மருந்தில்லா மருத்துவம்
------------------------------------
மருந்தில்லா மருத்துவம்
சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் அனுப்பி
இருந்த ஒரு pdf ஃபார்மாட்டில் இருந்த ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது ஹீலர்
பாஸ்கர் என்பவரின் செவி வழி தொடு சிகிச்சை
அல்லது anatomic therapy என்னும்
புத்தகம் அது. அவரது லாஜிகல்
குறிப்புகள் சிந்திக்க வைப்பவை எந்த
மருத்துவரிடமும் போகாமல் மருந்தும்
உட்கொள்ளாமல் 95% சதவிகித உபாதைகளைக் குணப்படுத்தலாம் என்கிறார்
நோயை அல்லது உபாதைகளை இரண்டு வகையாகப் பிரித்து வெளிக்காரணங்களால் ஏற்படும் உபாதைகள் உட்காரணங்களால் ஏற்படும் பாதிப்பு என்று பிரிக்கிறார் உதாரணத்துக்கு கண்ணில் கத்தி கீறி அடிபட்டால் வரும் பாதிப்பு அல்லது குண்டடி பட்டு வரும் பாதிப்பு போன்றவை வெளிக்காரணங்களால் வருபவை தும்மல் சளி காய்ச்சல் வாந்தி இரத்த அழுத்தம் நீரிழிவு போன்றவை உட்காரணங்களால் வருபவை. எந்த உடல் பாதிப்பு உட்காரணங்களால் வருகிறதோ அவற்றை மருந்து இல்லாமலேயே குணப்படுத்தலாம் என்கிறார் உபாதைகளில் 95% உட்காரணங்களால் வருவதே
நோயை அல்லது உபாதைகளை இரண்டு வகையாகப் பிரித்து வெளிக்காரணங்களால் ஏற்படும் உபாதைகள் உட்காரணங்களால் ஏற்படும் பாதிப்பு என்று பிரிக்கிறார் உதாரணத்துக்கு கண்ணில் கத்தி கீறி அடிபட்டால் வரும் பாதிப்பு அல்லது குண்டடி பட்டு வரும் பாதிப்பு போன்றவை வெளிக்காரணங்களால் வருபவை தும்மல் சளி காய்ச்சல் வாந்தி இரத்த அழுத்தம் நீரிழிவு போன்றவை உட்காரணங்களால் வருபவை. எந்த உடல் பாதிப்பு உட்காரணங்களால் வருகிறதோ அவற்றை மருந்து இல்லாமலேயே குணப்படுத்தலாம் என்கிறார் உபாதைகளில் 95% உட்காரணங்களால் வருவதே
சிறுவயதில் சில விஷயங்கள் ஒழுங்காக இருக்கின்றது இவற்றில்
ஏதோ ஒழுங்காக இல்லை என்றால் நம் உடலால் நோய்க் கிருமிகளை அழிக்க முடிவதில்லை.
