Saturday, November 12, 2016

நினைவுகளும் நிகழ்வுகளும்


                                நிகழ்வுகளும்  நினைவுகளும்                                 


பிறந்தநாளைக் கொண்டாடுவதே இன்பம் அதே நாள் மண நாளுமாக இருந்து விட்டால் double whammy…! என் விஷயத்தில் அது உண்மை. ஓரிரு வருடங்களில்  அதே நாளில் தீபாவளியும்  வந்திருக்கிறது இந்த முறை எல்லோரையும் எதிர் பார்க்க முடியாது இப்போதுதானே தீபாவளிக்கு வந்திருந்தனர்.
வீட்டில் முக்கிய நிகழ்வுகள் கூடவே நினைவலைகளையும் எடுத்துவரும்  வலை உலகிற்கு வந்ததிலிருந்து பலவற்றைப் பகிர்ந்து வருகிறேன் மணநாள் என்றால் வீடியோ கண்டு மகிழமுடியவில்லை. அப்போது வீடியோக்கள் எடுக்கவில்லையோ இருக்கவில்லையோ  இருந்தாலும் கருப்பு வெள்ளைப் புகைப் படங்கள் சில நினைவுகளைப் புத்துப்பித்துக்கொள்ள உதவுகின்றன. மண்நாள் சஷ்டியப்த பூர்த்தி பிறந்தநாள் புகைப்படங்கள் etc etc..அவற்றில்சில கீழ

தாலி கட்டுதல்
மோதிரம் அணிவிக்கிறேன்
 
ாலை மாற்றல்

வரவேற்பு
ரிசெப்ஷன்(குழந்தைகளாய் இருப்பவர்கள் இப்போது பேரன்  பேத்தி பார்த்து விட்டார்கள்
சஷ்டியப்த பூர்த்தி  (திருக்கடையூரில் 1998)
சஷ்டியப்த பூர்த்தி
மகன் மருமகள் பேத்தியுடன்  திருக்கடையூரில்
மகன் மருமகள் பேரனுடன்  திருக்கடையூரில்
குரூப் புகைப்படம் திருக்கடையூர்
மச்சினன் அவன்  மனைவி மகளுடன்  திருக்கடையூர்என் வாரிசுகளின் பிறந்தநாள் வாழ்த்து 

என்பெரிய பேரன் என்னுடனே இருக்கிறான் 10-ம் தேதி இரவு 11 மணிக்கு வேலை முடித்து வந்தவன்  ஒரு கேக் கும் எனக்கு ஒரு ஷர்ட்டும் வாங்கி வந்திருந்தான்  வந்தவுடன் பிறந்தநாளுக்கு  ஒரு நாள் முன்பாகவே கேக் கட் பண்ணச் சொன்னான்   அவன்  கைங்கரியம் கீழே


நானும் மனைவியும்
பிறந்த நாள் மண நாள் கேக் 11-11 2016
11-11-2016 மாலை என் வீட்டில் ஒரு செல்ஃபி க்ரூப்

அண்ணலும்  நோக்கினான் அவளும் நோக்கினாள்

முக நூலிலும்  வலைப் பூவிலும்  தொலை பேசியிலும் எங்களை வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்
   


24 comments:

 1. பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக வருவது அபூர்வம். அந்த வகையில் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தங்கள் குடும்பத்தினர் கொண்டாடியதில் வியப்பேதும் இல்லை. படங்கள் அருமை. காணொளியை இரசித்தேன். உங்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. வாழ்த்துகள் ஸார். திருமணநாள் வாழ்த்துகளையும் சேர்த்து சொல்கிறேன். அன்று மறந்து விட்டேன்.

  ReplyDelete
 3. மீண்டும் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும். படங்கள் எல்லாம் அருமை!

  ReplyDelete
 4. அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சதாபிஷேகம் காணவும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 6. உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா. உங்களின் வழிநடத்தல் எங்களுக்குப் பெருமையாக உள்ளது.

  ReplyDelete
 7. ஆஹா மிக்க மகிழ்ச்சியான விடயம் ஐயா வணங்குகிறேன்......மணமக்களை.

  ReplyDelete
 8. அருமை நண்பர் வே.நடனசபாபதி சொல்வது போல பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக வருவது வெகு அபூர்வம்!

  நேசம் மிக்க தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், ஐயா!

  ReplyDelete
 9. இனிய பிறந்த நாள், இனிய திருமண நாள் இணைந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. ஐயா வாழ்த்த வயதில்லை.
  வணங்குகிறேன் ஐயா...

  ReplyDelete
 11. @ வே நடன சபாபதி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் மணநாளும் பிறந்த நாளும் தற்செயலாக ஒன்றாய் அமையவில்லை, திட்டமிட்டதே. நவம்பர் எட்டாம் தேதி திருமணம் என்று முதலில் முடிவு செய்தார்கள் நான் அதை 11-ம் தேதிக்கு மாற்றச் சொன்னேன் நாள் கோள் எதுவும் பார்க்கவில்லை.

  ReplyDelete

 12. @ ஸ்ரீராம்
  @ கீதா சாம்பசிவம்
  @ டாக்டர் கந்தசாமி
  @ பகவான் ஜி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ டாக்டர் ஜம்புலிங்கம்
  @ கில்லர் ஜி
  @ ஜீவி
  @ அபயா அருணா
  @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
  @ அஜய் சுனில்கர் ஜோசப்
  அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

  ReplyDelete
 13. பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளா
  அருமை
  எங்கள் திருமண நாளும், வீட்டு கிரகபிரவேச நாளும் ஒன்று
  வணங்குகின்றோம் ஐயா

  ReplyDelete

 14. @ கரந்தை ஜெயக்குமார்
  நினைவில் வைத்துக் கொள்வது எளிதாகிறது .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 15. திருக்கடையூர் வரிசையாக வருகிறதே! என்ன விசேஷம்?

  Black & white படங்களைப் பார்த்தபோது `இந்த நீங்கள்`தானா `அந்த நீங்கள்` என்று நினைக்கத் தோன்றியது! நல்ல கலெக்‌ஷன். மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 16. @ ஏகாந்தன்
  திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி என்று எழுதி இருக்கிறேனே கவனிக்கவில்லையா நானும் வெகுவாக மாறி இருக்கிறேன் அன்று 26 இன்று 78. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 17. அதைக் கவனித்தபிறகுதான் இந்தக் கேள்வி! சஷ்டியப்தபூர்த்திக்கு திருக்கடையூர் போவானேன்?

  ReplyDelete
 18. @ ஏகாந்தன்
  என்னைச் சார்ந்தவர்களின் விருப்பம் ஏற்பாடு

  ReplyDelete
 19. உங்களது மணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி பிறந்தநாள் இரண்டும் ஒரேநாள் எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். என்னை வாழ்த்துங்கள். (இந்த பதிவினில் இரண்டாவது பாராவில் மணநாள் என்பது எழுத்துப் பிழையாக உள்ளது. கவனிக்கவும்)

  ReplyDelete
 20. 2 தி. தமிழ் இளங்கோ
  வருகைக்கு நன்றி ஐயா. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் . வாசிக்க வருபவர்கள் வந்து வாசித்தாயிற்று தட்டச்சுப் பிழை பொறுத்தருளுங்கள்

  ReplyDelete
 21. உங்கள் பிறந்தநாளை மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சார் மணநாளும் அதேநாளில் இருக்கிறது அல்லவா

   Delete