Wednesday, November 16, 2016

உணவும் உணவு சார்ந்த எண்ணங்களும்


                          உணவும்  உணவு சார்ந்த எண்ணங்களும்
                          ---------------------------------------------------------
படம் கூகிளிலிருந்து
சாப்பிடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் .உயிர் வாழ உண்பவர்கள்  உண்பதற்காக உயிர் வாழ்பவர்கள் இவர்களை போஜனப்பிரியர்கள் என்று சொல்லலாம் கோபிக்க வந்தால் அது வெகுஜனப்பிரியர்களின் திரிபு என்று கூறிச் சமாளிக்கலாம் என்னைப் பொறுத்தவரை நான் முதல் பிரிவைச் சார்ந்தவன்  ஆனால் ருசித்து உண்பவர்களை எனக்கு மிகவும்  பிடிக்கும்
பொதுவாக விருந்துக்குப் போனால் வயிறார உண்பவர்களைக் காணலாம் ஆனால் விருந்துக்குப் போய் பசி ஆறாமல் நான் வருவேன் முக்கிய காரணம் நான் மிக மெதுவாக உணவு உட்கொள்ளுபவன் நான்  சாதம் பிசைந்து முதல் கவளம் வாயில் போடுவதற்குள் பலரும் ஏறக்குறைய உணவு உட்கொள்ளுவதை முடித்து இருப்பார்கள் பந்தியின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது
 என் உறவினர் ஒருவர் மிகவும் ருசித்து நிறையவே சாப்பிடுவார். அவருக்குப் பல வருஷங்களுக்கு முன்  குடல் புண்ணுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதி குடல் எடுக்கப்பட்டு இருந்தது. இன்னொரு உறவினர் அரைக்குடலிலேயே இவ்வளவு சாப்பிடுபவர் முழுக்குடல் இருந்தால் எவ்வளவு உண்பார் என்று கேலி செய்வார் . ஒருவர் சாப்பிடும்போது திருப்தியாகும் போதுகண்களில் நீர் வழியும் என்பார். இவர் உண்ணும் போது நான் இவர் கண்களையே கவனிப்பேன்  
 இன்னுமொருவர் தோசை வார்த்துப் போடும்போது இன்னும்  வேண்டும்  என்பதை நாட் அவுட் என்று சொல்லிக் கேட்பார்.
 முன்பு ஒரு முறை பெங்களூர் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டுக்குப் போயிருந்தபோது பரிமாறுபவர் சாதம்போடும்போது இலையைவிட்டுக் கீழே விழுந்து சாப்பிடுபவரின்  உடையில்  விழுந்து விட்டது சாப்பிடுபவர் பரிமாறுபவரிடம் சண்டைக்குப் போய் விட்டார். சிறிது பொறுமை காத்த சர்வர் அவரிடம்  மலையாளத்தில் “தான் ஒரு  மலையாளி அல்லேடா. சோறு விளம்பும்போ  எலையைத் தூக்கிப் பிடித்து சோறு தாழ விழாண்டு  இரிக்கான் செய்யணும்னு அறிஞ்சூடே “ ( நீ ஒரு மையாளிானேஇலையில் சம் போடும்பஉன் முனையத் ூக்கிப் பிடிக்கேண்டும் என்றெரிா) என்று சரமாரியாய்ச் சத்தம்போட ஆரம்பித்து விட்டார். அது முதல் மேசையில் அமர்ந்து இலையில் சாப்பிடும்போது  சாதம் போடும் போது  இலையின் கீழ் பாகத்தைச் சற்று தூக்கி சாதம்  கீழே சிதறாமல் இருக்கச் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டேன்
ஒரு சாரார் உண்ணும்போது  இலையையோ தட்டையோ சுற்றி  நீர் தெளித்து  பின்  உண்ணத் துவங்குவார்கள் தரையில் அமர்ந்து உண்ணும்போது  உணவில் எறும்பு போன்றவை வராமல் இருக்க இலையைச் சுற்றி நீர் தெளிப்பது புரிந்து கொள்ளப்படும்  ஆனால் இப்போதெல்லாம்  மேசையில் அமரும்போதும்  இச்செய்கை கடை பிடிக்கப்படுவதையும் பார்க்கிறேன்
சிராத்தம் போன்றவற்றில்  முதல் பந்தி சில பிராமணர்களுக்குப் படைக்கப்பட்டு பிறகுதான் மற்றவருக்கு படைக்கப் படும் இம்மாதிரி உண்ணும் பிராமணர்களை கேரளப் பக்கம் சவுண்டிப் பிராமணன்  என்பார்கள் பொதுவாக இவர்கள் எலும்பும்  தோலுமாக  இருப்பார்கள். ஆனால் இவர்கள் உண்ணும்  உணவு பிறர் பார்த்தால் கண்படும் என்று தனியாக எவர் கண்ணிலும்  படாமல்  விளம்புவார்கள்

