Tuesday, February 25, 2020

எல்லொரும் நல்லவரே



                                     
                       எல்லோரும் நல்லவரே
                       ----------------------------------------------        

இன்று காலையில் எழுந்ததும் மனம் உற்சாகமாக இருந்ததுஒரு விஷயம் பலரும்  அனுபவித்து  இருக்கலாம்  எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலை யை  எட்டி இருக்கிறோம் தெரியுமா  சாதாரணமாக  கேட்கும்டயலாக் தான் ஆனால் இம்மாதிரியான எண்ணங்கள்  எல்லாமே அந்த வயசில் தோன்றி இருக்காது அதுதான் வாழ்வின் நியதி என்று சொல்லாமலே தெரிந்திருக்கும்
நான் பள்ளியில் படிக்கும் போது ஃபௌண்டன்  பேனாவை உபயோகித்ததுஇல்லை  இல்லையெ என்னும் எண்ணமிருந்ததெ இல்லை  ஆனால் கடந்த அந்தகாலநினைவுகளை அசை போடும்போது மிகவும் கஷ்டப்பட்டதுபோல் இப்போது தோன்றும் அப்போதெல்லாம் வாழ்வில் இதெல்லாம் சகஜமென்ற  எண்ணமிருந்திருக்கும் நான்  முதலில் வேலைக்குப் போகபோகிறேன் என்றபோதுதான் முதன்முதலில் காலணி என்க்கு கிடைத்தது  அதையே இன்றுநினக்கும்போதுநான் இழந்த்து அதிகம் போல் தோன்றுகிறது இப்படி நீட்டிமுழக்கி நான்கூறுவதேகஷ்டம் சுகம் என்பது எல்லாம்   ரிலேடிவ் விஷயங்கள்  என்று தெரிவிக்கவே
அது சரி என்மனம் காலையிலேயே  உற்சாகமாக இருக்கக் காரணம் நம்மைசுற்றி இருப்போரெல்லாம்  நல்லவர்களே நாம் தான் அனாவசியமாக குறை பட்டுக் கொள்கிறோம் எது எப்படியோ என்னைச் சுற்றி நல்லவர்களே  இருக்கிறார்கள் நிறைய எம்பதி  உள்ளவர்கள் வயதான  என்னையும் என் குறைகளையும்   கண்டுகொள்வதில்லை  எனக்குத்தான் என் குறைகள் பூதாகாரமாகத் தோன்றுகிறது சின்னச் சின்ன வேலைகளை எனக்காக் செய்கின்றனர் ஒரு முறை பதிவில் என்வயதை போட்டுக் கொள்வது  எனக்கு ஏதோ ஐயா ஸ்தானத்தை எனக்குக் கொடுக்கவா என்று ஒரு நண்பர் கூறி இருந்தார் என்வீட்டு வேலைகளுக்கு நான் அதிகம் சிரமப்படுவதில்லை பிஎச் இ எல்லுக்கு மாதம் ஒருமுறை  மருந்து வாங்கப்போகவேண்டும்  என்னை கண்டதும்  பிஎச் இ எல் கேட்டை திற்ப்பார்கள் நான் போகும் ஆட்டோவுக்கு தனிபெர்மிஷன் தென்னை மரத்தில் இருந்துதேங்காய்பறிக்க  வருபவர் என் வீட்டுக்கே வந்து  தாமதத்துக்குமன்னிப்புகேட்டார் மா மர்த்திலிருந்து மாங்காய்பறிக்க வருபவரும் குறையின்றி செய்துவிட்டுப்போவார்  எனக்கு முடி வெட்ட வீட்டுக்கே வந்து வெட்டி விடுவார் எனக்கு அங்கும் இங்கும் செல்ல முடியாது என்குறை தெரிந்து உதவுபவர் பலருண்டு எனக்குஇந்தகணினி மூலம்பணம் பரிவர்த்தனைசெய்வது சிரமமாய்இருக்கிறது  என் மகன் அந்தக் குறை தெரியாமல் செய்து  விடுகிறான்  இப்போதெல்லாம்  நானென் குறைகளை  பெரிது படுத்துவதை குறைத்துக் கொண்டுவிட்டேன்



      நல்லவன்   எனக்கு நானே நல்லவ 






34 comments:

  1. ஆஹா இந்த பாட்டு ஐயாவுக்காகவே எழுதியதுதானோ...

    பதிவையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நினைத்தீர்கள்

      Delete
  2. தன்னை உணர்தல் பெரும் பேறு ஐயா

    ReplyDelete
    Replies
    1. நானெழுதும்போதுஎன் எண்ணங்களுக்கு கடிவாளம் இடுவதில்லை தயவு செய்துஎன் தளத்தின் முகப்பு வரிகளைப் பாருங்கள்

      Delete
  3. சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்...
    இந்த அணுகுமுறை தான் நல்லது...

    ReplyDelete
    Replies
    1. என்பணிக்காலத்தில் பெரும்பாலான ஆண்டுகள் தரக் கட்டுப்பாட்டில்கழிந்துவிட்டது ஆகவே தான் குறைகள் முதலில் காணும் சிந்தனைகள் சரியாக இருக்கும்போது நல்லவையே நினைவுக்கு வரும்

      Delete
  4. என்றென்றும் இதே உற்சாகத்துடன் இருக்க வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
    Replies
    1. நான்பொதுவாகவே உற்சாகத்துடந்தான் இருக்கிறேன்

      Delete
  5. திடீரென ஒரு திருப்பத்தைக் கண்டது மாதிரி உங்கள் உற்சாகமான பதிவு மகிழ்ச்சியைத் தருகிறது.  தொடரட்டும் +  பெருகட்டும் மகிழ்வுகள்.

