Friday, January 2, 2015

தடம் மாறிய வாழ்க்கையா....?


                             தடம் மாறிய வாழ்க்கையா....?
                             ------------------------------------------
( என் பதிவுகளை யாரோ ஆர்வக் கோளாறால் என் விருப்பம் இல்லாமலேயே தமிழ் மணத்தில் இணைக்கிறார்கள். வேண்டாமே. என் பதிவுகளை தக்க நேரத்தில் நானேதமிழ் மணத்தில் இணைத்துக் கொள்கிறேனே)

. கே. பாலசந்ததரின் மறைவுச்செய்தி என்னை என்னென்னவோ எண்ணச் செய்து விட்டது. ஒரு வேளை எங்களின் சிந்தனைகள் பலவற்றிலும் ஏதோ ஒற்றுமை இருந்திருக்கலாம். அதுவே என் எண்ணப்போக்குக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். கே. பாலசந்தர் ஏஜீஸ் ஆஃபீசில் பணியிலிருந்தபோது அமெச்சூர் நாடகங்களில் ஈடுபாடு கொண்டு 1963-ம் வருடம் மேஜர் சந்திரகாந்த் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார் என்று படித்த நினைவு. நான் பெங்களூருவில் HAL AERO ENGINE DIVISION-ல் பணியில் இருந்தபோது பெங்களூரு TOWN HALL-ல் 1963-ம் வருடம் ஃபெப்ருவரி மாதம் 13-ம் தேதி வாழ்ந்தே தீருவேன் என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதி இயக்கி நடித்தும் இருந்தேன் அதில் ஒரு வசனம் எனக்கு சில பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அப்போதே என் சிந்தனைகள் வித்தியாசமாய் இருந்திருக்கிறது. “ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின் அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும் ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் 
நான்கு சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது. 
இதுவரை. இப்போது, இது, எங்கள் காலம், ஏழைத்தொழிலாளரின் 
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி 
அடிக்கும் எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி 
வரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் 
கொடுப்பவன் நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE HAS 
TO GIVE FIRST TO TAKE.!" என்று எழுதியிருந்தேன்.இது பற்றி ‘நான் போட்ட நாடகங்கள்என்னும் பதிவில் குறிப்பிடிருந்தேன் அதற்குப் பின்னூட்டமாக
  

 . ஜீவி said...
//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//

//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!-
என்று எழுதியிருந்தேன்..//

1963
பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.

சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!

ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!
அந்த நாடகத்தில் மையக் கருத்தாக தொழிலாளி முதலாளிக் கருவுடன் குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட அண்ணன் உறவையே கொச்சைப் படுத்தும் கணவன் என்று வித்தியாசமாகக் கதை அமைத்திருந்தேன். ஒரு வேளை கே. பாலசந்தர் இது பற்றி அறிந்திருந்தால் என்ன நினைத்திருப்பாரோ என்றும் இப்போது எண்ணத் தோன்றுகிறது.
நாடகங்களில் ஈடுபாடு இருந்தது.முரசொலி சொர்ணம் அவர்களின்  விடை கொடு தாயே “ என்னும் நாடகத்தை பெங்களூரு GUBBI THEATRE –ல் மேடையேற்றினேன் திரு கண்ணன் அவர்களின் முப்பது நாட்கள் என்னும் நாடகத்தையும் இயக்கி மேடையேற்றினேன். இருந்தாலும் நானே எழுதி இயக்க பெங்களூருவில் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நான் என் பணியை 1965-ல் விட்டு சென்னைக்கு வந்தேன். அங்கிருந்து 1966-ல் திருச்சியில் பணியில் அமர்ந்தேன். நாடகம் எழுதி மேடையேற்ற சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த வேளை பி.எச்இஎல்-ல் கம்யூனிடி செண்டரில் ஒரு நாடகப் போட்டி நடத்தினார்கள். அதில் ஏற்கனவே பெங்களூருவில் அரங்கேற்றி இருந்த ‘வாழ்ந்தே தீருவேன் நாடகத்தை மீண்டும் சில நகாசு வேலைகளுடன் அரங்கேற்றினேன். நான் நடிக்கவில்லை. அந்த நாடகம் எனக்குப்பரிசு பெற்றுத் தந்தது.தொடர்ந்து ஆராமுது அசடாஎன்னும் நாடகத்தை கிருஷ்ண கான சபாவுக்காக இயக்கி மேடை ஏற்றினேன் அதையே ஸ்ரீரங்கத்திலும் மேடையேற்ற அழைப்பு வந்து அரங்கேற்றினேன். இருந்தாலும் நானே கதை எழுதி இயக்க ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். நான் எழுதி வைத்திருந்த சிறுகதை “மனசாட்சியை சில உபரிக் கதாபாத்திரங்களுடன் நாடக வடிவுக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அதன் கதாநாயகன் ஒரு ஆண்மை அற்றவன் என்று எழுதி இருந்ததால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க நண்பர்கள் தயங்கினர். எனக்கு மிகவும் பிடித்த கதை அது. மனப் போராட்டங்களை வெகுவாக வெளிப்படுத்தும் கரு. ஒரு ஆண் தன்னை உலகுக்கு ஆண்மை சக்தி உள்ளவனாகக் காண்பிக்க எந்த அளவுக்குப் போவான் என்பதையும்  தாம்பத்திய சுகம் கிடைக்கப் பெறாவிட்டால் ஒரு பெண் எதையும் செய்வாள் என்பதையும் மனசாட்சியைத் துணைக்கழைத்து சமாதானப் படுத்திக் கொள்வார்கள் என்றும் எழுதி இருந்தேன். இருந்தாலும் அதே மனசாட்சி எப்படி உறுத்தும் என்பதையும் காட்டி இருந்தேன். கதாமாந்தர்கள் வளர்ந்து வரும் மத்திய தரத்தினர் என்றும் நம் சமுதாயக் கட்டுக் கோப்புகளை முற்றும் விட முடியாதவர் என்றும் காட்டி முடிவை அமைத்திருந்தேன் கத்தி முனையில் நடப்பது போன்றிருந்தது. இதையேஎன் வலைப்பூவில் வெளியிட்டபோது அந்தக் காலத்தில் எப்படி சில காட்சிகளைக் காட்டினேன் என்று கேட்டு திரு.ஜீவி பின்னூட்டமிட்டிருந்தார்..விளக்கி மறுமொழி எழுதினேன். மனதுக்கும் இதமாக இருந்தது.
இப்போது எண்ணிப் பார்க்கும் போது இதே கருவை கே. பாலசந்தர் எப்படிக் கையாண்டிருப்பார் எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இம்மாதிரி வித்தியாசமான கதைக் களன்களை அமைத்து வெற்றி பெற்றவர் அல்லவா. வாய்ப்பும் வசதியும் இருந்திருந்தால் நானும் ஒரு வேளை கே. பாலசந்தர் போல் புகழ் பெற்றிருக்கலாம்.  தடம் மாறிப் போய் எஞ்சினீரிங் லைனில் வாழ்ந்து குப்பை கொட்டியாகி விட்டதோ? There are lots of ifs and buts in life என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்...!

57 comments:

  1. நீங்கள் கையாண்டு இருப்பதும் நன்றே ஐயா...

    பல விசயங்களில் தேற்றிக் கொள்வதே நலம்...

    ReplyDelete
  2. பல்துறை வித்தகரே, உங்கள் மனப் போராட்டங்களைச் சந்தித்தோம். நாம் செய்தது அனைத்தும் அந்தந்தக் காலகட்டங்களுக்குச் சரியே.

    ReplyDelete
  3. நாம் ஒன்று நினைத்தாலும் காலம் அதன் போக்கில் நம்மை மாற்றி அழைத்துச்சென்றுவிடுகிறது! நேற்றைய பதிவை படித்தும் கருத்திட முடியவில்லை! இணையம் மெதுவாக இருந்ததால் படிக்கமட்டும்தான் முடிந்தது! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. ஆஹா பல சாதனைகளை புரிந்துள்ளீர்கள். துணிந்து இறங்கி இருந்தால் இன்னோர் பாலச்சந்தர் கிடைத்திருப்பார் போலிருக்கிறதே. இதையெல்லாம் சொல்ல நிச்சயம் அசாத்திய துணிவு வேண்டும்

    ReplyDelete
  5. தங்கள் கருத்து சரியாகத் தான் தெரிகின்றது.

    என் தந்தையும் அந்த காலத்தில், தஞ்சை ராமநாதன் அரங்கத்தில் நாடகங்களை நடத்தியவர்.

    அவருடன் பலர் வந்து கலந்தாய்வு செய்து கொண்டிருப்பார்கள். சிறுவனாக இருந்த எனக்கு ஏதும் புரியாது.(இப்போதும் புரிவதில்லை!.)

    அப்படி வந்தவர்களுள் ஒருவர் நடிகவேள் என்பது பின்னாளில் தான் எனக்குத் தெரிந்தது.

