Saturday, September 22, 2018

எண்ணங்கள் இனிதே


                                          எண்ணங்கள் இனிதே
                                          ---------------------------------------
நான்  எழுத/சொல்ல வருவது ஒன்று என்றால்  புரிந்து கொள்ளப்படுவது  ஒன்றாய் இருக்கிறது என் எழுத்துகள் என் எண்ணங்களே  யாரையும் குறி வைத்ததல்ல 

எனக்கு பல ஆண்டுகளாக  மனதில் இருக்கும் வருத்தம் என்ன வென்றால்  பிறப்பொக்கும்   என்று கூறுபவர்களெல்லாம்  அப்படித்தான் நினைக்கிறார்களா தெரியவில்லை  இந்த வேற்றுமை நான் எங்கள்கிராமத்தில் இருந்தபோது  உணர்ந்து வேதனைப் பட்டது மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் அவலம் பற்றி நான் எழுதி இருக்கிறேன் வீட்டின் புழக்கடைபக்கம்வந்து அவர்களது  வருகையைக்குரல் கொடுப்பார்கள் கக்கூஸ் அருகிலிருப்பவர் உணர்ந்து  வெளியே வருவார்கள் அவர்களது  பணிமுடிந்து போனதும் அங்கிருக்கும் சொம்பு முதலான வற்றில் நீர் தெளித்து சுத்திகரம் செய்வார்கள்  கீழ் சாதியினருக்கு கிராமத்தில் நடக்கவே அனுமதி கிடையாது  ஆனால் காலம் மாறி விட்டது இப்போதெல்லாம் அக்கிரகாரத்துள்  பிற சாதியினரும் வசிக்கத்துவங்கி இருக்கிறார்கள் இது சாத்தியமாக ஏறத்தாழ எழுபதுஆண்டுகள்  ஆகி இருக்கிறது இதுவும் முன்னேற்றம்தானே  எதனால் இது சாத்தியமாயிற்று  என்று நினைத்துப் பார்த்தால் அடிப்படைக்காரணமே இவர்களுக்கு   அளிக்கப்பட்ட கல்வி அறிவுதான்  இந்த மாற்றங்கள் எல்லாமே  காஸ்மெடிக்  வகைதான் மனதளவில்  ஏற்ற தாழ்வுகள்  குறைந்திருக்கிறதா நான் படித்து அறிந்த அளவில் சாதிகளைச் சார்ந்தவர் வருவதைத்தடுக்க  இடைச்சுவர் எழுப்பியதாகவும் உண்டு இப்போது எல்லாம்  சிலர் சாதிகள்  நிலைத்து இல்லை என்னும்    ம் பாவனையில் கருத்துகள் சொல்கிறார்கள்ஒரு முறை நான் திருச்சிக்குச் சென்ற போது நண்பன் ஒருவன்வீட்டில் உணவு உட்கொள்ளச் சொன்னான் நண்பன் சொல்கிறான்  என்பதால்மறுப்பு சொல்லவில்லை  அவன் தாயாருக்குநான் எந்த சாதி  என்று தெரியாது தெரியாதவரை தாழ்ந்த சாதிக்காரனாகவே எண்ணிக் கொண்அடுக்களைக்குப் போகும் இடத்தில் கழிப்பிடம் முன்பு ஒர் இடை வெளி உண்டு அங்கே உட்காரவைத்து உணவு பரிமாறினார்கள் ஹாலிலோ அடுக்களையிலோ பரிமாறி இருந்தால் நான்  வேதனை பட்டிருக்க மாட்டேனிருந்தாலும் அந்நிகழ்வு ஒரு உயர்வு தாழ்வு மனதில் தோன்றியதன் விளைவே  என்று எனக்குத் தோன்றியது
யாரையும்  குறைகூறுவதில் எந்த உபயோகமும் இல்லை  ஆனால் இதுஏன்  என்றஎண்ணம் வராமல் இல்லை சாதிகள்சங்க காலத்திலேயே இருந்திருக்கிறதுஇன்றும் இருக்கிறது நாளையும் தொடருமென்று எண்ணுபவர்  மத்தியில் என்  உள்ளக் கிடக்கையை சொ;ல்லாமல் இருப்பது கூடாது இது நம் ரத்த அணுவில் ஊறிய சமாச்சாரம் எளிதல்ல நீக்குவது
 இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மிகவும் மெதுவாக  படித்தவர் எண்ணிக்கை கூடும்போது  எண்ணங்களில் மாற்றம் நடக்கிறது ஆனால் படிப்பு மட்டும் போதாது என் தளத்தின்  முகப்பில்  நான்  என்னயே  நினைவுப்படுத்திக் கொள்ளஎழுதி இருக்கும் வாசகங்கள் போதும் மனதில் பட்டதைக் கூறுகிறேன்  ஒரு சொல் வழக்கு நினைவுக்கு வருகிறது ஐந்தில்  வளையாதது அறுபதில் வளையாதுஆனால் நமது ஐந்து வயதுகளில்  நிறையவே இண்டாக்ட்ரினேட்  செய்யப்படுகிறோம் அவை வேண்டும் என்றே செய்யப்படுவதல்ல  ஆனால் அப்படி அமைந்துவிடுகிறது கல்வி என்பது உயர்வு தாழ்வு எண்ணங்களுக்கு  தடுப்பு போட வேண்டும் ஆனால் இன்றைய கல்வி நல்ல சீலங்களைக் கற்பிக்க தவறுகிறது இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டவற்றில் இருந்து நல்லதுஅல்லாதது  என்பதைப்பிரித்து எடுத்துக்கொள்ளும்சுய அறிவை  வளர்ப்பதில்லை  
உயர்வு தாழ்வு மறைய முதலில் பொருளாதாரத்தில்  முன்னேற்றம் வேண்டும்இதுவரை காணும் சமஎண்ணங்கள் பொருளாதாரத்தால் வந்தவை  மனதளவில் வர வில்லை அதைக்கொண்டு வர கல்வியே சிறந்த சாதனம்  கல்வி என்னும்போது  தற்போது இருக்கும்கல்வியல்ல நான்கூறுவது  கல்வியாலேயே உயர்வுதாழ்வு எண்ணங்கள் மறைய வேண்டும் ஆனால் இப்போதிருக்கும்கல்வி பொருளாதார  ஏற்ற தாழ்வை அதிக மாக்குகிறது கல்வி வியாபார மாகி விட்டது  நன்சொல்லப் போகும்  தீர்வுக்கு கல்வி வியாபாரிகள் நிச்சயம் எதிர்ப்பு  தெரிவிப்பார்கள் அதையும் மீறி  ஏற்ற தாழ்வைசமன்செய்ய
1)அனைவருக்கும் கட்டாயம் கல்வி கொடுக்கப்பட வேண்டும் அம்மாதிரி அளிக்கப்படும் கல்வி அனைவரும் சமம்  என்னும் எண்ணத்தை வளர்க்க வேண்டும்அதற்கு
2)கல்வியில் ஏற்றதாழ்வு எண்ணங்களை  சமன்படுத்தும்நிலையில்  அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி   இலவசமாக  வழங்கப்பட வேண்டும்
3) ஏற்ற தாழ்வை வளர்க்கும் உணவு உடை விஷயமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அதுவும் விலைக்குஇல்லாதவாறுஇலவசமாக  இருத்தல் அவசியம்
4) பள்ளிகளில்  சாதி மதம்பற்றிய கேள்விகள் இருக்கக் கூடாது
5) பணம்  படைத்தவன்  எதையும் சாதிக்கலாம் என்னும் எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும்
6) சாதி மதம் பற்றிய போதனைகள் வேண்டுமானால்  உயர் கல்வியில் இருக்கலாம்
7)பள்ளி இறுதி வரை இலவசக் கல்வி  சீருடை  உணவு  எல்லாம்  சமமாக  இலவசமாக இருத்தல்  அவசியம்
இளம் வயதிலேயே அனைவரும் சமம் என்னும் எண்ணங்களை வளர்க்க இவை உதவும்
 ஒரு சமமான சமுதாயத்தை உண்டாக்குவது  அரசின் கடமைஅதற்காக செலவு செய்தல் செலவே அல்ல ஆனால் நூற்றாண்டுகளாக நிலவி வரும்கோட்பாடுகளை மாற்றுதல் எளிதல்லஎதிர்ப்புகள் எல்லா இடத்திலிருந்தும்வரும் 
ஒருபதிவரின் தளத்தில் கண்ட வாக்கியம்  நினைவு கூறத்தக்கது
எண்ணங்கள்  அழகானால்  எல்லாமே இனிதாகும்
 
