Wednesday, May 13, 2020

டிட்ஸ் பிட்ஸ்


                                                                டிட்ஸ்  பிட்ஸ்
                                                               ------------------------

  
ஊரடங்கு விதிகள்தளர்த்தப்பட்டு  இருக்கின்றன என் வீட்டுமுன்  இருக்கும்  சாலை முன்புபோல் இரைச்சலாகி விட்டது பேரூந்துகளுக்ம்  சிற்றூந்துகளும்  இல்லை  இருந்தாலும்பலரது வாழ்வாதாரங்கள்போய்விட்டன அரசு  ஏதோ உதவிகள
செய்து வருகிறது  அரசுடன் தன்னார்வலர்களும் ஏதோ தங்களால் ஆனதை செய்கிறார்கள்  ஒரு வித்தியாசம் தெரிந்தது உதவி நாடுவோர் எல்லாம்  பிச்சைக்காரர்களல்ல என்பதை  தெரிவிக்கும் விதம்  பொருட்களை வினியோகம்செய்யும்போது  கொடுத்து பெறுவதைவிட எடுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக்காட்ட உதவிப்பொருட்கள்வைக்கப்பட அவற்றை  எடுத்துக்கொள்ளும்படி வினியோகம்நடந்தது (சில இடங்களில் )என்பதும் குறிப்பிட  தக்கதே


   ஆண்டுதோறும் தன்இருப்பை மே மாதம்காட்டும் மலர் ஃபுட்பால் லில்லி  இந்த ஆண்டுமே துவங்கியும்   வராதது மனசை வருத்தியது கவலை வேண்டாம்  என்னும்படி  ஒருசெடி தலை தூக்கி பூத்திருக்கிறது





 உடல் நலம்சரியில்லை என்றால்  உடல்நலம் பேணவும் என்பது வழக்கமான பின்னூட்டம்ஆனால் எப்படி  என்று  சொல்வது இல்லைஒரு பிரபல பதிவர் நம்பழைய அணுகு முறைகளை பின்பற்றுவது இல்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார் ஆனல்பொதுவாக உடல் நலம் சரியில்லை  என்றால் உடனே மருத்துவரை நாடுகிறோம்  அண்மையில்  செய்தி ஒன்று படித்தேன்   இப்போதெல்லாம்  அவுட் பேஷந்ட் வார்டுகள் வெறிச்சோடிக் கிடக்கிறதாம் அதாவது மருத்துவரை நாடுத்ல்  குறைந்திருக்கிறதாம் அதாவது கை வைத்தியத்துக்கு  மாறி இருக்கலாம் அ அல்லது ம்  என்றதும்  மருத்துவரை நாடல் குறைந்திருக்கிறது மருத்துவரை நாடல் பெரும்பாலும்   பொறுப்பு  துறத்தல் ஆகும்
பொதுவாக உடல் நலம்பேணுவது நம் ஆகாரத்தில் இருக்கிறது நான் என் மக்களுக்குச்சொல்வது  உணவு உண்ணும் போது செய்ய வேண்டிய பயிறசி உணவு பரிமாறும்போது  தலையைஇடது வலமாக அசைப்பது ஆகும்  இரண்டாவதுவயிறு சார்ந்த உபாதை என்றால் லங்கணம்  பரம ஔஷதம்  என்பதே அண்மையில் நான் கடை பிடிப்பது ஆவி பிடிப்பது

ஆறு குறு மிளகு 12 பொட்டுக்கடலைசிறிதுசீரகம் உப்புடன்வாயிலிட்டு நன்கு மென்று சுவைத்து  அனுபவித்து ஒரு நாளில் மூன்று முறை  நிதானமா  சுவைத்து உண்பது நலம் பயக்கும் 
 



  பல உபாதைகள் இதிலிருந்து சரியாகும்  ஸ்பெஷல்லிஇந்த கொரோன காலத்தில் முக்கியமாக தெரிய வேண்டீயது எதற்கும் அஞ்சாமை  பயமே நோயை அதிகரிக்கும்முக்கியமாக வாட்ஸாப்பில்  ஃபர்வார்ட் செய்யப்படும்  செய்திகள்பலதும் நம்பக் கூடாதது
 காலடி சங்கர மடத்திலொரு பசு கன்று ஈன்றதை காணொலியாக தருகிறேன் கன்றுக்கு சங்கரி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் இது ஒரு அசிஸ்டட் டெலிவரிமுன்பு ஒரு யானை பிரசவிப்பதைக் காணொளியாக கொடுத்திருந்தேன் 







  இன்னுமொரு காணொளி செம க்யூட் குழந்தை  பாருங்களேன்                                                                                                                                                

                             
  

35 comments:

  1. இந்த ஊரடங்கை டாஸ்மாக் திறப்பின் மூலம் அர்த்தமற்றதாக்கி விட்டது அரசு.

