Tuesday, October 15, 2013

பல்சுவைப் பதிவு.


                                 பல்சுவைப் பதிவு.
                                 -----------------------
படித்தது
------------


ஒரு இளைஞன் பண்ணையாரிடம் அவர் மகளை மணமுடித்துத் தர வேண்டினான். அவர் “ என்னிடம் மூன்று காளைகள் இருக்கின்றன, நீ அவற்றில் ஏதாவது ஒரு காளையின் வாலைப் பிடித்து இழுத்தால் உனக்கு என் மகளை மணமுடிக்கிறேன் “ என்றார். இளைஞன் ஒப்புக்கொண்டான். வடிவாசல் கதவு திற்க்கப் பட்டு முதல் காளை அவிழ்த்து  விடப்பட்டது. கொழு கொழுவென்றிருந்த அந்தக் காளை சீறிப் பாய்ந்து வந்தது, அந்த இளைஞன் ‘அடுத்த காளை இவ்வளவு சீற்றத்துடன் இருக்காது, அதைப் பிடிக்கலாம்என்று விட்டுவிட்டான். அதன் பின் அடுத்த காளை அவிழ்த்து விடப்பட்டது. அதுவும் வாட்ட சாட்டமாக சீவிய கொம்புகளுடன் பாய்ந்து வந்தது. இளைஞன் மூன்றாவது காளையின் வாலை எப்படியும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இரண்டாவது காளையையும் விட்டுவிட்டான்.. மூன்றாவது காளையும் வந்தது. இளைஞன் அது ஒரு நோஞ்சான் காளையாய் இருப்பது பார்த்து அதன் வாலை எப்படியும் இழுத்து விடலாம் என்று அதை நோக்கி ப் போனான். ஆனால்..... என்ன துரதிர்ஷ்டம்...! மூன்றாவது காளைக்கு வாலே இருக்கவில்லை.....!!! நீதி.:-வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும்

கேட்டது
------



இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம். நாம்தான் அவரை எடுத்து மறைத்து வைத்து விளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்....!

புடவை வாங்கிய கதை அனுபவம்
-------------------------------



முன்பொரு முறை (1970களில்) நானும் என் மனைவியும் மதுரை சென்றிருந்தோம். கோயிலின் அருகே இருந்த கடைகளில் இருந்து புடவைவாங்க அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. நாங்களும் ஒரு உந்துதலில் ஒரு கடை ஏறினோம். அங்கிருந்த பல புடவைகளில் ஒன்றின் மேல் என் மனைவியின் கண் சென்றது. புடவைக் கடைக்காரர் வியாபார நுணுக்கம் தெரிந்தவர். புடவையை பற்றி ஒரு லெக்சரே கொடுத்தார். சுங்கிடி வகையைச் சேர்ந்தது அம்மாதிரி எங்கும் கிடைக்காது என்றெல்லாம் கூறினார். என் மனைவி என் முகத்தைப் பார்க்க நான் புடவை வாங்கக் காசை செலவு செய்தால் மற்றபடி திட்டமிட்டபடி ஏதும் செய்ய முடியாது என்றேன். புடவைக் கடைக்காரர் விடாக் கொண்டர். “ அம்மா ஆசைப்படறாங்க . வாங்கிக் கொடுங்க சார். பணமில்லைன்னா என்ன ? உங்கள் முகவரி தாருங்கள் புடவையை vpp இல் அனுப்புகிறோம் என்றார்.நானும் சரியென்று சொல்ல நாங்கள் பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பிய அடுத்த நாள் புடவை வந்திருந்தது..!. என் மனைவிக்கு அந்தப் புடவை மிகவும் பிடித்திருந்தது.
அண்மையில் நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஒரு நல்ல சுங்கிடிப் புடவை வாங்க விரும்பினார். நல்ல மதுரைச் சுங்கிடிப் புடவைகள் எங்கே கிடைக்கும் என்று உள்ளூர்ப் பிரமுகர் ஒருவரைக் கேட்டார், அவரும் எங்களை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாக நடத்திச் சென்று அங்கே இருந்த POTHYS துணிக் கடையைக் காண்பித்துச் சென்றார். மதுரைச் சுங்கிடிப் புடவை வாங்க தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள POTHYS  கடை காண்பிக்கப் பட்டதும் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள், என்றால் புடவை வாங்கியப் பணம் கட்ட நான் DEBIT கார்ட் கொடுத்தும் அங்குள்ள மெஷின் ஏற்காததால் கைவிட்டு இருக்கும் பணத்தை கொடுத்து அடுத்த நாள் ATM ல் பணம் எடுத்து பயணம் தொடர்ந்தோம்.