உடல்
உபாதைகளுக்குக் காரணங்களாக இவர் குறிப்பிடுவது
1)
இரத்தத்தில் உள்ள பொருட்களின் தரம் குறைவது
2
இரத்தத்தில் உள்ள பொருட்களின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது
3)
இரத்தத்தின்
அளவு குறைவது
4)
மனதில் ஏற்படும் பாதிப்புகள்
5)
உடலில் உள்ள
உறுப்புகளுக்கும் செல்களுக்கும்
அறிவு கெட்டுப் போதல்
உதாரணமாக ஒருவருக்கு விபத்து நேர்ந்து மருத்துவ மனையில்
சேர்க்கப்படுகிறார் என்றால் முதலில்
அவருக்கு தகுந்த இரத்தம் செலுத்துகிறார்கள் இரத்த அளவைச் சரிசெய்தபின் அதன் தரத்தைக் கூட்ட க்லூகோஸ் சோடியம்
க்லோரைட் மற்றும் வேறு சில தாதுக்களையும் செலுத்துகிறார்கள்இப்படி இரத்தம்
செலுத்துவதன் மூலமும் வேறு சில
பொருட்களையும் சேர்ப்பதன் மூலமும் சில
காரணங்களைத் தவிர்க்கிறார்கள் உடலில் ஓடும் இரத்தத்தின் மூலமே எல்லா உறுப்புகளுக்கும் தேவையான
சத்து சேர்க்கப்படுகிறது அவர்
விபத்தால் நேரும் இழப்புகளை இரத்தம் மூலமே சரிசெய்ய முடியும் என்றும் பிரச்சனை
உறுப்பில் இல்லை என்றும் ஓடும் ரத்த சேதமே
காரணம் ஆதலால் அதை ரிப்லெனிஷ் செய்யவேண்டி
இருக்கிறது மனது
ஏற்கனவே
இருப்பது உறுப்புகளுக்கான அறிவும் ஏற்கனவே
இருப்பது இரத்தத்தை நல்ல தரத்துடன்
வைப்பது தேவையான அளவை உடலே
நிர்ணயித்துக் கொள்ளும் ஆக மேலே சொன்ன
ஐந்து காரணங்களையும் தெரிந்து அதற்கேற்றபடி உடலை வைத்துக் கொண்டால் நோய் வராமல்
பார்த்துக் கொள்ளலாம்
உடலில்
எந்த உறுப்புக்கும் மருத்துவம் தேவை இல்லை.
உடலே அதை சரியாக்கிக் கொள்ளும்
என்று பல வித உதாரணங்களுடன் விளக்குகிறார்
முன்னூறு
பக்கங்களுக்கும் மேல் உள்ள நூலில் நோயைக்
குணப்படுத்த முடியாது கண்ட்ரோல்தான் செய்யலாம்
என்னும் மருத்துவர்களிடம் இவருக்கு கோபம்
குணப்படுத்த முடியாது என்று சொல்லவா இவ்வளவு படிப்பு என்று சாடுகிறார்
உடலும் அதன்
உறுப்புகளும் கோடிக்கணக்கான செல்களால் ஆனவை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான
செல்கள் மடிவதும் உடலே அவற்றை
புத்துப்பித்துக் கொள்வதும் நடை பெறுகிறது
உடலுக்கு தேவையான எல்லாப்
பொருட்களையும் இரத்தத்தின் மூலம் உடல் பெறுகிறது எந்த உறுப்பு என்ன வேலை செய்கிறது அவற்றுக்குத் தேவை என்ன என்பதை நன்கு விளக்குகிறார்
மருத்துவமாக
அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது உணவே மருந்து என்றும் அதை எப்படி உட்கொள்ளுவது நலன் பயக்கும் என்பதே
www.anatomictherapy.org g என்னும் இணைய தளம் இவருடையது
ஏதாவது சந்தேகம் இருந்தால் anatomictreatment@gmail.com என்னும் முகவரியும் கொடுத்துள்ளார் ரூ 200/- மதிப்புள்ள நூலை pdf format நண்பர் அனுப்பிப் படித்தேன்
படித்துப்
பாருங்களேன் நீங்கள் ரசிக்கலாம் பயன்பெறலாம்
புத்தகத்தில் அவர் எழுதி இருப்பதை பயன் படுத்துவதைத் தடை செய்கிறார் ஆதலால் அவர் எழுதிய விஷயங்கள் பலவற்றை அவர் கூறி இருந்தபடியே எழுதவில்லை
புத்தகத்தில் அவர் எழுதி இருப்பதை பயன் படுத்துவதைத் தடை செய்கிறார் ஆதலால் அவர் எழுதிய விஷயங்கள் பலவற்றை அவர் கூறி இருந்தபடியே எழுதவில்லை
கேள்விப் பட்டிருக்கிறேன்.யூ ட்யூபிலும் இவர் பற்றிப் பார்த்த நினைவு.
பதிலளிநீக்குஇதை நம் நாட்டிலேயே சொல்லுவார்களே! உணவே மருந்து என்னும் விஷயம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்து வருவது. ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றில் கடைப்பிடிக்கப்படுவது. ஒரு சில யோக முத்திரைகள் மூலமே உடல் நோயைக் குணப்படுத்தலாம் என்றும் சொல்வார்கள். இது ஒன்றும் புதிதல்ல.
பதிலளிநீக்குமிக மிக பழைய செய்தி ஐயா...
பதிலளிநீக்குகவனிக்க : செய்தி...
தகவலுக்கு நன்றி. அவர் தளமும் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா அவர் தளத்திற்குச் செல்கின்றேன்
பதிலளிநீக்குஎன்னிடமும் இவர் புத்தகம் இருக்கிறது. அவர் பேச்சை யூ ட்யூபிலும் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குசெவி வழி, தொடு சிகிட்சை சி,டியும் இருக்கிறது. என் அண்ணன் பெண் கொடுத்தாள்.
தகவலுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநானும் படித்திருக்கிறேன்
பதிலளிநீக்குநடைமுறைச் சாத்தியமானவைகளாகவே
அனைத்தும் இருப்பதாகவே
எனக்கும்படுகிறது
அருமையான சுருக்கமான பகிர்வு
வாழ்த்துக்களுடன்...
You Tube ல் இவரது காணொளிகள் நிறைய இருக்கின்றன..
பதிலளிநீக்குஅப்போதெல்லாம் சொல்வார்கள்.. - நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயது!.. - என்று..
நாம் தான் கேட்கவில்லை..
ஹீலர் பாஸ்கர் அவர்கள் நன்றாக மென்று விழுங்குவதை வலியுறுத்துகின்றார்..
நல்ல பதிவு.. வாழ்க நலம்!..
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கேள்விப்பட்டால் போதாது ஸ்ரீ படித்துப் பாருங்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
டிபிகல் கீதா மேடத்தின் பின்னூட்டம் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
புரியாத பின்னூட்டம் நான் எங்கே செய்தி சொன்னேன் வருகைக்கு நன்றி டிடி
பதிலளிநீக்கு@வெங்கட் நாகராஜ்
அவர் கருத்துகள் படிக்க நன்றாய் இருக்கின்றன ஆனால் உடல் நலம் குறைந்தால் யார்தான் மருத்துவரிடம் ஓடாமல் இருக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
அவர் கருத்துகளைப் படியுங்கள் மருத்துவரிடம் போகாமல் இருக்க முடிகிறதா பாருங்கள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு அவர் எழுதி இருப்பது அல்லது சொல்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@பரிவை சே குமார்
படித்துப் பாருங்கள் வருகைக்கு நன்றி சார்
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
பதிலளிநீக்கு/ அருமையான பதிவு / எனக்கு அப்படித் தெரியவில்லையே நன்றி சார்
பதிலளிநீக்கு@ ரமணி
கருத்துகள் லாஜிகலாக இருந்தாலும் நடை முறையில் பயில்வது அசாத்தியம் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
ஹீலர் பாஸ்கர் சொல்வதை நடைமுறையில் கடைப்பிடிக்க இயலாது என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉணவே மருந்து என்று நம் முன்னோர்களே சொல்லி இருக்கிறார்கள்! அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குஐயா வணக்கம்,
பதிலளிநீக்குநலம் அறிய ஆவல்,
