Sunday, February 17, 2019

பெரிசு என்றால் சும்மாவா



                                    பெரிசு என்றால் சும்மாவா
                                     ----------------------------------------
இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் இளைஞர்  மற்றவர் வயதானவர்  இளைஞனுக்கு வயதானவரைச் சீண்டிப்பார்க்க ஆசை  வயதானவரோ எவ்வித  ஈடுபாடும்காட்டவில்லை இளைஞன் வயதானவரிடம்  நான்  சிலகேள்விகள்கேட்பேன்  பதில் தெரியாவிட்டால் ஐந்து ரூபாய் தர வேண்டும்  அதேபோல் நீங்கள் கேள்வி கேட்கலாம்  பதில் தெரியாவிட்டால் நான் ஐநூறுரூபாய் தருவேன் இளைஞன் பெரியவரை மட்டம் தட்ட  வேண்டும் என்று முடிவு செய்தான்  வேண்டா வெறுப்பாக பெரியவர் ஒப்புக் கொண்டார்  முதலில் நீங்கள் கேளுங்கள்நான்பதில் தருகிறேன் பின் நான் கேட்பேன் நீங்கள் பதில் தரவேண்டும் சரியா என்றான்  பெரியவர் கேள்வி கேட்டார் நம் உடலில் எலும்பு இல்லாத உறுப்பு எது இளைஞன் சுதாரித்துக் கொண்டு தன் பதிலைகூகிளில் தேடி சரி பார்த்துக் கொண்டான்நாக்கு என்றான் பதில் சரியாக இருக்கவே இளைஞனின்  முறை கேள்வி  கேட்க
உலகிலேயே அதி வேகமாகஓடக்கூடிய விலங்கு எதுபெரியவர் விடை தெரிய வில்லை என்று தோற்றதற்காக  ஐந்து ரூபாய் கொடுத்தார்இப்போது கேள்வி கேட்க பெரியவரின் முறை
 பறக்கும் போது றெக்கை இருக்காது நிலத்துக்கு வந்துவிட்டால் றெக்கை இருக்கும்  அது என்ன
இளைஞன்  முழித்தான்  தன் லாப்டாப்  கை பேசியி லெல்லாம் விடை தேடினான்  கிடைக்க வில்லை தான் தோற்றதற்கு அடையாளமாக  பேசி இருந்தபடிபெரியவருக்கு ரூபாயைநூறு கொடுத்தான் பெரியவர் ஒரு முறுவலோடு பணத்தை வாங்கிக் கொண்டார்
இப்போடு இளைஞனின் முறை கேள்வி கேட்க
ஐயா உங்க கேள்வியையே உங்களுக்குக் கேட்கிறேன் பதில் என்ன என்றான் 
பெரியவர் பதில் ஏதும்சொல்லாமல் ஐந்துரூபாயைஇளைஞனிடம் கொடுத்தார்
 பின்ன என்னவாம் பெரிசு என்றால் சும்மாவா


14 comments:

  1. வெவ்வேறு வடிவங்களில் அடிக்கடி சுற்றும் ரசனையான கதை.

    ReplyDelete
    Replies
    1. பெரிசுகளை இளக்காரமாகப் பார்க்க வேண்டாம் என்று சொல்லவே இப்பதிவு ரசனையாக இருப்பதாகச்சொன்னதற்கு நன்றி

      Delete
  2. இதுவும் பல முறை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை எப்படியெல்லாமோ சுற்றினாலும் சொல்ல வருவது பெரிசுகளைக் குறைவாக மதிக்க வேண்டாம் என்று சொல்கிறது இல்லையா

      Delete
  3. ஆமாம் இதில் முழுப்புள்ளி, கால்புள்ளி, கேள்விக்குறி போன்ற எதுவும் காணோமே? ஏன்?
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. கமல ஹாசன் நடித்த ஒரு படப் பாடலில் வருவதுபோல எங்கெங்கு எது எது வர வேண்டுமோ அதை நினைத்துக் கொள்ளலாம் படித்துபுரிந்து கொள்ள முடிகிறதுஇல்லையா

      Delete
  4. துளசிதரன் : ஸ்வாரஸ்யமான கதை...

    கீதா : இந்தக் கதையை வாட்சப்பில் வாசித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. கிதாவின் நினைவாற்றலா இல்லை மேலெ கண்ட பின்னூட்டங்களின் விளைவா இது வாட்ஸாப்பில் இருந்துபகிர்ந்ததல்ல கேட்ட ஒரு கதை என் பாணியில்

      Delete
  5. மீண்டும் ஒருமுறை இங்கு ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  6. பெரியவர்கள் பெரியவர்கள்தான் ஐயா.

    ReplyDelete
  7. என்ன செய்வது கதைகள் மூலம் சொல்ல வேண்டி இருக்கிறது

    ReplyDelete
  8. கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete