கனவிலிருந்து கற்றதும் மற்றதும்.
------------------------------------------------
கனவொன்று கண்டேன். அதிலிருந்து
பாடம் ஒன்று கற்றேன்.கற்றதைப் பகிர்கிறேன்.
நான் சொர்க்கத்துக்கு (?) அழைத்துச்
செல்லப் படுகிறேன். தேவதை ஒன்று ( ஒருத்தி.?) எனக்கு வழிகாட்டி. முதலில் ஒரு
அலுவலகம் போல் இருக்கும் இடம். அங்கே பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
’இது என்ன ஆஃபீஸ் ?’ என்று கேட்டேன்.
கத்தை கத்தையாக மனுக்கள். ஆயிரக்கணக்கில் அவை தர வாரியாகப் பிரிக்கப் படுகிறதாம்.
உலகில் மக்கள் ஆண்டவனுக்கு அனுப்பும் வேண்டுதல்கள். பலப்பல வகைகள்.
அங்கிருந்து இன்னொரு
அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லப் படுகிறேன். அங்கேயும் பலரும் மும்முரமாகப் பணி
செய்து கொண்டிருந்தார்கள். ‘இது என்ன ஆஃபீஸ்?’ என்று
கேட்டேன். முந்தைய அலுவலகத்தில் வந்த மனுக்கள் தீர்வு செய்யப் பட்டு , மனு கொடுத்தவர்களுக்கு
ஆசிர்வாதங்களும் அனுக்கிரகங்களும் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கும் இடமாம்.
மூன்றாவது இடத்துக்கு அழைத்துச்
செல்லப் பட்டேன். அந்த அலுவலகம் எந்த சுறுசுறுப்பான இயக்கமும் இல்லாமல் ஏதோ
ஒன்றிரண்டு தேவதைகளே பணியில் இருந்தனர். ’ இது என்ன ஆஃபீஸ்?’ என்று கேட்டேன்.
அனுப்பிய மனுக்களுக்குண்டான ஆசிர்வாதங்களையும் அனுக்கிரகங்களையும் பெற்றுக் கொண்டதற்கான
acknowledgement களை வாங்கும் இடம்.
”மனுக்களை அனுப்புகிறார்கள். அருளை
அனுபவிக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தெரியப் படுத்துவதில்லை” என்று என்னைக் கூட்டிப்
போன வழிகாட்டி தேவதை வருத்தப் பட்டுக் கொண்டது. ”எப்படித் தெரியப் படுத்துவது?” என்று
கேட்டேன். ’ ஆண்டவனே
நன்றி “என்று நினைக்கலாமல்லவா” என்றது அந்தத் தேவதை.
’ எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது ?” என்றுகேட்டேன்.
”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,
உலகில் இருக்கும்
மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று
காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன் இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம்
இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி, சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக
இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப்
பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன் தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும்
ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து
எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள் இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை
நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால் அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம்
இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம்
படித்து அறிந்து கொள்ளக் கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில்
இருக்கிறாய். அதற்கு நன்றி சொல்”
”அதெல்லாம் சரி. நான் யாருக்கு நன்றி
சொல்ல வேண்டும்.?”
”இந்தப்
பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப்
படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை
இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”
விழித்துப் பார்த்தால் கனவுதான்
என்றாலும் கற்றது நிறைய என்று அறிந்தேன்.
-----------------------
மற்றது.
-------
எனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. அதுவும் இந்த வலைப்பூ
எழுத ஆரம்பித்த பிறகு கணினியில் வரும் பல விஷயங்கள் புரிவதில்லை
பதிவுகள் எழுதுகிறேன்.
அதைப்படிக்கும் விருப்பமுள்ள தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் அதே போல் நானும் பலரது
பதிவுகளுக்குத் தொடர்பாளனாய் இருக்கிறேன். நான் தொடர்பாளனாய் இருக்கும்
பதிவர்களின் பதிவுகள் என் கணினியில் டாஷ் போர்டில் வரும். இப்படியிருக்க இதே
பதிவர்களின் பதிவுகள் எனக்கு மெயிலிலும் வருகிறது. இது ஏதோ google+
ன் அனுக்கிரகம் போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.?யாராரிடமிருந்தோ
எனக்கு மெயில்கள் வருகிறது. ஆனால் அனுப்பியவர்கள் என்று நான் நினைக்கும் அவர்களுக்கு
ஏதும் தெரிவதில்லை.Google+ என்றும் Norply.என்றும் twoo
என்றும் linked in என்றும் skill pages என்றும் இன்னும் என்னவெல்லாமோ இடங்களிலிருந்தும் யார்
யார் பெயரிலோ ( அறிந்தவர் அறியாதவர்) வருகிறது.. யாராவது விளக்கம் சொன்னால்
நன்றாயிருக்கும்.
-----------------------------------
இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த
மருந்தும் இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல் அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள் பலன் குறித்து தெரியப் படுத்தலாமே
---------------------
கனவிலிருந்து கற்றது
பதிலளிநீக்குசிறப்பாக இருக்கிறது ..
இரண்டு நாசித்துவாரங்களையும் அடைத்துக்கொண்டால் சொர்க்கத்தைக் காணலாம் என்று எங்கேயோ படித்த நினைவு!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஆண்டவனே நன்றி “என்று நினைக்கலாமல்லவா” என்றது அந்தத் தேவதை.
பதிலளிநீக்கு’ எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது ?” என்றுகேட்டேன்.
”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,//
உண்மைதான்.
கனவில் கற்றது மிகசிறப்பாக உள்ளது.
மற்றதில் மூச்சு பயிற்சி தலைவலியை கண்டிப்பாய் போக்கும்.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
! டாக்டர் கந்தசாமி
@ நிலாமகள்
@ கோமதிஅரசு.
நல்ல விஷயங்கள் என்று எனக்குத் தோன்றியதை எழுதினால் .... டாக்டர் ஐயாவுக்கு ரொம்பவே தமாசு.! சொர்க்கத்தைக் காண ஒரு பதிவு எழுத ஐடியா கொடுத்த டாக்டருக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தாங்கள் கற்றதை நாங்களும் தங்கள் பதிவின் மூலம்
பதிலளிநீக்குஎப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய
நல்ல படிப்பினையாகக் கற்றோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
கற்றதும் மற்றதும் மிக அருமையான பகிர்வு.நன்றி.
பதிலளிநீக்குகனவு : script உங்கள்தா ஐயா ? இவ்வளவு அறிவுபூர்வமா கனவு வருமா? எனக்கு வந்ததில்ல, அதான்.....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
@ டாக்டர் கந்தசாமி
@ நிலாமகள்
@ கோமதி அரசு
@ ரமணி
@ ஆசியா ஒமர்
@ உமேஷ் ஸ்ரீனிவாசன்-/ கனவு script
உங்கள்தா ஐயா?இவ்வளவு அறிவு பூர்வமாக் கனவு வருமா.?எனக்கு வந்ததில்லை. அதான்/ மனதில் தோன்றுவதை சற்று வித்தியாசமான முறைப் பகிர்வு இது. நீங்கள் என்னுடன் கடவுள் உரையாடியதைப் படிக்க வில்லையா.?வரவுக்கு நன்றி.