எதேதோ எண்ணங்கள்
----------------------------------
ஏதேதோ எண்ணங்கள்
முன்பொரு பதிவில்
குப்புற வீழ்ந்தபோது
காலனை உதைத்துவிட்டேன் என்று உரக்கச் சொன்னேன்
என்பேரன் ஓராண்டு நிரம்பும்முன்
நடை துவங்கு முன் பலமுறை விழுந்தெழுவான்
அவனுக்கு தெரியுமா
அவ்வயதில் விழுவதும் எழுவதும்
சகஜமென்று
இன்று கவனமாய் இருப்பதெல்லாம்
இன்று கவனமாய் இருப்பதெல்லாம்
விழாமல் இருக்கவே
வீழ்ந்தால் ஒரு வேளை எழாமலெ போகலாம் ஒரு பின்னூட்டம் நினைவுக்கு வீழ்ந்தோர் எல்லாம்
எழ வேண்டும் என்றில்லை மீளாத் தூக்கமாகலாம்
இந்நிலையில் நேற்று
இரவு உறக்கம் வராது ஏதேதோ எண்ணங்கள் கனவா சொல்ல முடியவில்லை உள்ளத்து எண்ணங்களுக்கு வார்த்தைகளில்
உயிர் கொடுக்காவிட்டால் அவைசருகாகி கருகும் என்பதால்
இரவே எழுந்து எண்ணங்களை எழுதி விடலாமென்றால்
அந்நேரத்தில் நான் எழுந்து
எழுதுவதைப் பார்த்தால்மனைவி பயந்து விடுவாள் என்பதால் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு
விட்டேன் ஆனால் காலையில் எண்ணங்கள்
தெளிவாக கோர்வையாக வரவில்லைஇது தெரியாதவனல்ல நான் இதையே முன்பு ஒரு பதிவில்
பதிவிட்டிருக்கிறேன் செய்யாத குற்றம்
விடியலில் எழுந்து இனிய கனவுகளை
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
ஆனால் என்கனவு வீழ்ந்தெழுவது பற்றித்தான் என்பதுமட்டும் நினைவுக்கு வருகிறது
இருக்கும்போது இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று
நினைத்ததில்லைஇப்படி எல்லாம் என்றால் எப்படி ஒரு புற நானூற்றுப்பாடலில் வருவது போலா
உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
இந்திரர்க்குரிய அமுதமே கிடைப்பதாயினும், அது தமக்கு இனியது எனக் கருதித் தாமே தனித்து உண்டலும் இல்லாதவர்; சினமற்றவர்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாளாது சோம்பி யிருப்பவருமல்லர், புகழ் எனின் உயிரும் கொடுப்பவர்; பழி எனின் உலகம் முழுவதுமே பெறுவதாயினும் மேற் கொள்ளார்; அயர்வு அற்றோர்; அத்தகைய மாட்சிமைப் பட்டவராக வாழ்பவர் உயர்ந்தோராவர். அவர் தமக்கென எதுவும் செய்யாது, பிறர்க்கென உழைக்கும் உண்மையான இயல்பு உடையவராதலே அவர் பெருந் தகுதிக்குக் காரணமாகும். இவராலேயே சிறப்புடன் வாழ்கிறது உலகம்.
இதில் ஒன்று மட்டும் எனக்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்
எனக்கென எதுவும்
செய்யாதவன்தான் நான் அதனாலெதுவும் கெட்டுப்போகவில்லை ஆனால் நான் வாழ்ந்தவிதம்
குறித்து வருத்தப்பட்டதில்லை
இருந்தாலும் ஒரு நிறைவேற முடியாத ஆசை உண்டு அதுதான்
நிறைவேறமுடியாதுஎன்று தெரிகிறதே பின் ஏன் அந்த ஆசை தூக்கிக்கடாசு
ஆனல் நான்
சற்று வித்தியாசமாய் சிந்திப்பவன் வாசகர்களில் பலருக்கும் தெரியும் அதனால்தானோ
என்னவோ இக்கேள்வி
.what do you know about that ..place/living..?Do you expect to
meet/see those who predeceased you..what else do you know about post-mortam
status...As you are a man of deep thoughts , i am sure what you share on
this subject will make for interesting read..
தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.
மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
கூறும்போது அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.
மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை.
நோய்
நொடியால் கஷ்டப்படுபவர்கள் அந்த வேதனை தாங்காமல் இறப்பது மேல் என்று நினைக்கலாம்
ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது மனோதிடம் உள்ள தைரியசாலி ஒரு முறைதான்
இறக்கிறான் ஆனால் கோழையோஇறந்து இறந்து வாழ்கிறான்
வயதாகும் போது மரணம் பற்றிய சிந்தனைகள் அதிகம் வரலாம் அந்த பயத்திலிருந்து
எழ கடவுள் என்றும்
நம்பிக்கை என்றும் ஏதோ ஒன்றில் மனதை லயிக்க விடலாம் நம் கலாச்சாரத்தில்தான் இந்த மாதிரி
நம்பிக்கைகளுக்குக் குறைவில்லையே
சொர்க்கம் என்றும் நரகமென்றும் ஜீவாத்மா பரமாத்மா என்று என்னவெல்லாமோ கூறிக் குழப்பி வைத்திருக்கிறார்களே. ஒரு வகையில் இந்த பயமே நாம்
கெடுதல்நினைக்காமலும்செய்யாமலும்
இருக்கவும் உதவுகிறதோ என்னவோ வாழ்க்கையில் வால்யூஸ் என்று நினைப்பவர்கள் பொய் சொல்லக்
கூடாது திருடக் கூடாது போன்ற வற்றைக் கடை பிடிக்க இந்த நம்பிக்கையும் பயமும் தேவை
என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் நல்ல ஒழுக்கங்களை பேணி வளர்க்க இவையெல்லாம் தேவை
என்று நினைக்க வில்லை. நல்ல ஒழுக்கங்கள் நம்மைச் செம்மைப் படுத்தும் சீராக
சிந்திக்க வைக்கும் அதுவே மனோதிடமும் தைரியமும் கொடுக்கும் இறப்பு பற்றிய எண்ணத்தையும்
ஒதுக்கிவிடும் என்று நினைக்கிறேன்
எனக்கு மட்டும் இறப்பு பற்றிய
எண்ணங்கள் தோன்றுவதில்லையா என்ன.? ஆனால் அது குறித்து நிறையவே சிந்திக்கிறேன் அதுவே என்னை இந்தஜீவாத்மா பரமாத்மா பற்றி
வித்தியாசமாக நினைக்க வைத்தது(ஜீவாத்மாபரமாத்மா)
ஒவ்வொரு
மூச்சுக்கும் நடுவே ஒரு இறப்பு இருக்கிறதுஅந்த இடைப்பட்ட நேரம்போதும் கனவு காண அதில் என்னவெல்லாமோ நினைக்க முடியும்
கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது
.அதிகாலையில் எழுந்திருக்கிறேன்
.
கண்ட கனவு மறந்து போய் விடுகிறது என்னையும் ஏதேதோ
எழுத வைக்கிறது
எனக்காக வாழத்தொடங்கியது என் அறுபது வயதுக்கு அப்புறம்தான்
சுட்டிகளையும் படித்தால்தான் எண்ண ஓட்டங்கள்விளங்கலாம் எனக்காக வாழத்தொடங்கியது என் அறுபது வயதுக்கு அப்புறம்தான்
ஜீவாத்மா பரமாத்மா
போம்மாநான்வரமாட்டேன்
அப்படிச்சொல்லாதேடா.. பசியால் உன்முகம் எப்படி சோர்ந்து கிடக்கிறது வாடா சாப்பிட! (அன்போடுஅக்கறையும்சேர்ந்துகொண்டது.)
ம்ஹூம்நான்மாட்டேன்,
இங்கே பார் உனக்குப் பிடித்த உணவுகள். பழங்கள் எல்லாமே இங்கு இருக்கின்றன, உனக்கு மிகவும் பிடித்த வெண்ணெயோடு நெய்யும் கூட தருவேன். வாடா கண்ணா… (ஆசை காட்டுகிறாள்)
வேண்டாம்,நான்வரமாட்டேன்,
உனக்கு ஊட்ட எவ்வளவு கோபியர் காத்திருக்கிறார்கள் பார், அவர்களிடம் உணவூட்டிக்கொள்ள வாயேன்டா கண்ணா… (பிள்ளை சாப்பிடவேண்டுமே… மற்றுமோர் ஆசைகாட்டிமடக்கப்பார்க்கிறாள்)
யார் ஊட்டினாலும் நான் வரமாட்டேன், நான் விளையாட்டைப் பாதியில் விட்டு வரமாட்டேன். என் விளையாட்டுப் பொருட்களை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால்…?
நீ உன் விளையாட்டுப்பொருட்களை கையோடு கொண்டுவந்திடு. கையில் போதவில்லையா? கக்கத்தில் இடுக்கிக்கொள், அரையில் செருகிக்கொள்.. (இந்த சமாதானத்துக்குப் பிறகேனும் வரமாட்டானா…ஏங்குகிறாள்)
நீஎன்னசொன்னாலும்வரமாட்டேன்அம்மா…
கண்ணா, இங்கே பார், நீ தயிரும் வெண்ணெயும் வாரிவளைத்துச் சாப்பிட்டால்தான் தகதகவென்று உன் மேனி மின்னும், இன்னும் பல கோபியரை உன்னழகால் நீ வசப்படுத்துவாய், வாடா கண்ணா… (மீண்டுமொரு தூண்டில்.)
ம்ஹூம்..
பாரடா பார், காகத்துக்கு இடுகிறேன், நாய்க்கு இடுகிறேன், பூனைக்கும் இடுகிறேன், சீக்கிரம் வா… உனக்கும் இடுவேன். இன்னும் கிண்ணம் நிறைந்தே இருக்கிறது வாடா கண்ணா…
( நீ வரவில்லையென்றால் உணவைப் பங்கிட்டுவிடுவேன் என்று பயமுறுத்துகிறாள், பின் குழந்தை முகவாட்டம் கண்டு இல்லையில்லை, எவ்வளவு கொடுத்தாலும் உன்பங்கு என்றைக்கும்குறையாதுஎன்றுஉறுதியளிக்கிறாள்.)
எவ்வளவு நயமாய் விளையாட்டுக்குழந்தையை தாஜா செய்து சாப்பிட அழைக்கிறாள் அன்னை. ரசித்து மகிழ்ந்தேன். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.