சமூக வலைத் தளங்கள்
-----------------------------------
டெல்லியில் சீரழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய சில தகவல்கள்
வெளிப்படுத்தக் கூடாது என்பதால் பெயரோ முகவரியோ வேறு எந்தவிதமான பெர்ஸொனல்
விவரங்களோ பத்திரிகைகளில் முதலில் வெளிவராமல் இருந்தது. ஆனால் எனக்கு வந்த சில
மின் அஞ்சல்கள், அந்தப் பெண் மருத்துவ மனையில் அவளது தாயிடம் கூறிய விஷயங்கள்
என்றும், அவளது பெயர் இன்னது என்றும், கடைசியாக அவளது புகைப்படம் என்றும்
வந்திருக்கின்றன. பொதுப்படையாக சீரழிக்கப் பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நீதி
கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இருக்காது. ஆனால் அவளது
ஐடெண்டிடி தெரிவதிலும் , அவளது வேறு அந்தரங்க செய்திகளைத் தெரிவதிலும் ,
வெளியிடுவதிலும் நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. மேலும் வரும் செய்திகள்
உண்மையானவையா என்றும் தெரியாத போது அதை
வெளியிடுவது சரியா என்றும் தெரியவில்லை. இப்படியிருக்க சமூக வலைத்தளங்களில்
செய்திகள் பரவுவது சரியா என்பதே என் கேள்வி.
ஆனால் சமூக வலைத்தளங்களில் வந்த ஒரு செய்தி பகிர்ந்து
கொள்வதில் நன்மை விளையலாம் என்னும்நம்பிக்கையால் இதனை வெளியிடுகிறேன். ஒரு உணவு
விடுதிக்கு வந்த ஒருவர் இரண்டு காஃபிக்கு ஆர்டர் செய்கிறார். ஒன்று அவருக்கு
என்றும் மற்றது பலகைக்கும் என்கிறார்.
காஃபி அவருக்குக் கொடுக்கப் பட்டு , அருகே இருந்த பலகையில் ஒரு காஃபி என்று
எழுதப் படுகிறது. அவர் இரண்டு காஃபிக்குப் பணம் கொடுத்துச் செல்கிறார். இன்னொருவர்
இரண்டு ப்ளேட் இட்லி என்றும், இரண்டு ப்ளேட் பூரி என்றும் ஆர்டர் செய்து ஒரு
ப்ளேட் இட்லியும் ஒரு ப்ளேட் பூரியும் பலகைக்கு என்கிறார். ஆனால் இரண்டு
ப்ளேட்டுக்கும் பணம் செலுத்துகிறார்.
சிறிது நேரம் கழிந்து ஒரு ஏழ்மையாகத் தோற்றம் அளிக்கும் ஒருவர் அந்த உணவு
விடுதிக்கு வந்து அமர்ந்து பலகையைப் பார்க்கிறார். அவருக்கு செர்வ் செய்ய வந்த
பணியாளிடம் பலகையிலிருந்து ஒரு காஃபி , ஒரு ப்ளேட் இட்லி என்று ஆர்டர்
செய்கிறார். அவருக்கு செர்வ் செய்தவுடன் பலகையில் இருந்த ஒரு ப்ளேட் இட்லியும்
ஒரு காஃபியும் அழிக்கப் படுகின்றன. வந்தவர் உண்டு பணம் ஏதும் கொடுக்காமல்
செல்கிறார். பகிர்ந்துண்டு வாழ நினைப்பவரும் எவரிடமும் தன் மானத்தை விட்டு இரக்காமல்
இருப்பவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே உதவிக் கொள்கின்றனர். இதே கதையை அண்மையில்
ஒரு பட்டிமன்றத்தில் திரு. இறையன்பு அவர்களும் பகிர்ந்துகொண்டார். இதை ஏன் நம்
உணவு விடுதிகள் பின் பற்றக் கூடாது.?
------------------------------------
இனி ஒரு குட்டிக்கதை ( நகைச்சுவைக்காக.)ஒரு நண்பருக்குக்
குழந்தை பிறந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள தன்னுடன் பணி புரிபவர்களுக்கு
இனிப்பு கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் இனிப்பு கொடுக்கும்போது “எனக்கு ஆண் குழந்தை
பிறந்திருக்கிறது. செக்கச் செவேல் என்று வெள்ளைக்காரக் குழந்தை போலவே இருக்கிறது “
என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது வேறொரு நண்பர்
” அதை
அடிக்கடி சொல்லாதே ஐயா. குழந்தை உனக்குத்தான் பிறந்திருக்கிறதா என்ற சந்தேகம்
வந்து விடப் போகிறது” என்றாரே பார்க்கலாம்.!
-----------------------------------------------------------------------------------
அருமையான கருத்துகள்.
பதிலளிநீக்குபத்திரிக்கைக்காரனுக்கு காசுதான் குறி. எந்த செய்தியாயிருந்தாலும் அதற்கு கண்,காது, மூக்கு வைத்துப் பிரசுரிப்பான்.
சமூக வலைத்தளங்களும் சில நேரங்களில் எல்லை மீறுகின்றன என்பது உண்மை. நமது உணவகங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் வரட்டு கௌரவம் இடம் கொடுக்குமா? குழந்தை துணுக்கு அருமை.
பதிலளிநீக்குபகிர்ந்துண்டு வாழ நினைப்பவரும் எவரிடமும் தன் மானத்தை விட்டு இரக்காமல் இருப்பவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே உதவிக் கொள்கின்றனர்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்..
உணவு விடுதிகளில் காப்பகங்களுக்கான நிதி சேகரிப்பில் காசு போடுவதைவிட உங்க யோசனை நல்லதாகப் படுகிறது.
பதிலளிநீக்கு