Wednesday, December 22, 2010

திருந்தச்செய். திருந்துவதற்குச் செய்.

 திருந்தச்   செய்      திருந்துவதற்குச்  செய்.
------------------------------------- ------------------- --            சாதாரணமாகவே   எழுதுபவர்கள்  கொஞ்சம்   சென்சிடிவ்   டைப்   ஆனவர்களே.  மனதளவில்  சுற்றிலும்  நடக்கும்  விஷயங்களால்   பாதிக்கப்  படுபவர்கள். ஏதோ  செய்ய  வேண்டும், எப்படியாவது  செய்ய வேண்டும் என்ற  உத்வேகத்தால்  உந்தப்   படுபவர்கள். ஆனால்  எதையும்  செய்ய முடியாதபோது  எழுத்தில்  தங்கள்  உள்ளக்கிடக்கைகளை  வெளிக்  கொணர்கிறார்கள்.  பொழுது  போக்குக்காகவும்,  தங்கள்   திறமைகளை   வெளியுலகிற்குத  தெரியப்  படுத்துவதற்காகவும்  எழுதுபவர்களும்  உண்டு. அதை  அவர்கள்  எழுதுவதைப்  பார்த்தாலே  தெரிந்து  விடும்.

             நானும்   நம்மைச்சுற்றி  நடக்கும்  அவலங்களைக் கண்டு,           ஆற்றாமையாலும்  கையாலாகாத்தனத்தாலும்   சில வரிகள் எழுதியிருந்தேன்.  இத்தகைய   பாதிப்பில்   இருந்து   வெளிப்படவே நமக்கு  மறதி என்னும்  வரத்தை ( வரமா அது. ?) ஆண்டவன்   கொடுத்துள்ளான்.  அதுவே  மறதி   போற்றுவோம்  என்ற கவிதை  ஆனது.

             நாளொரு  போராட்டமும் பொழுதொரு  தர்ணாவும் நாடு முழுவதும் நடக்கிறது.. இவற்றில் பெரும்பாலானவை சொந்த மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படுபவை  போராட்டத்தில்  கலந்து  கொள்பவர்கள்  அனைவரும்  பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.  தூண்டுதலின்  பேரிலும்  சுயநலத்துக்காகவும்  ஈடுபடுபவர்களும்  உண்டு. ஆனால் உண்மையாகப்   போராட்டத்தில்   ஈடுபடுபவனின் எண்ணம்  மட்டும் ஏற்ற  தாழ்வுகள்  குறித்தும், கிடைப்பவனுக்கும்  கிடைக்காதவனுக்கும் , இருப்பவனுக்கும்  இல்லாதவனுக்கும்  இருக்கும்  மேடு  பள்ளங்களை  சரி  செய்ய  முடியாத, இயலாத  நிலையின்  வெளிப்பாடே.  வாய்ப்புக்காகவும்  நீதிக்காகவும்  போராட  நினைப்பவனை,  அரசியல் வாதிகளும், சந்தர்ப்ப  வாதிகளும்  தங்கள்   நலனுக்காக  உபயோகிக்கின்றனர் . போராட்டங்களில்   தீக்குளித்து  உயிர்  விடும்  அப்பாவிகளைப்  பற்றி  நாம்  சிந்திக்க  வேண்டும்.

