Tuesday, December 14, 2010

விடாக் கொண்டன்

விடாக்கொண்டன்
----------------------------
பலரும்   படிப்பதற்கென்றே  படைத்த
படைப்பு , படிக்கப்படாமலேயே  போக
காரணம்  காணத்  துணிந்தேன் - ஒருவேளை ,
படித்தும்  ஏதொரு  பாதிப்பும்  ஏற்படுத்த
தகுதி  இழந்ததோ  நான்  மருகி  எழுதிய  எழுத்து .?

       இரட்டைப்  பிறவிகளாகப்    பிரசுரிக்க
       நான்  வேண்டியதில்  ஒன்றே  வந்து
       மற்றது  மறைந்தே  போனது
      வலைத்திரட்டியில்   அதுவும்  காரணமோ, ?

நானும்  விடாக்கொண்டன்   கொடாக்கொண்டன்
என மீண்டும்  எழுதுவேன். --வேண்டாமே ,
எழுதியதே  உளதே  நான் ஏன் பிறந்தேன் என்று.
படித்துதான்  பாருங்களேன்.

      

6 comments:

  1. :)

    உங்கள் ஆர்வமும் விடாமுயற்சியும் ஜெயிக்கும் G.M.B சார்!

    ReplyDelete
  2. நல்ல விஷயங்களுக்கு அப்படித்தான்.

    கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று பெரியோர்களையே புலம்ப வைத்த பெருமையான பரம்பரையல்லவா?

    நானும் கொஞ்சம் லேட். ஸாரி பாலு சார்.

    ReplyDelete
  3. திரு. சுந்தரா- வுக்கு நன்றி. நீங்கள் என் பதிவு , நான் ஏன் பிறந்தேன் படித்திருந்தால், உங்கள் வாக்குப்படி நடந்ததாய் இருந்திருக்கும். திரு. சுந்தர்ஜி- க்கு,விடாக்கொண்டனைப் படித்தவர்கள் அதிலிருந்த ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவில்லையே.நானும் என் முயற்சியை விடுவதாயில்லை.. மீண்டும் என் நன்றி.

    ReplyDelete
  4. //நானும் என் முயற்சியை விடுவதாயில்லை..//

    :)

    ReplyDelete
  5. Success is never ending..failure is never final..The hare and tortoise..kajini.many more tales to usurp us.
    dig deep..devote..persistence pays the dividend..a bit latter may be..best wishes Boss..keep egging

    ReplyDelete
  6. Thanks a lot Sri. Senpagadasan.This old man is getting confused. Senpakadasan and kalidoss
    is one and the same , Am I right.?

    ReplyDelete