க்ணினியும் நானும் எண்ணங்கள் ( தொடர்பதிவு. )
-------------------------------------------------------------------
திருமதி. கீதமஞ்சரி என்னை கணினி அனுபவம் குறித்த
தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கென்னவோ தொடர் பதிவு என்றாலெயே
ஒரு அலர்ஜி. பெண் எழுத்து என்னும் தலைப்பில் தொடர் சங்கிலியில் ஒரு கண்ணியாக
நானும் எழுதி இருந்தேன். பின்னர் “ உறவுகள் “ என்ற தலைப்பில் நான் ஒரு பதிவு
இட்டிருந்தேன். பெயர் சொல்லி யாரையும் அழைக்காமல் இந்தத் தலைப்பில் அதைத் தொடரலாமே
என்று குறிப்பிட்டிருந்தேன். ஒருவராவது முன் வரவேண்டுமே... ஹூம் மூச். இருந்தாலும் என்ன.? கணினியில் என்
அனுபவம் பகிர்ந்து கொள்ள கீதமஞ்சரி அழைக்கிறார். நானும் எழுதுகிறேன்
.
முதலிலேயே ஒன்று கூறிவிடவேண்டும்.இன்றும் எனக்குக் கணினி
வசப்படவில்லை. அது பற்றிய என் ஞானம் next to nothing. .
இருந்தாலும் நானும் கணினியை இயக்குகிறேன், மின் அஞ்சல் செய்கிறேன், வலைப்பூவில்
எழுதுகிறேன். இதையெல்லாம் செய்யும் போது அது குறித்த அனுபவங்களும் இருக்க
வேண்டும்தானே.அதை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
1985-1986 என்று நினைக்கிறேன். திருச்சிக்கு சற்று தொலைவில்
ஒரு கல்லூரியில் ( பெயர் நினைவுக்கு வரவில்லை ) கல்லூரி பாட திட்டத்தில் கணினியும்
சேர்த்து ஒரு பட்டப் படிப்பு துவங்கப் பட்டது , எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு அதில்
இருந்ததாகக் கேள்வி. என் இளைய மகனைக் கல்லூரியில் சேர்க்க முனைந்து கொண்டிருந்த
நேரம். தூரம் கருதியோ, போக்கு வரத்து வசதி குறைவு காரணமாகவோ அது தடை பட்டுப்
போயிற்று. அதுதான் கணினி பற்றி கேள்விப்பட்ட முதல் நினைவு. என் மூத்தமகன் 1988-ல் MBA படிப்பை முடித்த கையோடு திருச்சியில் COMPUTER
POINT என்னும் கணினி
போதனை சம்பந்தப் பட்ட நிறுவனத்தில் மார்கெட்டிங் ஆஃபீசராகச் சேர்ந்தான். அப்போது
அவன் என்னிடத்தும் என் மனைவியிடத்தும் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளச் சொன்னான். அது
என்னவோ தெரியவில்லை. கம்ப்யூட்டர் என்றாலேயே எனக்கு ஒரு MENTAL
BLOCK இருந்தது. பணிச்சுமை நேரமின்மை என்று கூறி மறுத்து
விட்டேன். என் நண்பன் அவனுடைய மகனை அங்கு சேர்க்கச் சென்றபோது என் மகனை ( என் மகன்
என்று தெரியாமலேயே) சந்தித்து இருக்கிறான்..அது பற்றி அவன் என்னிடம் கூறும்போது IGLOO வீட்டில்
வசிப்போருக்கே REFRIGERATOR விற்கக் கூடிய ஒருவன் கம்ப்யூட்டர் பாயிண்டில்
மார்க்கெட்டிங் ஆஃபிசராக இருக்கிறான் என்று சொன்ன போது நான் மிகவும் மகிழ்ந்தேன்.
என்னைக் கணினி
பற்றிய பதிவிடச்சொன்னால் என்னென்னவோ எழுதிக் கொண்டுபோகிறேன். என்ன செய்ய .
நினைவுகள் என் மனத்தையும் கைகளையும் இயக்குகிறது. விஷயத்துக்கு வருகிறேன்.
சென்னையில் என் மகன் வீட்டில் ஒரு டெஸ்க் டாப் இருந்தது. என் மகன் துபாயில்
இருந்தான். அவனுடன் தினமும் தொடர்பு கொள்ள அந்தக் கணினி பயன் பட்டது. YAHOO
MESSENGER மூலம் முகம் பார்த்துப் பேசிக்கொள்ளவும் வசதி. அது தான்
நான் கணினியை முதலில் கையாண்டது. என் பேரன் கனெக்ஷன் கொடுப்பான் நாங்கள்
பேசுவோம். அப்போது எனக்கு ஒரு மெயில் ID ஏற்பாடு செய்து கொடுத்தான். எனக்கு யார் மின்
அஞ்சல் அனுப்புவது , நான் யாருக்கு எழுதுவது. அது காலாவதியாயிற்று.
