Saturday, February 23, 2019

நாய் படும்பாடு



                                                  நாய் படும் பாடு
                                                  ----------------------------

 அது என்னவோ தெரியவில்லை நாய்களைக் கண்டாலே ஒரு பாசம்  ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன்   மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று இருந்தபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு சிநேக பாவத்துடன்  வந்தது பார்க்க் யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது  உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில்  ஏறிப் படுத்துக் கொண்டது  மாலையானதும்சிலபிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தேன்  சிறிது நேரமிருந்து விட்டு அதுபோய் விட்டது மறு நாளும் வந்ததுஅதேபோல் அன்றும் வாலை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது நானும் ஐயோ பாவம்வாயில்லா பிராணி என்று பேசாமல் இருந்து விட்டேன் இது இப்படியே தொடர்வது கண்டு என்மனைவி அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கச் சொன்னாள்  யாராவதூரிமையாளர்கள் நம்மிடம்வந்து சண்டை போடலாம் என்றாள்  சிறி து யோசனைக்குப் பின்  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது தினமும் சிறிது நேரம் சோபாவில் படுத்து விட்டு சமத்தாக அதுவே போவது கண்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய  நினைத்தேன்   அதன் காலரில் ஒரு சீட்டில்  நிகழ்வுகளை விவரித்து எழுதி கட்டி விட்டேன்  மறு நாள் என்ன ஆச்சரியம்   அதன்  காலரில் ஒருசீட்டுடன் அதுவந்தது அதை எடுத்துப் பிரித்துப்படித்தால்
சார் / மேடம்   மிக்க நன்றி . ஒரு வாயில்லா ஜீவனுக்கு அடைக்கலம்கொடுத்து தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி அது என் நாய் இங்கே என்வீட்டில் அமைதியாக தூங்க முடியாமல்  அவதிப்படும் அது தனக்கு ஒரு இடத்தைத்தேடிக்கொண்டது என் வீட்டில் நான்கு பிள்ளைகள் என்மனைவி  அந்தநாய்  சற்று நேரம் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை அதனால் தான் அது உங்கள்வீட்டைத் தேடி வந்தது நானும் அதுபடும்பாட்டை அனுபவிக்கிறேன்   எனக்கும் உங்கள்வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்குமா  அப்படியானால் நானும்நிம்மதி யுடன் மதியவேளையைப்போக்கலாம்
நன்றியுடன்   என்று எழுதி இருந்தது


படம் இணையத்தில்  இருந்து 












24 comments:

  1. இது ஆங்கிலத்தில் வாட்சப்பில் வலம் வந்து கொண்டிருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாட்ஸாப்பில் ஆக்கிலம்தமிழ் என்று ஏதும் இருக்கிறதா

      Delete
  2. நாய்களுக்கும் மனிதர்களுக்கான அத்துணை குணங்களும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. இருந்தும் நம் இலக்கியங்களில் நாயை ஏதோ ஒரு கீழ்த்தரமானது என்றே எழுதி இருப்பது கண்டேன்

      Delete
    2. ஆமாம் ஜி எம் பி சார்... ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு குணம் உண்டு. இலக்கியங்களில் நாயைக் குறைவாகத்தான் சொல்லியிருக்கின்றனர். (நாயினும் கடையேன்)

      Delete
    3. கம்ப ராமாயணத்தில் (நாய்க் குகன் என்றென்னை ஏசாரோ ) என்பது உடனே நினைவுக்கு வருகிறது ந்றைய இடங்களில் நாயை ஏளனமாக எழுதிய எழுத்துகள் விரவிக்கிடக்கும்

      Delete
  3. இது பலமுறை வாட்ஸாப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தி. மறுபடியும் படித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது எந்த வாட்ஸாப்பிலிருந்தும் சுட்டதல்ல

      Delete
  4. இது நல்லா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. வாஇப்பில் ரசனை காண்பதுமகிழ்ச்சி தருகிறது

      Delete
  5. ஸார் இது வாட்சப்பில் வலம் வந்தது. எனக்கு வந்ததில் நான்கு பிள்ளைகள் இல்லையே!! ஹா ஹா ஹா ,மற்றபடி வந்த விஷயம் எல்லாம் இதேதான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த வாட்ஸாப்பை எனக்கு அனுப்பித்தர முடியுமா

      Delete

  6. என் வாட்ஸப் பயன்பாடு மிக லிமிட்டாக இருப்பதால் இதை உங்கள் தளத்தில் முதல் முறையாக படித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. எங்கோ படித்ததும் கேட்டதும் எழுதினால் வாட்ஸாப்ப்பில் வந்ததாக செய்தி எனி வே உங்களுக்கு இது முதல் முறை என்று கேட்கும் போது மகிழ்ச்சி

      Delete
  7. Replies
    1. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமாமே

      Delete
  8. நல்ல டெக்னிக்கா இருக்கே

    ReplyDelete
    Replies
    1. டெக்னிக் ஏதுமில்லை படித்ததும் கேட்டதும் நினைவுக்கு வரும்போது எழுதுவது

      Delete
  9. ஹா.. ஹா.. நல்லா இருக்கே கதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிஜீ

      Delete
  10. நானும் இந்த செய்தியை படித்தேன்.....

    பல சமயங்கள் ஒருவர் எழுதிய செய்தி மற்றவர்கள் எழுதியதாக வலம் வருவது நடக்கிறது.... நீங்கள் எழுதியதும் இப்படி வலம் வரலாம்!

    உங்கள் வார்த்தைகளில் படிப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. எழுத்து என்னுடையது கருத்து படித்தவற்றின் தாக்கமாயிருக்கலாம்

      Delete
  11. நாயிற் கடையவன் என்று மாணிக்கவாசகர் கூறுவது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
  12. கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் நாயை இழிவாக எழுதிய கருத்துகள் உண்டு

    ReplyDelete