சிறுகதை-வாழ்வியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை-வாழ்வியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜூன், 2012

அறிந்து கொள்ள...புரிந்து கொள்ள....


                                 அறிந்து கொள்ள.....புரிந்து கொள்ள....
                                 --------------------------------------------------


நிகழ்ந்த விக்ருதி ஆண்டு உற்றாரும் உறவினரும் குறித்த நாள் ஒன்றில்  திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி ராஜேஸ்வரிக்கும், நடை பெற்ற திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்டினான் மாங்கல்யம். 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு உயிர்கள் இணைந்து மூன்றாவது உயிருக்கு அடிகோல அனுமதி வழங்குவதே திருமணத்தின் தாத்பர்யம். ஆணும் பெண்ணும் நேரமறிந்து இணைந்தாலேயே மூன்றாவது உயிருக்கு வித்திட்டதாகும்..விலங்கினங்கள் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே நேரமறிந்தே கூடும்..அன்பு பரிவு எல்லாம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும்.,அதிகம் கட்டுப் பாடுகளை வகுத்துக் கொள்வதில்லை. பெற்றுப் போட்டவை தன் காலில் நிற்கும்வரை மட்டுமே அரவணைப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம். ( மேலை நாடுகளில் மக்களிடம் மெல்ல மெல்ல அப்படி ஒரு நிலை உருவாகி வருகிறதாமே.! இருக்கிறதாமே.!  HEY.! THAT IS BESIDES THE POINT.. OH.! AS IF EVERYTHING WRITTEN IS TO THE POINT AND RELEVANT.!) ஆனால் மனித குலத்தில் திருமணம் இனப் பெருக்கத்துக்குக் கொடுக்கப் படும் லைசென்ஸ். அனுமதி. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து, அன்பும் அறமும் பெற்று இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்யக் கிடைக்கும் அவகாசம். இதெல்லாம் தெரிந்ததுதானே, எதற்காக இந்தப் பீடிகை எல்லாம் என்று அலுத்துக் கொள்வது புரிகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நடந்தது சிவராமன் ராஜேஸ்வரி திருமணம்.எதிர்பார்ப்புகள் உற்றம் சுற்றத்துக்கு மட்டுமல்ல. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததும் நியாயமே.

ஊரும் உலகமும் கொடுத்த அனுமதியின் பேரில் இருவரும் இணைய அன்றைய மாலைப் பொழுதில் ரம்யமான சூழல் ஏற்படுத்தப் பட்டிருந்தது.

கையில் கையும் வச்சு, கண்ணில் கண்ணும் வச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன் நேரம் சப்ர மஞ்சத்தில் ஆட , சொப்ன லோகத்தில் கூட, ப்ரேமத்தின் கீதங்கள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, சயன நேரம் மன்மத யாகம்,புலரி வரை நமது யோகம் என்றே சிவராமன் காத்திருந்தான். அவன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏராளமான புத்திமதிகளும் அறிவுரைகளும் கொடுக்கப் பட்டிருந்தன. ஒரு வித ஆர்வமும் பயமும் ஒருசேரக் காத்திருந்தான்.( ஆணுக்கு மட்டும் பயமில்லையா என்ன.?)

பெண்ணுக்கு உன் மேல் மதிப்பு ஏற்படும்படி நடந்துகொள். அனாவசியத்துக்கு அவளை பயமுறுத்திவிடாதே. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளை  உன்பால் ஈர்க்கவேண்டும். முதலிரவு முக்கியமானது .கவனமாய் நடந்து கொள்.

வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் சிவராமன். மெல்லக் கதவு திறக்க தோழிகளின் கிண்டல்களும் கேலிகளும் தொடர அழகுப் பதுமையென ராஜேஸ்வரி உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் நேரத்தில் அணிந்திருந்த நகைகளில் பெரும்பாலானவை காணப்பட வில்லை. பட்டுச்சேலைக்குப் பதில் நல்ல நூல் புடவையே அணிந்திருந்தாள். திட்டமிட்டே உள்ளே அனுப்பப் பட்டிருந்தாள். ‘ செதுக்கிய சிலைபோல் இருக்கும் இவள் எனக்குச் சொந்தம் ‘என்னும் நினைப்பிலேயே அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். ’ஜில்’ என்றிருந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் அவள் பெயர் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அவளிடம் பேச முயன்றான். அவள் அவனிடம் சரளமாகப் பேசவில்லை.பெண்களுக்கே உரித்த நாணமாயிருக்கும் என்று அவன் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழிந்தது. ‘ அணைக்கட்டுமா’ என்றான். ’ஹாங்’ என்று அவள் திடுக்கிட்டாள். ‘இல்லை; விளக்கை அணைக்கட்டுமா என்றேன்’ என்று சமாளித்தான். விளக்கு அணைத்து சில வினாடிகள் இருவரும் அசைவில்லாமல் இருந்தனர். சிவராமன் முதலிரவை இழக்க விரும்பவில்லை. மெள்ள அவளைக் கட்டி அணைத்தான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.
ராஜேஸ்வரி இணங்குகிறாற்போல் தோன்றவில்லை. அணைப்பை சற்றே இறுக்கினான். திடீரென்று அவனுள்ளே ஏதொ வெடித்ததுபோல் இருந்தது. அவன் உடலின் வெப்பம் தணிந்து உடல் இறுக்கம் குறைந்து தளர்ந்தது. அவளை அணைப்பிலிருந்து தளர்த்தினான்.இது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஒரு பயம் பிறந்தது ‘ ஏன் என்னால் அவளை அடைய முடியவில்லை. அவளது தயக்கம் புரிந்தாலும் தயக்கம் விலகிய பிறகும் என்னால் அவளை அடைய முடியுமா?கேள்விகள் மனசைக் குடைய மறுபடியும் அவளை லேசாக அணைத்தான். அவள் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது. ‘மயிலே மயிலே இறகு போடு என்றும் போடாவிட்டால் பறிக்க வேண்டியதுதான் கைகள் அவளது உடலின் எல்லா பாகங்களிலும் நகர ஆரம்பித்தது. ராஜேஸ்வரி கொஞ்சமும் இணங்குவதாகத் தெரிய வில்லை. ‘ அவள் பெண் அப்படித்தான் இருப்பாள் நான் ஆண் என்னை என் சக்தியை நிலை நாட்ட வேண்டும் ‘ என்று மனதில் உறுதி கொண்டு அவளை நெருக்கினான். மறுபடியும் அவனுள்ளே ஏதோ நிகழ்ந்தது. உடல் இறுக்கம் தளர்ந்தது.சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தான். சொர்க்கத்தில் ஆனந்தம் தேட சயன நேரம் மன்மத ராகம் புலரிவரை யோகம் என்று கனவு கண்டவன் தான் எங்கோ மேலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாக எண்ணினான். அவள்தான் அப்படி என்றால் எனக்கு என்ன ஆயிற்று, கடவுளே இது என்ன சோதனை. திருமணம் உடல் இன்பம் எல்லாம் இனி கனவுதானா என்றெல்லாம் எண்ணி மறுகினான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ராஜேஸ்வரி எழுந்து விட்டாள். இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் அவதிப் பட்டவன் அயர்ந்து தூங்கினான்.


காலையில் வெகு சீக்கிரமாக எழுந்துவிட்ட ராஜேஸ்வரியை குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போய் அவளையும் அவளது உள்ளாடைகளையும் பெரியவர்கள் சோதித்தனர். ‘எல்லாம் நல்ல படியாக இருந்ததா ‘என்ற கேள்விக்கு உம்..உம்.. என்று பதில் கூறி அகன்றாள்.

காலை உணவு முடித்துக் கொண்டு முதல் வேலையாக சிவராமன் காணச் சென்றது அவனுடைய நெருங்கிய நண்பனும் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமான கோபால்ன் வீட்டிற்குத்தான். ‘ என்ன சிவராமா, திருமணம் நடந்த மறு நாள் காலையிலேயே வந்திருக்கிறாய். ஏதாவது ப்ராப்ளமா.?என்று கேட்ட கோபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறி கிட்டதட்ட அழுதே விட்டான்.
 ‘ சரி போகட்டும் . நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிக் சொல்லிக் கொண்டு வா,

சரி. கேள் “
நீ எப்பொழுதாவது சுய இன்பத்தில் ஈடு பட்டிருக்கிறாயா.?

“ என்ன விளையாடுகிறாயா.? அதெல்லாம் தவறு என்று எனக்குத் தெரியும்.

 “நீ அப்படி ஏதாவது செய்திருந்தால் தவறு ஒன்றுமில்லை. உன்னைப் பற்றி நீயே கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பாய். போகட்டும்.ஆண்குறிக்கு CIRCUMSITION என்னும் அறுவை சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா.? ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள உறை போன்ற தோல் புண்ர்வின் போது மேலே செல்ல வேண்டும் இல்லாவிட்டால் உணர்வு ஏற்படும் போதே விந்து வெளியேறி உனக்கு ஏற்பட்ட அனுபவம் சாத்தியக் கூறாகும். நீ என்ன செய்கிறாய் என்றால் முதலில் ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள தோல்   உறை மேலும் கீழும் போக முடிகிறதா என்று நீயே சோதனை செய்து கொள். பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி CIRCUMSITION  தேவையா என்று அறிந்து கொள். ,பிறகென்ன இன்பத்த்தின் எல்லைக்கே செல்ல முடியும்.


“ ஆனால் ராஜேஸ்வரிக்கும் உடலுறவில் சிறிதும் ஆர்வம் இருப்பது போல் தெரிய வில்லையே “

“ அது உறவு பற்றிய பல விஷயங்களை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். வேண்டாதது எல்லாம் கூறப்பட்டு உடலுறவு மேல் அவளுக்குஒரு வெறுப்போ பயமோ இருக்கலாம். ஆணின் ஆதிக்கம் ,குழந்தைப் பேறு குறித்த பயம் என்று என்னவெல்லாமோ ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கலாம். இவை எல்லாம் ஒரு பெண் FRIGID  ஆக இருப்பதற்குக் காரணமாகலாம்.

 இதல்லாமல் சாதாரணமாக பெண்கள் உடலுறவுக்குத் தயாராக நேரம் பிடிக்கும். ஆண், பெண் இருவரின் அணுகுமுறையும் உடலுறவு என்று வரும்போது வித்தியாசமானது. இருவரும் ஒருசேர இன்பம் அனுபவிப்பது பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளல் மிக அவசியம். வெறுமே இன விருத்திக்காக உடல் உறவில் ஈடுபட மனிதன் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் விலங்கினத்திட மிருந்து மனிதன் வெகு தூரம் வந்து விட்டான். எதற்கும் கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். “ என்றெல்லாம் ஆறுதல் கூறி கோபாலன் ,சிவராமனை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து கோபலன் சிவராமன் ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது

காது கொடுத்துக்கேட்டேன்
குவா குவா சப்தம்
இனி கணவனுக்குக் கிட்டாது
அவள் குழந்தைக்குத்தான்  முத்தம்

என்ற பாட்டு சப்தம் கேட்டு புன்முறுவலுடன் திரும்பி விட்டார்.

( ஆண்களிடம் IMPOTENCE  பெண்களிடம் FRIGIDITY  போன்ற குறைபாடுகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுவதில்லை. மனதிற்குள் குமுறி வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்போர் சிலர் எனக்குப் பரிச்சயம் உண்டு. ஒரு விழிப்புணைச்சிக் கதையாக இதனைப் பதிவிடுகிறேன். )                        :      .               .                                  .                                    
            

 “


.
 



புதன், 29 பிப்ரவரி, 2012

இன்னும் ஒரு காதல் கதை.


                                    இன்னும் ஒரு காதல் கதை
                                    -------------------------------------
                           (. எனக்கு மின் அஞ்சலில் ஒரு கதை வந்தது. இதை
                             தமிழாக்கி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.)

                                      Description:
                    cid:7FE152C4A67F4A4285EE6F0C3D08AE11@yourf78bf48ce2                                   

       அது ஒரு சுறுசுறுப்பான காலை வேளை.மணி 8.30- அளவில்
இருக்கலாம்.அப்போது ஒரு எண்பது வயது பிராயமுள்ள ஒரு
முதியவர், அவர் கையில் தையல் பிரிப்பதற்காக வந்தார்.
அவருக்கு ஒன்பது மணியளவில் ஒரு appointment இருப்பதாகவும்
அவசரத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆரம்பப் பரிசோதனை
முடித்து நான் அவரை அமரச் சொன்னேன்.அவர் தன் கைக்கடி
காரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது கண்டு நான் அவருடைய
காயத்தைப் பரிசோதித்தேன்.நன்றாக ஆறியிருந்ததால் ,தையலை
பிரிக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவர நர்ஸிடம்
பணித்தேன்.காயத்தைப் பரிசோதிக்கும்போது, அந்த முதியவரிடம்
பேச்சுக் கொடுத்தேன்.

     அவர் அவருடைய மனைவியுடன் காலை உணவு கழிக்க வேறு
ஒரு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றார்.அவர் மனைவி
உடல் நலம் பற்றி விசாரித்தேன்.

 Description:
                    cid:4B7E1CC62DDF40CCB5395F61E645F748@yourf78bf48ce2


       அவர் மனைவி சில காலமாக ஆஸ்பத்திரியில் இருப்பதாகக்
கூறி அவர் மறதி நோயினால் (ALZHEIMER DISEASE)பாதிக்கப்பட்டு
இருப்பதாகக் கூறினார் பேசிக் கொண்டு இருக்கும்போது ,நேரம்
தாமதமானால் மனைவி கோபித்துக் கொள்வாளா என்று
கேட்டேன் அவளுக்கு அவர் யாரென்று அடையாளம் மறந்து
போய் ஐந்து வருடங்கள் ஆகிறது என்றார்.

   
உங்களை யாரென்று தெரியாதிருந்தும் நீங்கள் தினமும் காலை
உணவை அவருடன் கழிக்கிறீர்களா என்றேன்.அவர் என் கை
மேல் கை வைத்து முறுவலுடன் சொன்னார்.” அவளுக்கு நான்
யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”.
Description:
                    cid:24D1EA3D693143EBB417BFCBCCC5EF9A@yourf78bf48ce2


  என் கண்களில் நீரைக் கட்டுப் படுத்த நான் சிரமப் பட்டேன்..
என் தொண்டையில் ஏதோ அடைத்தது.

     இந்த மாதிரிக் காதல்தான் வாழ்வில் வேண்டும். உண்மைக்
காதல் உடல் சம்பந்தப் பட்டது மட்டும் அல்ல. உண்மைக் காதல்
இருப்பது. இருக்கப் போவது, இல்லாமல் இருக்கப் போவது என
எல்லாமே அடங்கியது
Description:
                    cid:A6DFC76C5E4E40A6B06F5041D0A94B6C@yourf78bf48ce2

        வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்,  எல்லாம்
அடைந்தவர்கள் அல்ல.இருப்பதில் எல்லா மகிழ்ச்சியும்
காண்பவர்களே.

       வாழ்க்கை என்பது புயலில் இருந்து தப்பிப்பது மட்டும் அல்ல.
மழையில் நடனமாடவும் தெரிய வேண்டும்.

      நாம் எல்லோரும் முதுமை அடைகிறோம்.
      நாளை நீங்களும் அடையலாம். 

( நான் முன்பொரு பதிவு :" நினைவுகள் தவறி விட்டால் "
  என்று எழுதி இருந்தேன்..விழிப்புணர்ச்சி வேண்டும்
 என்று. .அதைத் தொடர்ந்து இதை வாழ்வியல் கதையாகக்
 கருதலாம் ) .




 
                                                                                                             







வியாழன், 3 நவம்பர், 2011

ஏறி வந்த ஏணி.....

                              ஏறி வந்த ஏணி.....( ஒரு சிறு கதை )
                             ------------------------------------------------
  ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன்,பேருக்காக
பேப்பரை புரட்டியபடி.வாசல் பக்கம் யாரோ வந்தமாதிரி
இருந்தது.சடாரென்று எழுந்துபோய்ப் பார்த்தால் அங்கே,


அங்கிள், உங்களைத் தேடிக்கொண்டு ஒருத்தர் எங்கள்
வீட்டுக்கு வந்திருக்கிறார்.கீழே வரச் சொன்னாலும் வர
மாட்டேன் என்கிறார்.என்ன செய்ய...”என்று கூறிக்கொண்டு
உள்ளே வந்தாள் மாடிவீட்டுச் சிறுமி.

என் மனைவி அந்தப் பெண்ணுடன் சென்றாள். சிறிது நேரத்த்தில்
நண்பன் சேகரனுடன் கீழே இறங்கி வந்தாள்.வந்த சேகரன்
“தொப்”பென்று அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பிறகு ஒரு
அசட்டுச் சிரிப்புடன்,  “ தெரியாமல் மேல் வீட்டுக்குப் போய்
விட்டேன். நீங்கள் யாராவது வந்து கூட்டிக் கொண்டு வருவீர்கள்
என்று தெரியும் . அதனால்தான்....”என்று கூறினான். அவன்
பேச்சும் நடவடிக்கையும் அவன் குடித்திருக்கிறானோ என்று
சந்தேகப் பட வைத்தது. சைகையால் என் மனைவியிடம்
கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.

சேகரன் களைப்புடன் காணப்பட்டான். “ நான் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக் கொள்கிறேன்.பிறகு பேசலாம் “ என்று சோஃபாவில்
இன்னும் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

“ காஃபி டி ஏதாவது குடிக்கிறாயா, இல்லை நேராகவே சாப்பிட
லாமா “என்று கேட்டேன்

“சே ..சே.. ஒண்ணும் வேண்டாம்..இப்போதுதான் சாப்பிட்டு
வந்தேன் “..அவன் சொல்லும்போதே அது பொய் என்று
தெரிந்தது.

என் மனைவி எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அவனுக்கு
சாப்பாடு எடுத்து வந்து , முன்னால் ஒரு ஸ்டூலில் வைத்துச்
சாப்பிடச் சொன்னாள். அவனும் கொஞ்ச தயக்கத்துக்குப்
பிறகு வேக வெகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சேகரன் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபோர்மேனாகப்
பணியாற்றி வந்தான்.சில மாதங்களுக்கு முன்பு அந்த
வேலையை விட்டுவிட்டு தனியாக ஏதோ தொழில் தொடங்கி
இருப்பதாகக் கூறியிருந்தான். தன் மனைவி, மகன் மகளுட்ன்
நன்றாகவே இருப்பதாகவும், ஒரு வீடு கட்டிக் கொண்டு
இருப்பதாகவும் கூறியிருந்தான். என்ன ஏது என்று துருவிக்
கேட்கும் பழக்கம் இல்லாதிருந்ததால் , மேற்கொண்டு எதுவும்
எனக்குத் தெரிய வில்லை. மகன் பெரியவன் டிகிரி முடித்து
வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், பெண்
அப்போதுதான் படிப்பு முடித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன்
என்னதான் வேண்டப் பட்டவர்களாக இருந்தாலும் சில கால
கட்டங்களில் அன்னியர்கள் போலத்தான் வாழ வேண்டி
உள்ளது.எது எப்படியிருந்தாலும் ஏதோ நல்ல படியாக இருக்
கிறார்கள் என்னும் சேதியே எல்லோரும் கேட்க விரும்புவது.

நான் சென்னைக்கு வரும்போது இரண்டு மூன்று நாட்கள் என்
மகனுடன் தங்குவேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ,
அத்தியாவசியமல்லாமல் எங்கும் போக மாட்டேன். கம்ப்ளீட்
ரெஸ்ட் தான்.

உணவு உட்கொண்டதும் சற்றே தெம்புடன் எங்களைப் பார்த்து
நலம் விசாரிக்க ஆரம்பித்தான். அவன் எங்களைப் பார்த்துப்
பேசிய விதத்தில் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய என்ன
என்று கேட்டேன்.

“ எனக்கு ஒரு கண் சரியாகத் தெரிவதில்லை.சக்கரை வியாதி
என்று சொல்லுகிறார்கள் “

”டாக்டரிடம் காட்டிகண்ணுக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்
டிருக்கலாமே “,என்றேன்

“ இப்போது அது ஒன்றுதான் குறைச்சல் “,என்று முணு
முணுத்தான்.

” என்னையா, என்னாச்சு,?ஏதாவது ப்ராப்ளமா.?தொழில் எல்லாம்
சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது ? “.

“ தொழில் என்று ஏதாவது இருந்தால்தானே சரியாகப் போக.”

“என்ன சொல்றெ நீ.?சொந்தத் தொழில் செய்வதாகத்தானே
சொல்லிக் கொண்டிருந்தாய்.வேலை என்னாயிற்று.?”

“ பின் என்னங்க..வேலை இல்லை சும்மா இருக்கிறேன் என்றா
சொல்லிக் கொள்ள முடியும்.”

“ வேலையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு தொழில் செய்வதாக
சொல்லிக் கொண்டிருந்தாயே”

“அதெல்லாம் சும்மா. VRS-ம் வாங்கலை, தொழிலும் செய்யலை.
என்னை அனுப்பி விட்டார்கள் “

“ அடடா...15/-வருஷத்துக்கு மேலா வேலையில் இருக்கும்
உன்னை எப்படி அவர்கள் அனுப்ப முடியும்.?”

“நான் வேலையிலிருந்தது ஒரு தனியார் தொழிற்சாலை-ன்னு
உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
அனுப்பிவிடலாம். ஒன்றும் கேட்க முடியாது.”என்று சொல்லிக்
கொண்டு வந்தவன் கூறியதிலிருந்து,

மெக்கானிக்காகச் சேர்ந்தவன் ஃபோர்மனாகப் பதவி உயர்வு
பெற்று நன்றாகவே இருந்தான். ஒரு முறை வாடிக்கையாளர்
களுடனான ஒரு மீட்டிங்கில் இவனும் கலந்து கொண்டிருந்த
போது, வந்தவர்களுக்கு தண்ணீரும் காஃபியும் கொடுக்க
இவனுடைய அதிகாரி இவனிடம்கூறியிருக்கிறார். “நான்
என்ன ப்யூனா.. ஆஃபீஸ் பாயா...நனொரு ஃபோர்மன் என்னால்
முடியாது “ என்று இவன் கூறியிருக்கிறான். வந்தவர்கள்
முன்னால் எதிர்த்து வாயாடிய இவனுக்கு கல்தா கொடுத்து
விட்டார்கள்.இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் எல்லோரிடமும் வீ.ஆர். எஸ் -ல்வந்து விட்டதாக
கூறி வந்திருக்கிறான்.

தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
விட்டது. போதாக் குறைக்கு தொழிற்சாலையில் கிடைத்த
பணத்தில்வீடு கட்டத் துவங்கி முடிக்க முடியாமல் திண்டாடிக்
கொண்டிருந்தான். அங்கும் இங்கும் கடன் வாங்கி வட்டியும்
கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் நான்
சென்னை வந்தது எப்படியோ தெரிந்து , விலாசம் வாங்கி
என்னை காண வந்திருக்கிறான்.

“ சரி.. விஷயத்துக்கு வா ,”என்றேன்.

“என் பையனின் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும். இரண்டு
நாள்தான் இருக்கிறது. வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி
வேறு கட்ட வேண்டும்”

“பையன் டிகிரி முடித்து விட்டான் என்றல்லவா சொல்லி
இருந்தாய்.”

“எங்கே முடித்தான்...அரியர்ஸ் இருக்கிறது “

“எவ்வளவு பணம் தேவைப்படும்.?”

” இப்போதைக்கு ஒரு மூவாயிரம் தேவைப் படும்.”

”  இந்த மூவாயிரத்தால் உன் கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.?”

“கஷ்டம் எங்கே தீரும்...இப்போதைக்கு சமாளிக்கலாம்.
அவ்வளவுதான் “

“ நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன். என்னிடம் அவ்வளவு
பண்ம் இல்லை.ஊருக்குப் போன பிறகு வேண்டுமானால்
முயற்சிக்கலாம். ஆனால் அது உன் பிரச்சனைக்குத் தீர்வு
ஆகாது. ‘என்று நான் சொன்னதும் அவன் முகம் வாடி விட்டது.

“ நம்பிக்கையோடு வந்தேன் “ என்றான்.

“ நீ எங்கிருக்கிறாய்.?உன் விலாசம் சொல்லு. நான் உன் வீடு
வந்து உன் மனைவியையும் மக்களையும் பார்க்க வேண்டும் “
என்றேன்.விலாசம் கொடுத்தான். திருவொற்றியூரிலிருந்து
வந்திருந்தான்.

“ நீ எப்படி வந்தாய்.. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது”
என்று கேட்டேன்.

”எப்படி எப்படியோ வந்தேன் “என்று சொல்லி ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தைக் காண்பித்தான்.

ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது.அது போகாத இடத்துக்கு
டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த
நிறுத்தத்தில் இறங்கி விடுவது இப்படியே இவ்வளவு தூரம்
வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான்.எனக்குப் பாவமாக
இருந்தது. என்னிடம் அப்போது இருந்த ரூ.500/- ஐ அவனிடம்
கொடுத்து, அவனை வீட்டில் பார்ப்பதாகக் கூறி அனுப்பி
வைத்தேன்.

அடுத்த நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் அங்கே
இருக்கவில்லை. அவன் மகன் ஸீக்ஸ்பாக் உடம்புடன் இருந்தான்
போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு முயற்சிப்பதாகக்
கூறினான். அவனுக்கு எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரிய
வில்லை.அப்பாவுக்கு சக்கரை வியாதியால் கண் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரியுமா என்று கேட்டபோது, அவருக்கு வயசாகி
விட்டது என்று விட்டேத்தியாக பதில் கூறினான். அவனது
மனைவியோ வீட்டில் இருந்த நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டு
இருந்தாள். சற்று நேரத்தில் பெண் வந்தாள்.சூட்டிகையான பெண்
போல் காணப்பட்டாள் வேலைக்கு முயற்சி செய்வதாய்க்
கூறினாள்.பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்
பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் என்று தோன்றியது.
நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை
விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது எனத்
தோன்றியது. அப்போது அங்கு வந்த சேகரன் என்னைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தான்..எனக்கு அவனைப்பார்க்கப் பாவமாக
இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.

நல்ல வேளை ..அப்போதே எனக்குத் தெரிந்த நண்பனுக்குப்
ஃபோன் போட்டு, ( அவன் ஒரு எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி
வைத்திருந்தான்.) சேகரனின் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு
செய்ய முடியுமா என்று கேட்டேன். அதிர்ஷ்டவசமாக,மறுநாளே
வந்தால் ஒரு வேலையில் சேரலாம் என்றான்.இந்த
மகிழ்ச்சியான சேதியை அவர்களிடம் கூறி விடை பெற்றேன்.

சேகரன் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டன. அன்றைக்கு
வழி காட்டப்பட்ட பெண் நன்றாக இருக்கிறாள்.மகனும் ஏதோ
வேலையில் இருக்கிறான்.இருவருக்கும் மணமாகி விட்டது.
அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.யாருக்காவது சேகரனைப் பற்றிய
நினைவோ,ஏறி வந்த ஏணிபற்றிய எண்ணமோ இருப்பதாகத்
தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------















.