தங்களின் பதிவு படித்தேன் ஐயா, உணவும் மருந்து, நிலம்-உணவு, நீர், காற்று, நெருப்பு-உழைப்பு, ஆகாயம்-தூக்கம் இவை ஐந்தில் நாம் அறியாமையால் செய்யும் சிறு சிறு தவறும் இதனுடன் விக்கல், தும்பல்,சளி, காய்ச்சல், தலைவலி, பேதி, வாந்தி, சிறுநீர், மலம், வியர்வை, தூக்கம் இவற்றைக் கட்டுப்படுத்த நாம் செய்யும் தவறான சிகிச்சையின் விளைவு தான் மருந்தே உணவாக உட்கொள்ள வேண்டிய நிலையும், வாழ்நாள் முழுவதும் நோயுடன் இருபத்தர்க்கான முக்கியமான காரணங்கள் ஆகும். நடைமுறையில் கடைப்பிடிக்க இயலாது என்றே தோன்றுகிறது என்றுசொல்லி இருக்கிங்க புத்தகத்தில் சொல்லப்பட்டதை விட 12 டிவிடி யும் பார்க்கும் பொழுது மேலும் பல உண்மைகள் தெரியவரும் ஐயா. ஒருவர் பத்து ஆண்டுகள் மருந்து உட்கொண்டு வருபவர் திடீர் என மருந்தை நிறுத்தினால் பாதிப்பு அதிகம். முழு டிவிடி யும் பார்த்த பிறகு மனத் தெளிவு மற்றும் உறுதியுடன் சொல்லப் பட்ட வழிமுறைகளைச் செயலில் கடைப்பிடித்துப் படிப் படியாக மருந்தை நிறுத்தினால் நாம் வாழ நினைக்கும் வரை மருந்து இல்லாமல் நலமுடன் வாழலாம். நான்குஆண்டுகளுக்கு முன் பார்த்த டிவிடி யை போனவாரத்தில் 3 நாள் காய்ச்சலில் மருந்து எடுக்காமல் என்னைப் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் வெற்றி பெற்றேன்.
“ மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.”
பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றைய அவசர உலகில் மருத்துவரிடம் போகாமல் விரைவில் குணப்படுத்த இயலுமா என்பது கேள்விக்குறியே. இருப்பினும் முயற்சிக்கலாம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@தளிர் சுரேஷ்
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லி இருப்பது தெரிந்தாலும் உடல் நலமில்லாமல் போகும் போது மருந்தை நாடுவதே நம் இயல்பு வருகைக்கு நன்றி சார்
@ my mobile studios
பதிலளிநீக்குவெகு நாட்களுக்குப் பின் வருகிறீர்கள் நன்றி. அறியாமையால் தவறு செய்கிறோம் என்கிறீர்கள் உடல் நலமில்லாதபோது அதைக் குணப்படுத்தும் முறையை நாடுவதே மனித இயல்பு. இதைத்தான் உணவே மருந்து இயற்கையெ நலம் பயக்கும் என்று கூறி நடை முறையில் கடைப்பிடிக்க இயலாது என்று கூறி இருக்கிறேன்
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
முயற்சி நம்மில் தொடங்குவது சிரமம் என்பதே என் கருத்து. பலவித விஷயங்கள் இருக்கின்றனஎன்பதைக்காட்டவே பதிவு வருகைக்கு ம்கருத்ட்க்ஹுப்பகிர்வுக்கும் நன்றி ஐயா
ஐயா நீங்கள் இயற்கை முறையைச் செயல்படுத்துவது கடினம் என்கிறீர்கள் மேலே சொன்ன முதல் 15 அறிகுறிகளுக்கு மருந்து எடுப்பதால் தான் கழிவு உடலில் தேங்கி நோய் தீவிரம் அடைந்து அணைத்து உறுப்புகளும் பாதிக்கிறது. மருத்துவர்கள் உறுப்புகள் தவறு செய்கின்றன என்று சொல்லுவதும், ஒரு உறுப்பு தேவை இல்லை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லுவதும், ஒரு உறுப்பு பழுது ஆகிவிட்டது அது ஏன் பழுது ஆனது என்று தெரியாமல் மாற்று உறுப்பு பொருத்த வேண்டும் என்று சொல்லுவதும், ஒரு சில நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவதும், ஒரு சில நோயைக் குணப்படுத்தவும் முடியாது, நோய் ஏன் வருகிறது என்று தெரியாது, அதற்கு காரணமும் தெரியாது என்று சொல்லும் மருத்துவத்தை எப்படி ஏற்றுக்கொள்ளுவது ஐயா. அறுவை சிகிச்சையின் போது பயன் படுத்த வேண்டிய மருந்தை வாழ் நாள் முழுவதும் உண்ண வேண்டும் என்று சொல்லும் மருத்துவத்தையும், மருத்துவ படிப்பிலே தவறு இருக்கிறது என்று சொல்கிறார் என்றால் நாம் தான் சிந்திக்க வேண்டும்.