 விருந்துக்கு உணவு பறிமாறப்படுவது பல இடங்களில்  வேறு வேறு  மாதிரி இருக்கும்   தமிழகத்தில் முதலில்பதார்த்தங்களுக்குப் பின் சாதம்  சாம்பார் ரசம் பாயசம்  தயிர் என்னும்  முறையில் இருக்கும்  ஆனால் ஆந்திராவில் முதலில் ஒரு பொடியும்  நெய்யும் சாதத்துக்கு பிசைந்து சாப்பிடவும்  பின் ரசம் சாம்பார் பாயசம் தயிர் என்னும் முறைப்படியும்  இருக்கும்  கர்நாடகாவிலும்  ஆந்திர முறையே காண்கிறேன் கேரளத்தில் பாயசத்துடன் பப்படம் பிசைந்து சேர்த்து உண்பதைப் பார்த்திருக்கிறேன்  கேரளத்தில் விருந்து என்றால் அதை நாடன்  சாப்பாடு என்பார்கள்  பதார்த்தங்களில் அவசியம் இருப்பது காளன் ஓலன் அவியல் பச்சடி  எரிசேரி புளிசேரி மோர்குழம்பு நேந்திரக் காய் வறுவல்இனிப்பும்  காரமும் இஞ்சிப்புளி  ஊறுகாய் பப்படம் பாயசம் என்பவை அவசியம் இருக்கும் பாயசங்கள் பலவகைப்படும்  கேரளாவில் பிரதமன்  என்பதில் பாலடைப் பிரதமன் சக்கைப் பிரதமன்  என்பவை தவிர பருப்புப் பாயசமும் பால் பாயசமும்   உண்டு, பாலக்காட்டில் நூரணி என்னும்  கிராமம் அங்கு சாஸ்தா ப்ரீதி நடக்கும் என் சின்ன வயசில் போய் இருக்கிறேன்  சத்தியைக்கு ஏழுவகைப் பாயசம் இருக்கும் இப்போதும்  தொடர்கிறதா தெரியவில்லை.
ஒரு வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றமடைந்த சம்பவமும்  நிகழ்ந்திருக்கிறது எங்களை மதிய உணவுக்கு வருமாறு அழைக்க நாங்கள் வெயிலில்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அங்கு போனால் எங்களுக்கு உணவு பறிமாறும் எண்ணமே இல்லாதவர்கள் போல் மாமியார் வீட்டில் விசேஷ கவனிப்புடன் உணவு முடிந்திருக்குமே என்று சொல்ல எங்களுக்குச் சே என்று ஆகிவிட்டது வீட்டில் விருந்துக்குப் போகிறோமென்று சொல்லிக் கிளம்பியவர்கள் அன்று ஓட்டலில் உண்டு சமாளித்ததும்  நினைவுக்கு வருகிறது 