    இன்றைய பதிவு தங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவியது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. பாலச்சந்தரால் எந்தத் துறையை முடிவாக எடுப்பது என்று முடிவெடுக்க முடிந்தது. மனதுக்குப் பிடித்த துறையில் முழு மூச்சாக இறங்கி வெற்றி பெற்றார்.

    அந்தச் சூழ்நிலை உங்களுக்கும் அமைந்து, ஊக்கம் கொடுப்பவர் இருந்து நீங்களும் துணிச்சலாக முடிவெடுத்திருந்தால் நீங்கள் நினைத்தது போலவே நடந்திருக்கலாம்.

    ReplyDelete

  7. பழைய நினைவுகளை பகிர்ந்த விதம் சிறப்பு ஐயா.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. ஆம் சார்! பாலசந்தர் அருமையான வித்தியாசமான சிந்தனைகளைப் பதிவு செய்த்வர். அருமையான இயக்குனர். அவர் தனக்கு விருப்பமானத் துறையில் உறுதியுடன் இருந்து சிகரமாகவும் விளங்கினார்.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் மற்றொரு பாலச்சந்தர் கிடைத்திருப்பார்தான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....எங்களுக்கும் இந்த ஆதங்கம் நிறைய உண்டு. நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு...//.There are lots of ifs and buts in life// யெஸ்......

    தங்களுக்கும் நல்ல சூழல் அமைந்து இருந்து ஆதரவும் கிடைத்திருந்தால் நீங்களும் உங்கள் விருப்பங்களைச் சாதித்திருந்திருப்பீர்கள் சார். எங்களுக்கும் இந்த் ஆதங்கம் உண்டு..என்ன செய்ய...

    ReplyDelete
  10. மனசாட்சி கதை வைத்திருக்கிறீர்களா? இன்றும் அந்தக் கரு - இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - slightly ahead of its time என்றே கணிக்கப் பெறும்.

    கதையை பதிவில் எழுதியிருக்கிறீர்களா?

    ReplyDelete


  11. //வாய்ப்பும் வசதியும் இருந்திருந்தால் நானும் ஒரு வேளை கே. பாலசந்தர் போல் புகழ் பெற்றிருக்கலாம். தடம் மாறிப் போய் எஞ்சினீரிங் லைனில் வாழ்ந்து குப்பை கொட்டியாகி விட்டதோ?//

    அப்படி எண்ணாதீர்கள். நீங்கள் கலை உலகில் செய்ய வேண்டியதை பொறியியல் துறையில் செய்துவிட்டீர்கள். நீங்கள் கலை உலகுக்கு வந்திருந்தால் ஒரு பொறியாளரை இழந்திருப்போம்.

    ReplyDelete
  12. Thulasidharan V Thillaiakathu said.//

    தங்களுக்கும் நல்ல சூழல் அமைந்து இருந்து ஆதரவும் கிடைத்திருந்தால் நீங்களும் உங்கள் விருப்பங்களைச் சாதித்திருந்திருப்பீர்கள் சார். எங்களுக்கும் இந்த் ஆதங்கம் உண்டு..என்ன செய்ய.///என் கருத்தும் இதுவே

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருப்பது நூலிழை வித்தியாசமே. அந்த நூலிழையைப் புரிந்துகொண்டிருந்தால் பலபேரின் வாழ்வு மாறியிருக்கும். நீங்கள் மட்டுமல்ல, நான் உள்பட. நிர்ந்தரமான வேலை யொன்றில் அமர்ந்துவிட்டால், அது, நம்மை ரிஸ்க் எடுக்கவிடாமல் செய்துவிடும் என்பது தெளிவு. விளைவு, GMB என்ற கதாசிரியர்-வசனகர்த்தா-இயக்குனர்-தயாரிப்பாளர் எங்களுக்குக் கிடைக்காமல் போனார்!

    ReplyDelete
  14. //ஆனால் அதன் கதாநாயகன் ஒரு ஆண்மை அற்றவன் என்று... //

    இந்த வரிசையில் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய 'சாரதா' என்றொரு திரைப்படம் உண்டு.

    இந்தக் கதைக்கருவுக்கும் மூலம் ஒன்று உண்டு.

    பொதுவாகப் பார்த்தீர்களென்றால்
    நமக்குத் தெரியவந்த ஏதாவது ஒரு விஷயம் அல்லது வாசித்த ஏதாவது ஒரு செய்தி தான் மேற்கொண்டான யோசனையை நம்மில் கிளர்த்தி
    வேறுபட்டதாகக் காட்டுவதற்கு கற்பனை முலாத்தைப் பூசி 'நமது'
    என்றாக்குகிறது என்பது தெரியும்.

