Wednesday, November 9, 2016

உள்ளம் சொல்லுதே ஒரு வாழ்த்து


                                              உள்ளம் சொல்லுதே ஒரு வாழ்த்து
                                                 --------------------------------------------------

ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்
என்  மனம் ஏனோ அல்லல் படுகிறது

வெறும்  களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து
குயவன்  கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்
எனப் பெருமைப் படுவாள் பாவம்
அவள் அறிய மாட்டாள் ஐம்பத்திரண்டு ஆண்டுகள்
என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று
இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்
தாரமும் ஒரு தாய்தானே
   அன்னையவளைத்  தேடி நான் அலைந்தபோது
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

யாதுமாகி  நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்
 தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 
நிரப்பி ,   சஞ்சலங்கள் நீக்கிய  சேயானேன்.
 .
பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து
காளையாய்க்  காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து
இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்
 எல்லாம் செத்து, நாளை  எண்ணுகையில் 
எனக்கு நானே  அழாதிருக்க,

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள  வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய்  வாழியவே

26 comments:

 1. வாழ்த்துகளும், வணக்கமும்.

  ReplyDelete
 2. ji great men see great things in their partners of life...
  you are no exception to this..
  with regards

  ReplyDelete
 3. கவிதை அருமை.
  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  முகநூலிலும் படித்தேன்.

  ReplyDelete
 4. உங்களின் மகிழ்ச்சிக்கு அடித்தளமாய் இருக்கும் ,மேடத்துக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா! அருமையாக கவி பாடி பாராட்டியுள்ளீர்கள்! நன்றி!

  ReplyDelete
 6. கவிதைப்பா அருமை ஐயா தாரமும் ஒரு தாய்தான் உண்மை
  வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
 7. அருமை. வணக்கங்கள்.

  ReplyDelete
 8. அருமையான வாழ்த்துப்பா. போற்றுகிறேன் உங்கள் அன்பை. வாழ்த்துகிறேன் உங்கள் துணைவியாரின் பேற்றை. இருவரும் பல்லாண்டு பல்லாண்டு இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 9. மேடத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வசன கவிதை நன்று.

  ReplyDelete
 10. வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 11. Whats the occasion? திடீரென்று `உள்ளம் சொல்லுதே ஒரு வாழ்த்து! என்று ஆரம்பித்து autobiography எழுதினால் எதைப் புரிந்துகொள்வது!

  ReplyDelete
 12. நல்வாழ்த்து. வணங்குகிறோம்.

  ReplyDelete

 13. @ கீதா சாம்பசிவம்
  @ நாட் சந்தர்
  @ தருமி
  @ அபயா அருணா
  @ கோமதி அரசு
  @ பகவான் ஜி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ தளிர் சுரேஷ்
  @ கில்லர்ஜி
  @ ஸ்ரீராம்
  @ டாக்டர் கந்தசாமி
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ தமிழ் இளங்கோ
  @பானுமதி வெங்கடேஸ்வரன்
  @ ஏகாந்தன்
  @ ராமலக்ஷ்மி
  வருகை தந்து வாழ்த்தி பாராட்டிய அனைவருக்கும் நன்றி எதிர்வரும் 11இம் தேதி நாங்கள் மணந்து 52 ஆண்டுகள் முடிகின்றன. கடந்து வந்தபாதையத் திரும்பிப்பார்த்ததில் என்மனைவிக்கு வாழ்த்து சொல்லத் தோன்றியது அதுவே பதிவானது மீண்டும் நன்றி

  ReplyDelete
 14. மிக்க மகிழ்ச்சி. Many, many happy returns of the Day!

  ReplyDelete
 15. @ புரிந்து கொண்டு வந்து வாழ்த்தியதற்கு நன்றி சார்

  ReplyDelete
 16. முகநூலில் படித்து விட்டேன் என்றாலும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.இதை படித்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.உங்கள் வீட்டுக்கு இரண்டு முறை வந்திருக்கிறேன்.அம்மையாரின் உபசரிப்பில் அவரது பண்பை உணர முடிந்தது.வாழ்த்துகள் சார்

  ReplyDelete
 17. அவர் கொடுத்துவைத்தவர் ஐயா. தங்களின் அன்பினை உங்கள் எழுத்து மிகவும் அழகாக வெளிப்படுத்தியதை உணர்ந்தோம்.

  ReplyDelete
 18. கவிதை அருமை. திருமணம் முடிந்து 53 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆதர்ச தம்பதிகளான உங்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு!

  ReplyDelete

 19. @ ராயபுரம் 2
  வாழ்த்துகளுக்கு நன்றி சார். முதலில் ராயபுரம் என்று படித்தவுடன் ப்ரொஃபைல் பார்க்கப் போனேன் ஒன்றும் தெரியவில்லை. பிறகு நினைவு வந்தது இது நம் ராய செல்லப்பா அல்லவா என்று, துணைவியாரும் அப்படித்தான் என்றாள்

  ReplyDelete

 20. @ வே நடன சபாபதி
  வாழ்த்துகளுக்கு நன்றி சார்

  ReplyDelete

 21. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  உண்மையில் நானே கொடுத்து வைத்தவன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 22. மிக மிக அற்புதமான வாழ்த்துப்பா
  கொடுத்து வைத்தவர்..
  நீங்களுமே
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete

 23. @ இருவருமே கொடுத்து வைத்தவர்கள்தான் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete