Sunday, June 21, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்

    கடைசியில்  சில பக்கங்கள்  மிஸ்ஸிங்
    --------------------------------------------------------------

  
கடந்த பதிவு ஒன்றில் இரண்டு மணிநேரத்தில் ஏழு ஆண்டுகள் என்று எழுதி இருந்தேன் பொதுவாக என் நினைவாற்றலை நானேமெச்சிக் கொள்வது உண்டு  ஆனால் எனக்கு சவாலாக இருந்தது ஒன்று  சவாலையும் சமாளிக்க வேண்டாமா

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே  தூற்றிக் கொள்ளலாம் 

   
                     முப்பது நாட்கள்
 காட்சி---1
இடம் -----கனகசபை வீடு
பாத்திரங்கள் ---கனகசபை சபாபதி  வேதவதி
(திரை உயரும்போது  கனகசபை ரூபாய் நாணயங்களை தட்டிப்பார்ப்பதும்   எண்ணிப் பார்ப்பதுமாக இருக்கிறார்  உள்ளே ரேடியோ பணமே உன்னால் என்ன குணமெ என்று பாட எரிச்சலுடன்  )
கனக----- வேதம்  வேதம்  ஏ வேதா  
வேதம்-------(கரண்டியுடன் வந்து கொண்டே ) வேதா வேதா வேதா  வேதத்துக்கு இப்ப என்னவாம்
கனக----சரி சரி  ரேடியோவைக் கொஞ்சம்மூடு
வேதம் ====ரேடியோ பாடத்தான்  இருக்கு மூட அல்ல
கனக----அட ஆண்டவனே  ஒரு ரேடியோவ மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவை திறந்திட்டேனே
வேதம் – என்னையா ரேடியோ ங்கறீங்க
கனக---சேச்சே ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம் உன் திருவாயைமூட…….
வேதம் ---- என்ன ……..(வந்துமிரட்ட கனகசபை தன்வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப்பார்த்து)பணம்பணம்    ரூபா நோட்டு (அவர் கையைப்பிடித்து)இதை  வாயில போட்டுக்க பார்த்தீங்களே காயிதம்னா நெனச்சீங்க
கனக ---இவ யார்ரா இவ …..கழுத கூட ரூபாய் நோட்டை காயிதம்னு தின்னாதுஎடுத்து
 மடில வெச்சுக்கும் (ரேடியோ இன்னும் பலமாக பணமெ உன்னால் என்ன குணமே என்றுபாட )அடச்சே பாட்டைப்பாரு பாட்டை  பாட்டப்பாட அtதுக்கொரு  ரேட்டைகரெக்டா வாங்கிடுவான் பாட்ற பாட்டு மட்டும்பணமே உன்னால் என்னகுணமே ஹும் வேஷக்கார உலகம்
வேதா ---கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை சங்கீதத்த ரசிக்க தெரியலன்னு  சொல்லிட்டு போங்களேன்
 கனக ----எனக்கா தெரியாதுருபாயோட ரூபாய் மோதறப்போ ஹா…. இதை விட என்ன சங்கீதம் வேற என்ன இருக்கு சங்கீத ஸ்வரமேழும்இந்த  ஸ்வரம்பேசலேன்னா சைலெண்ட் ஆம்மா..............ஆதார சுருதியாச்சே இது வேதம் நெசமா சொல்றேன் அந்தக்காலத்தில ஒன்ன தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்ல
வேதா ----போதும்போங்க
கனக----ஆஹா ஆஹா நீ இப்படிநாணிக் கோணி நிக்கறது நம்ம சாந்தி முஹூர்த்தத்தில் நீ முகம்செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது
 வேதம் ----ஐய போதும்போங்க
கனக ---வேதம் வேதம் (கிழட்டுதாபத்தில் நெருங்க (ரேடியோ ) மன்மத லீலையை வென்றார் உண்டோ ) அடச்சீ மூடுடா ரேடியொவை . ரேடியோ நிற்கிறது 

 சபாபதி----(வந்து கொண்டே)இந்த வீட்ல மகனாப் பொறந்ததவிட ஒரு கூத்தாடிக்கு பிள்ளையாய் பிறந்திருக்கலாம் நல்ல அப்பா  ஒரு பாட்டு பிடிக்காது  கூத்து பிடிக்காது உங்களுக்கு  என்னதான்   பிடிக்கும்
வேதா---ஏன் அவருக்கு பைத்தியம் பிடிக்குமே
கனக---- இனிமேதானா பிடிக்கணும்  செத்துப்போன ஆடியபாதம்அருணாவுக்கு உயில் எழுதி என்னையும்நவகோடியையும் டிரஸ்டியா வெச்சானோ  அன்னக்கே பிடிச்சாச்சு பைத்தியம்
வேதம்---- ஏன் உங்களையும்  நவகோடியையும் டிரஸ்டியா வெச்சாரு
 சபாபதி ---- ஹூம்  கிழவனுக்கு உலகம் தெரியும்நவகோடி இல்லேன்னா அருணாவுக்கு உயில் மட்டும்தான்மிஞ்சும்  உயில்ல உள்ளதெல்லாம்உன் ஒடம்புலநகையாய் கொஞ்சும்
கனக ---- ஏன் இப்பமட்டும் என்ன கெட்டுது  எப்படியும் அவளை கட்டிக்கிற்வனுக்குத்தான்  சொத்துஉயில்ல எழுதி இருக்கு   நீமட்டும் மனசு வெச்சு  அருணாவ  உன்ன கட்டிக்க சம்மதிக்க வெச்சீன்னா
சபாபதி—நானென்னப்பா செய்யறது அருணாவுக்கு  ஆம்பிளைன்னாலே  எட்டிக்காய் கசப்பு அந்தக் காலத்துல அல்லின்னா இந்தக் காலத்துல அருணா
வேதா—அந்த ட அல்லிகதைமட்டும் என்னாச்சு தம்பி அல்லி பெத்த புள்ளைக்கு பேர் புலந்திரனாம்
கனக --- இந்த அல்லி அருணா ஒருபுள்ளையைப்பெற
நம்மபையன் ஒரு அர்ச்சுனனா இல்லையே
சபா ---- எப்படி அப்பா இருக்க முடியும்  அர்ச்சுனன் ஆணழகன் நானு --- கண்ணில்லாதபெண்ணு கூட என்னை அழக்ன்னு  ஒத்துக்க மாட்டாளே  அர்ச்சுனன் பெரிய வீரன்  எனக்கு  உயிருன்னா  வெல்லம் அருணாசொத்து கெடைக்கட்டும்கெடைக்காமபோகட்டும் உங்களுக்குப் பிற்கு உங்க சொத்து எனக்கு கிடைக்கணும்னா நான் உசிரோட இருந்தாகணும்
கனக---அது என்நல்லகாலம் என் உசிரை வாங்கினதுக்கு அப்புறம் தானே முடியு ம்னு சொல்லாமவுட்டியே ஊம்   அங்க நவகோடிஎன்னடான்னா  மொத்து மொத்துனு  மொத்தறான் அவன்பொண்டாட்டிய அருணாவைக்கட்டிக்க ஒரு ஆம்பிளையை பெறாம ஒருபொண்ண பெத்ததுக்கு பகவான் புண்ணியத்துல ஒரு பிள்ளைய பெத்து ருந்துமஅதன் லட்சணத்தபாரு
வேதா--- உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒண்ணும் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா
கனக --- அட்ஜஸ்ட்பண்ணலாம்  அட்ஜஸ்ட்எங்களுக்குள்ள  பாகத்தகராரூ ஒரு ஒப்பந்ததுக்கு  வர முடியலே
சபா --- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு  வாங்க நானெப்படியாவது  அருணாவ கட்டிக்கிறேனா இல்லையா பாருக்க
கனக --- பணத்தைத்தவிர எது  வேணுனா  கேளு
சபா---- அதத்தவிர உங்க க்ட்டவேற என்னை இருக்கு பண்ம்தர மனசில்லேன்னா  சாவியத்தாங்க
கனக--- ஐயையோ வேண்டாண்டா பணமே தரேன்
சபா--- அதுதானே  பார்த்தேன் ஆவியை விட்டாலும்  சாவியை விடமாட்டாறே அப்பா தாங்யூ டாடி மம்மி அரூணா உங்க மருமகள்னே  வெச்சுக்கோங்க (போகிறான் )
கனக---- வேதம் .. அந்தப்பொண்ணு இந்தவீட்டு மருமகள் ஆகத்தான் போகுது  நீ பாட்டுக்கு எங்க்சம்மாவுக்கு மருமகளா இருந்ததெ நெனச்சுட்டு அந்தப்பொண்ணுக்கு மாமியார் ஆக இருந்திடப்போற
வேதம் ==== ஊங்க்கும்(போகிறாள் )
                         திரை  
   

