பசிவம்
    கண்ணனின் கேசாதி பாதம் பதிவை நான் எழுதியது நாராயணீயத்தில் இருந்ததை தமிழாக்கம் செய்ததுதான் என் பக்தியோ கற்பனையோ ஏதும் இல்லை. ஒருவரது எழுத்தைத் தமிழாக்கம் செய்யும்போதுஎன் கருத்து என்று ஏதும் சொல்வது இல்லை.குருவாயூரில் என் மனைவியும் அவரது சகாக்களும் நாராயணீயம் படிக்கச் சென்ற போது நானும் போய் இருந்தேன் அப்போது எழுதியது இது. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  5. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். சீடை, முறுக்கு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. @ ஸ்ரீராம்
    கிருஷ்ணஜெயந்தி என்றாலேயே சீடை முறுக்குத் தான் நினைவுக்கு வருகிறது இல்லையா. வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  7. சொல்லும் பொருளுமாக - இனிய பாடல்..

    ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. நன்றாக இருக்கிறது சார். ஒரு பாட்டாகப் பாடியே பதியுங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. //குருவாயூரில் என் மனைவியும் அவரது சகாக்களும் நாராயணீயம் படிக்கச் சென்ற போது நானும் போய் இருந்தேன் அப்போது எழுதியது இது.//

    நானும் தான் நாராயணீயம் படிச்சேன்! :) எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போற கதைதான் அது! :))) நீங்கள் உண்மையாகவே கண்ணனைக் கண்டதால், உணர்ந்ததால் தான் உங்கள் ஆழ்மனத் தேடல் இங்கே கண்ணனைக் குறித்த வர்ணனையாக வந்துள்ளது. இது ஒன்றும் தப்பான விஷயமே அல்ல. :)

    பதிலளிநீக்கு
  10. @ துரை செல்வராஜு
    /சொல்லும் பொருளுமாக இனிய பாடல் / வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  11. @ மோகன் ஜி
    பாட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் சார் பாடுபவர்கள் பாடலாம் எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்லை. வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  12. @ கீதா சாம்பசிவம்
    / நானும் நாராயணீயம் படிச்சேன் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது பொல் அல்ல இது மேடம் இந்த வர்ணனைக்குச் சொந்தக் காரர் திரு நாராயணபட்டத்ரி ஆவார். தமிழாக்கம் எனது. தப்பான விஷயம் என்று நினைத்தால் பதிவிட்டிருக்க மாட்டேன் நான் கண்டது கேட்டது படித்தது என்று பலவற்றைப் பதிவிடுகிறேன் அதில் இதுவும் ஒன்று மீள் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  13. /நான் கண்டது கேட்டது படித்தது என்று பலவற்றைப் பதிவிடுகிறேன் அதில் இதுவும் ஒன்று //

    'உருவமில்லா கடவுளுக்கு உருவம் கொடுத்து..' என்பது உங்களை நினைத்தாலே நினைவுக்கு வரும் உங்கள் பாணி கடவுள் கொள்கை.

    அந்தக் கொள்கையிலிருந்து நல்ல வேளை, சறுக்கவில்லை. சறுக்கி இருந்தால் சுட்டிக் காட்டியிருப்பேன். அதான், சறுக்கவில்லையே, ஏன் இந்த பின்னூட்டம் என்றால் சறுக்காமல் கொண்ட பாணியில் காலூன்றி நிற்பதையும் சொல்ல வேண்டுமல்லவா?..

    பதிலளிநீக்கு

  14. @ ஜீவி
    இந்தப் பின்னூட்டத்தை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்னைப் புரிந்தவரின் பாராட்டு என்று கொள்ளலாமா வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  15. //இந்தப் பின்னூட்டத்தை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் .//

    சந்தேகமில்லால் நீங்கள் கொண்டிருக்கிறபடி தான். தான் சொல்வதை குறைந்தபட்சம் தான் கடைபிடிக்க வேண்டும் என்ற சான்றாண்மை கொண்டோர் வாழ்த்துகளுக்கு உரியோர்.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீ ஜெயந்தியின் போது இப்படி ஒரு பதிவு பொருத்தமானதே.

    குருவாயூர்ப்பக்கம் நான் போனதில்லை. நாராயணபட்டத்ரியைப்பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் வாசித்ததில்லை. அவரது கிருஷ்ணபக்தியை உங்களது வார்த்தைகளில் காண்கிறேன். மாயக்கண்ணா! என்னே உன் லீலை!

