வெள்ளி, 14 ஜூன், 2019

ஒரு கதம்பம்



                                          ஒரு கதம்பம்
                                          --------------------

அண்மையில் நண்பர் நெல்லைத்தமிழன்  என் பதிவு ஒன்றுக்கு கீழ்கண்டவாறு பின்னூட்டம் எழுதி இருந்தார்
”நான் என் பையன் கொஞ்சம் சின்னவனாக இருந்தபோது, இருவரும் பூங்காவில் ஓடி (அப்போது நான் 5 வருடங்கள் வெயிட் குறைத்து என்னை ஓரளவு ஃபிட் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்) அவனை ஜெயித்து காணொளி எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போ அவன் வேகத்துக்கு நடக்க முடியலை..ஹாஹா”
நானும்  ஒரு தந்தை மகனுடன் ஓடி தோற்றதை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்  வாய்ப்பாக  நினைத்து  இருந்ததை ஒரு பதிவாக்கி இருந்தது நினைவுக்கு வந்தது  மேலும்நாம்குழந்தைகளிடம் பாடம்கற்பதையும் சித்தரிக்கும் விதத்தில் ஒரு காணொளியையு ம் பகிர்கிறேன் 
 
             
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய். 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிட 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை. 
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன். 
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை. 

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது, 
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான். 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல், 

வீழ்வது எழுவதற்கே 

காணொளி

                          
வாசகப் பெருமக்களில்  பக்த கோடிகள் இதை ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்


 28 2 2005  மறக்க முடியாதநாள்  என் இரண்டாம்பேரன் பிறந்ததினம் மாலை அப்போல்லோ மருத்துவமனை  சென்னை  பிரசவத்துக்கு தயாராக  என் மருமகள்  எல்லாம் சரியாக இருக்கிறது  என்று சொன்ன டாக்டர்கள்  திடீரென குழந்தைகொடி சுற்றி மூச்சு திணறல்  இருப்பதால் சிசெரியன்  ஆப்பரேஷன்செய்ய வேண்டுமென்றார்கள்  நல்லபடியாய் நடக்க  வேண்டி சரி என்றோம்  சற்று நேரத்தில்  குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்தோம்   அந்நேரத்தில் எல்லாம் சரியாகநடந்தால் கர்ப்ப ரக்க்ஷகாம்பிகை  கோவிலில் தங்கத்தொட்டிலில் கோவில் சுற்றி வருகிறோமென்னும் பிராத்தனையும் இருந்தது  அந்தபிரார்த்தனை நிறை வேறிய போது  எடுத்த படங்கள் பழைய நினைவுகளுக்கு  இழுத்துச்சென்றது 


               