    ReplyDelete
  15. பாலசந்தரைக் குறித்த என் கருத்தே தனி! :)))) அவரின் ஆரம்பகாலப் படங்களான சர்வர் சுந்தரம், நாணல், எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா போன்றவை கவர்ந்தாற்போல் மற்றப்படங்கள் என்னைக் கவர்ந்ததில்லை. :))))

    ReplyDelete
  16. மற்றபடி எல்லாத் துறைகளும் நீங்கள் புகுந்து ஒரு கை பார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் சரியான சந்தர்ப்பம் அமைந்திருந்தால் நீங்களும் ஓர் இயக்குநர் திலகம் ஆகி இருக்கலாம். :)))))

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    /பல விசயங்களில்தேற்றிக்கொள்வதே நலம்/ கவலைப் பட்டால்தானே தேற்றிக் கொள்ள. பதிவு சில எண்ணச் சிதறல்களின் வெளிப்பாடு .அவ்வளவே வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  18. @ டாக்டர் கந்தசாமி
    மனப் போராட்டம் ஏதுமில்லை ஐயா. சில எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  19. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் கருத்துப் பறிமாறலுக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  20. @ டி என் முரளிதரன்
    / இதையெல்லாம் சொல்ல நிச்சயம் அசாத்திய துணிவு வேண்டும்/நான் துணிச்சல் மிக்கவந்தானே..! வருகைக்கு நன்றி முரளி.

    ReplyDelete

  21. @ துரை செல்வராஜு
    என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னைப் பற்றி நிறையவே தெரிந்திருக்கவேண்டும்/ நான் ஒரு திறந்த புத்தகம். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ ஸ்ரீராம்
    அந்தக் காலத்தில் எனக்கு நாடகத் துறையில் ஈடுபாடுஇருந்தது. அதையே தொழிலாக எண்ணிபார்த்ததே இல்லை. பாலசந்தரைப் பற்றிய செய்திகளைப் படித்ததால்வந்த விளைவே இப்பதிவு. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  23. @ கில்லர் ஜி
    பாலசந்தருக்கு நன்றி சொல்லவேண்டும் ஜீ. அவரைப் பற்றிப் படித்த செய்திகள் சில செய்திகளின் பகிர்வாயிற்று. உங்கள் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  24. @ ரூபன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  25. @ துளசிதரன்
    எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை ஐயா. இந்த ifs and buts ஒரு பதிவுக்கு வழிசெய்தது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  26. @ A Durai
    வலையுலகில் என் ஆரம்பகாலப் பதிவுகளில் அதுவும் ஒன்று. படிக்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் சுட்டி தருகிறேன். இதையே நான் நாடக வடிவில் பதிவிட்டபோது அவ்வப் போது நீங்களும் பின்னூட்டம் எழுதி இருக்கிறீர்கள்/ திரு ஜீவியின் பின்னூட்டதையும் பார்க்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி துரை சார்.

    ReplyDelete

  27. @ வே.நடனசபாபதி
    பொறி இயல் துறையில் நான் ஏதாவது சாத்தித்து இருந்தால் அதை அறிந்தவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பர். ஆனால் கலையுலகில் சாதனைகள் புகழும் பணமும் சேர்த்திருக்கும்/ Anyway no regrets. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  28. @ ரமணி
    துளசிதரனுக்கு சொன்ன அதே கௌத்தே உங்களுக்கும் . வருகைக்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete

  29. @ செல்லப்பா யக்ஞசாமி
    நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கும் நிலையில் நான் இருக்கவில்லை. ஏன் அதைப் பற்றி யோசித்ததே இல்லை. இந்த எண்ண வெளிப்பாடுகளுமொரு செய்தியின் விளைவே, வருகைக்கு நன்றி. என் ‘வாழ்வின் விளிம்பில் ‘ புத்தகத்தின் விமரிசனத்தில் இந்த மனசாட்சி கதை உங்களை எதிர்மறை கருத்துக்களை எழுதச் செய்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete

  30. @ ஜீவி
    உங்களுக்கு ஒரு உண்மை சொல்லப் போகிறேன் நான் ‘சாரதா ‘திரைப்படம் பார்த்ததில்லை. அதுபற்றி ஏதும் அறிந்ததில்லை. நாம் செய்யும் செயல்கள் எழுதும் எழுத்துக்கள் எதுவும் ”நமது” அல்ல.ஏதோகால கட்டத்தில் ஏதோ காரணத்தால் வெளிப்படுகிறது அது சரி நான் எங்கேஇந்தக் கருத்து “எனது” என்று உரிமை கொண்டாடி இருக்கிறேன் ?ADurai அவர்களின் பின்னூட்டம் பார்க்கவும் வருகைக்கு நன்றி ஜீவிசார்

