திங்கள், 29 ஜூன், 2020

என்னென்ன்வோ எண்ண்ங்கள்



                                   என்னென்னவோ  எண்ணங்கள்
                                    ==============================


ராண்டம் தாட்ஸ்
 எதையாவது எழுது என்கிறது மனம்  ஆனால் எதை எழுதினாலும் பெரும்பாலும்என் எழுத்துகள்   சரியாகப் புரிந்துகொள்ள்ப் படுவதில்லை மேலும் எழுதுவதே எண்ணங்களைப் பகிரத்தானே நான் எழுதுவதெல்லாம் என் உள்ளக்கிடக்கைகளை  கொட்டிதீர்க்கதானே ஆனால் எல்லோரையும் திருப்தி படுத்தும் வகையில் எனக்குஏனோ எழுத தெரிய வில்லை  சிலருக்கு மதம் பற்றி நம் கருத்துகளை எழுதினால் பிடிக்காது  சிலருக்கு அரசிய்ல் பற்றி எழுதினால் பிடிக்காது சிலர் எழுதுவது நேர் மறையாக  இருக்கவேண்டும் என்கின்றனர்  எத்ர்மறை கருத்துகள் பிறர் மனதைப்புண் படுத்துமாம் அதனால்தானோ என்னவோ என்னைப்பற்றியே  எழுதி வந்தேன்  நான் என்ன பெரிய புள்ளியா  என்னைப் பற்றி எழுதினாலும் போரடிக்கிறதாம் ஆனால் என்பாட்டிச்சொல்வது போல்  எதற்கும்  முக பாக்கியம்  வேண்டும் சரி போகட்டும் கரெண்ட்  டாபிக் கொரோனா பற்றி எழுதலாம்  கொரோனாவால் கோவில்கள் எல்லாம் மூடினார்கள்  அல்லவா அதையே பக்த கோடிகள் கோவில் திறக்கா விட்டாலென்ன அவன் எல்லோர் உள்ளங்களிலும்  குடி கொண்டு விட்டானே  என்கிறார்கள் கொரோனாவால்  அவனை நினைப்பது  அதிகமாகி விட்டது
எனக்கானால்  அவனது அடுத்த அவதாரம்வர கொரோனா ஒரு அறி குறி யோ என்னும் நினைப்பே வருகிறது
உடல் நலக் குறைவு வருவதென்பது தவிர்க்க முடியாது கொரோனாவின் ஆதிக்கம அதிகரிக்கிறது இருக்கட்டும்  அதற்கு  மருத்துவம்  பார்ப்பவரையும்  அதை தடுக்க நினைப்போரையும்   காணும் போது  யானையை அடையாளம்  காட்ட முய்லும  குருடர்கதையே நினைவுக்கு வருகிறது  கை கழுவுவதும்   சானிடைசர் தெளிப்பதும் கை கொடுக்குமா  அதற்கு மருத்துவம் பார்ப்பவரையெ பதம் பார்க்கிறதே அதற்கு ஆகும் மருத்துவச் செலவேபயமுறுத்துகிறது பணம்   இல்ர்லாவிட்டால் என்ன செய்வ்து  சந்தடி சாக்கில் பணம்பார்க்க நினைக்கும்  ஆயுர்வேதமருத்துவர்கள் எந்த பரிசோதனையும்   இல்லாமல் அதற்கான தீர்வானமருந்து என்று சொல்பவரை என்ன செய்ய ஐயாயிரம் வருஷ பாரம்பரியம் மிக்க மருந்து என்று சொன்னாலும்  நம்பும் நம்மவர்களை என்னசொல்ல
எதையாவது சொன்னால் நம்பிக்கையே முக்கியம்  என்று சொல்வோரும்  உண்டுஅல்லவா ஒருவருக்கு கொரோனா வந்தால் ஆகும் செலவே பயமுறுத்துகிற்து  ஒரு நாள் படுத்தால் கட்டிலுக்குமட்டும்  ரூபாய்  ஐந்து முதல் பத்தாயிரம் செலவாகுமே  அத்தனை செலவு  செய்ய எல்லோருக்கும் முடியுமா  அதற்கு பயந்தே சிலதற்கொலைகளும் நிகழ்கிறதோ?என்னைப்போல் இருப்பவர்  அத்தனை செலவு செய்யமுடியுமா செய்வதால் என்னபயன்  உயிர் அத்தனை விலை உள்ள்தா  கைதட்டியோ தீபமேற்றியோ  போக்கமுடியாதா  ஓஒ அதையும் செய்து பார்த்தானவர்கள்தானே நாம்  இம்மாதிரி நினைப்பதே தவறு என்று சொல்பவரும் உண்டல்லவா
 கொரோனாவையே நகைச்சுவை யாக்கி  வருவோரைக் காணும்போது  பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது  
இப்படியே எழுதிக்கொண்டு போகலாம்நோய்க்கு தீர்வு என்ன இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை  ஜுரம் வ்ருவதில்லையா  வேறு நோய்கள் தானில்லையாஎல்லாவற்றையும்  தடுக்க முடிந்திருக்கிறதா வந்தபின் ஏதோ மருந்து சாப்பிட்டு குண மாவதில்லையா  அம்மைக்கு தடுப்பூசிபோல இதற்கும் ஏதாவது கண்டு பிடிக்கும்வரை பயந்துசாவோரே அதிகமாய் இருப்பார்கள்

பாலன்  எத்தனை பாலனடி


பத்து வயதில் 
பதினாறு வயதில் 


இருபத்தைந்து  வயதில் 

  
73 வயதில் 

GMB LATEST 




        





வெள்ளி, 26 ஜூன், 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் நாடகம் முடிக்கப்போட்டி

                             கடைசில சில பக்கங்கள் மிஸ்ஸீங்                           
                             ---------------------------------------------------------
நாடகத்தை  தொடர்ந்து படியுங்கள் நாடகம்போகும்  போக்கு புரியலாம் எழுதி முடித்து போட்டியில் பங்கு பெறுங்கள்  நன்றி 

காட்சி –2
இடம் ---அருணா மாளிகை
இருப்போர்—அருணா தாத்தாசபாபதி  கனக சபை நவ கோடி
தாத்தா தாத்தா இங்கே வாங்க இதைக்கொஞ்சம்  கேளுங்க
”தலைவி அவர்களே ----தோழியர்களே
தாத்தா---இது என்ன நாடகம் அருணா ?
அருணா --- நாடகமில்லை  பேசாமகேளுங்களேன் தலைவி அவர்களே தோழியர்களே கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்கும்போது
மண் என்றாலும் மனைவி புழுதி என்றாலும் பெண்டாட்டி என்று பழமொழி இருக்கிறதா  மண்ணைவிட கேவலமாகபெண்களை  மதிக்கும் ஆண்களை நாம்பகிஷ்காரம் செய்ய வேண்டும்மாங்கல்யமே பெண் அடிமையின் சின்னம்நாயைக்கட்ட  சங்கிலி  கிளியை அடைக்ககூண்டு பெண்களை அடிமை  செய்ய  மாங்கல்யம்  கல்யாணம்  என்ன நீதி இது பெண்களாகிய நாம்கல்யாணம் வேண்டாதார் சங்கம் அமைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துய்  ஆண்வர்க்கத்தை  எதிர்த்து போராட வேண்டும்கலயாணம் செய்து கொள்ள வில்லைஎன்று சபதம் செய்ய வேண்டும் இதற்கு முன்னோடியாகநான் திருமணம்செய்து கொள்ளப்போவதில்லை  என்று உங்களிடையே ஆணையிட்டுக் கூறுகிறேன் (தாத்தாவிடம்)என்ன தாத்தா எப்படி பேச்சு  இன்னிக்கி சங்கத்திலே ஒரே ஆரவாரம்தான் என்னைத்தொடர்ந்து எல்லாப்பெண்களும் இதே மாதிரி சபத்ம்செஞ்சிருக்காங்க எங்க சங்கத்தை பலப்படுத்த வீடு வீடாப்போய் நன்கொடை வசூல் செய்யப்போறோம்
 தாத்தா === நீ என்னவேணும்னாலும் சொல்லு அருணா ஆனா ஒன்னு மயில் கழுத்தை விட அழகான கழுத்து ஒருபெண்ணுக்கு இருந்தாலும் அதிலமஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தான்மா மகிமை
 அருணா---போ  தாத்தா ---நீ ஒரு கர்நாடகம்
தாத்தா--- இருகட்டும் அருணா  இதுக்குப்போய் நீ வீடு வீடா கையேந்தவேண்டாம் உனக்கும் வயசு பதினெட்டாச்சு உங்கப்பா சொத்தெல்லாம்  உனக்குவரப்போகுது
அருணா --- ஆமா எனக்கு வயசு பதினெட்டாச்சு  நான்மேஜராயிட்டேன் ட்ரஸ்டிகளை கூப்பிட்டுசொத்தெல்லாம் வாங்கிக்கணும்
தாத்தா--- கூட நீ காலா காலத்துல ஒரு கல்யாணம் செய்துகுடியும் குடித்தனமுமா  ஊர் மெச்ச வாழணும் இதுதாம்மா என் ஆசை
(கனகசபை சபாபதி வருகின்ற்னர்)
கனக –உங்க ஆசைகட்டாயம் நிறைவேறும்  நானு அதுவிஷயமாத்தானே வந்தேன் (நவகோடி வருகை)
நவகோடி – எந்த விஷயமானாலும் நானுமிருந்தாத்தானே பூர்த்தி அடையும் 
கனக---- (சபாப்தியிடம் )பார்த்தியா  மனுஷனுக்கு மூக்குலவேர்க்குது  மோப்பம் பிடிச்சு வந்துட்டான்
 அருணா—நீங்கஎதுக்கு  வந்தாலும்  சரி நானே உங்களைப்பார்க்கணும்னு இருந்தேன்  வந்துட்டீங்க
உயிலப் பற்றி எல்லா சமாச்சாரமும் எனக்கு தெரிஞ்ச்சுக்கணும்
சபா---உயில் ……உங்கப்பா சாகும்போது எழுதினது அது கைக்கு வரதுக்கு முன்னாடி  எங்கப்பா பாரதம் படிப்பார் நவகோடிபகவத்கீதா படிப்பாரு  உயில் கைக்கு  வந்தபிற்பாடு இரண்டுபேரும் உயில் பாராயணம்பண்றாங்க
நவகோடி ---இல்லன்னா இவ்வள்வு நாள்சீறும் சிறப்புமா நிர்வகிக்க முடியுமா
கனக—முடியாதுபோகட்டுமந்தபொறுப்பு  கஷ்டமெல்லாமுனக்கு மெதுவா டெரியட்டுமே
அருணா – எனக்கு வயசு பதினெட்டு முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு மாமாஉங்களத்தான்மாமா
கனக--- ஆங் என்னையா மாமான்னும்கூப்பிட்டேஏய் சபாபதி அருணா என்னை மாமான்னு  கூப்பிடுதடா
சபா ---- கவனிச்சேன்
நவ --- வயசிலபெர்யவங்கள் மாமன்னு கூப்பிடறது சகஜந்தானே
 கனக – அப்படீன்னாஉன்னை ஏன்யா கூப்பிடல
 நவ --- உங்கவீட்டு மருமகள அ வரப்போறோமென்னு உஅ மாமான்னு கூப்பிடுது 
சபா --- அ மைதி அமைதி  பிள்ளையும் பெண்ணும் நாங்கைருக்கும்போதுஎங்கள் கல்யாணத்ட்க்ஹைப்பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்ன அருணா எபடிப்போட்டேன் பாரு ஒருபோடு
 அருணா --- கல்யாஅம்கல்யாணம்கல்யாணம்  சேச்சே ஒரு பொண்ணாலகல்யாணம் செய்யாம வாழமுடியாதா ஆண்களோடசரி நிகர் சமானமாக வாழ முடியதா என் சொத்டை எனக்கே நிர்வகிக்க முடியாதா நல்லது கெட்டது எல்லாம் எனக்கும் தெரியும்
நவ --- அருணா நீச்சல் தெரிஞ்சவங்களையேகூட வெள்ளம் அடிச்சூட்டுப்போயிடும்உதாரணமா என்னையே டௌன்  பண்ணி கட் பண்ணப்பாக்குறாங்க
அருணா ----என்சொத்டை மட்டும் யாருமடிச்சூடுப் போக முடியாதுன்னு நான்சொல்றேன்
சபா----- –உனக்குகல்யாணம்செய்துவெக்கிற கடமை அவருதுன்னு அப்பாநெனைக்கிறார்
கனக --- சொத்தை  மாப்பிளைட்டதான் ஒப்படைக்கணூம்னு நான்நெனக்கிறேன்
அருணா – க்சல்யாணமே செய்துக்க போறதில்லன்னுசபதம்செஞ்சிருக்கேன்னு நான் சொல்றேன் 

