Wednesday, June 17, 2020

இரண்டு மணி நேரத்தில்ஏழு ஆண்டுகள்
                            இரண்டு மணி நேரத்தில் ஏழு ஆண்டுகள்
                           -----------------------------------------------------------------

என்னைப்பற்றி நானே  அறிந்து கொள்ளஎன் தந்தை இற்ந்தபின்   ஒரு நாட்குறிப்பு உதவும் என்று  எழுதத்துவங்கினேன் டைரி எழுதுவதுபற்றி ஒரு ஐடியாவும் இருக்கவில்லை ஆரம்பத்தில் எழுதியவை ஒரே வரவு செலவுக் கணக்காயிருந்ததுஅதைப் படிக்கும்போது சிரிப்பு சிரிப்பாய் வருது பிறகு நாளாவட்டத்தில் எனக்கென ஒரு பாணி   உருவாயிற்று  தினமும்  எழுதுவதை விட  முக்கியமானவிஷயங்கள் நிகழும்போதுமட்டும் எழுதினேன் அவற்றை இப்போது படிக்கும்போதுமிகவும் சுவையாய் இருகிறது ஆனால் படிப்பது தான் சிரமமாய் இருக்கிறது இருந்தும் படித்துவிட்டேன் எல்லாமே அனுபவச் சுரங்கங்கள் 1957ல் எழுத துவங்கியவன் 1964 வரை எழுதி வந்தேன்  அதுவே இப்பதிவின் தலைப்பு  இரண்டு மணி நேரத்தில் ஏழு ஆண்டுகள் 1962 ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் வெளிவந்த சமயம்   குமுதம் இதழொரு போட்டி வைத்திருந்தார்கள் பெண்களுக்காக  நானொருகட்டுரை எழுதி அப்போதையஎன்வருங்கால மனைவி பெயரில் எழுதி அனுப்பினதுபரிசு பெற்றது  அதை அவளுக்கு என் பிற்ந்த நாள் பரிசாகக் கொடுத்தேன் ஓ எத்தனை எத்தனை வித்தியாசமான  தருணங்கள்  1 குமுதம் கடிதம்

1குமுதம் இதழ் அவ்ர்களது அட்டைப்படம் ஒன்றுக்குகவுஇதை எழுதும்போட்டி வைத்திருந்தார்கள் நான் இரண்டு கவிதைகளெழுதி அனுப்பினேன் பிரசுரமாக வில்லை  ஆனால் பிற்காலத்தில் நானொருப்பதிவுஎழுதக்  காரணமாய் இருந்தது
அவை ------1
தனங்கனக்கஉன்  இடை ஒடிய
மனங் கிளர்க்க அடில்போதை ஏற
வாய் பேசாது வலை விரிக்கும்  பார்வையதில்
போய் வீழும் விட்டிலைஎதிர் நோக்கும்   பாவாய்    1
பெண்ணினங்க்காக்க ஆடவர் மனங் காக்க
உன் இனத்தாள் கூறும்மொழி உற்றுக்கேளாய்
பொய்க்கனவாய்ப் புகுந்துன்  பெண்மை புணர்ந்து
மெய்க் கனவாய்ஆக்குவர் உன் இளமையதை
 கூத்தாள் எனக்கொள்வர்  இரவி மறையும்  முன்
ஆத்தாள் உணரும் முன்   போய்ச்சேர்வீடு நோக்கி

கவிதை  2
அலைதாங்க கட்டி விட்ட கடற்திண்டில்
வலை வீசி  வழி நோக்கி விழிபார்த்துப்
 போஸ் கொடுக்கும்  அப்சரசே
எழாதே எழவும்  எத்தனிக்காதே
உனைக்கண்டு  நகைச்சுவையாய் எழுதிடப் பணித்திட்டார்
அருகில்வந்து காணுவேன்  கண்ட பின்  கூறுவேன்
உன்  நிலைகண்டு  நகைக்கவா  இல்லை சுவைக்கவா என்று  

   
        


15 comments:

 1. கவிதை அருமை ஐயா.
  அந்த ஆவணத்தை இன்னும் வைத்திருப்பது சிறப்பு.

  நானும் இப்படித்தான் வைத்திருப்பேன் இப்பொழுது நினைக்கிறேன் நமது மறைவுக்குப் பிறகு நிச்சயமாக குப்பைக்கு போய் விடும்.

  ReplyDelete
  Replies
  1. நானிருக்கும்போது பாதுகாப்பதே சிரமம் நன்போன பின் என்ன ஆனால் என்ன

   Delete
 2. குமுதம் பரிசு கடிதம் - கவர்ந்தது. இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களே.

  டைரி எழுதுவது - நானும் ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் எழுதியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

  அது சரி..நீங்கள் வரவு செலவு கணக்கு எழுதுவீர்களோ? நான் துபாயில் ரெகுலராக எழுதிவந்தேன். திருமணத்துக்குப் பிறகு, மனைவியிடம் இந்த வழக்கம் இல்லாததால் விட்டுவிட்டேன். திரும்ப பஹ்ரைன் போனபிறகு சில மாதங்கள் எழுதி, எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வரவு செலவு கணக்கா வரவு எங்கே எல்லாம் செலவுதான்

   Delete
  2. வரவு இல்லாமல் செலவு மட்டும் எப்படி?!!

   என் அப்பாவின் பழக்கம் மற்றும் அறிவுறுத்தலால் 2003 வரை ஒழுங்காக வரவு செலவு எழுதிக் கொண்டிருந்தேன்.

   Delete
  3. கடன் பற்றிதெரியாதா அந்தக் காலத்தில் 50 பைசா எல்லாம் கடன் வாங்குவேனாக்கும்

   Delete
 3. நெஞ்சில் ஓர் ஆலயம்.....நினைவுகள்...அதிகமாக ரசித்தேன் ஐயா.
  உங்களின் ஆவணப்பாதுகாப்பு சிறப்பு.

  ReplyDelete
 4. திருமணத்திற்கு முன்னே மனைவி பெயரில் கட்டுரையா
  அருமை
  அதனை இன்றும் போற்றிப் பாதுகாப்பது பெருமை ஐயா

  ReplyDelete
 5. பொக்கிஷப் பகிர்வு அருமை.

  ReplyDelete
 6. எல்லப் பொக்கிஷங்களுக்கும் ஒரு கால வரம்பு இருக்கும் போல

  ReplyDelete
 7. குமுதம் பரிசு லெட்டர் பொக்கிஷம்

  கவிதை மிக நன்றாக இருக்கிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எந்த கவிதை என்று சொல்லவில்லையே

   Delete