         42 comments:

 1. தங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றும் அழகுதான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. எண்ணங்கள் மட்டும் அழகானால் போதாது அதற்க்கேற்ப செயலும்வேண்டும் அல்லவா

   Delete
 2. நல்லெண்ணங்கள் வாழ்க. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் எண்ணங்கள் பின்செயல்கள்

   Delete
 3. அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா.
  ஏற்றத்தாழ்வை அழிக்கும் இடம் பள்ளிதான் இதை அரசுதான் செய்யவேண்டும். ஆனால் நடக்காது.

  காரணம் படித்தவர்களை, நல்லவர்களை, ஏழைகளை நம்பி யாரும் ஓட்டு போடுவதில்லை.

  தனது மதம், தனது ஜாதிக்காரனைப் பார்த்து ஓட்டுப்போட்டால் இந்நிலை தொடரும்....

  ReplyDelete
  Replies
  1. வருங்கால சண்டதிகளாவது வேற்றுமை பாராட்டாமல் வளர தோன்றிய எண்ணங்களே பதிவு

   Delete
 4. நல்ல எண்ணங்கள்....

  பல விஷயங்கள் மாற வேண்டும்... ஆனால் மாற்றம் சாத்தியம் என்று தோன்றவில்லை. பல மனங்களில் இந்த வேறுபாடுகள் வேரூன்றி விட்டன - தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

  நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. கல்வி அறிவால் மாற்றங்கள் நிகழ்கின்றன அவற்றைத் துரிதச்ப்படுத்த தோன்றிய எண்ணங்களே பதிவின் சாராம்சம்

   Delete
 5. உங்களின் எண்ணங்களும், செயல்களும் அருமை ஐயா. நாங்கள் அறிவோம். தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டோம் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. என் உணர்வுகளைப் பகிர்கிறேன்

   Delete
 6. உங்க கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கு. அதுக்கு எல்லோரும் சமம் என்று கருதும் நிலையை நோக்கி அரசாங்கங்கள் செல்லவேண்டும். அதற்கு அரசியல்வாதிகள் தயாராக இல்லாதபோது, எந்தக் காலத்தில் இவையெல்லாம் நடக்கப் போகிறதோ.

  ReplyDelete
  Replies
  1. முதலில் அவை தேவை என்னுமெண்ணம் மக்களிடையே வேண்டும் கல்வி மூலம் மாற்றம் நிகழ்த்த வேண்டும்

   Delete
 7. உங்கள் எண்ணம் நல்லதே.
  மாற்றம் வந்தால் நல்லது.


  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள்நிச்சயம்வரும் முன்பிருந்த நிலைக்குஇன்றுதேவலைஅல்லவா

   Delete
  2. நான் எங்கள் ஊரில் நிலவிய வற்றில் மாற்றம்கண்டதால் எழுதியது

   Delete
 8. சிறந்த வழிகாட்டல் தொகுப்பு
  வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. யாருக்கும் வழிகாட்ட எழுதவில்லை மனதில் ஓடிய எண்ணங்களின் தொகுப்பு ஒரு தீர்வாகலாமே

   Delete
 9. உண்மை. ஆனால் பள்ளியில் சேர்க்கும்போதே... படிமத்தில் சாதி என்னன்னு கேக்கறாங்களே... அப்புறம் சாதி எப்படி ஒழியும்? அது ஒழிந்தால்தானே சமத்துவம் ?

  ReplyDelete
  Replies
  1. என் பதிவில் அது கூடாது என்றும் எழுதி இருக்கிறேனே

   Delete
 10. எண்ணங்கள் மிக நன்று. நிறைவேறுமா எனும் ஆதங்கம் கூடவே எழுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நிறைவேறும் அதைத் துரித[ப்படுதுவதற்கான வழிமுறைகளை என் சிந்தனைக்கு ஒட்டிய்படி எழுதி இருக்கிறேன்

   Delete
 11. உண்மைதான் எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதானே.. ஆனா இந்த வாக்கியத்தைச் சொல்லும் நீங்களும், பல சமயம் மாறுபட்ட கருத்துக்களைத்தானே சொல்லுவீங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மாறுபட்டக் கருத்துகள் அழகில்லையா

   Delete
 12. (என்னைப் போன்ற ஒரு) வயதானவரின் கனவு என்பதா அல்லது கரிசனம் என்பதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

  உங்கள் கருத்துகளுக்குப் பதில் சொல்ல நினைத்து மனதிற்குள் எழுதிப் பார்த்தேன். நீளமாக வளர்ந்தது. உங்கள் பதிவில் எதற்கு அனுமார் வால் என்று நினைத்து, என் வலைப்பூவில் எழுத நினைத்தேன். எழுதினேன்.

  உங்கள் பார்வைக்கு ... http://dharumi.blogspot.com/2018/09/1003.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பஹிவைப் படித்தேன் இனும் ஒரு முறைபடித்தபின் கருத்து

   Delete
 13. https://www.facebook.com/sam.george.946/posts/10215071093363999?__xts__[0]=68.ARA2zDUWS_QH_UdnUBY8XwY08m7k7sEIpc-qv0F_qrE40Yq5emF_pu4Ll4vtY_NrjoPhWQ5vGk4tSB2IqqKmAlqoFuQJJQStXL9FA4rMHbwUzFyhqbZfHvA2mJ4CtbAIV3dcNSqPBTFZykG-sN230OD6QNsBW8jr-iNGBE5Y7GS6MSF91Pb42yM&__tn__=-R

  ReplyDelete
 14. என்னவென்றே தெரியலை

  ReplyDelete
  Replies
  1. URL .. இதை காப்பி - பேஸ்ட் செய்தால் முகநூலில் என் பதிவு தெரியும். அவ்வளவு தான்

   Delete
  2. முக நூலிலும் பதிவு பார்த்தேன்

   Delete
  3. உங்கள் தளத்திலேயே பின்னூட்டம் எழுதி இருந்தேனே னே

   Delete
 15. ப்ளாக்கிலா ... எதுவும் வரவில்லையே!

  ReplyDelete
 16. Notify me க்ளிக் செய்தும் பின்னூட்டம் பற்றிய செய்தியும் வரவேயில்லையே...

  ReplyDelete
  Replies
  1. இரண்டு மூன்று முரை வந்து கருத்திட்டும் உங்கள் தளத்தில் வரவில்லை நான்மட்டறுபட்டு விட்டதுஎன்று நினைத்திருந்தேன்

   Delete
  2. வந்து விட்டதய்யா.......

   Delete
 17. நல்ல கருத்துகள் சார். உங்கள் சஜஷன்ஸ் எல்லாமும் நல்லாருக்கு. நிறைவேற வேண்டும். இளைய தலைமுறை ஆட்சிக்கு வரும் போது... வந்தால் எதிர்காலத்தில் வரலாம்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 18. என்னவெல்லாமோ நம்புகிறோம் நல்லவை நடக்கும் என்றும் நம்புவோம் நன்றி

  ReplyDelete