Saturday, July 15, 2017

இவர்கள் யார் என்று தெரிகிறதா


                                  இவர்கள் யார் என்று தெரிகிறதா
                                   ==============================
1)       கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல் காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2)      தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3)      மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4)      தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5)      யாராவது தும்மினால் GOD BLESS  என்பார்கள்.
6)      ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7)      தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8)      டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9)      சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10)  பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11)  HAVE TO GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12)  ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை டூஓஃபோர் என்பார்கள்.)
13)  தூரங்களை மைலில் சொல்வார்கள்
14)  எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15)  சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக் கொள்வார்கள்.
16)  பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17)  நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18)  COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19)  ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20)  இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21)  தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான சர்வீஸாரின் TAG களை எடுக்கவே மாட்டார்கள்.
22)  SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULEஎன்றும் உச்சரிப்பார்கள். (அமெரிக்கா ரிடர்ண்ட் அமெரிக்க  இந்தியர்கள்)

பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பார்கள் .
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பார்கள்  . 
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவார்கள்  . 
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பார்கள் 
வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பார்கள் . 
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வார்கள் . 
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பார்கள் . புது பாட்டரி வாங்காமல் காலம் கடத்துவார்கள்   
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வார்கள்
. T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்து வார்கள் . இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவார்கள்  இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பார்கள் (இந்தியர்கள் )

நாம் இந்தியர்கள்   
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல. 
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்..
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

                                       


 காணொளி கண்டு ரசிக்க 

நமக்கு தெரிந்திருக்க வேண்டிய உறவு முறைகள் 

       நாமும் நம் வம்ச விருட்சமும்   
  பரன்                          பரை
  சேயோன்                      சேயோள்
  ஓட்டன்                        ஓட்டி
  பூட்டன்                        பூட்டி
  பாட்டன்                       பாட்டி
  தந்தை                         தாய்
  மகன்                          மகள்
  பெயரன்                        பெயர்த்தி
  கொள்ளுப்பெயரன்              கொள்ளுப் பெயர்த்தி

  எள்ளுப்பெயரன்                 எள்ளுப்பெயர்த்தி 


இதில் காணும் எண்களில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் காணொளி  மீண்டும்  பார்க்கும் போது நீங்கள் நினைத்த எண் காணாது
இது எப்படி என்று சொல்ல முடிகிறதா பாருங்கள் காணொளி

42 comments:

 1. ஐயா நீங்கள் எழுதியதில் பாட்டன்-பாட்டிக்கும், தந்தை-தாய்க்கும் இடையில் தாத்தா-அப்பத்தா வரவில்லையே....

  பாட்டன் - பாட்டி

  தாத்தா - அப்பத்தா

  தந்தை - தாய்

  ReplyDelete
  Replies
  1. பாட்டன் என்பதும் தாத்தா என்பதும் ஒன்றே அப்பத்தா என்பது வட்டார வழக்கு என்று நினைக்கிறேன் அப்பாவின் தாய்க்கு வருகைக்கு நன்றி ஜி

   Delete
 2. முதலாவது காணொளி ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் இரண்டாவது நான் கணக்கில் புலிளிழி

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது காணொளியில் கணக்கு எங்கே வருகிறது

   Delete
 3. 01. பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்
  03. ஓடிக்கொண்டே இருப்பவர்கள்
  05. அரேபியர்கள்
  06. ஆங்கிலேயர்கள்
  07.அரேபியரிகள்
  21. சினிமாக்காரர்கள்

  ReplyDelete
  Replies
  1. நானே கடைசியில் கூறி இருக்கிறேனே அமெரிக்காவிலிருந்து வந்த இந்திய அமெரிக்கர்கள் என்றும் இரண்டாவதாக சில இந்தியர்களின் விசேஷ குணங்கள் என்றும் புரிந்திருக்கும்

   Delete
 4. முதலில் சொல்லியிருப்பவை எல்லாம் அமெரிக்கா ரிட்டேர்ன்ட் அல்லது அமெரிக்காவில் வசித்துக்கொண்டு, இந்தியா வரும்போது எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இந்தியர்களின் மன'நிலையையும் சொல்லியிருக்கிறீர்கள். ஆண்வழி பரம்பரை என்ற மன'நிலை இந்தியர்களிடம் உள்ளதன் காரணமாகவே இந்தக் குறைபாடு. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்பதுதான் சரியான பார்வை.