    பதிலளிநீக்கு
  17. @ ஏகாந்தன்
    குருவாயூர் பார்க்க வேண்டிய ஒரு இடம் ஆனால் வெகுவாக மாறி விட்டது முன்பெல்லாம் நிர்மால்ய தரிசனம் என்று அதிகாலை மூன்று மணிக்கே கோவில் போய் பலமுறை பிரகாரத்தைச் சுற்றும்போது தரிசனம் கிடைக்கும் ஆனால் இப்போதெல்லாம் அது மாதிரி இல்லை. தரிசனத்துக்காக பல மணிநேரம்கூட நிற்க வேண்டி இருக்கும் சுமார் 20- 30 அடி தூரத்தில் இருந்து சில வினாடிகளே அந்த சின்ன விக்கிரக தரிசனம் கிடைக்கலாம் குருவாயூரில் எனக்குப் பிடிக்காத ஒன்று நெட்டி மோதும் கூட்டம் அதுவும் வெயில் காலத்தில் மேல் துணி ஏதுமில்லாமல் ஆண்களும் ஆண்பெண் பேதமில்லாமல் நெருக்கும் பெண்கள் கூட்டமும்தான் ஒரு முறை போய்த்தான் பாருங்களேன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  18. உங்கள் மொழி பெயர்ப்பை படிக்கும் பொழுது மூலத்தை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  19. @பானுமதி வெங்கடேஸ்வரன்
    மகிழ்ச்சி. பாகவத சாரம் எனப்படும் நாராயணீயம் படியுங்கள் ஆங்காங்கே வகுப்பெடுப்பார்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. சுப்புத் தாத்தாவுக்கு தகவல் கொடுத்து விட்டேன் ,அதை, நண்பர் ஒருவர் G+ ல் ஷேர் செய்தும் விட்டார் ,எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் பாட வரலாம் ,பாடவரலாம் :)
    அவரோட வலைப்பூ >>>http://subbuthatha72.blogspot.in/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  21. அடுத்து நான் வலையில் தேடப் போவது ' நாராயணீயம்' பற்றித் தான். இத்தனை அருமையா? கிருஷ்ணன் வர்ணனை அவனைக் கன் முன் கொண்டு நிறுத்துவதாக இருக்கிறது. அவன் திருவடிகளை பற்ற முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
  22. @ பகவான் ஜி
    சுப்புத்தாத்தா தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  23. ராஜலக்ஷ்மி பரமசிவம்
    நாராயணீயம் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  24. கண்ணனுக்கும் உங்களுக்கும் அதிக நெருக்கம் என நினைக்கிறேன். கண்ணனைப் பற்றிய பதிவுகள் உங்களிடம் அதிகமாக காணப்படுகின்றன ஐயா. எல்லாம் அவன் லீலையோ?

    பதிலளிநீக்கு

  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அப்படியா நினைக்கிறீர்கள்? என்னை தொடர்ந்து படித்து வரும் நீங்கள் சொல்வதை எப்படி மறு தளிப்பது வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  26. குருவாயூர் போய்வரவேண்டும். (பொதுவாக ஒரு ட்ரிப் கேரளாவுக்கு). நீங்கள் சொல்வதைப்போல் கோவில்களில் இந்த அநியாயக் கூட்டம் அயரவைக்கிறது. புகழ்பெற்ற கோவில்களில் கூட்டம் இல்லாத நாள் என்று ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  27. കണ്ടു ഞാൻ കണ്ണനെ என்பது ஸ்ரீகுமார் பாடிய பாட்டு.

    Album : Kandu Njan Kannane (2008) Lyrics : S Ramesan Nair Music : M G Sreekumar Singers : M G ...

    இதற்கும் நாராயணீயத்திற்கும் சம்பந்தம் இல்லை. மேலும் மலையாள பாட்டும் தங்களுடைய தமிழ் பாட்டும் வித்தியாசம் உள்ளவை. ஆனாலும் தங்களுடைய கண்ணன் பக்தியால் தான் தமிழில் இது போன்று பாதாதி கேச வருணனை செய்யமுடிந்தது. பாடல் நன்றாக உள்ளது.

    --
    Jayakumar

    ​P.S. கீதா மாமி நாராயணீயத்தில் இது (நீங்கள் எழுதிய பாடலின் சமஸ்க்ரித வடிவம்) எங்கே இருக்கிறது என்று தேட மாட்டார்கள் என்று ​நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ஐயா நான் கூறியது தவறு. நாராயணீயத்தில் கடைசி கிருஷ்ணாவதாரத்தில் இது போன்று கிருஷ்ணனை குருவாயூரில் கண்டு கேசாதி பாதம் வருணித்து பாடும் பாட்டுக்கள் உண்டு.

    முன்பு கூறியதை மன்னிக்கவும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு

  29. @ ஏகாந்தன்
    போய் வாருங்கள். குருவாயூரில் உதயாஸ்தமனப் பூஜை இல்லாத நாட்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் அதற்கு முன் என் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள் மீள்வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  30. @ ஜேகே 22384
    வாருங்கள் ஐயா. நானும் கண்டு ஞான் கண்ணனெ என்றபாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறவில்லை. அந்தப் பாட்டு பாதாதி கேசம் எழுத வைத்தது என்றுதான் கூறி இருக்கிறேன் இதை நான் எழுத இன்ஸ்பிரேஷனே நாராயணீயம் தான் பாடலைஒப் பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  31. @ ஜேகே 22384
    நான் எழுதுவதை கூர்ந்து கவனிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது நாராயணீயத்தில் உள்ள கேசாதி பாதம் பாட்டுகளின் தமிழ் வடிவே நான் எழுதியது என்று கூறி இருக்கிறேனே நாராயணீயத்தில் பாதாதி கேசம்என்ற தலைப்பில் தேடுங்கள் கிடைக்கும் கீதா மாமிக்கு நான் பக்தி உள்ளவன் என்று நினைபொபதில் ஒரு திருப்தி என்று தெரிகிறது நன்றி

    பதிலளிநீக்கு

  32. @ பரிவை சே குமார்
    பாராட்டுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  33. //கீதா மாமிக்கு நான் பக்தி உள்ளவன் என்று நினைபொபதில் ஒரு திருப்தி என்று தெரிகிறது நன்றி//

    me least bothered about these petty matters. :) No time to think about this. Already I am too busy!

    பதிலளிநீக்கு

  34. @ கீதா சாம்பசிவம்
    /உங்கள் உள்ளார்ந்த பக்தி வியக்க வைக்கிறது/ இந்த வரிகளே என்னை அப்படி எழுத வைத்தது. அதற்கு /me least bothered about these petty matters. :) No time to think about this. Already I am too busy!/ இது சற்று ஹார்ஷ் ஆக இல்லையா பரவாயில்லை நன்றி

    பதிலளிநீக்கு
  35. //இது சற்று ஹார்ஷ் ஆக இல்லையா பரவாயில்லை நன்றி//

    தெரியலை! ஏனெனில் உங்களுடைய உள்ளார்ந்த பக்தி, அதிலும் ஆழ்ந்து தோய்ந்து மன ஈடுபாட்டுடன் காணப்படும் பக்தி மட்டுமே என்னை வியக்க வைக்கும் ஒன்றே தவிர அதை இல்லைனு நீங்கள் சொல்வதில் எனக்கென்ன பிரச்னை வரப் போகிறது! அது உங்கள் கருத்து! இது என் கருத்து! என்னளவில் அவ்வளவே நான் நினைப்பது. மற்றபடி கடுமையாக உங்களுக்குத் தோன்றினால் என்னுடைய மன்னிப்பை வேண்டுகிறேன். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒதுக்க வேண்டியது. நான் என் கருத்தில் மாறாமல் இருப்பது போல் நீங்கள் உங்கள் கருத்தில் மாற முடியாது! இதை என்னால் புரிந்து கொள்ள முடியும்! ஆகவே மீண்டும் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். :)

    பதிலளிநீக்கு

  36. @ கீதா சாம்பசிவம்
    விளக்கத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. 'நீங்கள் தமிழ்ப்படுத்தி எழுதியுள்ள பாடல் மனதைத் தொடுகிறது. மூலப் பாடல் மிகுந்த பக்தி உணர்வோடு பாடப்பெற்றிருப்பது தெரிகிறது.

    "விபுவே"- அர்த்தம் புரியலை
    "பதித்தக் கை வளைக் குலு" - பதித்த கைவளை குலுங்க என்றிருக்கவேண்டும்.
    "சந்தண மணம்" - சந்தன மணம்
    மேலே உள்ள இரண்டு typo errorகளும் பாயசத்தில் அகப்படும் சிறு கற்கள் போன்று தோன்றுவதால் எழுதியுள்ளேன். தவறாக எண்ணவேண்டாம்.

    பதிலளிநீக்கு

  38. @ நெல்லைத் தமிழன்
    நாராயணீயத்தில் ஓரிரண்டு இடங்களில் விபுவே என்று வருகிறது விஷ்ணுவின் நாமங்களில் ஒன்று என்று மனைவி கூறுகிறாள். என் மூத்த பேரனின் பெயரும் அதுதான் கைவளை குலுங்க என்றுதானே இருக்கிறது. சந்தணம சந்தனமா எது சரி என்று தெரியவில்லை. தவறு என்று பட்டதைக் கூறியதற்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  39. சார் வரிகள் நன்றாக இருக்கின்றன. அனுபவித்து எழுதியது போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

  40. @ துளசிதரன் தில்லையகத்து
    ரசித்து என்பதை விட முயற்சித்து என்பதே சரியாய் இருக்கும் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு