ஒரு பல்சுவைப்பதிவு
-------------------------------------
சில அனுமானங்கள் தவறாகின்றன ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்கும்
என்று
நினைத்திருந்த பிரம்மகமலம் பூச்செடியில் ஒரே நேரத்தில் பல மொட்டுகள அரும்பி இருந்தன அவற்றில் சில உதிர்ந்து
விட்டன இலையில் இருந்து அரும்பும் மலர்கள்
இரவில் பத்து மணிக்குள் பூக்கின்றன என்றுதிருமதி ராமலக்ஷ்மியின் பதிவில் படித்தேன் இரவு ஒரு மணிவரை விழித்திருந்தும் மொட்டு மலரவில்லை ஏனோ தெரியவில்லை புகைப்படம் வெளிடுவதில் எங்கோ
கோளாறு இருந்தது சரி செய்து விட்டேன்
-----------------------------------
என்
வீட்டுக்கு வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு
என்னை பார்த்தாலேயே பயம் நான்
எதாவது கேள்வி கேட்டு விடுவேன் என்று பயம் பள்ளியில் மதிப்பெண் வாங்கப்
படிப்பதன்கூட தெரிந்தும் படிக்க வேண்டும் என்றும் கூறுவேன் உதாரணத்துக்கு
செண்டிகிரேட் அளவை ஃபாரன் ஹீட் அளவுக்கு மாற்றக் கேட்பேன் உங்களுக்குஒன்று தெரியுமா செண்டிகிரேட் அளவும்
ஃபாரன் ஹீட் அளவும் _40 டிகிரியில் ஒன்றுதான் equinox என்றால் என்ன எப்போதுவரும் வாசகர்களும்
தெரிந்து கொள்ளலாமே
------------------------------------
------------------------------------
Wilbur
Sargunaraaj என்னும் பெயரைக் கேட்டிருக்கிறீர்களா யூ ட்யூபில் சென்று பாருங்கள் சிலௌபயோகமான பதிவுகள் கிடைக்கும் உதாரந்த்துக்கு இதைப் பாருங்கள்
------------------------------------------
திரை இசைப் பாடல்கள் பல பாட்டுகள் எனக்குத் தெரிவதில்லை ஆனால் தெரிந்த சிலபாடலகளை உபயோகித்து ஒரு பதிவே எழுதி இருக்கிறேன்சுட்டியில் பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்
---------------------------------------
சில இலக்கிய வரிகள் நினைவில்
------------------------------------------
திரை இசைப் பாடல்கள் பல பாட்டுகள் எனக்குத் தெரிவதில்லை ஆனால் தெரிந்த சிலபாடலகளை உபயோகித்து ஒரு பதிவே எழுதி இருக்கிறேன்சுட்டியில் பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்
---------------------------------------
சில இலக்கிய வரிகள் நினைவில்
பள்ளியில்
கம்பராமாயணப் பாடல்கள் சில வரும் அவற்றில்
நினைவில் நிற்பவற்றுள் சில
கங்கை
இரு கரைஉடையான் கணக்கிறந்த நாவாயான் உங்கள்
குலத்தனிநாதற்கு உயிர் துணைவன் உயர் தோளான்
வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான் கொங்கலறுந் நறுந்தொண்டார்க்கு குகனென்னும் குறி உடையான்
அஞ்சன வண்ணன் , என் ஆர் உயிர் நாயகனாளாமே வஞ்சனையால்
அரசெய்திய மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய் விடின் நாய்குகன் என்றென்னை ஏசாரோ
அரசெய்திய மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய் விடின் நாய்குகன் என்றென்னை ஏசாரோ
எத்தனை எத்தனை பாடல்கள் இலக்கண விதிகளுக்குஉட்பட்டு எழுத்யவை ஹாட்ஸ் ஆஃப் டு கம்பர்
அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி
கேரளத்தில் சாலக்குடியில் என் சம்பந்தி இருக்கிறார் அவர் எங்களை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி காண ஒரு முறை கூட்டிச்சென்றார் வாழச்சால் எனும் நீர்ப்பகுதியே (சாலக்குடி ஆற்றின் பகுதி) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாகிறது வாழச்சால்நீர் அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சியாக சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுகிறது பலரும் வாழச்சாலில் இருந்தே அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணுகின்றனர் எனக்கு கீழே இருந்து நீர் வீழ்ச்சியைக் காண் விருப்பம் செங்குத்தான மலைப்பகுதியில் இறங்குவது மிகவும் கஷ்டம் அதுவும் வயதானவர் செய்யக் கூடாத ஒன்று என்று பயமுறுத்தினார்கள் நான் அடம்பிடித்துக் கீழே இறங்கி நீர் விழுவதைக்கண்டேன் புகைப்படங்கள் ஏதும் எடுக்க வில்லை இருந்தால் என்ன கூகிளார் இருக்கிறாரே காணொளியைக் கண்டு ரசியுங்கள்
-----------------------------------------------------------
இதற்கான விடையை யாராவது கண்டு சொல்லி உள்ளார்களா?இது ஒரு முடிவான கருத்தா?
நீங்கள் இது பற்றி ஒரு பதிவு போட்டால் உங்கள் அனுபவம் பலருக்கு உதவும்.