அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ
----------------------------------------------------------
”பிறந்ததிலிருந்தே
எனக்கு கடவுளின் திருநாமங்களில் ஒரு அதீத ஈர்ப்பு இருந்தது. அதுவே என்னை
எப்பொழுதும் ஆண்டவனின் திருநாமத்தை அனவரதமும் , ஒவ்வொரு மூச்சின் இடைவெளியிலும்,
எங்கிருந்தாலும் , என்ன செய்து கொண்டிருந்தாலும் உச்சரிக்கச் செய்யும்.இந்த
இடைவிடாத, அன்பும் பக்தியுடனுமான கடவுளின்
நினைவு ஆத்ம அறிவுக்கும் புரிதலுக்கும் ( DIVINE REALIZATION)
வழி வகுக்கும்”
( மாதா
அம்ருதானந்தமயி)
இன்று மாதா
அம்ருதானந்தமயியின் அறுபதாம் பிறந்த நாள்.
உலகம் முழுவதிலுமிருந்தும் கூடியிருக்கும் பக்தர்களின் முன்னிலையில் “ அம்ருதவர்ஷம் 60 என்று கொண்டாடப் படுகிறது
உலகம் முழுவதும் அம்மா என்று
அறியப் படுபவரைப் பற்றி பார்ப்பதற்கு முன்--- கேரளத்தில் கொயிலோன் மாவட்டத்தில் ஆலப்பாடு பஞ்சாயத்தில்
பரயக் கடவு என்னும் ஒரு கிராமம்., மேற்குக் கடலோரத்திய மீனவ கிராமம். தங்களைப்
பராசர முனிவரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.கடவுளர்களின்
திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடம் என்று பெருமைப் படுகின்றனர். அதில் ஒன்று......
சிவன் பார்வதி முன்னிலையில்
சுப்பிரமணியர் ஏதோ தவறு செய்து விட
சிவனார் கோபமுற்று சுப்பிரமணியரை மீனாகப் பிறக்கச் சாபம் கொடுத்து
விட்டார். மகனுக்குப் பரிந்து பேச வந்த பார்வதியும் செம்படவப் பெண்ணாகப் பிறக்கக்
கடவது என்ற சாபம் பெற்றார். சற்றைக்கெல்லாம் கோபம் தெளிந்த ஈசன் தகுந்த நேரத்தில்
தானே அவர்களுக்குச் சாப விமோசனம் தருவதாகக் கூறி ஆசிர்வதித்தார். சாபப்படி சுப்பிரமணியர்,
ஆலப்பாடு கடற் கரையில் ஒரு பெரிய மீனாக உருவம் கொண்டார். மீனவர்களின் வலைகளை அறுத்து
அவர்கள் மீன் பிடிக்கக் கடலில் போவதையே அஞ்சும் அளவுக்குப் பயமுறுத்தினார்.
மீனவர்கள் பயந்து கடலுக்குப் போகாததால் வாழ்வாதாரத்தையே இழக்கத் துவங்கினர்.
அரசனிடம் முறையிட்டார். அரசனும் ஏதும் செய்வதறியாமல் , மீனைப் பிடிப்பவருக்கு நிறைய
வெகுமதியுடன் அரச குமாரியையும் கை பிடித்துத் தருவதாக அறிவித்தார். நிலைமை இப்படி
இருக்க அந்த ஊருக்கு ஒரு வயதான புதியவர் ஒருவர் வந்தார். அவர் பல செடியின் கொடிகளைக் கட்டி வலைபோல்
செய்து கடலில் வீசி மீன் வரும்போது அவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கூறி மீனை
இழுக்கச் சொன்னார். அதன்படியே நடந்து வலையில் சிக்கிய மீன் கரையில் வந்ததும் காணாமல்
போயிற்று. முதியவர் அரசனிடம் வாக்களித்தபடி அரச குமாரியைத் தரக் கேட்டார்.
அரசனுக்கு இக்கட்டான நிலை. அரச குமாரியே முன் வந்து அரசன் சொல் காப்பாற்றப் பட
வேண்டும் என்று கூறி முதியவரின் பின் சென்றாள். அவர்களைப் பின் தொடர்ந்த மக்கள்
எந்த ஊருக்குப் போகிறீர்கள் என்று முதியவரிடம் கேட்க அவர் எங்களுக்கு என்று ஊர்
எதுவும் கிடையாது “ ”செல்லுன்ன ஊரே” ஊர் என்றாராம். அவர் சென்ற ஊர்தான் மருவி ” செங்கண்ணூர்” ஆனதாகக் கதை.
