Friday, November 22, 2019

மாமுண்ண ஓடி வா கண்ணா



                            மாமுண்ண ஓடி வா கண்ணா
                           -----------------------------------------------
 இது ஒரு மீள்பதிவு முன்பு பதிவிட்ட போது  ரசித்து வந்த பின்னூட்டமே இதை மீள்பதிவாக்கத் தூண்டியது 


வெய்யிலில் ஓடி மண்ணிலே ஆடி
மேனி தளர்ந்தது போதுமே செல்வா
மண்ணுண்டவன் நீ என் கையால் இங்கு
மாமுண்ணவே கண்ணா ஓடிவா  .............

பசியால் வாடியே மங்கிய நின் முகம்
சோர்ந்ததே கண்ணா அதைக்
காணவே உன் தாய் எனக்குத் தாங்காதே
அதனால் மாமுண்ணவே கண்ணா ஓடி வா

.ற்றல்,பொரியலும் சாம்பாரும் சாதமும்
கட்டித்தயிர் கலந்து நான் தருவேன்
வேண்டிய வெண்ணை நெய்யும் கலந்து
மாமுண்ணவே கண்ணா ஓடி வா.
         
இனிக்கும் கனிவகை மூன்றும் உண்டு
ஊறுகாயுடன் பபபடமுண்டு பாயசம்
பணியாரம் எல்லாம், உண்டு மகிழ்ந்திட
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.       

பாலும் பழமும் கிண்ணத்தில் வைத்தே
கோபியர் உன்னைச் சுற்றி ஆடியே
வாவென்றழைத்து உன் வாயினில் ஊட்ட.
மாமுண்ணவே கண்ணா ஓடிவா

கொம்பும் குச்சியும் அக்குளில் வைத்திடு
ஆடும் பம்பரம் அரையினில் செருகிடு
அன்னிய்ர் எவரும் வந்தெடுக்க இயலுமோ
மாமுண்ணவே கண்ணா ஓடிவா

கெட்டித்தயிரும், பருப்பும் வெண்ணையும்
சப்பிகொட்டியே நீ உண்டால் கண்ணா
கார்நிற மேனியும் கருத்தும் மினுமினுக்கும்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா 
           
காகம் கொண்டு போய். நாயும் கொண்டு போய்
பூனை கொண்டு போய் , யார் கொண்டுபோயினும்
செல்வா, கிண்ணத்தில் இருப்பது தாராளம்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா 


வாடா கண்ணா, விளையாடி விளையாடி களைத்துப்போய்விட்டாயே.. சாப்பிடலாம் வாடா (அன்போடுஅழைக்கிறாள்அன்னை)

போம்மாநான்வரமாட்டேன்

அப்படிச்சொல்லாதேடா.. பசியால் உன்முகம் எப்படி சோர்ந்து கிடக்கிறது வாடா சாப்பிட! (அன்போடுஅக்கறையும்சேர்ந்துகொண்டது.)

ம்ஹூம்நான்மாட்டேன்,

இங்கே பார் உனக்குப் பிடித்த உணவுகள். பழங்கள் எல்லாமே இங்கு இருக்கின்றன, உனக்கு மிகவும் பிடித்த வெண்ணெயோடு நெய்யும் கூட தருவேன். வாடா கண்ணா… (ஆசை காட்டுகிறாள்)

வேண்டாம்,நான்வரமாட்டேன்,

உனக்கு ஊட்ட எவ்வளவு கோபியர் காத்திருக்கிறார்கள் பார், அவர்களிடம் உணவூட்டிக்கொள்ள வாயேன்டா கண்ணா… (பிள்ளை சாப்பிடவேண்டுமேமற்றுமோர் ஆசைகாட்டிமடக்கப்பார்க்கிறாள்)

யார் ஊட்டினாலும் நான் வரமாட்டேன், நான் விளையாட்டைப் பாதியில் விட்டு வரமாட்டேன். என் விளையாட்டுப் பொருட்களை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால்…?

நீ உன் விளையாட்டுப்பொருட்களை கையோடு கொண்டுவந்திடு. கையில் போதவில்லையா? கக்கத்தில் இடுக்கிக்கொள், அரையில் செருகிக்கொள்.. (இந்த சமாதானத்துக்குப் பிறகேனும் வரமாட்டானாஏங்குகிறாள்)

நீஎன்னசொன்னாலும்வரமாட்டேன்அம்மா

கண்ணா, இங்கே பார், நீ தயிரும் வெண்ணெயும் வாரிவளைத்துச் சாப்பிட்டால்தான் தகதகவென்று உன் மேனி மின்னும், இன்னும் பல கோபியரை உன்னழகால் நீ வசப்படுத்துவாய், வாடா கண்ணா… (மீண்டுமொரு தூண்டில்.)

ம்ஹூம்..

பாரடா பார், காகத்துக்கு இடுகிறேன், நாய்க்கு இடுகிறேன், பூனைக்கும் இடுகிறேன், சீக்கிரம் வாஉனக்கும் இடுவேன். இன்னும் கிண்ணம் நிறைந்தே இருக்கிறது வாடா கண்ணா
(
நீ வரவில்லையென்றால் உணவைப் பங்கிட்டுவிடுவேன் என்று பயமுறுத்துகிறாள், பின் குழந்தை முகவாட்டம் கண்டு இல்லையில்லை, எவ்வளவு கொடுத்தாலும் உன்பங்கு என்றைக்கும்குறையாதுஎன்றுஉறுதியளிக்கிறாள்.)

எவ்வளவு நயமாய் விளையாட்டுக்குழந்தையை தாஜா செய்து சாப்பிட அழைக்கிறாள் அன்னை. ரசித்து மகிழ்ந்தேன். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

இம்மாதிரி ரசித்த பாராட்டுகள்  பெறஇன்னும் நன்கு எழுதவேண்டு மல்லவா








15 comments:

  1. மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.   ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ எழுதி இருக்கிறேன் பாராட்டுகள் நன்கு எழுத வைக்கும்

      Delete
  2. அருமையாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  3. நீங்கள் சிறந்த கவிஞர் என்பதை உறுதிப்படுத்தும் இன்னொரு பாட்டு.

    ReplyDelete
  4. ரசித்தமைக்கு நன்றி சார்

    ReplyDelete
  5. முன்புபோல் இப்போதெல்லாம் எழுத முடியவில்லை சார்

    ReplyDelete
  6. மிக அருமையான பாட்டு.
    கண்ணன் உண்ண வேண்டி அழைப்பது அருமை.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. பாட்டாகத் தெரியவில்லை. நேரில் கொஞ்சுவதைப்போல அழகாக உள்ளது ஐயா.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    ReplyDelete
  9. இதுவரை நீங்கள் இட்ட பின்னூட்டங்களிலேயெ நீண்டது இது என்று நினைக்கிறேன் நன்றி

    ReplyDelete
  10. பதிவிடவேண்டிய மீள் பதிவு. பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசார்

    ReplyDelete