   


16 comments:

 1. வார்த்தைகள் ஆங்காங்கே ரைமிங்காய் விழுந்திருக்கின்றன. லேசான நகைச்சுவையும் அருமை. அதைவிட பதிவு படிப்பதற்கு வணதியாய் அழகாய் பத்திகள் பிரிக்கப்பட்டு நீட்டாய் இருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. // படிப்பதற்கு வணதியாய் //

   படிப்பதற்கு வசதியாய்!

   Delete
  2. நாடகத்தை ரசிப்பதோடு போட்டியிலும் பங்கு கொள்ள வேண்டுகிறேன் நகைச்சுவைக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தம் தெரியும்தானே

   Delete
 2. நாடகம் நல்லா ஆரம்பித்திருக்கிறது. இழையோடிய நகைச்சுவையை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கவனமாக வாசித்து வாருங்கள் கடைசியில் போட்டியிலும் பங்கு பெறுங்கள்

   Delete
 3. வார்த்தைகள் ஜாலம் புரிகின்றன ரசித்தேன் ஐயா.

  ReplyDelete
 4. நாடகம் கலகலப்பாய் துவங்கியிருக்கிறது. தொடர்கிறேன் வரும் பகுதிகளை இரசிக்க!

  ReplyDelete
 5. அட.ச் சொக்கா ..ஆயிரம் ரூபாயாச்சே..ஆயிரம் ரூபாயாச்சே..ஏற்கெனவே வை.கோ சார் போட்டியில் கலந்து வென்ற ஆசை இப்போது மெல்லத் தலை தூக்குதே...

  ReplyDelete
  Replies
  1. கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

   Delete
 6. மற்ற பகுதிகளையும் ரசிக்க காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 7. போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் நன்றீ

  ReplyDelete
 8. முதல் பகுதி அருமை..தொடர்ந்து வாசிக்கிறேன்...இல்லை..பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. போட்டி பற்றி தெரியும்தானே உங்கள் மகனுக்கும் சொல்லுங்கள் நன்றி

  ReplyDelete
 10. ஆ! ஆயிரம் பொற்காசுகளா சீ, ஆயிரம் ரூபாயா? பார்க்கலாம் யாரவது மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறவர் எழுதித் தருவாரா என்று? அதில் குற்றம் என்று கீதா அக்காவோ நெல்லையோ சொல்லாவிட்டால் ஜெயிக்கலாம். ஹாஹா!

  ReplyDelete
 11. வேதம் ====ரேடியோ பாடத்தான் இருக்கு மூட அல்ல
  கனக----அட ஆண்டவனே ஒரு ரேடியோவ மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவை திறந்திட்டேனே
  வேதம் – என்னையா ரேடியோ ங்கறீங்க
  கனக---சேச்சே ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம் உன் திருவாயைமூட…….//

  வேதா---ஏன் அவருக்கு பைத்தியம் பிடிக்குமே//

  ஆவியவிட்டாலும் சாவிய தரமாட்டே//

  ஹா ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை. சார்

  அடுடுத்த பகுதியும் போய் வாசிக்கிறேன்

  கீதா

  ReplyDelete
 12. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது சார். நல்ல நகைச்சுவை இடையிடையே உரையாடல்களில் இருப்பது சுவாரசியமாக இருக்கிறது

  துளசிதரன்

  ReplyDelete