அந்த ஊரை அடைந்ததும் முதியவரும் அரச குமாரியும் முறையே கிழக்கையும் மேற்கையும் பார்த்து நின்றனராம் சிவனுக்கும்
பார்வதிக்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டதாம் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வரும்போது
ஒரு வினோத நிகழ்ச்சி ஏற்படுமாம், அபிஷேக நீரில் மீன் இருக்குமாம் பிரசன்னம்
வைத்துப் பார்த்ததில் முதியவருக்கு முறையாக அரசகுமாரியைத் திருமணம் செய்யாததன்
விளைவு இது என்று தெரிந்ததாம். சோதிடப் பரிகாரப் படி ஆலப்பாடிலிருந்து ஒரு செம்படவப்
பெண் திருமணத்துக்குத் தேவையான பரிசுப் பொருள்களுடன் செங்கண்ணூர் வந்து திருமண ஏற்பாடுகள்
செய்ய வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. இன்றும் அவ்வழக்கப்படி ஆலப்பாட்டு மக்கள்
செங்கண்ணூர் வந்து திருமணம்
நடத்துவது ஒரு விழாவாகவே நடக்கிறதாம். நடுவில்
சிலருக்கு “ இவ்வளவு தூரத்தில் இருந்து செங்கண்ணூர் போய் நாம் ஏன் விழா நட்க்கச்
செய்ய வேண்டும் “ என்ற எண்ணம் தோன்றி விழா நடக்க முடியாதபடி செய்தனராம்.
ஈசன் சிலையை தாங்கி வரவிருந்த
அலங்கரிக்கப்பட்ட யானை ஓரடி கூட நடக்காமல் நின்று விட்டதாம். ஆலப்பாடில் அம்மை
நோயின் அறிகுறிகள் தெரிய வந்ததாம் . இது ஒரு தெய்வக் குற்றம் என்று தெளிந்த மக்கள்
பழையபடி சடங்குகளைத் தொடர எல்லாம் நல்ல படியாயிற்றாம்.
ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு
ஒரு மீனவ கிராமம் இடமன்னெல் என்பது ஒரு குடும்பத்தவர்..மீன்பிடிப்பது அவர்கள் தொழில்
பக்தியுடையவர்கள்.. விரத அனுஷ்டானங்கள் பல செய்பவர்.மீன் பிடித்து வந்ததும்
முதலில் சில மீன்களைத் தானமாகக் கொடுத்த பின்னரே விற்பனை செய்வர்.கிடைக்கும்
பணத்திலும் கைநிறையக் காசுகள் சிலவற்றை சிறார்களுக்குக் கொடுப்பார்கள். இத்தகைய
குடும்பத்தில் உதித்தவர் சுகுணானந்தன்.
பண்டரத்துருத்தூ என்னும் அடுத்த கிராமத்துப் பெண் தமயந்தி என்பவரைத்
திருமணம் முடித்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த பதிமூன்று குழந்தைகளில் நான்கு
பிறந்ததும் இறந்தும் ஒன்று சில நாட்கள் கழித்து இறந்தும் போயின. மீதமிருந்த
எண்மரில் சுதாமணி என்ற பெண்ணே உலகம்
முழுவதும் மாதா அம்ருதானந்தமயி என்று அறியப் படுபவர்.
நாள் 27-09-1953. பிறந்த குழந்தை
பெண். பிறக்கும் போதும் பிறந்த பின்னும் குழந்தையின் நிறம் கரு நீலம். பிறந்த
குழந்தை பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டி பிறந்ததாம் பிறக்கும்போதுஇருந்த
நிறமும் , உடலின் இருப்பும் விவ்ரிக்கத் தெரியாத ஏதோ வியாதியோ என்று அவர்களை
அச்சமடையச் செய்தது. மருத்துவர்களிடம் காண்பிக்க அவர்கள் குழந்தையை ஆறு மாதங்கள்
குளிப்பாட்ட வேண்டாம் என்று கூறினராம்.....! ஆறு மாதங்களாயும் குழந்தையின் நிறம்
மாறவில்லையாம். அது கிருஷ்ணனோ காளியோ என்று நினைக்க வைத்ததாம் பிறகு மெதுவாக நிறம்
கருப்பாயிற்றாம். இருந்தாலும் குழந்தை கிருஷ்ண பக்தியில் மூழ்கும் போது கரு நீலமாக
மாறுமாம். இன்றும் அம்மா ஆழ்ந்த பக்தியில் கிருஷ்ணனைக் கூப்பிடும்போது நிறம் மாறுகிறது(?)