    காணொளியில் குழந்தையின் செயல் ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அப்படி நான் நினைக்கலை கில்லர்ஜி. கர்நாடகாவிலும் வைன் ஷாப்புகள் திறந்தாகிவிட்டது. சில கடைகளில் நெருக்கமாக கியூவில் 150 பேர்கள் நிற்கிறார்கள். சில கடைகளில் 1/2 மீட்டர் இடைவெளியில் 150 பேருக்கும் மேல் நிற்கிறார்கள்.

      அரசுக்கு இது வருமானம். ஆனால் நம் நலனைக் காப்பாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நமக்கு எப்போவும் ஒரு போலீஸ் கண்காணித்தால்தான் ஒழுங்காக இருக்க முடியும் என்ற நிலை, நம்முடைய பிரச்சனைதானே தவிர, அரசுக்கு இதில் என்ன ரோல் இருக்கிறது?

      தமிழர்களுக்கு கியூவில் நிற்பது, முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை - இதெற்கெல்லாம் அர்த்தம் தெரியாததுதான் பிரச்சனை.

      Delete
    2. டாஸ்மாக்தானே வருவாயின் மூல இட ம்

      Delete
    3. கில்லர்ஜி காணொளியை ரசித்தது தெரிகிறது நன்றி

      Delete
  2. அனுபவ மருந்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ...நானும் தொடர எண்ணியுள்ளேன்...காணொளி இரண்டும் அருமை...வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள்ப்சதிவில் தெரிந்த ஆதங்கமே இப்பதிவுக்கு காரண்ம்

      Delete
  3. உடல் நலம் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது. முன்பெல்லாம் (சிறு வயதில்) பெரிய பிரச்சனை என்றால்தான் டாக்டரைப் பார்க்கவே போவோம். இப்போதெல்லாம் ஜலதோஷம் என்றாலே டக்குனு பக்கத்துல டாக்டரைப் பார்த்து அவருக்கு 200 ரூ கொடுத்து, அவர் எழுதித்தரும் மருந்துகளை பார்மசியில் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த உடனேயே ஜலதோஷம் குறைவதாக பிரமை தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. யாதோரமணி சாரின் பதிவில் பல கை வைத்தியங்கள் சொல்லி இருகிறார்

      Delete
  4. உடல் நலம்சரியில்லை என்றால் உடல்நலம் பேணவும் என்பது வழக்கமான பின்னூட்டம் எப்படி என்று சொல்வதில்லை என்று ஆதங்கப்பட வேண்டாம் , இப்ப வாட்ஸப் டாக்டர்கள் பெருகி கண்டதையும் சொல்லி குழப்பிவிடுவார்கள் அதனால் பயன் இல்லை நாம் சொந்த அறிவை பயன்படுத்தினாலே போதும்...

    ReplyDelete
    Replies
    1. பதில்களில் வரும் ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் அதற்குஅவர்களெதுவும் எழுதாமலே இருக்கலாம்நம் மீது அக்கறை காட்டுகிறார்களாம்

      Delete
    2. //பதில்களில் வரும் ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் அதற்குஅவர்களெதுவும் எழுதாமலே இருக்கலாம்நம் மீது அக்கறை காட்டுகிறார்களாம்//

      இந்த பதிலை நான் ரசிக்கவில்லை ஜி.எம்.பி சார். உடம்பு சரியில்லை என்று ஒருவரிடம் சொன்னால், டாக்டர்ட போங்க, உடம்பைப் பார்த்துக்கோங்க என்று சொல்வது நம் நாகரிகம். யாரையானும் பார்த்தால் 'செளக்கியமா' என்று கேட்பது, 'பார்த்து பத்திரமா போங்க' என்று சொல்வது இதிலெல்லாம் குறை காண்பித்தால் என்ன செய்வது?

      அடுத்து 'குட்மார்னிங்'னு சொன்ன, 'எனக்கெதுக்கு குட்மார்னிங் சொல்ற..நீ சொல்லாட்டா அது BAD MORNING ஆகிடுமா என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான், எப்படித்தான் பேச்சைத் தொடருவது?

      Delete
  5. உடல்நலம் சரியில்லை எனில் உங்கள் உடலுக்கு நான் வைத்தியம் சொல்வது சரியாகுமா? மருத்துவரிடம் கவனித்து உடல் நலம் பேணவும் என்னும் கருத்தில் தான் அனைவரும் சொல்வார்கள். நீங்கள் கொடுத்திருக்கும் காணொளிகள் இரண்டுமே பார்த்திருக்கேன். நன்றி.

    ReplyDelete
  6. எதோ சொல்ல வேண்டுமே என்று சொல்வதுபோல் இருக்கும்

    ReplyDelete
  7. சென்னையில் பெரிய மருத்துவமனைகளே நோயாளிகள் வருவதை மறுக்கிறது. தவிர்க்க முடியாத பெரிய கேஸ்களே அட்டெண்ட் செய்யக் படுகின்றன. ஒரு மருத்துவமனை பிரசவ கேஸையே மருத்துவர் வரவில்லை என்று மறுத்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. அதனால் வியாதிகள் பெருகிவிட்டதா பிரசவம்தான் நடக்க வில்லையா நாம்மருத்துவர்களுக்கு அதிககமுக்கியத்துவ தருகிறோமோ

      Delete
  8. நான் அதிகாலை மூன்று மிளகு, அதே அளவிலான மூன்று கல் உப்பை வாயில் அடக்கி உப்பு கரைந்ததும் மிளகை நன்று மென்று சாப்பிட்டு விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதுஏதும் விளைவிக்காவிட்டாலும் கெடுதல் ஏதும் இல்லை தொடருங்கள்

      Delete
  9. காணொளிகளைப் பார்த்தேன். குழந்தை வீடியோ கவர்கிறது.

    ReplyDelete
  10. ரசிப்புக்கு நன்றி

    ReplyDelete
  11. காணொளிகள் அருமை.
    உடல்நலம் பேணுதல் அவரவர் கடமை. தானாய் வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவரவர் உடல்நலம் அவர்கள்தான் பேணவேண்டும் சரிதான் கருத்துக்கு நன்றி

      Delete
  12. குழந்தை வீடியோ எனக்கும் வந்திருந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்தேன்.

    முதல் காணொளியும் கண்டேன்.

    டிட் பிட்ஸ் - நன்றி.

    ReplyDelete
    Replies
    1. யான் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவே பகிர்ந்தேன்

      Delete
  13. குழந்தை காணொளி மிகவும் கவர்ந்தது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்கு பழக்கப்படுத்திய குழந்தை போல் இருப்பதாகத் தோன்றியது இருந்தாலும் க்யூட்

      Delete
  14. உணவே மருந்து . ஊரடங்குடன் சேர்ந்து நாவடங்கு உத்தரவும் இருந்தால் நல்லது போல.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான வார்த்தைகள் முரளி. படாதபாடுபட்டு விட்டேன்.

      Delete
  15. நேரம் அதிகமிருப்பதால் வித விதமாக உண்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனைவி அருகே இருந்தால் போதும். உண்ண நிறைய வாய்ப்புள்ளது.

      Delete
    2. உடல் ஒதுழைக்கவிட்டாலும் செய்ய முடியாததைச் செய்து பொடுவார்கள்

      Delete
  16. காணொளிகள் அருமை...... உலகத்தில் எவரும் நலமோடு இருக்க பிரார்த்தனையைத் தவிர வேறோன்றுமில்லை. உங்கள் குறுமிளகு tips மிக்க நன்றி...

    ReplyDelete
  17. பிரார்த்தனைகள் பலரும் செய்கிறார்கள் கொரோனா தொற்றியை அழிக்க இன்னுமொரு அவதாரம்தேவை

    ReplyDelete
  18. நோயை வருவிப்பதும் உணவுதான் ... வந்த நோயை தீர்த்து வைப்பதும் உணவுதான் ... உணவையே மருந்தாக எடுத்து கொள்வதே சிறப்பு .... என் அனுபவத்தில் எல்லா உடல் பிரச்சனைக்கும் "மிளகு கஷாயம்" நலம் பயக்கும் என்று தோன்றுகிறது அய்யா ...

    ReplyDelete
    Replies
    1. உணவே மருந்து என்பதை பலரும் சொல்கிறார்கள் ஆனால் உடல் நலமில்லாமல் போகும் போது மருத்துவரை நாடுகிறார்கள்

      Delete