உணவே மருந்து என்று சொல்கிறோம் ஆனால் உணவு விசேஷ தினங்களில் வீணாக்கப்பட்டு வருவதையும் பார்க்கிறோம் சில காப்பகங்களில் மீந்து போகும் உணவை அவர்களது காப்பகங்களுக்குக் கொடுக்கும் படி வேண்டிக் கொள்கிறார்கள்
.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சைவ உணவுக்காரர்கள் பாடு திண்டாட்டமே  நான் ஜப்பானில் இரண்டு வாரங்கள் இருந்தேன் வெறும் ரொட்டியும் க்ரீன்  டீயும்  தான் உணவு நாக்கு செத்துபோய் இந்திய உணவகம் தேடி பலகிலோமீட்டர்தூரம் பயணித்திருக்கிறோம் ஜப்பானில் இருக்கும்போது எங்களைக் கவனித்து வேண்டிய உதவிகள் செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்  அவர் எங்களை ஒரு ரெஸ்டாரெண்டுக்குக் கூட்டிப்போக விரும்பினார் எங்களுக்கும்  அது ஒரு அனுபவமாக இருக்குமே என்று சரி என்றோம்   அவர் அவரது மனைவியையும் குழந்தையையும் கூட்டி வருவதாகவும்  அது பற்றி நாங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்  எங்கள் தயவில் அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு விருந்து என்று தெரிந்தது/ அவர் கேட்டுக் கொண்ட விதம்  அவரது செய்கை தவறாகக் கருதப்படும் என்று நினைக்கத் தோன்றியது ஜப்பானியர்களும் எல்லோரைப் போன்றவர்கள்தானே  இன்னொரு முறை நாங்களொரு டின்னருக்கு அழைக்கப் பட்டோம்  ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் bunny girls  என்று அழைக்கப்பட்டவர்கள்   முயல் போன்று உடை அணிந்து குட்டை உடையுடன் பறிமாறினார்கள்
உணவு சார்ந்த விஷயங்களை எழுதும்போது நினைவுகள் படை எடுக்கின்றன.  கடைசியாக  ஒரு வீதியோர உணவகத்துக்குச் சென்றோம். தவாவில் சூடாக நம்கண்முன்னே செய்து கொடுக்கிறார்கள்  சைவ உணவுக்காரர்களுக்கு  வெளி நாடுகளில் உணவு ஒரு பிரச்சனைதான் ஜப்பானில் அரிசி உணவு கிடைக்கும்   என்று கேள்விப்பட்டு  இங்கிருந்து பருப்புப்பொடி போன்றவற்றை எடுத்துச் சென்றேன்  அவர்களது சாதம் மிகவும் குழந்து இருக்கிறது விமான நிலையத்தில் இந்தப் பொடி வகைகளைப் பார்த்து  கடுமையாகச் சோதனை செய்தார்கள் இவை ஏதோ போதைப் பொருளாக இருக்குமோ என்னும்  சந்தேகம் 
  என்  மகன்  அண்மையில் மலேசியா  சிங்கப்பூர் சீனா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான் சீனாவில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் உணவாக்கப்படுவதாகக் கூறினான்
                                                 ஜப்பானில் ஒரு ரெஸ்டாரெண்ட்
     உணவுக்கும் உடலின் எடைக்கும் சம்பந்தம் இருக்கிறதா  தெரியவில்லை.  ஆனால் உணவு என்பது உடலுக்குத் தேவையான எரிபொருள்.  சக்தி.  உண்ணும்  உணவால் கிடைக்கும்  சக்தியை செலவழிப்பதில் உடல் எடையை/ பருமனை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் உட்கொள்ளும் சக்தி செலவிடப்பட வேண்டும் நான் எனக்கு வேண்டியவர்களிடம் உணவு அதிகம் உட்கொள்ளுவதைத் தவிர்க்க  ஒரு பயிற்சி சொல்லுவேன் தட்டில் உணவு இட வரும்போது ஓரளவுக்கு மேல் போகிறதென்றால் ஒரு பயிற்சி செய்ய வேண்டும் பறிமாறுபவர் காணும்படி தலையை இடது வலதாக அசைக்க வேண்டும் அவர்களும் நிறுத்தி விடுவார்கள் !
 உடல் பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கு முன்  தங்களது பல்ஸ் ரேட்டை  கணக்கிட வேண்டும் சாதாரணமாக அது 70 இருக்கும்   எந்தப் பயிற்சி செய்தாலும்  மெதுவாக பயிற்சி மூலம்  பல்ஸ் ரேட்டைக் கூடச்செய்ய வேண்டும் அது சுமார் நூறைத் தொட்டதும்  அதே  அளவில் சுமார் பத்து நிமிடங்கள் இருக்குமாறு பயிற்சி வேண்டும் பிறகு மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் நடந்தோ ஜாக்கிங் செய்தோ ஸ்கிப்பிங் செய்தொ பயிற்சி மேற் கொள்ளலாம்  இது ஒரு எளிதான முறை  முயன்று பாருங்களேன்
எதையோ எழுத வந்து எங்கோ போய் விட்டது இருந்தாலும் பயனுள்ள  விஷயங்கள்தானே பரவாயில்லை         

