செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஆணின்சிம்ப்லிசிடிபெண்ணின் காம்ப்லிசிடி

 அவளது டைரி

இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!
         --------------------
ஆணின் simplicity vs பெண்ணின் complicity...?
       ------------------------ 

9 கருத்துகள்:

  1. ஹா..  ஹா..  ஹா...  எப்பவுமே ஆண்கள் உலக அளவில் கவலைப்படுகிறவர்களாக்கும்!

    பதிலளிநீக்கு
  2. சிரித்துவிட்டேன் சார்!!!! ஆணின் ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி வெர்ஸஸ் பெண்ணின் ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி!!!

    ரசித்தேன் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சிறிய கதையாகப் பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டீர்கள் சார்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா....ரசனை.
    சரியாக கண்டுகொண்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு