எண்ணங்கள் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தொடரும் நடப்புகள் நிகழ்வுகள் ஒரு கருத்து


                        நாம் என்னதான் செய்யப் போகிறோம்..
                                            ( புலம்புவது தவிர )
                                             --------------------



மீண்டும் ஒரு பெண் சிதைக்கப் பட்டிருக்கிறாள்,அதுவும் மும்பையில். அதுவும் மும்பையில் என்று எழுதும்போது மும்பை மட்டும் மேலோர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடமா எனும் கேள்வி எழுகிறது. மும்பையில் வாழ்க்கை முறை பெண்களும் எல்லா நேரங்களிலும் வெளியே சென்று வரப் பழக்கப் பட்டவர்கள். ஒரு cosmopolitan வாழ்க்கை முறை. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு குறைவு என்பதே ஆகும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது மனம் ஆத்திரப் படுவதும், அட்டைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதும். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று காவல்துறையும் அரசாங்கமும் கூறுவது ஒரு ரிசுவல் ஆகிவிட்டது. மனிதனுக்க் வக்கிர எண்ணங்கள் இருக்கும்வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடரும். ஆனால் எதையும் செய்து தப்பிக்கலாம் என்னும் எண்ணம் மட்டும் வரக் கூடாது சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த பலாத்காரத்துக்குக் காரணமானவரே இன்னும் தண்டிக்கப் படவில்லை. குற்றவாளிகளின் வக்கீல்கள் காலம் கடத்துகின்றனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. ஒரு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்னும் கரிசனமே இம்மாதிரி நீதி வழங்கப் படுவதன் தாமதத்துக்குக் காரணமாயிருக்கலாம். என்ன இருந்தாலும் justice delayed is justice denied  என்பது மறுக்க முடியாதது. நம் இந்தியகுணாதிசயமே எல்லாக் காரியங்களையும் இழுத்தடித்தால்  அது மறக்கப்பட்டுவிடும் என்னும் உயர்ந்த எண்ணமோ என்னவோ. ?

சரி. இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன. ஆணாதிக்க மனோபாவமா.?நம் சமூகத்தில் இருக்கும் வாழ்வின் நெறி முறைகளா.?இம்மாதிரி நம் நாட்டில் மட்டும்தான் நடை பெறுகிறதா. இல்லை உலகளாவிய நடப்புதானா. ? கேள்விகள். .... பெரும்பாலும் இம்மாதிரி ஈனச் செயல்களில் ஈடுபடுவோர் தம் வசத்தில் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. குடிக்கோ போதைக்கோ அடிமையாய் இருந்திருக்க வேண்டும்..அது எப்படி ஒரு பெண்ணைச் சீரழிக்கும்போது அருகில் இருப்பவரும் சேர்ந்து இச்செயலில் ஈடுபடமுடியும். எந்த ஒரு தனி மனிதனும் தன் வசத்தில் இருக்கும்போது இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவான் என்று நம்பமுடியவில்லை. ஆனாலும் நடக்கிறதே.patriarchial society ல் தான் இம்மாதிரி நடக்கும். பெண்ணுக்குச் சுதந்திரம் என்பதை இந்த சமூகத்தால் சீரணிக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது சமூக ரீதியில் பெண் இன்னும் அடிமையாகத்தான் எண்ணப்படுகிறாள் நடத்தப் படுகிறாள். பெண்ணுக்கு உரிமை அதிகம் என்னும் matriarchial சமூகமாயிருந்த கேரளமே patriarchial  சமூகமாக மாறி வருகிறது.

இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் இந்த சமுதாயத்தில் இருக்கும் ஏற்றதாழ்வுகளோ என்னும் எண்ணம் எனக்கெழுகிறது. இந்த மும்பை நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டவர்கள் தங்களது இருபதுகளில் இருப்பவர்கள். எத்தனையோ கனவுகள் அவர்களுக்கு இருக்கலாம். ஒரு சாராரின் வாழ்க்கை நிலையோடு தங்களை ஒப்பிட்டு நோக்கும்போது எதிர்மறை எண்ணங்கள் உதயமாகலாம். திரைப்படங்களில் காண்போரின் வாழ்க்கைமுறை சித்தரிக்கப்படுவதில் இருந்து தங்களது முடியாமைகள் மேலோங்கி நிற்கலாம். அதற்கேற்றவாறு தங்களது அழகைப் பறைசாற்றும் பல பெண்களைக் காணும்போது இயலாமையைதாங்கிக் கொள்ள முடியாத மனசு வக்கிர எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாம். மும்பையில் நடந்த நிகழ்ச்சி திட்டமிட்டு செய்யப் பட்டது போல் தெரியவில்லை. காலாபானி எனும் சேரியில் வசிக்கும் அவர்களுக்கு சில நிமிஷ வெறியும் தாங்களும் ஹீரோக்களே என்று நிலைநாட்டும் நாட்டமும். இம்மாதிரி செயல்களை செய்யத் தூண்டி இருக்கலாம் THAT MAY BE JUST A SHOW OF BRAVDO அந்த நேரத்தில். 
இதற்குத் துணை போகும் பல்வேறு காரணங்களில் எனக்கு இந்தத் திரைப்படங்களும் விளம்பரங்களுமே முக்கியக்  காரணமாகத் தெரிகிறது திரைப்படங்கள் நீதி போதிக்க அல்ல. வெறும் பொழுது போக்க உதவும் சாதனமே என்று கூறுவோர் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்கலாம். ஆனால் DISPARITY IN LIVING STYLES AND A FEELING OF HELPLESSNESS  சில நேரங்களில் இம்மாதிரியான செயல்களுக்குக் காரணமாகிறதோ என்றும் தோன்றுகிறது. 
பெண்ணுரிமை பற்றிப் பேசுவோர் பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதைத் தவிர்த்தால் இந்த மாதிரி செயல்கள் குறையலாம். எத்தனை பெற்றொர் வயது வந்த தங்கள் மக்களுடன் இந்தத் திரைப் படங்களைப் பார்க்க முடியும் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். ஏதாவது சொல்லப் போனால் ஜெனெரேஷன் காப் என்று சொல்வார்கள். எங்கள் ஜெனெரேஷனில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அவை மேல் தட்டு வர்க்கம் தமக்கு அடங்கியவர்களிடம் பிரயோகித்ததாய் இருந்திருக்கும். 
இது போன்ற செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நிலவும் ஏற்ற தாழ்வும் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது. 

பெண்களைப் பெற்றவர்கள் எப்போதும் பயத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பள்ளிகளில் தற்காப்புக் கலையும் கட்டாயமாகப் போதிக்கப் படவேண்டும். But what you can do if the animals hunt in herds.as it happened in Mumbai.”

ஒரு வர்மா கமிஷன் சில வழிமுறைகளைப் பரிந்துரைத்தால் அதை ஒட்டு மொத்தமாக ஏற்க இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன தயக்கம்.?இந்த வியாதி நம் சமூகத்தில் இப்போதுதான் வேர்விடுகிறதா? வேரோடு கிள்ளி எறிய என்ன செய்ய வேண்டும். எனக்கு என்னவோ ஒரு தலை முறையே சீரழிந்து விட்டதோ என்ற சந்தேகமெழுகிறது. ஒழுக்கமான வாழ்வு முறைகளை வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள், பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கை நெறிமுறைகளைத் தொலைத்து விட்டார்களோ என்னும் கவலை எழுகிறது. என்னால் நான் ஒரு முறை எழுதியதை மீண்டும் நினைவு கூறாமல் இருக்கமுடியவில்லை.(இதைப் பார்க்க) 



ரூபாயின் மதிப்பு (?) சரிவு ,ஒரு புகம்பல் என்னும் எரிதழலின் பதிவைப் படித்தேன். நம் புலம்பலில் சிறிது நகைச் சுவையும் இருக்கட்டுமே.


 இந்தப் பதிவை நிறைவு செய்ய இதோ ஒரு எளிதான கேள்வி  I AM SURE YOU CAN SOLVE THIS.
உங்களிடம் ரூபாய் 15-/ இருக்கிறது. நீங்கள் சாக்கலேட் வாங்கப் போகிறீர்கள். ஒரு சாக்கலேட் விலை ரூ. ஒன்று. கடைக்காரர் ஒரு சலுகை தருகிறார். நீங்கள் வாங்கிய சாக்கலேட்டுகளின் மூன்று ராப்பர்களைக் ( WRAPPERS ) கொடுத்தால் அவர் உங்களுக்கு ஒரு சாக்கலேட் தருவார். இதோ கேள்வி. நீங்கள் பதினைந்து ரூபாய்க்கும் சாக்கலேட்டுகள் வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு சாக்கலேட்டுகள் கிடைக்கும்.?


  

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா.. எல்லாமறிந்தவரா

  
இவன் பேரன்


 
இவன் மகன்
                                                                                                   

        இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா எல்லாம் அறிந்தவரா.....
        --------------------------------------------------------------------------


ப. பிரகாஷ் என்பவர்  முதன் முதலாக என் கடைசிப் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரைப் பற்றி அறிய “ முகம் எனும் அவரது வலைத் தளத்துக்குச் சென்றேன்.அவரது கடந்த மூன்று பதிவுகளும் குழந்தைகள் பற்றியும் அவர்களது சில செயல்கள் குறித்தும் இருந்தது.

ஒரே ஊரில் இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் என் பேரன் வருகை தந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. பிரகாஷின் பதிவுகள் என்னை என் பேரனையும் நினைக்க வைத்தது. ஏற்கனவே அவனைப் பற்றி எழுதி இருக்கிறேன்.



இப்போதும் அவனை நினைக்க வைக்கும் சில நிகழ்வுகள்.மூன்று வருடங்களுக்கு முன் (அவனுக்கு ஐந்து வயது). ஒரு முறை அவனை அழைத்துக் கொண்டு என் மனைவி அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்றாள். போகும் வழியில் ஒரு கோழிக்கடை இருக்கிறது. அதைப் பார்த்ததும் இவன் “ ஹை...! பாட்டி... சிக்கன் கடை. ! எனக்கு சிக்கன் வாங்கி  பிரியாணி  சமைத்துப் போடு “ என்றான். என் மனைவி என்னிடம் இப்போது காசு இல்லை. பிறகு பார்க்கலாம் “என்று கூறிவிட்டாள் இவனும் அடம் பிடிக்காமல் சமர்த்தாகக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டான். அர்ச்சகர் தட்டில் என் மனைவி காசு போடுவதைப் பார்த்த என் பேரன், “ காசு வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொன்னாய் பாட்டி “ என்று அவளை ஒரு பிடி பிடித்துவிட்டான். இவர்கள் என் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியின் தம்பி வந்திருந்தான். அவனிடம் என் பேரன் முறையிட்டான். என் மச்சினன் அவனை சமாதானப் படுத்தி “ நான் சிக்கன் வாங்கி உனக்கு சமைத்துத் தருகிறேன் “ என்றான். சொன்னபடியே அவனுடன் கடைக்குச் சென்று சிக்கன் வாங்கி வந்து பிரியாணியும் செய்து கொடுத்தான்.  அதை உண்ட பிறகு என் பேரன் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறதுஹைய்யா. நௌ மை டம்மி இஸ் ஹாப்பி

இந்த நினைவுகளைத் தொடர்ந்து இன்னுமொரு நிகழ்வும் மனசில் தோன்றுகிறது. இது என் மூத்த மகனுக்கு மூன்று வயதாய் இருக்கும்போது நடந்தது.அப்போது  திருச்சியில் பி.எச்.இ.எல் குடியிருப்பில் இருந்தோம்.அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. உணவு அருந்தி நான் மதியம் உறங்கிக் கொண்டிருந்தேன். ஓடி விளையாடி கொண்டிருந்த என் மகன் ஒரு ஸ்டீல் டேபிளின் ஓரத்தில் தலை மோதிக் காயம் ஏற்பட்டது. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று என் மச்சினன் ( எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தவன் )பி.எச்இ.எல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று டாக்டரிடம் காண்பித்திருக்கிறான். அவர்கள் குழந்தையைக் கண்காணிப்பில் வைத்திருக்கச் சொல்லி அவன் வாந்தி எடுத்தால் உடனே கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள்.
நான் உறக்கம் விழித்தவுடன் நடந்ததைச் சொன்னார்கள். நான் அப்போது அதிகம் கவலைப் படவில்லை. மாலை சுமார் ஆறு மணிக்கு என் மகன் சிறிது வாந்தி எடுத்தான். டாக்டர்கள் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறார்கள், அதனால் வாந்தி வரலாம் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள், என்று நினைத்துக் கொண்டு நானே மருத்துவ மனைக்குச் சென்றேன். சிரித்துக் கொண்டே “ டாக்டர், நீங்கள் எதிர்பார்த்தபடியே இவன் வாந்தி எடுத்திருக்கிறான்என்றேன் டாக்டர் என்னைக் கடுமையாகப் பார்த்து “IT IS NO LAUGHING MATTER. IT IS SERIOUS “ என்றார்.எனக்குக் கையும் ஒட்டவில்லை காலும் ஓடவில்லை. அதிர்ந்து போய்விட்டேன். அப்போதே அவனை மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள். 24 மணி நேரம் அப்செர்வேஷனில் இருக்க வேண்டும் என்றார்கள். என் மனைவிக்குத் தகவல் அனுப்பி நான் என் மகன் கூடவே இருந்தேன். இரவு முழுவதும் அவனையே பார்த்துக் கொண்டு கண்மூடாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நடு இரவில் என் மகன் கண்விழித்து என்னைப் பார்த்து.சாரி அப்பா... என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்என்றான். மூன்றே வயதான அக்குழந்தை அதைச் சொன்னபோது மனசு மிகவும் கனத்துப் போய் விட்டது.

எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. குழந்தைகள் பற்றிய பிரகாஷின் பதிவு என் நினைவலைகளை இயக்கிவிட்டது.
       



     
         
 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

பல்சுவைப் பதிவுகள்


                                    பல்சுவைப் பதிவுகள்
                                    -----------------------------




விஸ்வரூபம் படத்துக்கு 144-ன் கீழ் தடை விதித்ததை எதிர்த்து கமலஹாசன் நீதி மன்றத்தை அணுகியதுதான் அவர் செய்த தவறு. பிரச்சனையைத் தீர்க்க பல வழிமுறைகள் இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு நீதி மன்றம் அணுகலாமா.? . அப்படியே அவர் அணுகியதும் நீதிபதி எவ்வாறு அந்தத் தடையை நீக்க உத்தரவு இடலாம்.? ஆகவேதான் இரவோடு இரவாக மேல் முறையீடு செய்து மறுநாளே தடையை நீக்கியதற்கு தடை விதிக்கப் பட்டது பல வழி முறைகளுள் ஒன்றான சரணாகதி தத்துவம்  கமலஹாசனுக்குத் தெரியாதது துரதிர்ஷ்டமே.
                                      -------------------------------------------



சிறிய கார் உற்பத்தி குறித்து நம் எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும். VOLKSWAGEN  கம்பனி ஒரு சிறிய கார் உற்பத்தியை மேற் கொண்டு இருக்கிறார்களாம். ஒரே இருக்கையுடைய கார் 600 டாலருக்குக் கிடைக்குமாம். ஒரு காலன் டீசலில் 258 மைல்கள் ஓடுமாம். டாங்க் கொள்ளளவு 1.7 காலனாம். ஒரு முறை டாங்கை நிறைத்தால் 404 மைல்கள் போகலாமாம். அதன் வேகம் ஒரு மணிக்கு 60லிருந்து 70 மைல் வரை இருக்குமாம். கணக்குப் போட்டுப்பார்த்தால் ஒரு லிட்டர் டீசலுக்கு 100 கிலோ மீட்டர் தரலாம். கூடிய சீக்கிரமே மார்க்கெட்டுக்கு வருமாம். மின்காரை விட விலை குறைவு. என்ன ஒரே குறை என்றால் ஒருவர்தான் பயணிக்க முடியும்.

                                       --------------------------------------


காலையில் அருகில் இருக்கும் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குச் செல்வது வழக்கம். பலதரப் பட்டவர்களை தினமும் பார்க்கிறேன். ஆனால் கடந்த ஒரு வார காலமாக அங்கிருக்கும் பெஞ்சில் ஒரு சிறிய குடும்பத்தைப் பார்க்கிறேன். அவனுக்கு 30-லிருந்து 35  வயதுக்குள் இருக்கலாம்.அவள் அவன் மனைவியாக இருக்க வேண்டும் கைக்குழந்தையுடனும் கூடவே மூன்று வயதுக்குள் இருக்கும் இன்னொரு குழந்தையும் அருகில். பக்கத்தில் இருக்கும்  ஒரு மரக் கிளையில் ஒரு hand bag தொங்கிக் கொண்டு. பார்பதற்கு பஞ்சத்தில் வாடுபவர்கள் போல் இல்லை. சுமாராக உடுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் யார்.? இரவு எங்கே உறங்குகிறார்கள்? என்னமொழி ? எந்த ஊர்.? ஏன் இப்படி பூங்காவில் தங்குகிறார்கள்? இன்று மறுபடியும் அவர்கள் அங்குதான் தங்குகிறார்களா என்று அறிய மறுபடியும் போய்ப் பார்த்தேன். அவன் இருக்கவில்லை. அவன் குடும்பமிருந்தது.



எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் விசாரிக்கலாம் என்றால் “ உனக்கென்ன ஆயிற்று ? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போஎன்று சொன்னால் அவமானமாய் இருக்கும். மாறாக அவர்கள் அவர்களுடைய கஷ்டங்களைப் பட்டியலிட்டு உதவி கேட்டால்......இருக்க இடம் உணவு வேலை இன்னபிற குறைகளைச் சொல்லி அழுதால் ... நம்மால் ஏதாவது செய்ய முடியுமா. ?இரண்டு முதியவர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும். ஒரு வேளை உதவி செய்து அவர்கள் குறைகள் தீர்க்க முடியுமா.?
                                 ------------------------------------

இந்த மனிதர்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கை குறித்து கவலைப் படுவதே எனக்கு வாடிக்கையாகி விட்டது. அதே பூங்காவில் ஒரு சிறிய மண்மேட்டுக்கு பலரும் வந்து பூவிட்டு. பொட்டு வைத்து தூப தீபங்காட்டி வழிபடுவதை கண்டு மனம் வருந்தியதுண்டு. அவர்களிடம் அவர்களது அறியாமை பற்றிக் கூற வேண்டும் என்னும் ஆவலை மிகவும் பிரயாசையுடன் அடக்கி வருகிறேன். நான் மூடப் பழக்கம் என்பது அவர்களது நம்பிக்கை. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதி என்றால் எனக்கென்ன.? இதற்கு மகுடம் வைத்தாற்போல் இன்று அந்த மண் மேட்டில் ஒரு நாகலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது கண்டேன்.? என்ன சொல்ல.?                 ----------------------------------------------


இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு  நாங்கள் திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக் குடியிருப்பில் இருந்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் ஒரு எறும்புப் புற்று இருக்க . ஒரு நாள் அவர் மனைவியின் கனவில் அது ஏதோ அம்மனின் இருப்பிடம் என்றும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கட்டளை வந்ததாம். அது அரசல் புரசலாகத் தெரிய வர ஒரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு பக்தர்களின்

எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை அகற்ற செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும்  அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
                                -----------------------------------------


இதே BHEL குடியிருப்பில் ஒரு மரத்தடிப் பிள்ளையாராய் இருந்தவருக்கு ஒரு கோயில் கட்டி( அவருக்கு கருவறையில் இடம் கொடுத்து ) பிறகு அந்த வளாகத்தில் அய்யப்பனுக்கும் முருகனுக்கும் மேல்மருவத்தூர் அம்மனுக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்ததும் அந்தக் குடி இருப்பின் வரலாறில் இடம்பெற வேண்டிய விஷயங்கள். இதில் என்னை சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன வென்றால் அந்த வளாகத்தில் இடம் பற்றாக் குறையினால் குடி இருப்பின் இன்னொரு கோடிக்கு பெருமாள் போனார். பிள்ளையார் கோயில் சத் சங்கத்தாலும் , ஐயப்பன் கோயில் ஐயப்ப சேவா சங்கத்தாலும் . முருகன் கோயில் அருள் நெறி திருக்கூட்டத்தாராலும் , அம்மன் கோயில் மேல் மருவத்தூர் பக்தர்களாலும். பெருமாள் ஐயங்கார்களாலும் முக்கிய பங்கேற்கப்பட்டு நடத்தப் படுகின்றன. ஒரு REDEEMING FEATURE  என்னவென்றால் எல்லாக் கோயில்களுக்கும் எல்லோரும் செல்வார்கள். ஆனால் இவையெல்லாம் மேற்கூறப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாய் கருதப் படும் ஆண்டவனுக்கு இருக்கும் போஷகர்கள் சாதாரண பக்தர்கள் அல்ல.இதுதான் UNITY IN DIVERSITY யோ. சர்ச்சும் மசூதியும் கோருமளவுக்கு அவர்கள் எண்ணிக்கை இல்லை என்றே நினைக்கிறேன்.
           -----------------------------------------      .           .