பதிலளிநீக்குஉணவு என்ற பெயரில் விஷத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் ,அதுவே எப்படி மருந்தாக முடியும் :)
பதிலளிநீக்குMy mobile Studios,உங்களை ஆதரிக்கிறேன். உண்மையில் நம் உணவு முறையே உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுச் செய்யப்படுவது! ஆகவே நம் உணவு முறையே சிறப்பானதும் கூட.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ My mobile studios
நான் உணவு மருந்தல்ல என்று கூறவில்லையே நம்மில் பலரும் அவ்வாறு பேசினாலும் ஏதாவது நோயின் அறிகுறி என்றாலேயே மருத்துவரைத்தான் நாடுகிறோம் இந்நிலையில் என்னதான் படித்துத் தெரிந்து கொண்டாலும் நம் அணுகுமுறையில் மாற்றம் இருக்காது என்றுதான் சொல்லவந்தேன் மீள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
உணவு என்பது நாம் எப்போதும் உண்ணும் உணவல்ல.எப்படிப்பட்ட உணவு என்று சொல்லப் பட்டிருக்கிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம் நானும் மை மொபைல் ஸ்டுடியோஸை ஆதரிக்கிறேன் ஆனால் நடை முறையில் செயல் படுவது அல்ல என்றே கூறி இருக்கிறேன் மீள் வருகைக்கு நன்றி மேம்
Geetha Sambasivam, அம்மா வாழ்த்துகள், ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உணவே மருந்து என்ற நிலையிலே இருக்கிறீர்கள் 150 ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று ஏன் சொன்னார்கள் என்றால் அப்போது யாரும் நீரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கவில்லை, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் இயந்திரத்தில் வடிகட்டிக் குடிக்கவில்லை, இரவில் தூங்கும் போது கொசு வருத்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் எந்தத் திரவத்தையும் பயன்படுத்தவில்லை, குறிப்பாக மின் விசிறி, ஏ.சி, வீட்டில் காற்று போகமுடியாதபடி தூங்கவில்லை. அப்போது எந்த இயந்திர வசதியும் இல்லை உடல் உழைப்பு அதிகமாக இருந்த போதும் அவர்கள் யோக சம்பந்தப்பட்ட 8 படிகளும் முறையாகக் கற்றும் செய்தும் வந்தார்கள் மற்றும் கோயில் திருவிழா நடனம், விளையாட்டு போட்டிகள் என்று உடல் சார்ந்த இயக்கம் இருந்தது. அப்போது யாரும் இரவு வேலைக்குச் செல்லவில்லை முறையான தூக்கம் இருந்தது. அதனால் தான் தற்போது நாம் வாழும் சூழலில் உணவும் மருந்து, நீரும் மருந்து, காற்றும் மருந்து, உடல் இயக்கத்தினால் வெப்பமும் மருந்து, முறையான தூக்கத்தினால் ஆகாயம் என்ற வெற்றிடம் இரத்தத்தில் கலக்கிறது அதனால் தூக்கமும் மருந்து. இவை ஐந்தில் எதில் தவறு ஏற்பட்டாலும் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டோ, இல்லாமலோ போகும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் 5 ந்தும் சரியாக நம் உடலுக்குள் செல்லும் போது மேலே சொன்ன 15 ந்தில் ஏதோ ஒரு அறிகுறிகள் மூலம் கழிவுகளை நமது உடல் வெளியேற்றும் அதைத் தடுக்க மருந்து எடுப்பதால் உடல் தன் பணி செய்யாமல் கட்டுப்படுத்தினால் கழிவுகள் உடலில் தேங்கி அதில் இருந்து ஒரு புதிய உயிர் தோன்றுகிறது. அதுவே பல நோய்க்கான காரணங்கள் ஆகும். இன்றைய அறிவியல் கழிவில் இருந்து தோன்றிய புதிய உயிரை ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன் ஒரு உயிருக்குப் பெயர் வைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கழிவுகளின் தேக்கம் நோய் கழிவுகளின் நீக்கம் மருத்துவம்.