          நாம் ஏதாவது  செய்யவேண்டும்  என்ற சிந்தனையால்  உந்தப்பட்டு, உண்மையாகவே ஏதாவது  செய்ய   விரும்பினால், எந்த முயற்சியும்  செய்யும்  முன்பே மிகத்தெளிவாக  இருத்தல்  அவசியம். நம்முடைய   இலக்கு  என்ன.? நான்  எனக்கு  வேண்டப்பட்டவர்களிடம்   கூறுவது, "Aim at the stars;at least you can reach the tree top."
இலக்குகளை  நிர்ணயிக்கும்   முன்பாக கடந்தகால   நிகழ்கால நிகழ்வுகள்  பற்றி  சீரிய   சிந்தனை  வேண்டும். நாம் எங்கிருந்தோம்,  எப்படி இருந்தோம், இப்போது எங்குள்ளோம்   எப்படி இருக்கிறோம் என்ற ஒரு  அலசல்  அவசியம். நாம் என்று  நான்  சொல்லும்போது, அது   தனிப்பட்ட நம்மைப்பற்றி  மட்டுமல்லாது , நாம் இருக்கும்   சமூகம்  பற்றியும்  இருக்கவேண்டும். நாம் எப்படியெல்லாம்  இருந்தோம் என்பது  கேள்வி ஞானத்தாலும்  படித்தறிவதாலும் நம்  சொந்த அனுபவங்களினாலும்  தெரிய  வருபவை. அடைய  வேண்டிய  இலக்கை  நிர்ணயிக்க இது  அவசியம்.

           இந்தியா   சுதந்திரம்  அடைந்தபோது   நாமிருந்த   நிலையென்ன.?இப்போது  நாம்  இருக்கும்  நிலையென்ன. ? மாற்றங்கள்  நிகழ்ந்திருக்கிறதா.? மாற்றங்கள்  நல்லவையாக இருந்திருக்கிறதா.? எதிர்பார்த்தபடி  நிகழ்ந்துள்ளதா.? எதிர்பார்ப்பு   என்றால்   யாருடைய  எதிர்பார்ப்பு.? சென்ற  தலைமுறையின்   எதிர்பார்ப்பா.? இப்போது   உள்ளவர்களின்  எதிர்பார்ப்பா.? கேள்விகளைக்   கேட்டுக்கொண்டே   போகிறேன். காரணம் கேள்விக்கு  பதில்  கிடைக்கும்போது, சிந்தனையில்  தெளிவேற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

           சுமார்   30 கோடி மக்கள் இன்று சுமார்  110 கோடியாகி உள்ளனர். இந்த  மாற்றம்  நல்ல  மாற்றமா, முன்னேற்றமா.? சுமார்  37 வருடங்கள்  சராசரி  வயது  என்றிருந்தது
இன்று சுமார் 65  வருடங்கள்  என்றாகியிருப்பது முன்னேற்றமா, நல்ல மாற்றமா.? 30 % -க்கும் குறைவாக  படிப்பறிவு  இருந்த  இடத்தில்  சுமார் 50% -க்கு  மேல்  உயர்ந்துள்ளது  எத்தகைய  மாற்றம்.?

           என்  இள  வயதில்  எங்கள்  ஊரில் தாழ்த்தப்   பட்டவர்கள்  கிராம  வீதிகளில்  நடந்து  வருவதே நினைத்துப்   பார்க்க  முடியாத ஒன்று. வீடுகளில்  மலஜலம்  அள்ள   வருபவர்கள், தெருக்களின்  பின் வழியே  வந்து, அவர்கள் வருகையை  உரக்கக்கூறி   அறிவித்த  பிறகே  அந்தப்  பணியைச்  செய்ய  முடியும். இன்று அதைக்  கற்பனையில்தான்   காணமுடியும். ஆனால்  இன்றும்  Manual  Savenging  சில இடங்களில்  இருப்பதைப  படித்துத்  தெரிந்துகொண்டேன்.

           பிறப்பொக்கும்   என்று கூறி  வாய்  கிழியப்  பேசும்  நாம்  ஏற்ற  தாழ்வுகள்  விலக,  வாய்ப்பு  வேண்டி  உள்ளவர்களுக்கு  சரியான  பாதை  போட்டுக்  கொடுத்திருக்கிறோமா
கடந்த  சில நாட்களில்  நான் ஒரு  செய்தி  படித்தேன்.  குக்கி  சுப்பிரமணியா  என்ற   கோயில்  உள்ள  ஊரில் தலித்  மக்கள்   உருளு  சேவை  ( அங்கப்பிரதட்சிணம் )  செய்தார்களாம். இதில்  என்ன  விசேஷம்  என்றால், அவர்கள் மேல்  சாதியினர்  உண்டு  எழுந்த  காலி  எச்சில்  இலைகளின்  மேல் அங்கப்  பிரதட்சிணம்  செய்ய  வேண்டும்.  அப்படிச்  செய்தால்  நலமுண்டாகுமாம். இந்த 21 -ம  நூற்றாண்டில்  இத்தகைய  நிகழ்வுகளும்  நம்மைச்  சுற்றி  நடக்கின்றன.

           இதையெல்லாம்  நான்  கூறுவதன்   காரணம், விஷயங்கள்  உள்ளது  உள்ள படிஎல்லோரும்  உணரும்படி அனைவருக்கும்  தெரிய வேண்டும்.  நம்மிடம்  உள்ள பிளஸ்   அன்ட்  மைனஸ்  பாயிண்டுகள்  நமக்குத்  தெரிய  வரவேண்டும்.

           நான் சிக்ஸ்த்   பாரம்  என்ற S.S.L.C. படிக்கும்  வரை  பௌண்டன்  பேனா   உபயோகித்தது   கிடையாது. இங்க  பாட்டிலும்   கட்டைப்  பேனாவும்தான் படித்து முடித்து முதல்   வேலைக்குப் போகும்வரை காலணியே அணியாதவன். படிக்கும் போது ஒவ்வொரு   பாடத்துக்கும்  தனி  நோட்டுப்  புத்தகம்  கிடையாது. எல்லாப்  பாடங்களும்  தடிமனான  ஒரே  நோட்டுப் புத்தகத்தில்தான்  இத்தனைக்கும்  எங்கள்   குடும்பம்  ஏழைக்  குடும்பம்  என்று  ஏற்றுக்  கொள்ளப்பட்டதல்ல.  என்  தந்தையின்  ஊதியம்  எட்டு, பத்து  பேர்களுக்குப்  பசியாற்ற  வேண்டும்,  எல்லாவற்றுக்கும்  பதில்   சொல்ல வேண்டும்.

           நாங்கள் வளர்ந்து   பெரியவர்களாகி எங்கள்  குடும்பங்களைப் பராமரிக்கும்   நிலை  வந்தபோது அறிந்து  செய்தது  அளவான குடும்பம்  அமைத்துக்  கொண்டதே.
இதன் சூட்சும  நிலை பெரும்பாலோரால்   உணரப்பட்டு இப்போது நாம் காணும் Nucleus Families. இதற்குத்  தேவைப்பட்டது கொஞ்சம்  அனுபவமும், கல்வி  அறிவும்.
சென்ற  தலைமுறையை  விட இந்தத்  தலைமுறையும் வரும்  தலைமுறைகளும்   சிறப்பாக  இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை சரியான வழிகாட்டல்களே.

          இப்போது  இந்த  எதிர்பார்ப்புக்கு  விடிவெள்ளியாக  நான்  காண்பது, நமது  அரசால்  நிறைவேற்ற  நினைக்கப்படும்  சில திட்டங்கள்தான். சில  உரிமைகளை  சட்ட  பூர்வமாக அமல்படுத்தத்   துவங்கியிருக்கும்  சில செய்கைகளே . இவற்றில்  முக்கியமாக   Right to information,  Right to education, Right to food, Right to work, போன்றவையே.
எல்லாவற்றையும்  பட்டியலிடவில்லை. நோக்கம்  சரியாக  உள்ளது  என்பதைத்   தெரியப் படுத்தவே  கூறினேன்.

         ஆனால்  இந்த  நோக்கங்களை  செயல் படுத்தும்போது  அதன்  முழுப்  பலனையும்   பெறவிடாமல்  தடுப்பது  இந்த ஊழல்  நடைமுறைதான். ஒதுக்கப்பட்டிருக்கும்  அளவில்
கால்  பங்கு  அளவு  கூட  இலக்குகளை  சென்றடையாமல்  ஊழலர்களால்  முழுங்கப்  படுகிறது.  இந்த  ஊழலைச்  செய்பவர்களே  நாம்தானே. அரசில்  பங்கு வகிப்பவர்தானே.
பொதுவாக  இப்படிக்  கூறுவது  சரியாகப்படாது. என்ன செய்யலாம்  என்று  கூறுகிறேன்.