    ReplyDelete
  6. தங்களின் உற்சாகப் பதிவுகள் தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  7. குற்ற்ங் குறைகளை விட்டுவிட்டு நம்மைச் சுர்றியுள்ள நன்மைகளைக் காண்பதே மகிழ்வு தரும் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்வி பெரும்ப்குதி பணியில் குறைகளை காண்பதிலேயே போய் விட்டது

      Delete
  8. ஐயா ஒரு விதத்தில் நீங்கள் பேறு பெற்றவர். தங்களைக் காட்டிலும் 10 வயது குறைந்தவன் நான். என்றாலும் எனக்கும் என்னுடைய காரியங்களைக் கவனித்துக் கொள்ள மிகவும் கஷ்டப்படுகிறேன். 41 வருட புகைப்பழக்கம் (தற்போது 9 வருடங்களாக இல்லை) என்னுடைய நுரை ஈரலை வேக வைத்து விட்டது. குளிப்பது போன்ற சின்ன வேலைகள் கூட மூச்சு திணறலில் கொண்டு விடும். மனைவி உள்ளதால் சிறிது ஆசுவாசம். மாதம்  ஒருமுறை மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஒருமுறை வங்கிக்கு செல்ல வேண்டும். ஒருமுறை மளிகை சாமான் வாங்க சூப்பர் மார்க்கெட் செல்ல வேண்டும். தினமும் பால் வாங்கி வரவேண்டும் என்று பல கடமைகள். ஆனாலும் உங்களை போலவே கம்ப்யூட்டர், கோரா, blog, என்று மகிழ்வுடன் இருக்கிறேன்.  இந்த ஆசுவாசம், திருப்தி என்பது மனைவி உள்ள வரையே நீடிக்கும் என்பதும் எனது கருத்து. மனைவி இல்லாதபோது சமாளிப்பது என்பது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நானும் 40 ஆண்டுகளுக்கும் மேல் புகைப்பழக்கத்தில் இருந்தவன் எனக்கு stent பொறுத்தியமருத்துவர் என் ரத்தக் குழாயில் கால்சியம் டெபாசிட்களஅதிகம் இருந்தது என்றார்ன் ஒரே பிரச்சை என்னால் இப்ப்போதெல்லாம் சரியாக நடக்கழ்முடிவதில்லை யாருடைய உதவியாவதுதேவைப்படுகிற்து ஒரு பதிவும் எழுதி இருந்தேன்முதலில் நான் போய் பின் மனைவிபோகலாம் என்று

      Delete
  9. வயதாகிவிட்டாலே சில பிரச்சினைகள் கூட வந்துவிடும். ஆனால் தங்கள் மீது அன்பு செலுத்தும் பலர் தங்கள் அருகில் இருப்பது மன நிறைவைத் தருகிறது. தங்கள் உற்சாகம் என்றென்றைக்கும் நீடிக்க வாழ்த்துகிறேன்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .

    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது எல்லோரும் நல்லவரே பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி என்னைப்பற்றியும் என் தளம் பற்றியும் எழுதி அனுப்புகிறேன்

      Delete
  10. உற்சாகம் மேலும் பெருகட்டும்...

    உங்கள் அனுபவம் பலருக்கும் பாடமாகவும் இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகத்தை ஏற்படுத முயற்சிகள் தொடரும் ஆனால் குறைகாஇ சொல்லாமல் இருக்கமுடியுமா தெரியவில்லை

      Delete
  11. // ஒரு முறை பதிவில் என்வயதை போட்டுக் கொள்வது எனக்கு ஏதோ ஐயா ஸ்தானத்தை எனக்குக் கொடுக்கவா என்று ஒரு நண்பர் கூறி இருந்தார் //

    அந்த "ஸ்தான" நண்பர் ஆங்கில நண்பரோ...? சார் என்றால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போல...!

    ReplyDelete
    Replies
    1. அப்படி அல்ல வயதால்ப்ருமையும் மதிப்புதேடவேண்டாம் என்றுதான் நான் பொருள்கொண்டேன்

      Delete
  12. எனது பதிவுகளில் பலமுறை பயன்படுத்திய (காணொளி) பாடல்... இனிமையான அருமையான பாடல்...

    ReplyDelete
    Replies
    1. என்க்கும்பிடித்த பாட்டு

      Delete
  13. தனக்குத் தானே தான் எவ்வளவு யோசனைகள் பாருங்கள்..

    தாண்டி வரத் தெரியாமல் அல்லது பிடிக்காமல் அங்கங்கே குழம்பி நின்று விடுகிறோமோ?

    ReplyDelete
  14. உங்களூக்கும் அந்த அனுபவம் உண்டா

    ReplyDelete
  15. ‘எல்லோரும் நல்லவரே’ என்ற எண்ணம் ஏற்பட்டாலே மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். இந்த குறிப்பிட்ட எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை. தாங்கள் அதை உணர்ந்து மகிழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை இந்த பதிவு சொல்லாமல் சொல்கிறது.

    அருமையான பாடலை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கருத்தொருமிக்காவிட்டால் நல்லவர் அல்லவா

      Delete
  16. உங்கள் எழுத்து எங்களுக்கு உற்சாகத்தையும், எழுத்தின்மீதான ஆர்வத்தையும் மிகுவிக்கின்றன ஐயா.

    ReplyDelete
  17. உங்கள் பாசிட்டிவ் அப்ரோச் மிகவும் பிடித்திருக்கிறது. தொடரட்டும் இந்த உற்சாகம்.  

    ReplyDelete
  18. உடல்நலமில்லாவிட்டால் இந்த அப்ரோச் வருவது சிரமம்உடல் நலமாயிருந்தால் உற்சாகம் தொடரும்

    ReplyDelete
  19. உற்சாகம் பெருக்கும்.

    ReplyDelete