பதிலளிநீக்குG.M Balasubramaniam said...
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
ஹீலர் பாஸ்கர் சொல்வதை நடைமுறையில் கடைப்பிடிக்க இயலாது என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்
November 27, 2016 at 6:03 PM
ஐயா இந்த விசியம் தெரியும் முன் நானும் காய்ச்சலுக்கு ஊசி போட்டு இருக்கேன் மாத்திரையும் சாப்பிட்டு இருக்கேன் இது தெரிந்த பிறகு மெல்ல மெல்லப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யலாம். 3 நாட்களா இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும் போது தங்கள் பதிவு வந்து விட்டது வாழ்த்துகள் நன்றி ஐயா.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஹீலர் பாஸ்கர் குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன் சார். அவரது கட்டுரைகள் சில வாசித்திருக்கிறேன். அவர் சொல்லுவதில் தவறில்லை. சரிதான். ஆனால் இக்காலகட்டத்தில் நடைமுறையில் ஒத்துவருவது அதுவும் கலப்படப் பொருளாகச் சந்தையில் விற்கப்படும் போது அதனைப் பயன்படுத்துவது என்பது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே.முந்தையக் காலக்கட்டத்தில் வாழ்வு முறை வேறாக இருந்ததால் உணவே மருந்து என்பது பொருந்தியது. ஆனால் இப்போது பொல்யூஷன், கலப்படம், உடல் இயக்கம் இல்லாமை, பரபரப்பான வாழ்க்கை முறை என்றிருக்க அவர் சொல்லும் வழிகள் எவ்வளவு தூரம் பயன்படும் என்பது தெரியவில்லை. மேலும் சிறிய சிறிய பிரச்சனைகள் என்றால் - சளி, இருமல், சாதாரணக் காய்ச்சல் என்றால் பயன்படுமாக இருக்கலாம். ஆனால் பெரிய நோய் என்றால் சொல்லத்தெரியவில்லை. எமர்ஜென்சி என்றால் மருத்துவமனைக்குச் சென்றுதானே ஆக வேண்டும்....
பதிலளிநீக்குகீதா
@ துளசிதரன் தில்லையகத்து
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கீதா. நான் இன்னும் விளக்கமாக எழுதி இருக்கவேண்டும் ஹீலர் பாஸ்கர் எல்லா நோய்களையும் மருத்துவரை அணுகாமல் குணப்படுத்த முடியும் என்கிறார் எல்லா உபாதைகளுக்கும் இரத்தமே காரணம் என்கிறார் எய்ட்ஸ் கான்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தலாம் என்கிறார் அவரது சில வாதங்கள் எனக்கு ஏற்புடையதாய் இருந்தது இருந்தாலும் மருத்துவரை நாடாமல் இருப்பது என்பது ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லை என்ன செய்ய நான் எழுதுவது முற்றிலுமாய் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது உடற்கூறு பற்றி விளக்கமாய்க் கூறுகிறார்