எனக்கு கணினி இயக்கம் தெரியாதே தவிர கணினியில் என்னவெல்லாம்
செய்யலாம் என்று தெரியும்.அந்த அறிவுடனே திருச்சியில் நான் பணியில் இருந்தபோது MCA மாணவர்கள் சிலருக்குப் ப்ராஜெக்ட்
கைடாக இருந்திருக்கிறேன். அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன்(.இதுபார்க்கவும் )
நான் கணினியை உபயோகிக்க துவங்கியது , எனக்கு ஆஞ்சியோ
ப்லாஸ்டி செய்து, நான் ஓய்வில் இருக்கும்போது எனக்கே எனக்காக இப்போது நான்
உபயோகிக்கும் இந்தக் கணினியை என் மகன் எனக்குக் கொடுத்தான். பொழுது போக்கவும் ,
எண்ணங்களைப் பகிரவும் எனக்கு இந்த வலைப்பூவை என் பேரன் தயார் செய்து கொடுத்தான்.
முறையாக கணினி பயிலாத நான் அதை இயக்கிக் கொண்டு , நானும் எழுதி . பிறரையும் அதை
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் எனக்கு இந்த MENTAL BLOCK போகவில்லை. தமிழ் மணத்தில் இணைக்கவே மிகவும் சிரமப்
பட்டேன். இணைப்பு பற்றி தமிழ் மணத்தில் கொடுக்கப் பட்ட குறிப்புகள் தமிழில்
இருந்தன. எனக்கு உதவி செய்ய விரும்புவோருக்கு தமிழ் தெரியாது. எப்படியோ இணைத்து
விட்டேன்.(அனுபவம்) திரு . திண்டுக்கல் தனபாலன் எனக்கு விரிவாக பல பதிவுகளில்
இணைக்க குறிப்புகள் கொடுத்திருந்தார். நான் ஏதாவது செய்யப் போக இருப்பது எல்லாம்
போய் விட்டால் என்னும் பயம். பிறரது பதிவுகளில் கணினியின் நுட்பங்களால் ”விளையாடுகிறார்கள்”. நான் அவற்றைப்
பார்த்தே திருப்தி அடைவேன். அண்மையில் தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்கள் பதிவுகளில் LINK கொடுப்பது பற்றி சொல்லிக் கொடுத்தார். அதன் உபயோகம்
இந்தப் பதிவிலும் காணலாம்
கடைசியாக நான் தட்டச்சு பயின்றவனல்ல. தமிழில் எழுதலாம்
என்று ரகு எனும் ‘சித்ரன் அவர்கள் NHM WRITER பற்றிக் கூற என் மகன் அதை டௌன்லோட் செய்து
கொடுத்தான். ஒரே விரலில் தட்டச்சு செய்கிறேன். இதில் ஓரளவுக்கு SPEED ம் கிடைத்து
விட்டது. நிமிடத்துக்கு சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வார்த்தைகள் தட்டச்சு
செய்வேன். தமிழில் தட்டச்சு செய்து பழகிப் போய் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது spelling தடுமாறுகிறது/ சில நேரங்களில் ஆங்கிலத்தை PHONETIC
ஆக டைப் செய்து விடுகிறேன்.( compliment becomes kaampliment )
அப்பாடா.. ! ஏதோ ஒப்பேற்றிவிட்டேன். . இதோடு முடியவில்லையே.
இதைத் தொடர நான் கீழ்கண்டவர்களுக்கு விண்ணப்பம் செய்கிறேன்.
முதலில் என்னை இந்த மாதிரி தொடர் பதிவுக்கு அறிமுகப்
படுத்திய “அன்புடன் மலிக்கா நீரோடை niroodai.blogspot.com
இரண்டாவதாக இதே துறையில் இருக்கும் திரு. நாக சுப்பிரமணியம்
நதியில் விழுந்த இலை nathiyil-vizhuntha-ilai.blogspot.in
தற்போது கணினி துறையை விட்டு விலகி இருக்கும் மாதங்கி மாலி மைத்துளிகள்
.
AAA என்றும் கலிடாஸ்கோப் என்றும்கலக்கும்
சமுத்ரா
samudrasukhi.blogspot.in
கடைசியாக திருமதி. ஷைலஜா எண்ணிய
முடிதல் வேண்டும்
Shylajan.blogspot.com
உங்க பேரனுக்கு நன்றி சொல்லுங்க..
பதிலளிநீக்குதாத்தாவின் தனிமையை இனிமையாக்கியவர் அவர் தானே.
தங்களுடைய முனைப்பும் முயற்சியும் பாராட்டத் தக்கது.தங்களைப் போன்றவர்களின் அனுபவமும் திறமையும் வலைப்பூவின் மூலம் வெளிப்படுவது பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்
பதிலளிநீக்கு//நான் ஏதாவது செய்யப் போக இருப்பது எல்லாம் போய் விட்டால் என்னும் பயம். //
பதிலளிநீக்குநியாயமானதொரு கவலை தான். எனக்கும் இந்தக்கவலை ஏற்படுவது உண்டு.
ஆனால் இப்பவும் நிறைய கற்றுக்கொள்ள எனக்கு ஆசை உண்டு.
அருகில் அமர்ந்து கற்றுக்கொடுக்கத்தான் யாருக்கும் நேரமோ, பொறுமையோ இல்லை.
மேலும் எனக்கு எதுவாக இருந்தாலும் ஒரு நோட்புக்கில் பேனாவால் ஸ்டெ- பை-ஸ்டெப் குறித்துக்கொள்ள ஆசை.
ஆனால் என் வாரிசுகள் இதை ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார்கள்.
சொல்வதைப் புரிந்துகொண்டு நேரிடையாக மண்டையில் எழுதிக்கொள் என்பார்கள். ;)))))
நானும் என் 10 வயதே ஆன பேரனிடன் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளேன்.
ஆனால் அவன் கம்ப்யூட்டரை விட் வேகமாக கம்ப்யூட்டரில் வேலை செய்யக்கூடியவன்.
அவனுக்கு அடர்த்தியாக தலையில் ஏராளமான முடிகள் உண்டு.
அவன் தலையில் உள்ள் ஒவ்வொரு முடியிலும், ஒவ்வொரு மூளை இருப்பதாக நான் உணர்கிறேன்.
அவன் ஓர் ஹை ஸ்பீடு கிங்.
பகிர்வுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள், ஐயா.
ஒரு விரலில் தமிழ் தட்டச்சு செய்வதை நினைத்து பலமுறை வியந்துள்ளேன்... உங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்... தங்களின் பேரனுக்கு பாராட்டுகள்... நன்றிகள்...
பதிலளிநீக்குநதியில் விழுந்த இலை : தளம் இல்லை...
பதிலளிநீக்குஎன் பேரன் சிவா பிறந்த [DOB : 05.03.2002] ஒரே வாரத்தில், பாஸ்போர்ட் + விசா வாங்கப்பட்டு, பிளேனில் 5 மணி நேரப்பயணம் செய்து, அயல்நாட்டுக்குக் கூட்டிப்போகப்பட்டவன்.
பதிலளிநீக்குஅவன் கம்ப்யூட்டர் + மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இயக்கும் விஷயத்தில், ப்ளேன் போல இவ்வளவு ஸ்பீடாக இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்குமோ என்னவோ. ;)
இந்தக்காலத்துக் குழந்தைகள் எல்லோருமே அதி புத்திசாலிகளாகத் தான் இருக்கிறார்கள்.
நீங்கள் – உங்கள் மகன் – உங்கள் பேரன். மூவரின் அன்பினில் விளைந்த GMB WRITES வலைப்பதிவின் அனுபவங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம். இடையிடையே நீங்கள் குறிப்பிட்ட பழைய உங்கள் பதிவுகளையும் படித்தேன்.
பதிலளிநீக்குசுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்கு//கணினி இயக்கம் தெரியாதே தவிர கணினியில் என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரியும்
பதிலளிநீக்குஅது தான் முக்கியம். தொழில் நுட்பத்தின் சக்தியே அதன் பயன்பாட்டில் தானே?
உங்கள் கணினி அனுபவத்தை அழகாய் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குபேரனுக்கு வாழ்த்துக்கள்.
பேரனால் நாங்கள் உங்கள் அனுபவங்களை படிக்க முடிகிறது.
பேரனை வாழ்த்துகின்றோம்.
பதிலளிநீக்குஉங்கள் ஆர்வத்துக்கும் வாழ்த்துகள்.
மறுபடியும் : http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.html
பதிலளிநீக்குஇப்போது இந்தக் கணினியும்
பதிலளிநீக்குபதிவு உலக இணைப்பும் இல்லாவிட்டால்
என்ன செய்து கொண்டிருப்பேன் என
யோசிக்கக் கூட முடியவில்லை
முருகனின் பாடம் கற்ற சுப்பையனின்
நிலைதான் எல்லோருடைய வீட்டிலும்
அதனை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
ரசித்தேன்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக
பதிலளிநீக்குபகிர்ந்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..!
முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றி
பதிலளிநீக்குமுயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றி
பதிலளிநீக்குமுயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றி
பதிலளிநீக்குமுயற்சிக்கிறேன். வேலைப்பளு காரணமாக இப்போதெல்லாம்
பதிலளிநீக்குநிறைய எழுத முடிவதில்லை
நீங்கள் எழுதியிருக்கும் விதம் மிக மிக சுவாரஸ்யம். எல்லோர் வீட்டிலும் குசந்தைகள் தான் ஆசிரியர் போலிருக்கிறது.
பதிலளிநீக்குவிடாமுயற்சியாக அதைப் பழகியது
ஓய்வு காலத்தில் உங்களுக்கு உபயோகமாயுள்ளது பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும்.
அருமையான பதிவு சார்.
சுவாரசியமான அனுபவங்கள்......
பதிலளிநீக்குகொடுத்திருக்கும் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்......
உங்களின் முனைப்பு அசாத்தியமானது ஓவியம் வரைபவர்களுக்கே உரித்தான திறமையும் கூர்மையான பார்வையும் அதிகம்.உங்கள் கணிணி அனுபவம் எதார்த்தம்!! என்னையும் அழைத்தமைக்கு நன்றி மிக
பதிலளிநீக்குநேரம் கிடைத்தவுடன் கண்டிப்பாக எழுதுவேன்.
பதிலளிநீக்கு@ சசிகலா
என் முதல் பதிவே பேரனுக்கு நன்றி சொல்லித்தானே
@ டி.எம்.முரளிதரன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@ கோபு சார்
அதுதான் தலைமுறை இடைவெளியோ.?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ திண்டுக்கல் தனபாலன்.
நான் உங்களைக் கண்டு வியக்கிறேனெல்லோர் பதிவையும் படித்து எல்லோருக்கும் உதவ எப்படித்தான் சாத்தியமாகிறதோ. நன்றி
@ ரமணி
கணினி இருக்கவில்லையென்றால் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பேனோ என்னவோ. நன்றி.
@ டாக்டர் கந்தசாமி
@ இராஜராஜேஸ்வரி
@ கரந்தை ஜெயக்குமார்
@ சமுத்ரா
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
ஓய்வு காலத்தில்தான் நான் தஞ்சாவூர் ஓவியம் தீட்டவும் பழகியது. என் பேரனை நான் தகப்பன்சாமி அல்ல தாத்தா சாமி என்பேன். கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி. என் பிற பதிவுகளைப் படிக்கும்போது நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள். நன்றி.
@ ஷைலஜா.
பாராட்டுக்கு நன்றி. உங்கள் பதிவை எதிர் நோக்குகிறேன்.
@ தி. தமிழ் இளங்கோ
என் பழைய பதிவுகள் உங்களை நிச்சயம் ஏமாற்றாது. வருகைக்கு நன்றி
@ சுரேஷ்
@ அப்பாதுரை
@ கோமதி அரசு
@ மாதேவி
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அழைப்பினை ஏற்று உடனடியாய்ப் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குகணினி பற்றிப் படித்த எங்கள் தலைமுறையே கணினியை இயக்கக் கற்றுக்கொண்டது பின்னாளில்தான் என்னும்போது எங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்த தங்கள் அனுபவம் இன்னும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே உங்கள் கணினி அனுபவம் சிறப்பாகவும் அதற்கான உங்கள் முயற்சி வியப்பளிப்பதாகவும் உள்ளது. பாராட்டுகள் ஐயா.
அன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பது உண்மை!.. அதிலும் தங்களது கைவண்ணம் சுவையாக உள்ளது. ரசனையுடன் செய்திகளைக் கொண்டு செல்வது சிலருக்கே கைவந்த கலை.
பதிலளிநீக்குஅன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பது உண்மை!.. அதிலும் தங்களது கைவண்ணம் சுவையாக உள்ளது. ரசனையுடன் செய்திகளைக் கொண்டு செல்வது சிலருக்கே கைவந்த கலை.
பதிலளிநீக்கு