Sunday, February 3, 2019

திரு தி தமிழ் இளங்கோவுக்கு அஞ்சலி                                        திரு தி தமிழ் இளங்கோவுக்கு  அஞ்சலி
                                         --------------------------------------------------------------
  திருச்சி பதிவர் திரு தி தமிழ் இளங்கோ மறைந்த  செய்தியை திரு வை கோபால கிருஷ்ணன் அஞ்சல் மூலம்  தெரிவித்து இருந்தார்  தி தமிழ் இளங்கோ என் நல்ல நண்பர் ஆவார்  நான்  நேரில் சந்தித்த வலைப் பதிவர்களில் அதிக முறை சந்தித்தவர் இரண்டு முறை திருச்சியிலும்   ஒரு முறை மதுரையிலும் ஒரு முறை புதுக்கோட்டையிலும்  சந்தித்து இருக்கிறேன்  பொதுவாக வலைப்பதிவர்களை அறி முகங்களாகவே எண்ணும்நான்  திரு தி தமிழ் இளங்கோவை  நல்ல நட்பாகக்கருதுகிறேன்
 சென்ற ஆண்டு ஃபெப்ருவரியில் அவருக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டு உடல்நலம் தேறினார் மருத்துவர் அவரிடம் அறுவைச்சிகிச்சை செய்ய கூறி இருக்கிறார் ஆனால் நண்பருக்கு அறுவைசிகிச்சை செய்ய பயம்   வேறு மருத்துவரை நாடி அறுவைச்சிகிச்சையிலும் ஏதும்காரண்டீ இல்லை என்று தெரிந்து கொண்டார் அவருக்கும் அதுவே சரி எனத் தோன்றி அறுவை சிகிச்சைஇல்லாமல் மருந்துகளோடு வாழப் பழகினார் ஆனால் யாரென்ன செய்ய முடியும் ஒராண்டுக்குள்ளாகவே  மறைந்து விட்டார்  அன்னார் மறைவுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன்
ஒரு முறை இளங்கோ என் எழுதிய என்னை தி தமிழ் இளங்கோதான் சரி எனத் திருத்தினார் அருகில் புத்தகக்கண்காட்சி ஏதாவது நடந்தால் அங்கு சென்று புத்தகங்கள் வாங்கிப்படிப்பார் புத்தகங்களைப் பிறருக்கும் கொடுத்துமகிழ்வார் எனக்கும்  ஒரு புத்தகம்வாலியின் எழுத்து பரிசளித்திருக்கிறார்  நண்பர்  வைகோவுக்கும் வருட ஆரம்பத்தில் ஒரு புத்தாண்டு டைரியை பரிசளிப்பாராம் பல முறை திரு வைகோ சொல்லி நெகிழ்ந்துஇருக்கிறார்  ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் கோவிலில் நண்பர்கள் சிலருடன்சேர்ந்து உணவு அளிப்பாராம் நான் எழுதிய நூலை முனைவர் ஜம்புலிங்கம்  விக்கிப் பீடியாவில் பதிய அதிலும்திரு தி  தமிழ் இளங்கோ எழுதி இருந்தார் சகபதிவர்களின்  எழுத்tதுகளுக்கு  ஊக்கமளிப்பார் ஒரு முறை  என் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்னும்  பதிவுக்கு பின்னூட்டமாக  /இது மரணத்திற்குப் பின் (AFTER DEATH) என்ற தத்துவ விசாரணை என்றாலும், வாழ்வியல் சிந்தனைகளாக, இந்த இப்போதைய மனித வாழ்க்கையைப் பற்றிய உங்கள் எண்ணம் (சாராம்சம்) என்ன என்பதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.ஒரு வேண்டுகோள்தான்./  என்று எழுதி இருந்தார் பல முறை என் கருத்துகள் சைவ சித்தாந்தக் கருத்துகள் போல் இருக்கிறதுஎன்றும் கூறி இருக்கிறார்  அவர்மறைவுக்குஅஞ்சலி செலுத்தாமல் இருக்க முடியவில்லை இன்னொரு நண்பரின்  வேண்டுகோளுக்கிணங்கி மரணத்துக்குப் பின்  என்னஎன்னும் என்கருத்துகளை  2016ல் உரத சிந்தனைகளென்னும்தலைப்பில் எழுதி இருந்தேன் அதற்கு பின்னூட்டமாக
/ மறுபடியும் படித்து, ஆழமாக சிந்தித்து கருத்துரை எழுத இயலவில்லை. மரணம் பற்றிய மூட நம்பிக்கை என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எனவே பிறிதொரு நாளில் விவரமாக எழுத முயற்சிக்கிறேன்/ என்று எழுதி இருந்தார்
 தன்வயதான தந்தையை மிகவும்கரிசனத்தோடு பார்த்துக் கொண்டவர்  65 வயது இக்காலத்தில் இறக்கும் வயதே அல்ல  இருந்தாலும் மரணம்தவிர்க்க முடியாதது ஒரு வேளை  பயப்படாமல் இதய அறுவைச் சிகிச்சைசெய்து கொண்டிருந்தால் இன்னும் இருந்திருப்பாரோஎன்னவோ
எல்லாமே ifs and buts தான் அன்னார் ஆத்மா சாந்தி அடையட்டும்                                  
40 comments:

