ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நான் ஒரு ஏகலைவன்



                     
                                          நான் ஒரு ஏகலைவன்
                                        -----------------------------------



என் மகன் சென்னையில் இருந்தபோது என் மருமகள் ஒரு ஓவியம் வரைந்திருந்ததைக் கண்டேன். அழகான அந்த ஓவியம் என்னுள் ஒரு பொறியைக் கிளப்பியது. ஏன் நாமும் அந்த மாதிரி ஓவியம் வரையக் கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது.. அவளிடம் விசாரித்தேன். அதை தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றும் அதை வரைய அவள் ஒரு ஆசிரியரிடம் ரூ. 3000/-கொடுத்துக் கற்றுக் கொண்டாள் என்றும் சொன்னாள். அதை வரையும் வழிமுறைகளை அவள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொண்டேன். பிறகு நான் பெங்களூர் திரும்பி வந்ததும் அதற்குத் தேவைப் பட்ட பொருள்களை வாங்கி வந்தேன். எனக்குத் தெரியும் நுண்கலைகள் பயில்பவர்கள் கையில் விரல்கள் நீளமாக இருக்கும்நளினமாக இருக்கும் .ஆனால் என்கையோ குட்டையானது. விரல்கள் லாகவமாகப் பணி புரியாது. இருந்தாலும் I wanted to have a go at it. முதலில் fabric paint  வாங்கி என் பேரனின் பனியனில் ஒரு பிள்ளையார் படம் ட்ரேஸ் செய்து பெயிண்ட் செய்தேன். சுமாராக இருந்தது. அதைவிட அவன் அதை என் தாத்தா வரைந்ததுஎன்று பெருமைப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. பிறகு என் பேத்தியின் பாவாடைத் துணியில் ஒரு டிசைன் வரைந்து பெயிண்ட் செய்தேன்..அதை தையல் செய்யக் கொடுத்தபோது டெயிலர் அது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது  என் மீதே எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.


அடுத்து ஒன்றிரண்டு பிள்ளையார் படங்கள் துணியில் பெயிண்ட் செய்து ஃப்ரேம் செய்தேன். அப்போது அதைப் பார்த்து என் பேத்தி ‘பிள்ளையார் முறைப்பது போல் இருக்கிறார் என்று விமரிசித்தாள். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைய முயற்சித்தேன். இந்த ஓவியம் வரையும் முன்பாக வரைய வேண்டிய plywood பலகையைத் தயாரிக்க வேண்டும் படத்தின் சைசுக்குத் தக்கபடி இருக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளைத் துணியை சுருக்கமில்லாமல் ஒட்ட வேண்டும். அதன் மேல் சாக் பவுடரை ஃபெவிகாலுடன் கலந்து ஒருவித மாவு பதத்தில் தயாரித்துக் கொண்டு ஒட்டிய துணி மேல் சமமாக மெழுக வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் பாலிஷ் செய்ய வேண்டும் அதன் பிறகு அந்தத் துணிமேல் வரைய வேண்டிய படத்தை ட்ரேஸ் செய்ய வேண்டும். பிறகென்ன..? யாராவது வரைய முயற்சி செய்வதாக இருந்தால் விளக்கமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். தஞ்சாவூர் ஓவியத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ஆபரணங்கள் அதை வைக்க மக் வர்க் செய்ய வேண்டும். 22 காரட் தங்கப் பேப்பர்கள் கிடைக்கின்றன. விலைதான் அதிகம். ஆபரணத்துக்குண்டான பல நிற மணிகளும் கிடைக்கின்றன. கற்களை ஒட்டுவது, தங்கப் பேப்பர்களை ஒட்டுவது போன்ற வேலைகள் பொறுமையுடன் செய்ய வேண்டியவை. அதன் பிறகு பெயிண்டிங்.