 நவ--- அப்போ நாங்க நெனச்சாலும்  உன் சொத்த உங்கிட்டஒப்படைக்க முடியாது
அருணா---- என்
சபா---  உனக்கு கல்யாணத்துக்கப்புற்ம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில்லஎழுதி இருக்காரு ---- சொல்லுங்கப்பா ……
உங்கப்பா என்ன சாமான்யமா திரிகாலமுண்ர்ந்த  ஞானி தலையில மட்டுல்ல உடம்பெல்லாம் மூளை இல்லன்னா இப்படி ஒரு உயில் எழுத முடியுமா
அருணா--- அப்பா……
நவ--- இருந்தாலும் என்னம்மா ஒரு நல்ல பையனாப் பார்த்து  கல்யாணம்பண்ணிக்க எல்லாரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறதே(போகிறார் )
கனக---நாங்களும்வரோம் அருணா  யோசிக்காதே எல்லாம் நல்லதுக்குத்தான்(கனகசபை சபாபதி போகிறார்கள்)
 அருணா  ---தாத்தா …. அப்பா என்னை ஏமாத்திட்டார்தாத்தா  எனக்காக இவ்வளவு சொத்தை சேர்த்தும்அதை எங்கிட்டஎப்படிஒப்படைக்கணும்னு  அப்பாவுக்கு தெரியாமபோச்சே தாத்தா ( அழுகிறாள் ) அப்பாநீங்க உங்க மகளூக்கு மன்னிக்க முடியாததுரோகம்  செய்துட்டீங்க  என் எதிர்லமட்டும்  நீங்க இருந்தீங்கன்னா
தாத்தா--- என்ன அருணா இது உங்கப்பா மேலயே வஞ்சம் தீர்க்கற்மாதிரி  பேசலாமா
அருணா—அப்பா என் லட்சியதையே  நொறுக்கிட்டாரே இந்த சொத்துக்காக என்விருப்பத்துக்கு  மாறாஒருத்தனுக்கு  அடிமையா  இருக்கணுமா
தாத்தா--- ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டாஅடிமை வாழ்வுனு ஏம்மா தப்பா எண்ற
2அருணா ---- தாத்தாஉங்களுக்குத் தெரியாது வெளியே அடிபட்டு மிதிபட்டு வாழும் கோழைகள்பெண்டாட்டியை அடிச்சு உதசிப்பதை நான் பார்த்திருக்கேன்மாப்பிள்ளைன்னா  ஒரு சிறு துரும்பையும்கிள்ளிப்ப்;போட்டாஅது குட துள்ளிக் குடிக்கும்னு சும்மாவா  சொல்றாங்க
தத்தா---உன் இஷ்டம அருணாசின்ன வயசிலேயே உன் குடும்பத்துலஒட்டிக்கிட்டைந்தகிழவனுக்கு  உன்னை விட்டா வேற கதியில்லநீ எங்கிருந்தாலும்   சொத்து இருந்தாலும்  இல்லாவிட்டாலுமிந்தவேலைக்கார கிழவனை மட்டும் விட்டுடாதேம்மா
அருணா – இல்லை தாத்தா இல்லை தனியா விட்டுட மாட்டேன்  இந்த ஆஸ்தியைக்கொண்ஊ ஏஆலவோ நல்லகாரியங்கள்செய்யலாம் இல்லேன்னா இந்த சொத்தை பங்காளிக்கழுகுகள்கொத்திண்டுபோயிடும்
தாத்தா- அப்படீன்னா நீ யாருக்காவது வாழ்க்கைப்பட்டுதானாகணும்மா
அருணா –வேற வழியே இல்லயா தாத்தா
தாத்தா --- எனக்கு ஒண்ணும் புரியலியே
அருணா ---ஹூம் (போகிறாள்) தாத்தாவும் உள்ளே போகிறார்
                                    திரை
 காட்சி 3