செவ்வாய், 11 ஜூன், 2019

தொடர்பில்லா நினைவுகள்




                                 தொடர்பில்லா  நினைவுகள்
                                  ------------------------------------------
  என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்  என்னும் யோசனையின் முடிவில் தோன்றியதே இந்த தொடர்பற்ற  நினைவுகள் /எண்ணங்கள் எப்போதும்   தொடர்புடன் தான்வருகிறதா ?
அப்போது நான்  பி எச் இ எல்லில்  இருந்தேன்  அசிஸ்டண்ட் எஞ்சிநீர் பெங்களூர்  வர பஸ் ஸ்டாண்ட் டுக்கு வந்தேன்  அங்கு ஒரு முகம் பார்த்ததுபோல் இருந்தது  அம்பர்நாத்த்தில் எனக்கு ஜூனியர்  அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தது ஆனாலும் பார்வையிலும்  தோரணையிலும்   ஒரு அலட்சியம் நான் நீங்கள் இன்னார்தானே  என்று விசாரித்தேன்  ஆம் என்றார் நான் பிஎச் இ எல் லில்  வால்வ் டிவிஷனில்  தரக்கட்டுப் பாட்டு துறையில் இருப்பதாகக் கூறினேன் பிறகு அவர் என்னைக் கேட்டதுதான்   என்னை திடுக்கிடச் செய்தது  அவர் மைகோவில் வேலையில் இருப்பதாகவும்  நான்  வால்வ் ஏதாவது விற்க விரும்பினால் அவர்  உதவி செய்வார் என்றும்   கூறினார்எனக்கு சே என்றாகி விட்டது  அவர் ஏதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதுபோலவும்  நான் அவர் உதவிக்கு ஏங்குவது போலவும்  அதன் பின் நான் பேசவில்லை
இதே போல் இன்னொரு முறை நான்படித்த பள்ளி மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது நான் பி எச்  எல் லில்  எஞ்சிநீராகப் பணியில் இருக்கிறேன் என்று சொன்னதும் அவன்சிரிப்பை அடக்க முடியாமல்  பத்தாங்கிளாஸ் படித்து ( பள்ளி இறுதிபதினொன்று ஆண்டானாலும் பத்தாங்கிளாஸ என்றே கூறுவார்கள்)  எஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி  சிரித்தான்
 ஒரு முறை நான் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது  ஒருவர் என்னை நிறுத்தி  விசாரித்தார்  அவரைப்பற்றிய ஞாபகம் எனக்கு வரவில்லை  பொத்தாம்பொதுவாக பதில் சொல்லி வந்தேன் அவர் விடைபெற்றுப்போகும்போது  தாங்க முடியாமல் அவர் யார் என்று நினைவுக்கு வரவில்லை என்றேன் மனிதனுக்கு  வந்ததே ஒரு கோபம்  நீங்களெல்லாம் இப்படித்தான்,  வேலையானால் போதும்   வேறு  ஒன்றுமே தெரியாது என்று புலம்பினார்  நான்மன்னிக்கக் கோரி அவரிடம் அவர் யார் என்று கேட்டேன் நான் எச் ஏ எல்லில்  பயிற்சியின்போது  பல துறைகளுக்கும்   செல்ல வேண்டி இருந்தது  பலரிடம் அதிக பட்சமாகஒரு வார காலம் பயிற்சியிலிருந்திருப்பேன்  அது நடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டனஅப்படி நான் பயிற்சியில் இவரிடமும்   இருந்திருப்பேன் சுத்தமாக நினைவில் இருக்கவில்லைஅவர் போனபின்  என் ஞாபக மறதியை  வைது கொண்டு வருந்தினேன் இதனால் தானோ  என்னவோ  பயிற்சியின்  போதுபலரும்  எதையும் சொல்லித்தருவதில்லை பின் ஒரு நாள் நாம் அவர்களுக்கே அதிகாரியாய்  வரலாம் என்னும் பயம்தான் 
 இனி எழுதுவது தொடர்பற்றதாக இல்லை எப்படி இருந்த நான்  இப்படியாகி விட்டேனே என்று நினைக்கும் போது எப்படி இருந்தேன் என்னும் நினைவும் வருகிறது/ சிறு வயதுகளில் நான் தடகளப் போட்டிகளில் ஓரளவு வல்லுனன்  அம்பர்நாதில் பயிற்சியின் போது நடந்த தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று உயரம் தாண்டுதலில் முதல்  பரிசு பெற்றேன்   என் அளவு உயரம்தாண்டினேன்   அதாவது ஐந்தடி நான்கு அங்குலம்  நினைவு அதல்ல. பங்கு பெற்றவர்களில் போட்டி  அதிகம் இருந்தது  இருவர் சாம்பியன்ஷிப் பரிசு பெற இருந்தனர் அவர்களில் ஒருவர் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்றால்  சாம்பியன் என அறியப்படுவார்  ஆனல் எதிர்பாராத வகையில்நான்  வெற்றி பெற்றேன் தனக்கு ஒருகண்போனாலும்  பரவாயில்லை என்பது போல் அவர்களில் ஒரு கூட்டத்தினர் என்னைத் தோள் மீது அமர்த்தி மைதானத்தை சுற்றிவந்தனர்அப்படி இருந்தநான் இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது                                      

                             


   

வெள்ளி, 7 ஜூன், 2019

லஞ்சம் சில எண்ணங்கள்


                             லஞ்சம்  சில எண்ணங்கள்
                             ------------------------------------------

 ஊழல்  லஞ்சம்
ஊழல் லஞ்சம்  குறித்து எழுத வேண்டும் என்றுநெடுநாளாக யோசனை இருந்தது ஆனால் எழுதி [பிரயோசனம் இல்லை என்றே தோன்றியது ஊழல் லஞ்சம் என்றால் உயர் மட்டத்தில்தான்  இருக்க வேண்டுமா  நம்மிடையே இருக்கும் பொதுவான குணம்தானே லஞ்சம் என்பது  நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றுதானே கையூட்டு என்பது கடவுளுக்கு கொடுத்தால் அது வேண்டுதல்  மனிதனுக்குக் கொடுத்தால்அது லஞ்சம்  நம்மில்   யார்தான்லஞ்சம் கொடுக்காதவர் எந்த அரசு அலுவலகத்தில்எந்த வேலையாக  வேண்டுமானால் லஞ்சம்கொடுத்துதான் ஆகவேண்டும் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லைநான்கொடுக்க மாட்டேன்  என்று அடம் பிடித்தால் நம் வேலை நடைபெறாது வெறுமனே அலைகழிக்கப்படுவோம்   இதற்கு பதில்  கொஞ்சம் தண்டம் அழவெ நாம் தயாராய் இருக்கிறோம் பைக் அல்லது கார் ஓட்ட உரிமம் பெறுபவர்கள்  எல்லோருக்கும் தெரிந்தது தான்
 என்பேரனின்   திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற  கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/  எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்‌ஷன்பெற  பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர்  நானும்  அந்தப்பணத்தோடு  அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன்   ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர்  கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர் ரூ 8000 உடன்  அவர்களுக்கான பண்மும் சேர்த்து   கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன
 2011 ம் ஆண்டு அன்னா ஹசாரே ஒரு மாபெரும் உண்ணா விரதப் போராட்டம்நடத்தினார் லோக் ஆயுக்த  மற்றும் லோக்பால்  போன்ற அமைப்புகள் கோரி யது  அந்தப் போராட்டம் அந்தப் போராட்டம்குறித்து அறிந்த பலரும்   அதற்கு ஆதரவு தெரிவித்தனர் உயர்மட்டத்து ல்ஞ்ச லாவண்யங்கள் மட்டுமே முன்   நிறுத்தப்பட்டன ஆனால் தினசரி கண்முன்னே நடந்தேறும் கைய்யூட்டுகளை  விசாரிக்க யாராவது  புகார் கொடுக்க வேண்டுமாம்   கடவுளுக்கே லஞ்சம்கொடுக்கும் நாம்  இம்மாதிரி சிறிய குற்றங்களுக்கா புகார்கொடுப்போம்நம்காரியம் நடக்க  நாம்கொடுத்துதான்  தீரவேண்டும் வாழ்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக் கொள்வோம்
பெரிய அளவில் பணம் பெறுபவர்களையே நாம் குறி வைக்கிறோம்   அதுதான்  நம்கண்களுக்கு  குற்றமாகத் தெரிந்தது  
நாம் தினப்படி காணும்லஞ்சங்கள் பெரிதாய்  தெரிவதில்லை உயர் அதிகாரிகளே  ஊழல் செய்கிறார்களென்று சமாதானமடைவோம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ  நடந்தாலும் திருட்டு என்பது திருட்டுதான் அதேபோல் எந்த அளவில்  ஆனாலும்லஞ்சம் லஞ்சமே எனக்கு இது தெரியாமல் ஒரு பதிவு எழுதி இருந்தேன்  இது லஞ்சமா என்றுகேட்டு  நான் சில மாதங்கள் படிப்பை நிறுத்தியதால் தடைபட்ட என் படிப்பை தொடொர நிகழ்ந்த சம்பவஙகள்  எனக்குள் சிலசந்தேகங்களைக் கிளப்பியது  அதுவே பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்   

திங்கள், 3 ஜூன், 2019

ஐஸ்கிரீமும் ஜாஃப்ஃபியும்


                                                     ஐஸ்க்ரீமும்  ஜாஃப்ஃபியும்
                                                      -----------------------------------------
 
சிலநாட்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் நெல்லைத் தமிழன்   பதிவில் ஏன் மாமரம் பற்றி எழுத வில்லை என்று  கேட்டிருந்தார்
இந்த ஆண்டு எங்கள் வீட்டு மாவின்  கொடை அதிகமாய் இருந்தது ஊறுகாயாக(கல்யாண மாங்காய் , ஆவக்காய் ) போன்று பலவும் போட்டும் கொடுத்தும் காய் பறிப்பவரின் பங்கும் பாதிக்கு மேல் போயிற்று  தினமும்மாம்பழம்சாப்பிட்டு அலுத்து விட்டது இது தவிர கச்சா மாங்கோ  ஜூஸாகவும்   மாம்பழ ஜூசாகவும் செய்து சாப்பிட்டோம்  சரி ஒரு மாற்றாக  ஏதாவது செய்யத் தோன்றியது ஏன் மாம்பழ ஐஸ் க்ரீம்செய்யக்கூடாது  என்று தோன்றவே செயலில் இறங்கினேன்முதலில் எனக்கு ஐஸ் க்ரீம்   செய்யத்தெரியாது  எல்லாம் செய்து பார்ப்போமே என்று தோன்றவே  எனது ரெசிப்பி இதோ
பாலை நன்கு சுண்டவிட்டுக் காய்ச்சவும்தேவையான அளவு சர்க்கரையும்சேர்க்கவும்மாம்பழத்தின் சதைப்பாகத்தை ஸ்கூப் செய்து எடுத்து மிக்சியில் அரைக்கவும் நன்கு விழுதாகும்போதுசுண்ண்டக்காய்ச்சின  பாலையும்சேர்த்து அரைக்கவும் விழுதை  ரெஃப்ரெஜிரேட்டர் ஃப்ரீசரில் வைக்கவும் சிறிது நேரம்கழித்து எடுத்தால் ஐஸ்க்ரீம்  ரெடி இதில் பாலைகாய்ச்சுவதும் சர்க்கரை சேர்ப்பதும் அவரவர் சுவைக்கு ஏற்ப  இருக்கும் நான்செய்தது ஐஸ்க்ரீம்டேஸ்ட்   இருந்தது !!!!!
 கீதா சாம்பசிவத்தின் மொழியில் இன்னொரு திப்பிசம்
காஃபி தெரியும்   ஜாஃபீ தெரியுமா மாம்பழம்  கொடுத்த வீட்டில் இருந்து பலாப்பழம்கொடுத்தார்கள்  என் திப்பிசம் பலாக்கொட்டையில் இருந்து உருவாயிற்று  பலாக்கொட்டையை  மேல் தோல் எடுத்து பிறகு சிறிது சிறிதாய்  நறுக்கி எடுக்கவும்  அதை நன்கு வறுக்கவும் எண்ணை ஏதும்வேண்டாம்(காஃபிக் கொட்டையை வறுப்பதுபோல்) வறுத்தெடுத்ததை காஃபிப்பொடிபோல் பாவித்து மிக்சியில் அரைக்கவும்   காஃபி செய்வதைபோல்  செய்யவும்  என் வீட்டில் நாங்கள்பெர்கொலேட்டர் உபயோகிப்போம்  பின் காஃபி போல் செய்தால் ஜாஃபி ரெடி ஆனால்  இதுகாஃபி சுவைதராது  ஒரு மாற்றத்துக்கு  செய்தது சிக்க மகளூரில் யாரோ செய்தார்களாம் நானும் செய்தேன் காஃபியால் உண்டாகும்  கஃபைன்  போன்றவை இல்லாத ஒரு பானம்செய்து பார்க்கலாமே

 என் வீட்டின் பக்கவாட்டில் சுமார் 15 மீட்டர் நீள பாதை இருக்கிறது  நான் இப்போதெல்லாம் அங்குதான் நடை பயில்கிறேன் சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணிநேரம்வரை   அப்போது தினமும் ஒருபூனைக் குட்டி  எங்கள் தோட்டத்துக்குவந்து எதையோ பிடிக்கமுயலும்அதைப் பார்ப்பதிலும் நான் நேரம் கழிப்பதுண்டு  என்னவோ தெரியவில்லை அது தினம்வரும் சுமார்  பத்து பதினைந்து நிமிடம் இருக்கும்  பின்  மாமரம்  ஏறி எங்கோ போய்விடும்  சின்னக்குட்டிதானே பயம் தெரியாதது  அதைப் படமெடுத்தேன் அதுவே இங்கு கீழே   பூனைகள் இடங்களின் விசுவாசி நாயைபோல் எஜமானர்களின் விசுவாசி அல்ல என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்அதிராவும் துளசி டீச்சரும் சொல்லலாம்  சரியா என்று  


tதொட்டி  அருகே பூனை தெரிகிறதா


எதையோ நோட்டம்விடுகிறது

வாழ்க்கை பாடம்  ஒரு காணொளியில்

எல்லாம்கற்றது போல் இருந்தாலும் இன்னும் கற்க நிறையவேஇருக்கிறது











        vaazkkai paatam  

சனி, 1 ஜூன், 2019

சில அரிய புகைப்படங்கள் இணையம்வழியே



                            சில அரிய புகைப்படங்கள்  இணையம் வழியே
                            --------------------------------------------------------------------------
பனி சிற்பம் 
சிறுத்தையும்  மானும் 
சிறுத்தையும் குட்டியும்
பஞ்ச பாண்டவர்கள்/?
சிங்கக் குட்டிடா 
பனிசிற்பம்


ஒரு சிறிய காணொளி  மிலிடரி ப்ரெசிஷன்