 1. ஆமாம், எனக்கும் திரு வைகோ அவர்களிடமிருந்து வாட்சப், மெயில் ஆகியவற்றில் செய்தி வந்தது. திரு தமிழ் இளங்கோ இதய நோயாளி என்பது தெரியாது. இத்தனை படித்தும் வங்கியில் வேலை பார்த்தும் அறுவை சிகிச்சைக்குப் பயந்திருக்கிறார் என்பதும் புதிய செய்தியே! அன்னாரைத் தவிர்த்து அவர் வீட்டில் யாரையும் தெரியாது. எனினும் அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
  Replies
  1. எண்ணங்களில் கருத்து வெறுபாடு இருந்தாலும் சரியெனத் தோன்றுவதை எடுத்துக் கொள்ளூம் குணம் படைத்தவர்

   Delete
 2. நெல்லைத்தமிழன் மூலம் எங்கள் பிளாக் வாசகர் வாட்ஸாப் குழுமத்தில் கேள்விப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நல்ல மனிதர்.அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இத்தனை சீக்கிரம் மறைவார் என்று தோன்றியதில்லை

   Delete
 3. பதிவர் சந்திப்பு ஒரு முறை கீதா சாம்பசிவம் அவர்கள் வீட்டில் நடந்தது, அதற்கு வந்து இருந்து படங்கள் எடுத்து வலைத்தளத்தில் போட்டார். திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த ஆண்டும் டைரி, காலண்டர் கொடுத்து பார்த்து வந்தார்.
  வை.கோ அவர்களும் இந்த முறை பதிவு செய்தார்கள்.
  எனக்கும் மெயிலில் வை,கோ சார் சொன்னார்கள்.
  மிகவும் வருத்தம் அடைந்தேன்.

  //ஒரு முறை இளங்கோ என் எழுதிய என்னை தி தமிழ் இளங்கோதான் சரி எனத் திருத்தினார்//

  நானும் ஒரு முறை திரு. சிவ. இளங்கோ என்று குறிப்பிட்டு விட்டேன், அப்போது அவர்கள் பிரபல பேர் உங்கள் மனதில் இருப்பாதால் என்னை அவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  என் பேர்" தமிழ் இளங்கோ" என்று சொன்னார்கள்.

  அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை வழங்க வேண்டும்.

  93 வயது தன் தந்தையை பார்த்துக் கொள்ளவே விருப்பஓய்வு பெற்றார். சிறு குழந்தை போல் நடந்து கொண்டதை ஒரு பதிவில் போட்டு இருந்தார்.

  அவர் எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர். அவர் கடைசியாக போட்ட பதிவு கூட புத்தர் பெளர்ணமி விழா என்று நினைக்கிறேன்.
  ReplyDelete
  Replies
  1. மொத்தத்தில் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்

   Delete
 4. சக பதிவுலக நண்பர்களை அவர் அவர்களை உணர்ந்த விதத்தில் மிகுந்த மரியாதையுடன் அவர் விளிக்கும் பாங்கே அவரது பண்பட்ட மனதை நமக்கு அறிய வைக்கும். ஆழ்ந்த புத்தகப் பிரியர். அவர் அறிமுகப்படுத்திய புத்தகக் கண்காட்சிகள் அவரது புத்தக வாசிப்பு அனுபவங்களை நமக்கு புரிய வைக்கும். கோபு சார் தகவலைத் தனி மெயிலில் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்றும் நம் நினைவில் வாழ்வார்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகில் எனக்கும்மூத்தவர் இருந்தாலும் என் வயசு கருதி மூத்த பதிவரென்றே அழைப்பார்

   Delete
 5. ஒரு முறை, என் கருத்து எதிரான தன் கருத்தைக் கொஞ்சமும் பண்பாடு பிறழாமல் முன்வைத்தார்.மிக நல்ல மனத்தவர். மிகவும் வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பவர்

   Delete
 6. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இறந்தாலும் அவர் நினவுகள் இருக்கும்

   Delete
 7. மறவாமல் அஞ்சலி செலுத்தியிருக்கிறீங்க ஜி எம் பி ஐயா,

  நானும் அவரோடு பழகியது கடந்த ஓரிரு வருடமே, ஆனாலும் நெருங்கிப் பழகிவிட்ட உணர்வு.
  நானும் அவரின் போஸ்ட்டில் கூறியிருந்தேன் பயப்படாமல் பை பாஸ் செய்யுங்கோ அது நல்லது என, ஆனா விதி என ஒன்றிருக்குதெல்லோ... அது பை பாஸ் செய்திருந்தாலும் அவரின் அந்த நேரத்துக்கு ஏதும் ஆகியிருக்கும்.
  இன்றுதானே கிரியைகள், எனக்கு மனதில் அந்த நினைவுகளே வருகுது, எந்த புளொக்குக்கும் போய் நோர்மலாக பேச முடியவில்லை.

  இளங்கோ அண்ணனின் மனம் அமைதியடையப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 8. நண்பர் தமிழ் இளங்கோ அவர்களின் மறைவுச் செய்தியை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சியுற்றேன். நேரில் பார்க்காவிடினும் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறேன். திருச்சிக்கு வந்தால் அவசியம் சந்திப்பதாக சொல்லியிருந்தார். ஒரு பண்பாளரை, மனித நேயம் உள்ளவரை இவ்வளவு விரைவில் இயற்கை நம்மிடமிருந்து பிரித்துவிட்டதை என்ன சொல்ல. துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  ReplyDelete
 9. செய்தி அறிந்ததில் இருந்து மனம் கனத்தது .அன்னாருக்கு அஞ்சலிகள் . அவர் மிகவும் அன்பான குணமுள்ளவர்.ஒரு பதிவில் வாசித்தேன் ரோட்டில் திரியும் வாயில்லா ஜீவன்களுக்கும் உணவளித்து பராமரித்து வந்தவர் . .அவரது ஆன்ம சாந்திக்காக மற்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தரவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. இறந்தபின் மனிதன் என்னாவான் என்னும் என் கருத்தைக் கேட்டிருந்தார் நான் எழுதியதைப் படிக்கும் நிலையில் அவர் இல்லைஎன்று கூறி இருக்கிறார்

   Delete
 10. வருத்தம் தரும் நிகழ்வுதான். சென்ற டிசம்பரில் முதலும் கடைசியுமாக அவரிடம் பேசினேன். (யாரிடமும் நானாக பேசியதில்லை). அறுவைச் சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததை நான் சரியானதுதான் எனச் சொன்னேன்.

  அப்புறம் இரு வாரங்களில் டைரி கொடுக்க கோபு சார் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

  பதிவுக்கு மறுமொழி கொடுக்காமல் இருந்ததே எனக்கு சந்தேகத்தையும் சங்கடத்தையும் தோற்றுவித்தது.

  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

  ReplyDelete
  Replies
  1. நடந்ததை இனி மாற்றமுடியாதுஇருக்கும்வரை நல்லமனிதரென்று பெயரெடுத்தவர்

   Delete
 11. மனம் வருந்துகிறேன். ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகில் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டோம்

   Delete
 12. இளங்கோ ஐயாவின் செய்தி மிகவும் மன வருத்தத்தை தந்தது.
  //65 வயது இக்காலத்தில் இறக்கும் வயதே அல்ல//
  அதே தான் நானும் நினைத்தது.அவருக்கு இதயத்தில் அடைப்புக்கள் இருக்கின்றது என்று தெரிந்த பின்பும், அறுவை சிகிச்சை செய்து கொள்வதா வேண்டாமா என்பது நீங்கதான் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்,அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே எல்லாம் சரியாகி விட்டது என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது என்றெல்லாம் இந்திய டாக்டர்கள் சொல்லி அவரை கைவிட்டிருக்க கூடாது.
  அடைப்புக்கு Stents பொருத்தியோ அல்லது பைபாஸ்சர்ஜரியோ செய்திருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு நம்பிக்கை ஏற்படும்வகையில் டாக்டர்கள் இருக்கவில்லை என்பதே நிஜம்

   Delete
 13. நண்பர் திரு தமிழ் இளங்கோ பழக இனியவர். சிறந்த பண்பாளர். தரமான கட்டுரைகளுக்கு சொந்தக்காரர். அனைவரையும் ஆழமான விவாதம் மூலம் ஈர்ப்பவர். மாற்றுக் கருத்துக்களை சரி என்று தோன்றினால் ஏற்பார். இல்லையெனில் நியாயத்தை முன் வைப்பார். மழபாடி என்றாலே அவர் நினைவு வரும். திருச்சியில் நான் ஆற்றிய பௌத்தம் தொடர்பான பொழிவினைக் கேட்க வந்ததோடு, நூலொன்றைப் பரிசாக அளித்து அதனைப் பாராட்டி தன் தளத்தில் எழுதியவர். அவருடைய எழுத்து என்றும் நம் நினைவில் நிற்கும், அவருடைய அழகான புன்னகையைப் போல.

  ReplyDelete
  Replies
  1. நல்லமனம்வாழ்க என்று தான் நினைக்கத் தோன்றுகிறது

   Delete
 14. நான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
  https://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823

  ReplyDelete
  Replies
  1. முகநூலோ பதிவோ செய்தி சேர்ந்துவிட்டதுஇழப்பு தவிர்க்க முடியாததுதான்

   Delete
 15. மிக மிக அதிர்ச்சி தரும் செய்தி.
  வலைப் பதிவுகளின் பொன்னான காலங்களில்
  எல்லோரும் எல்லாப் பதிவுகளையும் வாசித்துக் கருத்து சொல்லும்
  நேரம், மிக அழகாகக் கருத்துகளைச் சொல்லுவார். அவர் துளசி கோபால்
  அறுபதுக்கு அறுபது நிகழ்ச்சிக்கு வந்த போது கூடப் படித்த வண்ணமே இருந்தார்.

  நல்ல தொரு மனிதரை இழந்துவிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. நானும் ஒரு நல்ல வலை நண்பரை இழந்து விட்டேன்

   Delete
 16. ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 17. மிகவும் அதிர்ச்சியான தகவல். நல்ல மனம் படைத்த ம னிதர். பேர் இழப்பு.ஆழ்ந்த இரங்கல்கள்.-பாபு

  ReplyDelete
 18. நேற்று பயணத்தில் இருந்த போது முகநூலில் குமார் மூலமாக செய்தி அறிந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் கடைசி வரையில் தொடர்பில் இருந்தவர். வருத்தமாக உள்ளது. என் அஞ்சலி.

  ReplyDelete
  Replies
  1. தனெண்ணங்களில் உறுதியாக நின்றவர் இன்னும்தைரியமாகமுடிவெடுத்திருக்கலாம்

   Delete
 19. அடுத்தவர் மனம் வருந்தாமல் எழுதுபவர். அன்னார் ஆத்மா சாந்தி அடையட்டும்

  ReplyDelete
  Replies
  1. அவர் ஆத்மா சாந்தி அடையும்

   Delete
 20. செய்தி அறிந்து துயர் அடைந்தேன். வலைப்பதிவர் வாட்ஸப் குழுமத்திலும் கோபு சார் மெயிலிலும் அனுப்பி இருந்தார்கள். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூலை வாங்கியதாகக்கூறினார் . மிக நல்ல நண்பரை இழந்துவிட்டோம். அவருக்கு என் அஞ்சலிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமொரு நல்ல நண்பரை இழந்து விட்டோம்

   Delete
 21. எனது வருத்தங்களும் அஞ்சலிகளும் ..

  நம்ம இயலா இழப்பு ...

  ReplyDelete
  Replies
  1. நம்பித்தான் ஆகவேண்டும் நம்மால் அஞ்சலி செலுத்தவே முடியும்

   Delete
 22. உங்கள் பக்கத்தில் சற்றுமுன் உங்கள் நாவல்பற்றிய பதிவைப் படித்தபோது, தற்செயலாக ’popular posts’ -க்குக் கீழே பார்த்துக்கொண்டிருந்தேன். அஞ்சலி என்று படித்ததும் திடுக்கிட்டுத் திறந்து படித்தேன். பிப்ரவரி நிகழ்வை அக்டோபரில்தான் அறிய நேர்ந்தது. நான் பொதுவாக வலைப்பதிவுகளை விரட்டிப் படித்துக் கருத்துக்கள் போடுகிறவன் அல்ல. அதனால் இப்படி ஒரு தாமதம்..

  அவர் வலைப்பக்கத்தில் - கடந்த வருடம் என்று நினைக்கிறேன், கருத்திட்டிருக்கிறேன். அவரும் என் பதிவுக்கு எப்போதோ கருத்திட்ட நினைவு.

  திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களைப்பற்றிய விபரங்களை, உங்கள் பதிவு, மற்றும் பின்னூட்டங்கள் மூலமே அறிகிறேன். புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவுக்கு வந்திருந்தேன். அறிமுகம் நிகழவில்லை.

  அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் அமைதிகொள்ளட்டும். அவர்தம் குடும்பம் ஆண்டவன் அருளால் நன்றாக இருக்கட்டும்.

  ReplyDelete
 23. இப்போதாவது தெரிய வந்ததே

  ReplyDelete