என்கிறார்கள். இந்த நிறமே குழந்தை
மீது ஒரு வித வெறுப்புணர்ச்சியாக மாறி அவரை இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாக்கியது
எனலாம். குழந்தைகள் பிறந்தபின் கவிழுதல் நீந்துதல் முட்டுக் குத்துதல் உட்காருதல்
என்று படிப்படியாக செய்வதே முறை. ஆனால் சுதாமணி ஆறு மாதங்கள் ஆனஒரு பொழுதில்
நேராகவே நிறகத் துவங்கினதும் இல்லாமல் சில நாட்களில் நடக்கவும் ஓடவும்
துவங்கினாராம். ஆறு மாத முதற்கொண்டே பேச ஆரம்பித்தாராம். இரண்டு வயதுக்குள்
கிருஷ்ணன் மேல் பாடத் துவங்கினாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்ததோ. ?
இன்று அம்மா அம்ருதானந்த மயியின்
60 வருட நிறைவு விழாவில் அவர் பிறப்பு குறித்த சில விஷயங்கள் படித்ததை
பகிர்கிறேன்.
அம்மா மூதாட்டியுடன் |
அம்மாவின் தொண்டு பற்றியும்
தேவைப் படுபவருக்கு உதவுவது பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த மாதிரியான ஒரு
பக்திக்குக் காரணம் என்ன,?ஒரு நிகழ்வு பகிருகிறேன். என் உறவினர் ஒருவரின் மகனுக்கு
உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்திருந்தார். காரணம் தெரியாத தலைவலி.
மகன் மயக்கத்தில் இருந்தான் தந்தையையும் (
அவரும் ஒரு டாக்டர்) அனுமதிக்காமல் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய
நம்பிக்கை இழந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் இருந்து கொச்சியில்
இருந்த அமிர்தானந்தமயியின் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று
கொண்டிருந்தார். அந்த மருத்துவ் வளாகத்தை நெருங்கியதும் மகனின் உடலில் முன்னேற்றம்
கண்டது. மருத்துவ மனையில் சேர்த்து சில தினங்களில் பூரண குணம் கிடைத்தது. அந்த
மருத்துவம் படித்த M.D. டாக்டர் அது அம்மாவின் அருள என்கிறார்.
பெங்களூரில் அம்மா வந்திருந்த போது பார்த்திருக்கிறேன். இருந்த இடம் விட்டு
எழாமல் மணிக்கணக்கில் காண வரும் பக்தர்களை
ஆரத்தழுவி தரிசனம் கொடுப்பார். ஒரு கடலோரக் கிராமத்தில் பிறந்து இளமையில் பல
இன்னல்களை அனுபவித்து வளர்ந்தவர் இன்று உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை
கவர்கிறார் என்றால் SHE MUST BE SOME ONE SPECIAL.!
பல தகவல்கள் அறியாதவை ஐயா... நன்றி...
பதிலளிநீக்குமாதா அம்ருதானந்தமயி பற்றிய பகிர்வு மிக அருமை சார்.
பதிலளிநீக்குஅவர்கள் பிறந்ததும் கருநீலத்தில் உடல் இருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.
சிவன் சாபத்தில் முருகன் மீன் ஆனதும் பார்வதி பரிந்து பேச வர அவரை செம்படவப்பெண் ஆக்கியதும் பின் சாபவிமோசனம் அருளியதும் அருமையான புராண வரலாறு அறியப்பெற்றோம்..
அம்மாவின் அறுபதாம் அம்ருத வர்ஷம் எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டிக்கொள்கிறேன்.
மருத்துவர் என்ன தான் மருத்துவம் ஆபரேஷன் செய்தாலும் கடவுளின் கருணை இருந்தால் மட்டுமே அற்புதங்கள் நடக்கிறது என்பதையும் அறியப்பெற்றேன்.
அன்பு நன்றிகள் சார் பகிர்வுக்கு.
த.ம.1
இன்று அம்மா அம்ருதானந்த மயியின் 60 வருட நிறைவு விழாவில் அவர் பிறப்பு குறித்த விஷயங்கள் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஅமிர்தா கல்வி நிலையங்கள் அருமையானவை..
நாங்களும் அம்மாவின் தரிசனம் பெற்றிருக்கிறோம் ..
அம்மா அம்ருதானந்தமயி குறித்து
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியுள்ள விவரம்
எதுவும் இதுவரை எனக்குத் தெரியாது
தங்கள் பதிவின் மூலமே அனைத்தும் அறிந்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇதுவரை அறியாத பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது.
பதிலளிநீக்கு// அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ//
;) இல்லை.
மீனாக வந்தவர் நந்தி என்கிறது இன்னொரு புராணக் கதை.
பதிலளிநீக்குஅம்மா என்றதும் ஜெயலலிதா என்று நினைத்தேன்.
பிழைத்துப் போகட்டும்.
பதிலளிநீக்குமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கைக் குறிப்புகளை உங்கள் பதிவின் மூலம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி
@ மஞ்சுபாஷிணி
வெகு நாட்களுக்குப் பின் என் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் இந்தியா வந்ததும் பெங்களூர் வந்ததும் அறிந்தேன். உங்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உடல் நலமா.? வருகைக்கு நன்றி.