இடம் –சாலை
பாத்திரங்கள்--- மாணிக்கம்  சந்துரு அருணா
குமரேசனை தூக்கிலிடஇன்னும்  ஏழே தினங்கள் இருப்பதாக மாணிககமும்  சந்துருவும்  பாடிக்கொண்டே பிரசுரம்  விற்கிறார்கள் அவ்வழியே வரும் அருணா

அவ்வழியே வரும் அருணா ஏதோ யோசித்தபடியே  அங்கு நிற்கிறாள்
                               ----------------------------

    



   





      

திங்கள், 22 ஜூன், 2020

பூவிலே சிறந்தபூ



                                    பூவிலே சிறந்தபூ                     
                                     ---------------------------
என் வீட்டிலொன்றிரண்டு செடிகள் உள்ளனா ஃபுட்பால் லில்லி எனப்படும்வகை ஆண்டு தோறும்  மே மாதத்தில் தான் பூக்கும்  இருக்கு நான்கு செடிகளும்மேமதம்தா ந் தலைசிகாட்டும் இந்த ஆண்டு ஒரே செடி மட்டும்பூத்தது மற்ற செடிகள் தலை காட்டினாலும்பூக்கவில்லை என்னதான் காரணமோ    இன்னும் ஓரிரு செடிகளுண்டு அதில் நிஷாகந்தி அல்லது பிரம்மகமலமென்பதும் ஒன் று முன்பே எழுதி இருக்கிறேன் அனால் அண்மையில் எனக்கு ஒரு வாட்ஸாப்  காணொளி வந்தது மைசூரில் ஒரு வீட்டில் இவ்வகைப் பூக்கள்  பூத்துக் குலுங்கி இருக்கிறதுஅதை உங்களுடன் பகிர்கிறேன்  இரவில் மலருமதை படமெடுக்க எத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்


தந்தையர் தினத்துக்கு என்மகன் அனுப்பியது
 Don’t know why Dad is always lagging behind.*

1. Mom carries for 9 months, Dad carries for 25 years, both are equal, still don’t know why Dad is lagging behind.

2. Mother works without pay for the family, Dad spends all his pay for the family, both their efforts are equal, still don’t know why Dad is lagging behind.

3. Mom cooks whatever you want, Dad buys whatever you want, both their love is equal, but Mom’s love is shown as superior. Don’t know why Dad is lagging behind.

4. When you talk over the phone, you want to talk to Mom first, if you get hurt, you cry ‘Mom’. You will only remember dad when you need him, but did Dad never feels bad that you don’t remember him the other times? When it comes to receiving love from children, for generations, don’t know why Dad is lagging behind.

5. Cupboards will be filled with colorful sarees and many clothes for kids but Dad’s clothes are very few, he doesn’t care about his own needs, still don’t know why Dad is lagging behind.

6. Mom has many gold ornaments, but Dad has only one ring that was given during his wedding. Still Mom may complain of less jewellery and Dad doesn't. Still don't know why is Dad lagging behind.

7. Dad works very hard all his life to take care of the family, but when it comes to getting recognition, don't know why he is always lagging behind.

8. Mom says, we need to pay college tuition this month, please don’t buy a saree for me for the festival whereas dad has not even thought of new clothes.Both their love is equal, still don’t know why Dad is lagging behind.

9. When parents become old, children say, Mom is at least useful in taking care of household chores, but they say, Dad is useless.

Dad is *behind (or ‘at the back’ )* because he is the backbone of the family. Because of him, we are able to stand erect. Probably, this is the reason why he is lagging *behind*....!!!