நான் முதலில் செய்த படம் தஞ்சாவூர் ஓவியம் என்று சொல்லலாம் என்பதுபோல்தான் இருந்தது. போகப் போக என் ஓவியங்கள் சுமார் என்னும் வகைக்கு வந்திருக்கிறது. ஆனால் வரையத் துவங்கும் முன்பாகவே அதை என் உறவினர்கள் ரிசர்வ் செய்து விடுவார்கள். பெங்களூரில் எனக்கு உறவினர்கள் அதிகம் ஒவ்வொருவர் வீட்டிலும் என்னுடைய ஒரு படமாவது இருக்கும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் இந்த ஓவியங்கள் வரைவதில் அக்கரை காட்டுகிறேன் என்று தெரிந்த டாக்டர் . எனக்கு அப்போதிருந்த urological problems –ஐ படம் வரைவதில் கவனம் செலுத்துவதால் குறைக்கலாம் என்று கூறி ஊக்குவித்தார். அவருக்கு ஒரு கிருஷ்ணர் படம் வரைந்து பரிசாகக் கொடுத்தேன். மிகவும் appreciate செய்தார்.

சாதாரணமாகக் கடவுளர் படங்கள் தான் வரைந்திருக்கிறேன். வரைய ஆரம்பிக்கும்போது பாதங்களில் இருந்துதான் தொடங்குவேன். வரைந்த படங்களில் என் பெயரை எழுதுவதே இல்லை.


பிறகு கண்ணாடி ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். கண்ணாடி ஓவியங்களை வரையும் போது வலது இடதாகவும் இடது வலதாகவும் வர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.
இப்போதெல்லாம் ஓவியம் வரைவது மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் ஒரு கண்ணாடி ஓவியம் வரைந்தேன். நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவதாகக் கூற் இருந்தார். அவருக்குப் பரிசளிக்க வேண்டி வரைந்தேன். நண்பரும் வரவில்லை. நான் பரிசாகக் கொடுக்கவும் முடியவில்லை.! ( முகப்பில் இருக்கும் படம்.)
எனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர  வேண்டும். பார்ப்போம். 

வரைந்த படங்கள் சில. 
---------------------


 


 



10 கருத்துகள்:

  1. கலையை சிரத்தையாக கைவரச்செய்து மகத்தான சாதனை படைத்திருக்கிறீர்கள் ..

    படங்கள் மனம் கவர்கின்றன .. அருமையாக இருக்கின்றன ..

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ...

    பதிலளிநீக்கு
  2. வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    மீனாக்ஷி அம்மனின் திருவாசியும், நகைகளும் நன்றாக அமைந்துள்ளன.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர வேண்டும். பார்ப்போம். //

    ஆர்வம் கைகூடி வரசெய்யும்.

    உங்களின் கலை ஆர்வம் மகிழ்ச்சியை தருகிறது.
    பேரக் குழந்தைகள், பாராட்டு மகத்தானது அல்லவா!
    நீங்கள் வரைந்த படங்கள் எல்லாம் அழகு.
    நம் கையால் வரைந்த படம் பரிசளிப்பது மனதுக்கு உற்சாகத்தை தரும்.
    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  4. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை செயல்முறையில் நிரூபித்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அருமையாக உள்ளது
    தலைப்பு மிக மிகப் பொருத்தம்
    நிச்சயம் நீங்கள் ஏகலைவன்தான்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  6. @ இராஜராஜேஸ்வரி
    @ வை.கோபால கிருஷ்ணன்
    @ டாக்டர் கந்தசாமி
    @ கோமதி அரசு
    @ தி.தமிழ் இளங்கோ
    @ வெங்கட் எஸ்.
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. அவ்வப்போது இம்மாதிரி சுய புராணங்களும் தேவைப் படுகிறதே.

    பதிலளிநீக்கு
  7. கடவுளுக்கு உருவம் தந்த நீங்கள் கடவுளா

    பதிலளிநீக்கு

  8. @ ssk--கடவுளுக்கு நான் உருவம் தரவில்லை. பெரும்பாலானோர் கடவுள் என்று நினைத்து வணங்கும் உருவப் படங்களை வரைகிறேன். மேலும் அந்த பாணியில் வரைய எடுத்துக்கொள்ளப்படும் படங்களை நானும் வரைகிறேன். என்னுள் கடவுள் இருக்கலாம். நானே கடவுள் என்று கூறும் அளவுக்கு எனக்கு அகந்தை இல்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சகலகலாவல்லவன்னு கமல் நடிச்ச படம் ஒண்ணு.அதில அவருக்கு அப்படிப் பல கலைகள் தெரியாது. ஆனா உங்கள மனசுல வச்சுத்தான் அந்த டைட்டில் கொடுத்திருப்பரென இப்ப புரியுது.....

    பதிலளிநீக்கு