        
39 comments:

 1. உணவைக்குறித்து பல விடயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
  தேவகோட்டை செட்டியார்கள் வீட்டு கல்யாண விருந்தில் 18 வரையான கூட்டுகளுடன் விருந்து நடக்கும் எல்லாமே சைவ வகைதான் இதனுள் வாழைப்பழம் ஒன்றும் அடங்கும்.
  அபுதாபியில் மலையாளிகளோடு எல்லா வகை உணவும் உண்டு இருக்கிறேன் அதிலும் பாலடை பாயசம் மிகவும் அருமையாக செய்வார்கள், இஞ்சி புளிக்கறி ஸூப்பராக இருக்கும்.
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. உணவு பற்றிய அலசல் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

  ReplyDelete
 3. விருந்தின் அனுபவங்கள்
  சுவாரஸ்யமானவை
  அதிலும் குறிப்பாக எதிர்பார்த்துக்
  கிடைக்காமல் போனதும்
  எதிர்பாராது கிடைத்ததும்
  மறக்கமுடியாதவை
  பதிவைச் சுவைத்தேன்
  வாழ்த்துக்களுடன்
  (மதுரை வந்து விட்டேன்
  கொஞ்சம் எலெக்ஸன் பிஸி)

  ReplyDelete
 4. #இவர்கள் உண்ணும் உணவு பிறர் பார்த்தால் கண்படும் #
  வளைத்து கட்டுவார்கள் போலிருக்கே ,அப்படியிருந்தும் ஏன் எலும்பும் தோலுமாய் இருக்கிறார்கள் :)

  ReplyDelete
 5. பசியைத் தூண்டி விட்டீர்கள். என்ன செய்ய எதையாவது கற்பனை செய்துகொண்டு கிடைப்பதை தின்னவேண்டியது தான்

  ReplyDelete
 6. // எதையோ எழுத வந்து எங்கோ போய் விட்டது இருந்தாலும் பயனுள்ள விஷயங்கள்தானே பரவாயில்லை .//

  உணவைப்பற்றி எழுதும்போது உணவு சார்ந்த எண்ணங்கள் வருவது இயல்புதானே.
  பதிவை ர(ரு)சித்தேன்!

  இன்னுமொரு தகவல்: வட கர்நாடகாவில் சில இடங்களில் முதலில் சாறு (ரசம்) பரிமாறிவிட்டு பின்னர் சாம்பார் பரிமாறுவார்கள்.

  ReplyDelete
 7. ஹைய்யோ!!! இப்பதான் பேலியோ டயட்டுக்குள்ளே முழுசாப் போயிடலாமேன்னு தீவிரமா நினைச்சுக்கிட்டு இருக்கும்போது............ இந்த சாப்பாட்டுப் பதிவை வாசிக்கும்படி ஆச்சே!

  சுவையான ருசியான விவரங்கள்!

  ஒல்லியாக இருக்கும் பலர் நிறைய சாப்பிடுவது சகஜம். நானும் ஒல்லியா இருந்த காலத்தில் நல்லா வெளுத்துக் கட்டுவேன். அப்படியும் என்புதோல் போர்த்த உடம்புதான். இப்போ பயந்து பயந்து கொஞ்சமா சாப்பிட்டாலும். .... இளைப்பேனான்னு சவால் விடுதே உடம்பு :-(

  ReplyDelete
 8. சாப்பாட்டைப் பத்தி சுவாரசியமான விஷயங்கள். வெளிநாட்டுக்கு சென்றால் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் கொஞ்சம் அரிசியும் கொண்டு செல்லலாமா ?

