Wednesday, June 10, 2020

ஆசிவேண்டி

                                                             ஆசி வேண்டி

guess who

        எண்ணில்  அடங்கா  எண்ணங்கள் ,
              
கண்ணில்   அடங்கா  காட்சிகள்.
              
சொல்லில்  அடங்கா  சொற்கோர்வைகள்
              
இவை  எதிலும்  அடங்கா  நினைவுகள்,
              
என்று  எங்கும்  எதிலும் நீக்கமற ,
              
நிறைந்திருக்கும், பரம்பொருளைப
              
பேச  அல்ல  இந்தக்  கவிதை.

நினைப்பினும்  நினைக்காதிருப்பினும்.,
என்னுள்  நிகழும்  ரசாயன  மாற்றம்,
அன்றைக்கின்று  குறைந்திலை  அளவில்
உணர்ந்த  ஒன்றை அளவில்  ஒடுக்க
முற்பட  முயல்தல்  பேதமையன்றோ ...

            
இரட்டைக்  குழலுடன்,
            
பூரித்தெழும்  அழகுடன்,
            
பதினாறின்  பொலிவுடன்,
            
பரிமளித்த  பாவை  முகம்,
           
அன்று  கண்டதேபோல்
           
இன்றும்  நினைவிலாட,
           
காட்சிகள்  விரிய  விழித்தே
           
காண்கிறேன்  கனாவல்ல.

மாறுபட்ட  சாதிவேறுபட்ட  மொழி,
என்றே  இருப்பினும், ஒன்றுபட்ட  உள்ளம்
கொண்டிணைந்த அவள்  எழில்
நிலவைப்  பழிக்கும்  முகம்,
அதில்  நினைவைப்  பதிக்கும்  கண்கள்,
கைத்தலம்  பற்றும்  முன்னே
என்னைத  தன்பால்  ஈர்த்த  அவள்
நடை,குரல் அதரங்  கண்டும்
செருக்கொழியாது  உலவும்,
மயில், குயில், பவழங் கண்டும்
மிடுக்கொழியாதிருந்த  நான்,
அவளருகே  இல்லாதிருக்கையில்,
படும்  பாட்டைப்  பாட்டாக்கியதும்

           
உயிர்த்துடிப்பும் , உள்ளத்திமிரும்
           
தினாவட்டும்  நிறைந்த என்
           
நெளிவும்  சுளிவும்  கண்டவள்
           
என்  குறைபாடு  கண்டு, ஆற்றாமையால்
           
ஊடல்  கொண்டு  சுழித்த  முகம்  சகியா  நான்
           
விபத்தில்  விளைந்த  வித்தின்  விளைவே,
           
என்  குறைக்கிலை  காரணம் நான்
           
காண்பார்  விழிக்  கோணந்தான்
           
என்றே  தேற்றும்  காலங்கள்,
           
வாழ்வில்  நிலைக்கும்  தருணங்கள்.

என்  குறையிலும்  நிறை  காணும்.
அன்பின்  பாங்கில்  திளைப்பதும்,
சொல்ல நினைத்ததை  சொல்லும்  முன்பே,
இதுதானே  அது  என்றே  இயம்பிடும்,
இயல்பு  கண்டு  நான்  வியப்பதும்...

            
எண்ணத்  தறியில்  பின்னிப்  பிணைந்து
            
இழையோடும்  நினைவுகளூடே
            
அவளுள்  என்னையும்  என்
            
உடல் ,பொருள், ஆவி  அனைத்திலும்
           
அவளை  எண்ணுகையில்  தோன்றுவது,
           
ஆயிரமுண்டு  பதிவிலடங்க்காது ,
           
பகிர்தலும்  இங்கியலாது, இருப்பினும் ....

எங்கள்  வாழ்வும்  வளமும்  நீ  தந்த  வரமே,
அன்றுபோல்  இன்றும்  என்றும்
தொடர   ஆசி  வேண்டும் 



இன்றவள்




33 comments:

  1. உங்கள் மனைவி பதினாறு வயதில் அழகாக இருக்கிறார். அப்போதிலிருந்தே உங்களுக்குத் தெரியுமா? அது சரி, இன்னிக்கு அவங்க பிறந்த நாளா? நீங்க இருவரும் தான் எங்களுக்கெல்லாம் ஆசிகள் வழங்கணும். மற்றபடி என்றென்றும் இதே போல் உங்கள் மனைவியுடன் வாழ்க்கையைக் கழிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்களைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன் திருமணத்டுக்கு முன்பே தெரியும்ஆசி இல்லாவிட்டால் வாழ்த்தலாமே

      Delete
  2. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ஆச்சர்யமா இருக்கு....அதே ரசனை அப்போதிலிருந்து இப்போதும் தொடர்வது. இடையிலும் அப்படியே இருந்ததா?

    உங்கள் மனைவிக்கு எங்கள் வாழ்த்துகள். இருவரும் இன்னும் பல காலம், உடல் ஆரோக்கியத்துடன் வாழ ப்ரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு உண்மை சொல்லட்டுமா எழுத்துகளுக்கேஅவள்தான் இன்ஸ்பிரேஷன்

      Delete
    2. காலையில் குறிப்பிட விட்டுவிட்டேன். கவிதை இப்போது எழுதினதா? பாராட்டுகள்.

      பொதுவா பெண்கள் கணவனின் குணங்களை ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணி குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்கள். Familyல அவங்க பங்கு ஆணின் பங்கைவிட மிக அதிகம் என்பது என் எண்ணம்.

      இந்தத் தடவை சிறிய அளவிலாவது கேக் பண்ணவில்லையா?

      Delete
    3. சில வரிகள் முன்பு எழுதியதிலிருந்து எடுத்திருக்கிறேனென்னையே அட்ஜஸ்ட் செய்தவள் அவளல்லோ

      Delete
    4. நெல்லை, அம்மா அவங்களை நேரில் பார்க்கணும். அத்தனை இனிமையானவங்க. சார் மேல அத்தனை அன்பு அவங்களுக்கு. பொறுமையும்.

      கீதா

      Delete
    5. நானும் நெல்லையைப்பார்க்க ஆவலாயுள்ளேன்

      Delete
    6. ஜி.எம்.பி. சார்... என்னைப் பார்த்த பிறகு disappoint ஆகாமல் இருந்தால் சரி.

      Delete
    7. எதிர்பர்ப்புகள் அதிகமிருந்தால்தானே disappoint ஆவதற்கு வலை நட்பை நேரில் பரிச்சயப்பட விருப்பம் அவ்வளவுதான்

      Delete
  3. தங்களிடம் ஆசிகள் வேண்டி நானும்...

    ReplyDelete
  4. அன்பின் ஐயா..
    தங்கள் ஆசி வேண்டி நானும்...

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வாழ்த்துகள் என்றும் உண்டு

      Delete
  5. கவிதை இயற்கையாய் எழுந்தது என்பதில் ஐயம் இல்லை. இவ்வாறு தோன்ற சமீபத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு காரணம் ஆக இருக்கக்கூடும். நிகழ்வை பின்குறிப்பாக சேர்த்திருக்கலாம். அது போன்று மறைபொருளாக மனைவியின் பெயரையும் கவிதையில் எங்காவது குறிப்பிட்டிருக்கலாம்.

    ஆசி என்பது கடவுள் தரவேண்டியது. நாங்கள் வாழ்த்து சொல்ல மட்டுமே முடியும்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பழைய புகைப்படத்தேடலில் இதுவும் சிக்கியது உடனே ஒரு கவிதையுடன் பதிவிட்டேன் சிலர் புகைப்படங்களை தவிர்ப்பதுபோல் நனும் பெயர்களை தவிர்க்கிறேன் உங்களுக்காக அவள் இயற்பெயர் கமலா வீட்டில் பேபி என்று கூப்பிடுவார்கள் திருமணம் ஆனாதும் நானவளுகு சூட்டிய பெயர் சாந்தி பதீன் பின்னூட்டங்கள் கவிதைப்சற்றி குறிப்பிடுவதில்லை

      Delete
  6. வணங்குகிறேன்.  வாழ்த்துகள்.  என்றும் நலமாய் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. பதிவைப்பற்றி ஏதவது கூறீ இருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவித்திறனை எப்போதுமே ரசிப்பவன் நான். ஏற்கெனவே சொல்லியும் இருக்கிறேன்.

      Delete
    2. நன்றி ஸ்ரீ இருந்தாலும் பாராட்டு கேடக விருப்பம் குறையவில்லை

      Delete
  8. தலையணை உறைக்குள் மெத்தையை மிக லாவகமாய்த் திணித்துள்ளீர்கள்...வார்த்தைகள் பெரும் பேறு பெற்றன.வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. அழகான எடுத்துக்காட்டு கவிஞரல்லவா கூறியது

    ReplyDelete
  10. எங்கள் வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள் சார். நல்ல ஆரோக்கியத்துடன் என்றென்றும் இருந்திட எங்கள் பிரார்த்தனைகளும். கவிதை அருமை சார்

    துளசிதரன், கீதா

    சார் அது அம்மாவின் சிறு வயது ஃபோட்டோ செமையா இருக்கு. நீங்கள் அம்மாவின் மீது வைத்திருக்கும் அன்பும் அதே போன்று அம்மா உங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் தெரியும் சார்.

    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. நீங்கள் கவிதை புனைவதில் வல்லவர். உங்கள் கவிதைகளை எப்பவும் ரசிப்பேன் சார்.

    இப்பக் கூட நீங்க எத்தனை அருமையா வார்த்தைகள் கோர்த்து எழுதியிருக்கீங்க. செம சார். அம்மாவுக்கு வாழ்த்துகளும், அவர்கள் ஆசி வேண்டி நாங்களும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பற்றியுமென் மனைவிபற்றியும் உங்கள்வாயிலாக கேட்க மகிழ்ச்சி என்கவிதைகளுக்கு இன்ஸ்பிரேஷனே என் மனைவிதான்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. 'இரட்டை குழலுடன் பதினாறின் பொலிவுடன்''
    மனம் குளிர சிரித்திடும் நங்கை யார் எனக் கண்டு கொண்டோம் .
    இனிய வாழ்த்துகள். வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டு கொள் வதில் சிரமமிருக்காது நன்றி

      Delete
  12. கவிதை அழகாக உள்ளது. காரணம் உண்மையில் இருந்து பிறந்தது. (2) தவறுதலாக சரோஜாதேவியின் படத்தை வெளியிட்டு விடவில்லை என்பதை confirm செய்யவும். (3) இந்த வரிகளுக்கு விளக்கம் தேவைப்படுகிறதே!
    "விபத்தில் விளைந்த வித்தின் விளைவே//என் குறைக்கிலை காரணம் நான்..."

    நூறாண்டு நீவிர் இருவரும் இணைந்து இன்புற்று வாழ்ந்திட இறைவனை நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம்வெண்டாம் படமென் மனைவியுடையதுதான்விபத்தில் விளைந்த வித்தின் விளைவே//என் குறைக்கிலை காரணம் நான்...I ALWAYS SAY EACH OF US IS A BYPRODUCT OF INCIDENTAL PLEASURE THE MISTAKES IN ME ARE WHAT OTHERS PERSUM IN me விளக்கம் போதும்ன நினைக்கிறேன்

      Delete
  13. பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன்..
    வசந்தகால நினைவுகளில் நீங்கள்.. வாழ்த்துகள்!

    ReplyDelete