ஞாயிறு, 21 ஜூன், 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்

    கடைசியில்  சில பக்கங்கள்  மிஸ்ஸிங்
    --------------------------------------------------------------

  
கடந்த பதிவு ஒன்றில் இரண்டு மணிநேரத்தில் ஏழு ஆண்டுகள் என்று எழுதி இருந்தேன் பொதுவாக என் நினைவாற்றலை நானேமெச்சிக் கொள்வது உண்டு  ஆனால் எனக்கு சவாலாக இருந்தது ஒன்று  சவாலையும் சமாளிக்க வேண்டாமா

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே  தூற்றிக் கொள்ளலாம் 

   
                     முப்பது நாட்கள்
 காட்சி---1
இடம் -----கனகசபை வீடு
பாத்திரங்கள் ---கனகசபை சபாபதி  வேதவதி
(திரை உயரும்போது  கனகசபை ரூபாய் நாணயங்களை தட்டிப்பார்ப்பதும்   எண்ணிப் பார்ப்பதுமாக இருக்கிறார்  உள்ளே ரேடியோ பணமே உன்னால் என்ன குணமெ என்று பாட எரிச்சலுடன்  )
கனக----- வேதம்  வேதம்  ஏ வேதா  
வேதம்-------(கரண்டியுடன் வந்து கொண்டே ) வேதா வேதா வேதா  வேதத்துக்கு இப்ப என்னவாம்
கனக----சரி சரி  ரேடியோவைக் கொஞ்சம்மூடு
வேதம் ====ரேடியோ பாடத்தான்  இருக்கு மூட அல்ல
கனக----அட ஆண்டவனே  ஒரு ரேடியோவ மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவை திறந்திட்டேனே
வேதம் – என்னையா ரேடியோ ங்கறீங்க
கனக---சேச்சே ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம் உன் திருவாயைமூட…….
வேதம் ---- என்ன ……..(வந்துமிரட்ட கனகசபை தன்வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப்பார்த்து)பணம்பணம்    ரூபா நோட்டு (அவர் கையைப்பிடித்து)இதை  வாயில போட்டுக்க பார்த்தீங்களே காயிதம்னா நெனச்சீங்க
கனக ---இவ யார்ரா இவ …..கழுத கூட ரூபாய் நோட்டை காயிதம்னு தின்னாதுஎடுத்து
 மடில வெச்சுக்கும் (ரேடியோ இன்னும் பலமாக பணமெ உன்னால் என்ன குணமே என்றுபாட )அடச்சே பாட்டைப்பாரு பாட்டை  பாட்டப்பாட அtதுக்கொரு  ரேட்டைகரெக்டா வாங்கிடுவான் பாட்ற பாட்டு மட்டும்பணமே உன்னால் என்னகுணமே ஹும் வேஷக்கார உலகம்
வேதா ---கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை சங்கீதத்த ரசிக்க தெரியலன்னு  சொல்லிட்டு போங்களேன்
 கனக ----எனக்கா தெரியாதுருபாயோட ரூபாய் மோதறப்போ ஹா…. இதை விட என்ன சங்கீதம் வேற என்ன இருக்கு சங்கீத ஸ்வரமேழும்இந்த  ஸ்வரம்பேசலேன்னா சைலெண்ட் ஆம்மா..............ஆதார சுருதியாச்சே இது வேதம் நெசமா சொல்றேன் அந்தக்காலத்தில ஒன்ன தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்ல
வேதா ----போதும்போங்க
கனக----ஆஹா ஆஹா நீ இப்படிநாணிக் கோணி நிக்கறது நம்ம சாந்தி முஹூர்த்தத்தில் நீ முகம்செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது
 வேதம் ----ஐய போதும்போங்க
கனக ---வேதம் வேதம் (கிழட்டுதாபத்தில் நெருங்க (ரேடியோ ) மன்மத லீலையை வென்றார் உண்டோ ) அடச்சீ மூடுடா ரேடியொவை . ரேடியோ நிற்கிறது 