பார்த்தது
---------
தேள் வைத்த இந்த மாதிரியான லாலி பாப்கள் அமெரிக்காவில் விற்கிறார்களாம். முந்தைய நாள் அங்கிருந்து வந்தவர் காட்டியதும் படம் பிடித்து பதிவில் பகிர்கிறேன் 

scorpion embedded lollipop
          . .     
காணொளி கண்டு மகிழ.
========================
---------------------

    
.
..

19 comments:

  1. வாடிக்கையாளர்களைத் துச்சமாக மதிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விலை என்ற தலைப்பின் வேறு ஒரு பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொளி ரசிக்கவைத்தது,...!

    ReplyDelete
  3. //வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும்//

    நீதிக்கதை நல்லா இருக்கு.

    மேலும் படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    >>>>>

    ReplyDelete
  4. முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொளி ரசிக்கவைத்தது..!

    உண்மையிலேயே அசத்தல்

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா. பல்சுவைப்பதிவுகள் அனைத்தும் ரசிக்க வைத்தது. குறிப்பாக கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் என்பது. காணொலியின் மூலம் முடியாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    ReplyDelete
  6. முதல் வாய்ப்பு உட்பட அனைத்தும் அருமை ஐயா...

    காணொளி ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  7. முதல் சம்பவம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!..

    காணொளி அருமை!..

    ReplyDelete
  8. பல்சுவை பகிர்வு அருமை.
    காணொளி மிக அருமை.

    ReplyDelete
  9. முதல் வாய்ப்பிணை நழுவ விட்டால் என்னவாகும் .....என்பது உள்ளிட்ட பல்சுவை பதிவு அருமை.

    ReplyDelete
  10. வாய்ப்புகள் வரும்பொழுதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நீதிக் கதை அருமை ஐயா. முடியாதது ஒன்றுமில்லை காணொளி காட்சி அசத்தல் ஐயா நன்றி

    ReplyDelete
  11. அதிர்ஷ்ட தேவதை யார் வீட்டையும் இரண்டாவது முறை தட்டுவதில்லை என்பதை நினைவூட்டினீர்கள். அருமையான பல்சுவைக் கதம்பம். - இமயத்தலைவன்.

    ReplyDelete
  12. வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. இல்லாத கடவுளை தொலைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அலையும் மக்கள்தான் கூட்டத்தில் மிதிபட்டு மடிகின்றனர். வேதனை!

    ReplyDelete
  13. வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. இல்லாத கடவுளை தொலைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அலையும் மக்கள்தான் கூட்டத்தில் மிதிபட்டு மடிகின்றனர். வேதனை!

    ReplyDelete
  14. // நீதி.:-வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் //

    நல்ல நீதிமொழியை சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. // முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் //

    ஆனால், கொக்கொக்க கூம்பும் பருவத்து.
    கிட்டாதாயின் வெட்டென மற. முயற்சி திருவினையாக்கும். ஒன்றுக்கொன்று எதிர்மறை. மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். விதியின் வழி மதி செல்லும்.

    ReplyDelete
  16. தேள் லாலி பாப் உவ்வே...,

    ReplyDelete
  17. பல்சுவைப் பதிவைப் படித்து ரசித்த அனைவருக்குமென் நன்றிகள்.பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். எழுதையவை படித்த, கேட்ட பார்த்த வற்றின் பகிர்வே. புடவை வாங்கியது மட்டுமே என் அனுபவம். பின்னூட்டங்களுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete