Sunday, July 14, 2013

OLD IS GOLD.....தூசி தட்டி....                                 OLD IS GOLD.......தூசி தட்டி.....
                                 --------------------------------------(நான் பதிவுலகில் தவழத் தொடங்கிய பொழுது எழுதியவை யார் கண்ணிலும் படாமல் போனது.இப்போது தூசி தட்டி மீண்டும், பதிவிடுகிறேன்),
                நானும் நீயும்
                -------------
 எந்தன்    உயிருக்குயிர்     நீயே
 
நாடும்    அன்பு     நானோ
 
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
  க
ருத்தின்  ஒளியும்  நானோ
  
நற்பண்ணின்    சுவை    நீயே ---உன்
  
பாவின்   நயமும்   நானோ
  
என்    எண்ணின்   பொருள்   நீயே
  
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !


     எண்ணத் தறியில்
     -----------------

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி   
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |
   
  
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
     
   எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
   
    தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
    
   மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |

 
அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
  
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
  
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
 
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

  
     இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
 
      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
 
       இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
        இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

    கண்ட  கனவு  நனவாக  இன்று
   
காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
   
கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே
 
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |   
               நம்பிக்கைகள்
                                 --------------------

 நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை. 
---------------------------------------------------------இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்குவாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வுவாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!


நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும்அதுவே  விதி.

     
சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
     
நானும்   எழுதினேன்
     "
நான்  நானாக   இருக்கையில்
     
நீ   மட்டும்  வேறாக
     
பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"
நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் , நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(
பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

      
நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
      
என்  எண்ணில் "நான்" போனால்
      
நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       
ஏனென்று  கேள்வி  கேள்
       
உன்னை  நீ அறியலாம்,
      
உரைத்தவன்  சாக்ரடீஸ்

      
உண்மை  உணர்வதே
      
வாழ்வின்  நோக்கம்,
      
கூறினான்  காந்தி.

      
அயலவனை  நேசி
     
உன்னிலும்  மேலாக
     
என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .
------------------------------------------                                                 
                  
 

                                                  
                 

                      


11 comments:

 1. இயலாமை - உண்மை வரிகள்...

  // என் எண்ணில் "நான்" போனால்...
  நலம் பல விளையலாம்... //

  சத்தியம்...

  எண்ணத் தறி மனதில் நெய்து விட்டது...!

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 2. எல்லாமே அருமை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. \\மின்னலிடையில் மனந்திளைத்த எனைப்
  புன்னகை ஒளிவீசி ஒளிவீசி
  இன்னலிடை யின்றவள் மீட்டாள்
  காதல் பண்பாடி பண்பாடி |\\

  எண்ணத்தறியில் வேய்ந்த கவிப்பாவாடை அருமை.

  \\ மேலே செல்வது கீழே வரும், புவி ஈர்ப்பின் நியதி.
  கீழே உள்ளது மேலே செல்ல யாரென்ன செய்ய.?
  காலச் சக்கரச் சுழற்சியில் தானே நடக்கும் . --நம்புவோமா ..!\\

  நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரம்!

  \\இன்றிப்போது காண்பதே இறுதிக் காட்சியாகலாம் .
  இருக்கையில் வேண்டுமா காழ்ப்பும் கசப்பும்.?\\

  அறிந்து தெளிந்துவிட்டால் அன்பு தழைத்தோங்கிடும்.

  தூசு தட்டிக் எடுத்துக்கொடுத்து ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 4. பிறப்பொக்கும் உயிர்க்கு, வாய் கிழியக் கூறுகிறோம்
  ஏனிந்த ஏற்றத்தாழ்வு என்றறிவோமா..?
  நன்று சொன்னீர்கள் அய்யா. அருமையான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. உண்மையும் நேசமும் ஒன்றாக இணைந்தால்
  பிறந்த காரணம் புரியலாம் ஒருவேளை .

  புத்தாக்கம் செய்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 6. தூசு தட்டி எடுத்துக் கொடுத்த
  தங்கமணிச் சரம் கருத்தைக் கவர்ந்தது
  எழுப்பிச் சென்ற கேள்விகளும்
  சொல்லிச் சென்ற பதில்களும்
  அருமையிலும் அருமை
  பழசானாலும் தங்கம் தங்கம்தான்
  வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்

  ReplyDelete
 7. // இதழ்கள் கரும்பினுமினிக்க
  இன்சுவை உணர //

  சுவை அறியா பருவத்து கனவு போலும்!

  ReplyDelete
 8. //இருப்பினும் ,--- தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை. //

  Roll Model-ஆகக் கொள்ள வேண்டிய தந்தையின் அஸ்திவாரம் இவ்வளவு ஆட்டங்காணக்கூடியதா?

  ReplyDelete
 9. வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை. //

  அருமையாக சொன்னீர்கள்.

  தூசி தட்டிக் கொடுத்தது எல்லாமே நல்ல கருத்துக்கள்.
  நன்றி சார்.

  ReplyDelete

 10. @ திண்டுக்கல் தனபாலன்
  @ கீதா சாம்பசிவம்
  @ கீதமஞ்சரி
  @ கரந்தை ஜெயக்குமார்.
  @ இராஜராஜேஸ்வரி
  @ ரமணி
  @ ஜீவி
  @ கோமதி அரசு
  வருகை தந்து வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டி ஊக்கம் அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. old is goldனு சரியான டைட்டில் குடுத்திருக்கீங்க. அவ்வளவும் மின்னுகின்றன.

  ReplyDelete