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி.
@ ரமணி
@ கோபு சார்
தெரியவருகிற விஷயங்களைப் பகிர்வதற்குத்தானே வலைப்பூ. வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி
@ அப்பாதுரை
பதிவுகளில் உங்கள் பார்வையும் பின்னூட்டமும் is sharing of another thought process. வருகைக்கு நன்றி
@ தி. தமிழ் இளங்கோ
படித்துத் தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றி.
அன்புடையீர்!.. மாதா அம்ருதானந்தமயி அவர்களைப் பற்றி தங்கள் பகிர்ந்த செய்திகள் அருமை!.. நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!..அவர் தமைக் காண்பதுவும் நன்றே!..மிக்க நன்றி ஐயா!..
பதிலளிநீக்குரொம்பவும் உணர்வுபூர்வமான பதிவு. ரசித்தேன்.
பதிலளிநீக்குஅறியாத தகவல்கள் ஐயா. நன்றி
பதிலளிநீக்குதிருவிளையாடல் புராணத்திலே இம்மாதிரி ஒரு திருவிளையாடல் உண்டு. அதிலே தான் மீனாக நந்திதேவர் வருவார். (அப்பாதுரை சொன்னது) ஆனால் இங்கே அரசகுமாரி என்று சொல்கிறீர்கள். சாபம் கிடைச்சது என்னமோ செம்படவப் பெண்ணாகத் தானே? அப்போ செம்படவ இளவரசியா? திருவிளையாடல் புராணத்தில் அப்படித் தான் வரும். :))))
பதிலளிநீக்குமாதா அம்ருதாநந்தமயி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தகவல்களுக்கு நன்றி. எப்படி இருந்தாலும் இறையருள் இருந்தாலே அற்புதங்கள் நடக்கின்றன என்பது உண்மையே! :))))(அப்பாதுரை, கவனிக்க)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜ்
@ டி.பி.ஆர்.ஜோசப்.
@ கரந்தை ஜெயக்குமார்
@ கீதா சாம்பசிவம்
திருவிளையாடல் என்ற திரைப் படத்தில் மீனைப் பிடிக்க சிவாஜி கணேசன் மீனவன் வேடத்தில் கடற்கரையோரம் ஒரு விதமாய் அசைந்து அசைந்து நடந்து வருவது நினைவுக்கு வருகிறது. நம் நாட்டில் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. மாதா அம்ருதானந்தமயியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இருந்ததை எழுதி இருக்கிறேன். நாடு கடந்தும் அறியப் பட்டவரைப் பற்றி கேள்விப் படவில்லை என்று தெரியும்போது ஆச்சரியம் அளிக்கிறது.
பதிலளிநீக்கு2கீதா சாம்பசிவம் இறையருள் எதையும் நம்பாதவர் அதிசயிக்க வைக்கும் நிகழ்வுகளை எழுதி வருகிறார். ஒரு வேளை அவை எல்லாம் மனிதரின் கட்டுப் பாட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் என்று நினைக்கிறாரோ என்னவோ.?
அம்ருதானந்தமயி என்னும் சந்நியாசினி ஒருத்தர் இருப்பதாக மட்டுமே அறிந்திருந்தேன். மற்றத் தகவல்கள் உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். :)))
பதிலளிநீக்குயார் அது இறையருளை நம்பாமல் அதிசயிக்கும் நிகழ்வுகளை எழுதுவது?? லிங்க் கொடுங்க நேரம் இருக்கையில். :))) ஆவலைத் தூண்டி விட்டிருக்கீங்களே!:))
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நம் அப்பாதுரைதான். அவருடைய பதிவுகளில் வரும் அமானுஷ்ய சங்கதிகளை நீங்களும் படிக்கிறீர்கள். அவர் எழுதும் சில விஷயங்கள் எனக்கு அதிசய நிகழ்வுகள்போல் தோன்றுகிறது.கற்பனை என்று சொன்னாலும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. நடக்கிறது என்று நம்புவதால்தானே எழுதுகிறார்.
ஹாஹா, அப்பாதுரையா? ஆமா இல்ல! எனக்குத் தோணவே இல்லை. அவர் வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம். :))) கடவுள் இருப்பதையும் நம்பறதால் தான் ஏன் இந்த பூகம்பத்துக்குக் கடவுள் ஒண்ணும் பண்ணலை! இந்த வெள்ளத்தின் போது கடவுள் எங்கே போனார்னு எல்லாம் கேட்கிறார். அது புரிஞ்சது. :))))))))))) வி.வி.சி. வி.வி.சி.
பதிலளிநீக்கு