        ஏதாவது  செய்ய வேண்டும்; போர் முரசு கொட்டவேண்டும்;   போராடவேண்டும் என்றேல்லாம்    கூறும்போதே   கவனமாக  செய்ய வேண்டும், பலனளிக்கும்  முறையில்  செய்யவேண்டும், சாத்வீகமாக  செயல்பட வேண்டும் என்ற விவேகமும் கூடவே  இருப்பது  நல்ல அறிகுறியே.

          1). Proximity is important. ஆனால்அது நமக்கில்லை. வலைப்பதிவாளர்கள்  நாம் பலஇடங்களில்  சிதறிக்  கிடக்கிறோம். எண்ணப் பகிர்தலில்தான்  ஒன்று சேர முடியும்.   பலரது  வலைத்தளங்களில்  பரவலாக எழுதப்படும  கருத்துகளை, பல பதிவர்கள்  ஒரே   தளத்தில் ( இந்த நோக்கத்திற்காக  எழுதும்போது ) தெரிவிக்கலாம். முதலில்  ஏதாவது  செய்ய வேண்டும்  என்ற உத்வேகம் பரவலாகப் பரவவேண்டும் இந்தவலைத்தளத்துக்கு  உறுப்பினர்கள் சேர்வதைக்கண்டு எந்த அளவுக்கு  சிதறிக் கிடப்பவர்கள்  செயல்பட முடியும் என்று  தீர்மானிக்கலாம்.

         2) ஊழலும்  அக்கிரமங்களும் எங்கு  நடக்கிறதோ அதனைக் குறிப்பிட்டு  தட்டிக்   கேட்கலாம். வலைத்தளம்  ஒரு ஊடகமாகச்  செயல்படலாம். மற்ற   ஊடகங்களின்   உதவியையும்  நாடலாம்.

          3) தகவல்  அறியும்  சட்டத்தை உபயோகித்து தட்டிக் கேட்கலாம். அதற்கு எந்த  இடத்தில்  யாரால்  ஊழல் நடைபெறுகிறது என்று ஓரளவுக்கு  உண்மை  விவரங்கள்   வேண்டும். பிறகு  அதனை வெளிச்சம்  போட்டுக்  காண்பிக்கலாம்.

          4) இந்த வலைத்தளத்தில் பங்கு  பெறுபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக     இருக்க வேண்டும் . அரசு  ஊழியர்களாக  இருந்தாலும் சரி.

          5) சார்பு  சேரா  அமைப்புகள் நிறையவே நல்ல பல  சேவைகள்  செய்து  கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு  அகரம்  கல்வி அமைப்பு, உதவும்  கரங்கள்  போன்றவை   நிறையவே உள்ளன. இந்தமாதிரி  தொண்டு  நிறுவனங்களுக்கு  ஆதரவு தரலாம்.

          6) சுத்தம்  சுகாதாரம்  சுற்றுப்புற  சூழல்  போன்றவற்றில் தனிப்பட்ட  முறையில்    என்னவெல்லாம்  செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வது. அயல்  நாடுகளில்  எச்சில்துப்பக்கூடாது,  குப்பை  போடக்கூடாது  என்ற சட்டங்களை  மதித்து  நடக்கும்   நம்  மக்கள் நம் ஊரில் அதை  ஏன்  கடைப் பிடிக்கக் கூடாது.?இங்கிருந்து  அங்கு  செல்பவர்கள்  அந்த  நாட்டின்  சட்டத்தை   மதிக்கிறார்கள். அங்கிருந்து  இங்கே  திரும்பி வந்தவுடன்  இங்குள்ளவர்களிடம்  ஐக்கியமாகி  விடுகிறார்கள்.  நான் முன்பே  கூறியபடி   முதலில்   நம்மை நாமே  திருத்துவோம்.  Because  charity begins at home.
----------------- ------------------------------------ ----------------------       










        



     



 







 .










        






 
            

5 comments:

  1. மிக அற்புதமான தெளிவான ஓடையின் பயணமாய் எண்ணங்களைத் தொகுத்திருக்கிறீர்கள் பாலு சார்.

    எல்லா மாற்றங்களையும் தொகுத்து முத்தாய்ப்பாய் ஆறு அருமையான யோசனைகளையும் தெரிவித்திருக்கிறீர்கள்.

    ஆறாவதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் யோசனைதான் நான் எப்போதும் முதலாவதாகச் சொல்வது. நம் நாடு என்ற பெருமிதமான
    மனோநிலைதான் முதலில் வரவேண்டும்.நமது தேசீய கீதத்தைக் கேட்கும் போது நமது மனநிலை என்னவாக இருக்கிறதோ அதே மனம் நமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உணரும்வகையில் வெளிப்படவேண்டும்.
    சுத்தம்தான் பிரதானம்.நம்முடைய விதிகளை நாம் மதிக்க வேண்டும்.சாலையில் விதிகளை அனுசரிக்கவேண்டும்.இதிலிருந்து துவங்கும் மாற்றம் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வாயிலாக இருக்கும்.

    தொடர்வோம் பாலு சார்.

    ReplyDelete
  2. நீங்கள் கூறி இருக்கும் அத்தனையும் உண்மை. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது- நாம் எங்கிருந்து இங்கு வந்துள்ளோம் என்று நாம் அறிதல் அவசியம் என்று நீங்கள் கூறியிருக்கும் ஒன்று தான். எனக்கு 23 வயது. நான் ஒரு software engineer . இப்போது நம் நாட்டில் உண்டாகியிருக்கும் ஒரு புது வித ஜீவராசி இந்த software பிரிவைச் சார்ந்தவர்கள் என்று கூறலாம். நான் என் வட்டாரத்திற்கு வெளியே என்னை வைத்துப் பார்த்ததில்- இவர்களின் திறனும் துல்லியமும் ஆக்கபூர்வமான காரியங்களை நோக்கி ஈடு படுத்த வைத்தால் நிச்சயம் பலன் அளிக்கும் என்பது என் கருத்து. ஆனால் இந்த காலத்தில்- கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்ககூட நேரமில்லாது அலையும் ஜீவராசிகள் தான் நிறை. இவர்களுக்கு நாடு சுதந்திரம் கலாசாரம் சமுதாயம் போன்ற சிந்தனைகள் ஏதும் பாத்தியதை ஊட்டுகிரதாக தோன்றவில்லை.

    history stops with their 10th std. papers. every one aims to be doctors and engineers. who cares? it's a breed of race horses out there!

    ReplyDelete
  3. A small story to share ... When one sits in the driving seat he has to look on the road ahead and if he sees the rear view mirror and drives... would he reach the destination.???... once a while we can look at the rear view mirror. Thats not a problem as long as the purpose is to see the distance travelled. But if we look at rear view mirror to see who is speeding from back then the purpoe is defeated. For a change lets see the mirror inside the car which shows the people who are travelling with you... and am sure you would enjoy the journey and thats worth the distance travelled.... Isnt it ??

    ReplyDelete
  4. எத்தனையோ எண்ணங்களால் அலைக்கழிக்கப்படும் நாம் இன்னதற்குத்தான் கவலைப் படுவது என்றில்லாமல் சஞ்சலப்படுகிறோம். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மாற்றவேண்டும் என்றவேகம் இருந்தாலும் நம்மால் முடிந்ததைச் செய்ய முயலுவோம். வருகைக்கும் எண்ணப்பரிமாற்றங்களுக்கும் சுந்தர்ஜி, மாதங்கி, மஹாதேவன் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. @ Mahadevan :nice thought.

    @ G.M Balasubramaniam sir,
    it was a good article sir.

    ReplyDelete