  ReplyDelete

 9. @கில்லர்ஜி
  முதல் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஜி

  ReplyDelete

 10. @ ஸ்ரீ ராம்
  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 11. @ ரமணி
  மதுரை வந்தது கேட்டு மகிழ்ச்சி
  உணவு பற்றிய பகிர்வை ரசித்ததற்கு நன்றி சார்

  ReplyDelete

 12. @டாடர் கந்தசாமி
  வருகைகு நன்றி சார்

  ReplyDelete

 13. @ பகவான் ஜி
  இதிலிருந்து உணவுக்கும் பருமனுக்கும் சம்பந்தமிருப்பதில்லை என்றும் தெரிகிறது வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 14. @ சிவகுமாரன்
  படித்த மாத்திரத்தில் பசி வருகிறதா கிடைத்ததை உண்பது நல்ல செயல்தானே வருகைக்கு நன்றி சிவகுமாரா

  ReplyDelete

 15. @ வேநடன சபாபதி
  நானும் கர்நடகாவில் உணவு பரிமாறும் முறையை கூறி இருக்கிறேனே எனக்குத் தெரிந்தவர்கள் தென் கர்நாடகாவைச் சார்ந்தவர்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 16. @ துளசிகோபால்
  இப்போது உங்களுக்கென்ன பாந்தமாய்த்தானே இருக்கிறீர்கள் பூகம்ப சுனாமி அழிவுகள் அதிகமா . வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 17. @ தேனம்மை லக்ஷ்மணன்
  வெளிநாட்டுக்குப் போவதைப் பொறுத்திருக்கிறது நான் ஜப்பான் போனது அலுவலக வேலையாக. பின்னர் துபாய் சென்றிருக்கிறேன் மகனது வீட்டில் தங்கினேன் மேலும் வளைகுடா நாடுகளில் தென் இந்திய உணவகங்கள் நிறையவே இருக்கின்றன. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்நன்றி மேம்

  ReplyDelete
 18. ​தற்போது அடிக்கும் 500 1000 சுனாமியில் உங்களுக்கு காசிருந்தும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதோ? ஆகவே உணவும் உணவைச் சார்ந்த எண்ணங்களும் என்று பதிவு எழுத தோன்றியதோ?

  ஜெயகுமார் ​

  ReplyDelete
 19. உணவும் உணவுசார்ந்த எண்ணங்களும் மிக அருமை.
  விருந்து விழாக்களில் பரிமாறுபவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுத்து சாப்பிட முடியாது என்னாலும். சாப்பிட்டேன் என்று பேர் செய்துவிட்டுதான் வருவேன்.
  ஒவ்வொரு மாநிலத்திலும், உணவு விழாக்களில் பரிமாறப்படும் உணவுகள் அவர்கள் காலச்சாரம் , அங்கு கிடைக்கும் உணவு பொருட்களை வைத்து தான்.
  வெளிநாடுகளுக்கு சென்றால் சைவம் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் . நாங்கள் அமெரிக்கா சென்ற போது ஊர் சுற்றிப் பார்க்கும் போதும் விடுதிகளில் தங்குவோம், அப்போது தேனம்மை சொல்வது போல்

  என் மருமகள் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்து எங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்து விடுவாள். சரவணபவன் ஓட்டல் சில இடங்களில் இருந்தது, மெட்ராஸ் ஓட்டல், பாம்பே ஓட்டல் என்று நம் உணவை உண்டு திருப்தி அடைந்தோம்.

  ReplyDelete
 20. நான் இன்று மதிய உணவே மிகத் தாமதமாகத்தான் சாப்பிட்டேன். ஆனால், இதைப் படித்து முடித்ததும் மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது! :-D மிகவும் சுவையான பதிவு.

  பி.கு: சவுண்டி அந்தணர்கள் ஏன் தனியாகச் சாப்பிடுகிறார்கள், ஏன் அப்படி நிறையச் சாப்பிடுகிறார்கள், ஏன் ஒல்லியாக இருக்கிறார்கள் என்பவற்றுக்கு உண்மையான காரணங்கள் வேறு என்றாலும் இப்படி ஒரு பதிவில் அப்படிப்பட்ட காரமான கருத்துக்கள் வேண்டா என்று தவிர்த்து விட்டீர்கள் போலும்!