  @கில்லர்ஜி-பாட்டன் என்பது தாத்தா. அப்பத்தா என்பது, அப்பாவைப் பெற்ற ஆத்தா, அதாவது பாட்டி. சிலர் 'தாத்தா', 'பாட்டி' என்று சொல்வது பிடிக்காமல், 'அம்மம்மா'-அம்மாவோட அம்மா, 'அப்பம்மா'-அப்பாவோட அம்மா என்றெல்லாம் கௌரவமாகச் சொல்லிக்கொள்வார்கள். (அதாவது அவங்களுக்கு வயசாச்சுன்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதாம்)

  இரண்டாவது காணொளில ஒரு விசேஷமும் இல்லை. முதல்ல காட்டற நம்பர்கள் எதுவும் கடைசியில் இருக்கும் ஸ்லைடில் இல்லை. அதனால் எந்த நம்பரை நினைத்துக்கொண்டாலும் அது கடைசி சிலைடில் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் நெல்லைத் தமிழரிடமிருந்து வருகைக்கு நன்றி சார்

   Delete
 5. "எத்தனை விதமான மனிதர்கள்" என்று தான் எண்ணத் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி டிடி

   Delete
 6. காணொளி திறக்கவே இல்லை. எரர் காட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு திறக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்ன உலவியை உபயோக்கிக்கிறீர்கள்

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ஆம் சார்! இவர்கள் யார் என்று முதலில் சொல்லப்பட்டவர்கள் அமெரிக்காவிலுருந்து வந்தவர்கள் அல்லது அங்கு வாழும் இந்தியர்கள் இங்கு வரும் போது அப்படித்தான் பேசுவார்கள். அதுவும் 25 வருடங்கள் இங்கிருந்துவிட்டு அங்கு சென்ற சில மாதங்களிலேயே....பெரும்பான்மையோர் இப்படித்தான் எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும்..இந்தியர்கள் தெரிந்த விஷயம்தானே!!!

  காணொளி இரண்டுமே தெரியவில்லை ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. யாரும்கெஸ் செய்ய வேண்டாம் என்றுதானே நானே கடைசியில் யார் என்று கூறி விட்டேனே காணொளி திறக்காதது ஏன் என்றுதெரியவில்லை ஏதாவது ஆப்பை நிறுவ வேண்டுமோ வருகைக்கு நன்றி மேம்

   Delete
 9. புதுசா அமெரிக்கா குடியேறிய நம்ம ஊரு மக்காஸ்

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் இங்கு வரும்போதுதான் தெரிகிறது நன்றி மேம்

   Delete
 10. எனக்கும் இவை வாட்ஸாப்பில் வந்தன. சிங்க ஜோக் முக நூல் உட்பட நிறைய இடங்களில் ரசித்திருக்கிறேன். காணொளி குறித்தும் நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கும் பதிலை வழிமொழிகிறேன்.விடைகள் எல்லோரும் சொல்லி விட்டார்கள். தம வாக்குப் போட்டாச்சு என்பதைச் சொல்லிச் செல்கிறேன்!

  ReplyDelete

 11. நான் இப்போது இருப்பது
  இங்குதான் என்பதால்..
  முதலில் குறிப்பிட்டதையும்...

  இருந்ததும் இருக்கப்போவதும்
  இங்குதான் என்பதால்
  இரண்டாவது குறிப்பிட்டதையும்
  மிகச் சரியாகவே தெரிந்து கொண்டேன்

  பதிந்தது நூற்றுக்கு நூறு சரி

  காணொளிகள் பார்க்க இயலவில்லை

  சுவரஸ்யமான பதிவு
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. காணொளிப்பிரச்சனை உங்களுக்குமா இருக்கப்போவதும் இங்குதான் என்பதால் மதுரைக்கு வர மாட்டீர்களா

   Delete
 12. நன்றாகச் சிரித்ததில் மனதுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

   Delete
 13. நல்ல பகிர்வு. சிங்கம் ஜோக் பலமுறை ரசித்தது.