 சபாபதி----(வந்து கொண்டே)இந்த வீட்ல மகனாப் பொறந்ததவிட ஒரு கூத்தாடிக்கு பிள்ளையாய் பிறந்திருக்கலாம் நல்ல அப்பா  ஒரு பாட்டு பிடிக்காது  கூத்து பிடிக்காது உங்களுக்கு  என்னதான்   பிடிக்கும்
வேதா---ஏன் அவருக்கு பைத்தியம் பிடிக்குமே
கனக---- இனிமேதானா பிடிக்கணும்  செத்துப்போன ஆடியபாதம்அருணாவுக்கு உயில் எழுதி என்னையும்நவகோடியையும் டிரஸ்டியா வெச்சானோ  அன்னக்கே பிடிச்சாச்சு பைத்தியம்
வேதம்---- ஏன் உங்களையும்  நவகோடியையும் டிரஸ்டியா வெச்சாரு
 சபாபதி ---- ஹூம்  கிழவனுக்கு உலகம் தெரியும்நவகோடி இல்லேன்னா அருணாவுக்கு உயில் மட்டும்தான்மிஞ்சும்  உயில்ல உள்ளதெல்லாம்உன் ஒடம்புலநகையாய் கொஞ்சும்
கனக ---- ஏன் இப்பமட்டும் என்ன கெட்டுது  எப்படியும் அவளை கட்டிக்கிற்வனுக்குத்தான்  சொத்துஉயில்ல எழுதி இருக்கு   நீமட்டும் மனசு வெச்சு  அருணாவ  உன்ன கட்டிக்க சம்மதிக்க வெச்சீன்னா
சபாபதி—நானென்னப்பா செய்யறது அருணாவுக்கு  ஆம்பிளைன்னாலே  எட்டிக்காய் கசப்பு அந்தக் காலத்துல அல்லின்னா இந்தக் காலத்துல அருணா
வேதா—அந்த ட அல்லிகதைமட்டும் என்னாச்சு தம்பி அல்லி பெத்த புள்ளைக்கு பேர் புலந்திரனாம்
கனக --- இந்த அல்லி அருணா ஒருபுள்ளையைப்பெற
நம்மபையன் ஒரு அர்ச்சுனனா இல்லையே
சபா ---- எப்படி அப்பா இருக்க முடியும்  அர்ச்சுனன் ஆணழகன் நானு --- கண்ணில்லாதபெண்ணு கூட என்னை அழக்ன்னு  ஒத்துக்க மாட்டாளே  அர்ச்சுனன் பெரிய வீரன்  எனக்கு  உயிருன்னா  வெல்லம் அருணாசொத்து கெடைக்கட்டும்கெடைக்காமபோகட்டும் உங்களுக்குப் பிற்கு உங்க சொத்து எனக்கு கிடைக்கணும்னா நான் உசிரோட இருந்தாகணும்
கனக---அது என்நல்லகாலம் என் உசிரை வாங்கினதுக்கு அப்புறம் தானே முடியு ம்னு சொல்லாமவுட்டியே ஊம்   அங்க நவகோடிஎன்னடான்னா  மொத்து மொத்துனு  மொத்தறான் அவன்பொண்டாட்டிய அருணாவைக்கட்டிக்க ஒரு ஆம்பிளையை பெறாம ஒருபொண்ண பெத்ததுக்கு பகவான் புண்ணியத்துல ஒரு பிள்ளைய பெத்து ருந்துமஅதன் லட்சணத்தபாரு
வேதா--- உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒண்ணும் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா
கனக --- அட்ஜஸ்ட்பண்ணலாம்  அட்ஜஸ்ட்எங்களுக்குள்ள  பாகத்தகராரூ ஒரு ஒப்பந்ததுக்கு  வர முடியலே
சபா --- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு  வாங்க நானெப்படியாவது  அருணாவ கட்டிக்கிறேனா இல்லையா பாருக்க
கனக --- பணத்தைத்தவிர எது  வேணுனா  கேளு
சபா---- அதத்தவிர உங்க க்ட்டவேற என்னை இருக்கு பண்ம்தர மனசில்லேன்னா  சாவியத்தாங்க
கனக--- ஐயையோ வேண்டாண்டா பணமே தரேன்
சபா--- அதுதானே  பார்த்தேன் ஆவியை விட்டாலும்  சாவியை விடமாட்டாறே அப்பா தாங்யூ டாடி மம்மி அரூணா உங்க மருமகள்னே  வெச்சுக்கோங்க (போகிறான் )
கனக---- வேதம் .. அந்தப்பொண்ணு இந்தவீட்டு மருமகள் ஆகத்தான் போகுது  நீ பாட்டுக்கு எங்க்சம்மாவுக்கு மருமகளா இருந்ததெ நெனச்சுட்டு அந்தப்பொண்ணுக்கு மாமியார் ஆக இருந்திடப்போற
வேதம் ==== ஊங்க்கும்(போகிறாள் )
                         திரை  
   





   






புதன், 17 ஜூன், 2020

இரண்டு மணி நேரத்தில்ஏழு ஆண்டுகள்




                            இரண்டு மணி நேரத்தில் ஏழு ஆண்டுகள்
                           -----------------------------------------------------------------

என்னைப்பற்றி நானே  அறிந்து கொள்ளஎன் தந்தை இற்ந்தபின்   ஒரு நாட்குறிப்பு உதவும் என்று  எழுதத்துவங்கினேன் டைரி எழுதுவதுபற்றி ஒரு ஐடியாவும் இருக்கவில்லை ஆரம்பத்தில் எழுதியவை ஒரே வரவு செலவுக் கணக்காயிருந்ததுஅதைப் படிக்கும்போது சிரிப்பு சிரிப்பாய் வருது பிறகு நாளாவட்டத்தில் எனக்கென ஒரு பாணி   உருவாயிற்று  தினமும்  எழுதுவதை விட  முக்கியமானவிஷயங்கள் நிகழும்போதுமட்டும் எழுதினேன் அவற்றை இப்போது படிக்கும்போதுமிகவும் சுவையாய் இருகிறது ஆனால் படிப்பது தான் சிரமமாய் இருக்கிறது இருந்தும் படித்துவிட்டேன் எல்லாமே அனுபவச் சுரங்கங்கள் 1957ல் எழுத துவங்கியவன் 1964 வரை எழுதி வந்தேன்  அதுவே இப்பதிவின் தலைப்பு  இரண்டு மணி நேரத்தில் ஏழு ஆண்டுகள் 1962 ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் வெளிவந்த சமயம்   குமுதம் இதழொரு போட்டி வைத்திருந்தார்கள் பெண்களுக்காக  நானொருகட்டுரை எழுதி அப்போதையஎன்வருங்கால மனைவி பெயரில் எழுதி அனுப்பினதுபரிசு பெற்றது  அதை அவளுக்கு என் பிற்ந்த நாள் பரிசாகக் கொடுத்தேன் ஓ எத்தனை எத்தனை வித்தியாசமான  தருணங்கள்  1 



குமுதம் கடிதம்

1குமுதம் இதழ் அவ்ர்களது அட்டைப்படம் ஒன்றுக்குகவுஇதை எழுதும்போட்டி வைத்திருந்தார்கள் நான் இரண்டு கவிதைகளெழுதி அனுப்பினேன் பிரசுரமாக வில்லை  ஆனால் பிற்காலத்தில் நானொருப்பதிவுஎழுதக்  காரணமாய் இருந்தது
அவை ------1
தனங்கனக்கஉன்  இடை ஒடிய
மனங் கிளர்க்க அடில்போதை ஏற
வாய் பேசாது வலை விரிக்கும்  பார்வையதில்
போய் வீழும் விட்டிலைஎதிர் நோக்கும்   பாவாய்    1
பெண்ணினங்க்காக்க ஆடவர் மனங் காக்க
உன் இனத்தாள் கூறும்மொழி உற்றுக்கேளாய்
பொய்க்கனவாய்ப் புகுந்துன்  பெண்மை புணர்ந்து
மெய்க் கனவாய்ஆக்குவர் உன் இளமையதை
 கூத்தாள் எனக்கொள்வர்  இரவி மறையும்  முன்
ஆத்தாள் உணரும் முன்   போய்ச்சேர்வீடு நோக்கி

கவிதை  2
அலைதாங்க கட்டி விட்ட கடற்திண்டில்
வலை வீசி  வழி நோக்கி விழிபார்த்துப்
 போஸ் கொடுக்கும்  அப்சரசே
எழாதே எழவும்  எத்தனிக்காதே
உனைக்கண்டு  நகைச்சுவையாய் எழுதிடப் பணித்திட்டார்
அருகில்வந்து காணுவேன்  கண்ட பின்  கூறுவேன்
உன்  நிலைகண்டு  நகைக்கவா  இல்லை சுவைக்கவா என்று  

   
        


திங்கள், 15 ஜூன், 2020

பூனைகள் பலவிதம்

                                   பூனைகள் பலவிதம்
                                   ==================

எங்கள் வீட்டுக்கு பூனைகள் வந்தன  எனக்கு பூனைகள் என்றாலேயே பிடிக்காது  ஒரு முறை அவைஇடம் பிடித்துவிட்டால்  அவற்றை வெளியேற்ற முடியாது  மேலும் அவற்றுக்கு அன்பு மிகுந்தால் காலையே சுற்றி சுற்றி வரும் நமக்கோ நடப்பதே பெரும்பாடு 

eஎன்  வீட்டுக்கு ஒரு பூனைக்குட்டி எதிர்பாராமல் வந்தது தாய்ப் பூனை எங்கோ  குட்டிகளை  ஈன்றிருக்க வேண்டும்  ஒரு குட்டிஎப்படியோ வீட்டுக்குள்வந்து விட்டது வந்துவிட்டது தெரியும்  எங்கே என்று தெரியாமல் வீடு முழுவதும்தேடினோம்அடுக்களையில்  ஏதோ பாத்திரத்துக்குள்போயிருக்கவேண்டும் என்மனைவிக்கு தூக்கம்m கெட்டது நடுஇரவில் கண்விழித்தவள் ஹாலின் ஓரத்தில்பூனை இருப்பதை  பார்த்து விட்டாள்அறைக்கதவுகள் எல்லாவற்றையும்சாத்தி விட்டுவாசல்கதவை மட்டும் திறந்து துடைப்பம் கொண்டுஅதை விரட்டிஇருக்கிறாள் நிறைய ஆட்டம்காட்டி அது வெளியே போய் விட்டது ஆனால் அவள்தூக்கம் கெட்டது  அந்தட இரவில் குட்டி வெளியே போனால் நாய்கள் ஏதாவது தொல்லை தரலாம் அதன்  உனுயிருக்கெ ஆபத்து நேரம் ஆனால் பூனைக்குட்டியை வளர்க்க  முடியாத  ஒரு அவல நிலை  காலையில் தோட்டத்திலெங்காவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள் இதன் நடுவே அதன் தாய்ப்பூனை வந்து கத்திக்  கொண்டே இருந்தது  எத்தனை குட்டிகள்  ஈன்றதோ   மிச்சம் குட்டிகள் எங்கு இருந்தனவோ  பக்கத்து இடதில் இருந்து ஒரு பையன்  அந்தக்குட்டி அவனது என்று  கூறி அதை ஒரு துணி கேட்டு வாங்கி  எடுத்துக் கொண்டு போனான்  சற்று நேரத்தில்  வீட்டின்பின்புறம் ஒரு பூனைக்குட்டி இறந்து கிடந்தது தெரிந்தது  அப்போது அந்த பையன்  எடுத்துப்போனது  வேறு பூனைகுட்டியா 
இறந்து பொன குட்டியை டிஸ்போஸ் செய்ய ரூ  20 கொடுத்தோம் பின் என்ன தினமும்   பூனைக்குட்டி எங்காவ்து உள்ளதா என்று  பார்ப்பதே  வாடிக்கைஆயி ற்று  ஆனல் தாய் பூனை தினமும்வந்து தேடும் கத்தும்அதுவே எங்களுக்கு சந்தேகச்ம் கொடுத்தது ஒரு நாள் பூனைக்குட்டியை தாய் கண்டுகொண்டது  எப்படிக்கூப்பிட்டதொ தெரியவில்லை குட்டி தாயுடன்சேர்ந்தது  எங்கோ போய் விட்டது 


பாரதியார் பூனைக்குட்டிகளைப்பற்றி பாடியிருக்கிறார்  நிற வேற்றுமை குறித்து எழும் எண்ணங்களுக்கு அவர்பாட்டு ஒரு வடிகால் போன்று இருக்கிறது 

வெள்ளை நிறத்தொருபூனை
எங்கள் விட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றட்சப் பூனை 
அவை பேருக்கொரு நிற்ம் ஆகும்
 சாம்பல்நிறத்தொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறம்  ஒரு குட்டி 
பாம்பின்  நிறமொருகுட்டி 
வெள்ளைப்பாலின்  நிறமொரு  குட்டி 
எந்தநிறமிருந்தாலும் 
அவை யாவும் ஒரெ தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ       
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும்   ஒன்றெனக் காணீர் 
நிற வேற்றுமை குர்த்து அவர் எழுதியபாடல்  அவர் சொல்ல வந்தது  போய்ச் சேர்ந்ததா
தெரியவில்லை  நானும்  ஏற்றதாழ்வுகள்பற்றி  நிறையவே  எழுதி விட்டேன்  செய்தி போய் சேர்ந்திருக்கும் என்னும் நம்பிக்கைதான்பாரதியும்நம்பித்தான்  எழுதி இருப்பார்  









புதன், 10 ஜூன், 2020

ஆசிவேண்டி

                                                             ஆசி வேண்டி

guess who

        எண்ணில்  அடங்கா  எண்ணங்கள் ,
              
கண்ணில்   அடங்கா  காட்சிகள்.
              
சொல்லில்  அடங்கா  சொற்கோர்வைகள்
              
இவை  எதிலும்  அடங்கா  நினைவுகள்,
              
என்று  எங்கும்  எதிலும் நீக்கமற ,
              
நிறைந்திருக்கும், பரம்பொருளைப
              
பேச  அல்ல  இந்தக்  கவிதை.

நினைப்பினும்  நினைக்காதிருப்பினும்.,
என்னுள்  நிகழும்  ரசாயன  மாற்றம்,
அன்றைக்கின்று  குறைந்திலை  அளவில்
உணர்ந்த  ஒன்றை அளவில்  ஒடுக்க
முற்பட  முயல்தல்  பேதமையன்றோ ...

            
இரட்டைக்  குழலுடன்,
            
பூரித்தெழும்  அழகுடன்,
            
பதினாறின்  பொலிவுடன்,
            
பரிமளித்த  பாவை  முகம்,
           
அன்று  கண்டதேபோல்
           
இன்றும்  நினைவிலாட,
           
காட்சிகள்  விரிய  விழித்தே
           
காண்கிறேன்  கனாவல்ல.

மாறுபட்ட  சாதிவேறுபட்ட  மொழி,
என்றே  இருப்பினும், ஒன்றுபட்ட  உள்ளம்
கொண்டிணைந்த அவள்  எழில்
நிலவைப்  பழிக்கும்  முகம்,
அதில்  நினைவைப்  பதிக்கும்  கண்கள்,
கைத்தலம்  பற்றும்  முன்னே
என்னைத  தன்பால்  ஈர்த்த  அவள்
நடை,குரல் அதரங்  கண்டும்
செருக்கொழியாது  உலவும்,
மயில், குயில், பவழங் கண்டும்
மிடுக்கொழியாதிருந்த  நான்,
அவளருகே  இல்லாதிருக்கையில்,
படும்  பாட்டைப்  பாட்டாக்கியதும்

           
உயிர்த்துடிப்பும் , உள்ளத்திமிரும்
           
தினாவட்டும்  நிறைந்த என்
           
நெளிவும்  சுளிவும்  கண்டவள்
           
என்  குறைபாடு  கண்டு, ஆற்றாமையால்
           
ஊடல்  கொண்டு  சுழித்த  முகம்  சகியா  நான்
           
விபத்தில்  விளைந்த  வித்தின்  விளைவே,
           
என்  குறைக்கிலை  காரணம் நான்
           
காண்பார்  விழிக்  கோணந்தான்
           
என்றே  தேற்றும்  காலங்கள்,
           
வாழ்வில்  நிலைக்கும்  தருணங்கள்.

என்  குறையிலும்  நிறை  காணும்.
அன்பின்  பாங்கில்  திளைப்பதும்,
சொல்ல நினைத்ததை  சொல்லும்  முன்பே,
இதுதானே  அது  என்றே  இயம்பிடும்,
இயல்பு  கண்டு  நான்  வியப்பதும்...

            
எண்ணத்  தறியில்  பின்னிப்  பிணைந்து
            
இழையோடும்  நினைவுகளூடே
            
அவளுள்  என்னையும்  என்
            
உடல் ,பொருள், ஆவி  அனைத்திலும்
           
அவளை  எண்ணுகையில்  தோன்றுவது,
           
ஆயிரமுண்டு  பதிவிலடங்க்காது ,
           
பகிர்தலும்  இங்கியலாது, இருப்பினும் ....

எங்கள்  வாழ்வும்  வளமும்  நீ  தந்த  வரமே,
அன்றுபோல்  இன்றும்  என்றும்
தொடர   ஆசி  வேண்டும் 



இன்றவள்