படகுப் பயணங்கள்
-------------------------------
திரு
வெ.நடனசபாபதி அவர்கள் காயலில் படகில் போனதாக எழுதி இருந்தார் திரு துரை செல்வராஜு
அவர்கள் அண்மைய பின்னூட்டம் ஒன்றில் பதிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதுபற்றி
எழுதி இருந்தார் சரிதான் எனக்கு நான்
மேற்கொண்ட படகு பயணங்கள் வரிசையாய் என்னைப் பற்றி எழுது என்னைப் பற்றி எழுது என்று
கூறியது போல் இருந்தது. நேராக படகில்
பயணித்த அனுபவங்களூடே நிகழ்ந்த சம்பவங்கள் சில முக்கியத்துவம்
பெறுகிறது1968 என்று நினைக்கிறேன்
படகில் கொடைக்கானல் |
திருச்சிகுடியிருப்பில் இருந்து நண்பர்கள் ஒரு பேரூந்து அரேஞ்ச் செய்து
கோடைக்கானனலுக்கு உலா சென்றிருந்தோம் கொடைக்கானலில் ஏரியில்படகு ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டு அதில் நண்பர்கள் பலரும் ஏறி
அமர்ந்தோம் குடும்பத்துடன்
வந்திருந்தவர்கள் பலர் அது ஒரு துடுப்பு படகு சிறிது தூரம் சென்றதும்
நண்பரொருவர் மீண்டும் கரைக்குப் போகச் சொல்லிக் கத்தினார் ஆரம்பமே சரியில்லையே
என்று பலரும் நினைத்தார்கள்
விருப்பமில்லாமல் படகில் சவாரி செய்தால் ரசிக்க முடியாது என்று தெரிந்ததால்
மீண்டும் கரைக்கு வந்தோம் நண்பரும் அவர்
மனைவி மகனும் இறங்கிக் கொண்டார்கள்
இறங்கும் போது ஏன் என்றுவிசாரித்தோம் எந்தநினைப்பு வரக்கூடாதோ அது வந்து அவர் பயத்தில்
உறைந்துவிட்டார். அப்படி என்ன நினைப்பு.?ஒரு ஃப்லாஷ் பேக்( flash back) போகவேண்டும்
சில நாட்களுக்கு முன் நடந்தசம்பவம் அது திருமணம் ஆன இரு இளம் ஜோடிகள்
கல்லணைக்கு சுற்றுலா வந்திருந்தனர் / இரண்டு ஜோடிகளுமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள்
அவர்களில் ஒருவர் என்னுடன் பணியில்
இருந்தவர்
கரையில்
மனைவிகள் அமர்ந்திருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கி இருக்கிறார்கள் அப்போது
நீர் கால் கணுவளவே இருந்தது திடீரென்று பார்த்தால் அங்கு நின்றிருந்த இருவரில்
ஒருவரைக் காணவில்லை பெண்கள் இருவரும் கதறி அழ நீரில் இருந்தவர் ஏதும்புரியாமல்
விழித்திருக்கிறார் கூட வந்தநண்பன்
காணாமல் பொனது அப்போதுதான் அவருக்கும்தெரிந்தது தேட
ஆரம்பிக்கிறார்கள் களேபரமறிந்து எல்லோரும்
தேட அவர்களுக்குப் புரியாதது கூட வந்த
நண்பர் ஏதோ புதைமணலில் சிக்கி இருக்கிறார்
அவரது உடல் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப் பட்டது கொடைக்கானலில் படகில் வந்த நண்பருக்கு இந்த
நினைவு வந்து தண்ணீரைப் பார்த்ததும்
தனக்கு நீச்சல் தெரியாததும்
நினைவுக்கு வந்து படகை கரைக்குத் திருப்பச் சொல்லி இருக்கிறார்