  ReplyDelete

 21. @ கீதா சாம்பசிவம்
  பொறுமையாக வாருங்கள் மீண்டும் வருவேன் என்று சொன்னதற்கு நன்றி மேம்

  ReplyDelete

 22. @ ஜேகே 22384
  இன்னும் அந்தநிலை வரவில்லை. ஏதோதோன்றியது எழுதினேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ கோமதி அரசு
  அதுதான் சொன்னேனே . உறவினர்களோடு தங்கினால் பிரச்சனை குறையலாம் தென் இந்த்யக் கலாச்சாரங்கள் அதிகம் மாறுவதில்லை வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 24. @ இ.பொ ஞானப்பிரகாசம்
  /
  பி.கு: சவுண்டி அந்தணர்கள் ஏன் தனியாகச் சாப்பிடுகிறார்கள், ஏன் அப்படி நிறையச் சாப்பிடுகிறார்கள், ஏன் ஒல்லியாக இருக்கிறார்கள் என்பவற்றுக்கு உண்மையான காரணங்கள் வேறு என்றாலும் இப்படி ஒரு பதிவில் அப்படிப்பட்ட காரமான கருத்துக்கள் வேண்டா என்று தவிர்த்து விட்டீர்கள் போலும்!/ உண்மையில் எனக்குத் தெரியாது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 25. பிணம் எடுத்தல் போன்ற தீட்டுத் தொழில்களைச் செய்வதற்கெனப் பார்ப்பனர்களிலேயே தனி சாதி அல்லது உட்பிரிவு உண்டு. அவர்கள்தாம் சவுண்டிப் பார்ப்பனர்கள். இவர்களை மற்ற பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாகவே மதிக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரை நடத்துவது போலத்தான் நடத்துவார்கள். எப்பொழுதும் வறுமையிலேயே வாடுவதுதான் இவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும், நிறையச் சாப்பிடுவதற்கும், தனியாக அமர்த்தி இவர்களுக்கு உணவு பரிமாறப்படுவதற்கும் காரணம் ஐயா!

  சார், ஐயா எனவெல்லாம் நீங்கள் என்னை அழைக்கலாமா? உங்கள் வயது, தகுதி ஆகியவற்றுடன் ஒப்பிடும்பொழுது நான் சிறுவன். நீங்கள் தாராளமாக என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம். மிக்க நன்றி!

  ReplyDelete

 26. @ இ பு ஞானபிரகாசம்
  தகவல்களுக்கு நன்றி பிரகாசம்

  ReplyDelete
 27. என் பள்ளித்தோழன் ஒருவன் இருந்தான். சவுண்டிப் பிராமண வகுப்பைச் சார்ந்தவன். நம்பமாட்டீர்கள், பத்தாம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரு வரி விடாமல் ஒப்பிப்பான். ஏழு சகோதரிகளுடன் பிறந்தவன். வறுமை மற்றும் உயர்வகுப்பு கரரணமாக நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காமல் வீணாகி விட்டான். இட ஒதுக்கீடு தங்களுக்கும் வேண்டும் என்று சொல்வான்.
  ஞானப்பிரகாசம் சொல்வது உண்மை.

  ReplyDelete
  Replies
  1. இதையும் ஞானப்பிரகாசம் சொன்னவற்றைக் கேள்விப்பட்டதில்லை. இது உண்மையா?

   எனக்குத் தெரிந்து, சாதியில் (within) உயர்வுதாழ்வு பணத்தினால் மட்டுமே. (அது தவறு என்றபோதும்)

   Delete
  2. வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் .மகிழ்ச்சி. பதிவு எழுதியபோது இருந்த தகவல்களை விட பின்னூட்டங்கள் மூலம் கூடுதல் தச்கவல்கள்

   Delete
 28. @ சிவகுமாரன்
  சாதிகளே கூடாது என்று நினைப்பவன் நான் உயர் சாதியிலும் தாழ்ந்த சாதியா நாம் எங்கே போகிறோம்

  ReplyDelete
 29. நீங்கள் எங்கு ஆரம்பித்து எங்கு முடித்தாலும் எங்களுக்கு அருமையான செய்திகள் கிடைத்துவிடுகின்றன ஐயா.

  ReplyDelete

 30. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 31. சாதாரணமாக உணவில் ஆறு சுவைதான் உண்டு, உணவைப் பற்றிய உங்கள் பதிவு ஏழாவது சுவை.

  ReplyDelete
 32. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  ReplyDelete

 33. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  வித்தியாசமான சிந்தனையில் பின்னூட்டம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம்

  ReplyDelete

 34. @ jeevalingam yarlpavanan kasirajalingam

  உலகத்தமிழ் வலைப்பதிவர் குழுவில் இணைந்திருக்கிறேன் அதில் பதிவுகளை இணைக்கத் தெரியவில்லை நன்றி

  ReplyDelete