  முதலாம் காணொளி ரசித்தேன். இரண்டாவது - எந்த எண்ணுமே இரண்டாவது ஸ்லைடில் இருக்காது என்பதும் தெரிந்ததே.....

  தொடரட்டும் பல்சுவைப் பகிர்வு.

  ReplyDelete
 14. ஏன் தெரியாமல் :)? நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. அதானே நானே சொல்லி விட்டேனே வருகைக்கு நன்றி மேம்

   Delete
 15. நல்ல தொகுப்பு
  காணொளியினைக் காண இயலவில்லை ஐயா

  ReplyDelete
  Replies
  1. காணொளிப்பிரச்சனை பலருக்கும் ஏன் என்று தெரியவில்லையே வருகைக்கு நன்றி சார்

   Delete
 16. WE ARE HYPOCRITES.!உண்மையான வார்த்தை :)
  காணொளி காணும் பேறு பெற்றேன் :)

  ReplyDelete
 17. 18-21 அந்த வரிசையில் எல்லாம் நானே.
  மற்றவையும் புரிகிறது - hypocrisy connection மட்டும் புரியவில்லை. tshirt shampoo tv remote china போன்றவை நிறைய நாட்டு மக்களிடமும் சாதாரணமாகக் காணபடுகின்றன என்பது என் அனுபவம். people are people, இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. பெண் குழந்தைகளை வேண்டோம் ஆனால் நலன் களுக்குப் பெந்தெய்வங்களை வேண்டுவோம் /tshirt shampoo tv remote china போன்றவை நிறைய நாட்டு மக்களிடமும் சாதாரணமாகக் காணபடுகின்றன என்பது என் அனுபவம். people are people, இல்லையா?/வெளிநாட்டில் அதுவும் அமெரிக்காவில் அத்க நாட்கள் இருக்கும் நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் வருகைக்கு நன்றி சார்

   Delete
 18. 18-21 தவிர.. ஹிஹி.

  ReplyDelete
  Replies
  1. யாரையும் பார்த்து எழுதியதல்ல. ஒரு பெரும்பான்மை அப்சர்வேஷனே நன்றி சார்

   Delete
 19. அந்த மினரல் வாட்டர் எதுக்குன்னா..... பயணத்தில் இருக்கும் போது சுகக்கேடு வந்து கிடைக்கும் கொஞ்ச விடுமுறையை வீணாக்கிடக்கூடாதே என்ற பயம்தான். ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லைன்னாக்கூட மொத்த பயணிகளுக்கும் கஷ்டம் இல்லையோ.... அதுவுமில்லாமல்.... இந்தியாவில் கழிவறை வசதிகள் எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா?

  ReplyDelete
  Replies
  1. பொதுவான சில traits களைத்தான் சொல்லி இருக்கிறேன் எதையும் சரி தப்பு என்று சொல்லவில்லைகழிப்பறை எங்கே வந்தது வருகைக்கு நன்றி மேம்

   Delete
  2. ஹாஹா..... உடம்பு சரி இல்லாமல் போவது தண்ணீராலும் சுத்தமான வகையில் தயாரிக்காத உணவாலும்தான். நான் உடம்புன்னு சொல்றது..... வயிறு பாகத்தை. அது சரி இல்லைன்னா எவ்ளோ தொல்லைன்னு பாருங்க.....

   Delete
  3. கழிவறையை நாடவேண்டும் என்கிறீர்கள் இல்லையா

   Delete
 20. சரியாக மதிப்பீடு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி ஐயா

   Delete
 21. அப்பப்பா. எவ்வளவு செய்திகள். வியக்க வைத்துவிட்டீர்கள். மதிப்பீடு அருமை.

  ReplyDelete
 22. துணுக்குச் செய்தி களுக்கு மவுசு கூடுகிறதே நன்றி சார்

  ReplyDelete