கணுக்கால் அளவு கூட நீர் இல்லாதபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது என்றும் சிந்திக்க
வைப்பதுதான்
கடல் தர்ப்பை எடுக்க ப் படகில் |
இன்னொரு படகுப் பயணம் நாங்கள் ராமேஸ்வரம் அருகே இருந்த நவபாஷாணக்
கோவிலுக்குச் சென்றிருந்தோம் அப்போது அங்கிருந்த சிலர் கடலுக்குச் சென்று கடல்
தர்ப்பை கொண்டு நவபாஷாணக் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்தது என்று கூற கடலில் ஒரு
படகுப் பயணம் ஆரம்பித்தது கடலில் சிறிது தூரம்சென்றதும் நீரில் மிதந்து வந்த தர்ப்பைப் புற்களைப்
பறித்து வந்து நவபாஷாண க் கற்களுக்கு வழிபாடு நடத்தினார்கள் எனக்கு கடலில் ஒரு
படகுப் பயணம் அமைந்தது
வாரணாசியில் நாங்கள் என் பெரிய அண்ணா மனைவியுடன் சென்றிருந்தபோது அண்ணா பித்ருக்களுக்கு திதி கொடுக்க நினைத்தார்
அவர் திதி கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை படகிலேயே திதி கொடுக்கவும் பிண்டங்கள் வைக்கவும் வசதி செய்யப்பட்டது திதியும் கொடுக்கப்பட்டது
வாரணாசி படகில் திதி |
அதன்
பின் அலஹாபாதில் இருந்து திருவேணி
சங்கமத்துக்கு படகில் சென்றதும் மறக்க முடியாதது படகில் துழாவிச் செல்லும் போது
கங்கையில் இறந்த ஒரு மனித உடலும்
மாட்டின் உடலும் மிதந்துவந்ததை பார்த்ததும் மறக்க முடியாத அனுபவம் அப்போது மட்டும் நீரில் விழுந்து விடுவோமா என்னும் நினைப்பு
வராதது நல்லதற்கே
திருவேணி சங்கமத்துக்கு |
படகுப் பயணங்களில் இரு முறை
கொச்சியில் சென்றதும் நினைவுக்கு வருகிறது கேரள டூரிச படகு. அவர்கள் படகில்
செல்லும் போது விளக்கங்கள் கூறிக்கொண்டே வருகிறார்கள் படகில் போகும் போது சைனீஸ் மீன்பிடி வலைகளையும் காண நேர்ந்தது ஜ்யூ
டௌன் ( jew town) பார்த்தோம் நிறையவே காணொளியில் இருக்கிறதுஒரு முறை நானும் மனைவியும் இன்னொருமுறை அமெரிக்காவில் இருந்து வந்திருந்த
நண்பரின் குடும்பத்துடன்
கொச்சியில்( காணொளியில் இருந்து ) |
நண்பரின் குடும்பத்தோடு குமரகம் காயலில் படகில் சென்றதுமொரு இனிய அனுபவம்
எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்துள்ளேன் பதிவிட முடியவில்லை
குமரகத்தில் படகு வீடு ( காணொளியிலிருந்து) |
ஹொகனேகலில் பரிசலிலும் சென்றிருக்கிறோம் அப்போது எடுத்தபுகைப்படங்களை ஃபில்மில்
எடுத்ததுதேடிக்கொண்டிருக்கிறேன் நான் மனைவி அண்ணா
அண்ணி அவர்களது பேரன் பேத்தி என ஆறுபேர் முதலில் பரிசலில் ஏற பயமாய்
இருந்தது பரிசலில் போகும் போது சிறுவர்கள் மலை முகட்டுக்கு மேல் ஏறி அங்கிருந்து பரிசல்
அருகே குதித்துகாசு கேட்டார்கள் பயமறியா
இளங்கன்றுகள்
கடைசியாக கன்னியா குமரிவிவேகாநந்தா குன்றுக்கு படகில் சென்றோம்
காணொளி கன்னியாகுமரி
.