    ReplyDelete

  31. @ கீதா சாம்பசிவம்
    பாலசந்தரைப் பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் இருக்காது. அவரது மறைவு பற்றிய செய்தி என்னை ஏதேதோ எண்ணச்செய்தது,விளைவு இப்பதிவு. வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  32. @ கீதா சாம்பசிவம்
    நான் எல்லாத் துறைகளிலும் கை வைத்திருக்கிறேன் Jack of all trades but expert in none. வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  33. ****வாய்ப்பும் வசதியும் இருந்திருந்தால் நானும் ஒரு வேளை கே. பாலசந்தர் போல் புகழ் பெற்றிருக்கலாம். தடம் மாறிப் போய் எஞ்சினீரிங் லைனில் வாழ்ந்து குப்பை கொட்டியாகி விட்டதோ? ****

    வாழ்க்கையில் புகழ்தான் முக்கியமா சார்? இல்லைனா நாம் உணர்ந்ததை மற்றவர்களை உணரவைப்பதா? மற்றவர்கள் சிந்தனைகளையும் நாம் புரிந்துகொள்வதா? பாலசந்தர் போல பெறும் புகழ் உங்களுக்கு கிடைத்துள்ள இச்சுதந்திரங்களுக்கு முட்டுக்கட்டையாக நின்று இருக்குமோ?

    ReplyDelete
  34. பொதுவாக குறிப்பிடும் எதையும் உங்களுக்காக சொல்லியிருப்பதாக எடுத்துக் கொண்டால் எப்படி?..
    இவ்வளவுக்கும் 'பொதுவாகப் பார்த்தீர்களென்றால்' என்று நான் குறிப்பிட்டுச் சொல்லி வேறு இருக்கிறேன்! :))

    ஒரு பொது டிஸ்கஷனுக்கு ஆட்படுகிற மாதிரி எதையுமே எழுத முடியாமல் போகிற பட்சத்தில் பின்னூட்டம் போடுவதில் தான் என்ன பயன்?..

    'இந்தக் கதைக்கருவுக்கும் மூலம் ஒன்று உண்டு' என்று 'சாரதா' திரைப்படத்திற்காக நான் குறிப்பிட்டிருந்ததை, உங்கள் கதைக்காக என்று எடுத்துக் கொண்டு விட்டீர்களா, என்ன?..



    ReplyDelete

  35. @ ஜீவி
    /
    இந்தக் கதைக்கருவுக்கும் மூலம் ஒன்று உண்டு./என்று கூறி சாரதா திரைப்படத்தையும் கூறி
    /வேறுபட்டதாகக் காட்டுவதற்கு கற்பனை முலாத்தைப் பூசி 'நமது'
    என்றாக்குகிறது என்பது தெரியும்/ என்று எழுதினால் வேறு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளமுடியும்ஜீவி சார். அது என்னவோ அண்மைக் காலத்தில் நீங்கள் என் பதிவுகளுக்கான பின்னூட்டங்களில்ஒன்றை நினைத்து ஒன்றை எழுதுவது போல் தெரிகிறது. நான் ஒரு சாமானியன். முதலில் படித்ததும் தோன்றும் கருத்தேசரியென்று தோன்றுகிறது.என் பதிவையும் பின்னூட்டங்களையும் படிப்பவர்க்குப் புரியும் என் புரிதல் சரியா தவறா என்று. மீள்வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  36. என் பின்னூட்டங்களைஎப்பொழுதுமே மிகுந்த யோசனையுடன் தான் பதிவிடுவேன். அது என் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிற மாதிரியும் இருக்கும்.

    மற்றவர்கள் குறிப்பிடாத ஏதேனும் செய்தி இருந்தாலே பின்னூட்டம் இடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். பதிவிடுபவரும் அதைத் தொடர்ந்து ஏதாவது தன் கருத்தைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி அவர் சிந்தனைக்கு வழிவிடுகிற மாதிரி பின்னூட்டங் களை அமைத்துக் கொள்வதும் வழக்கம். இதனால் பலருக்கு பலவும் தெரிகிற ஒருவர் கருத்தை இன்னொருவர் பகிர்ந்து கொள்கிற கருத்துப் பரிமாற்றம் நிகழ இங்கே வாய்ப்பேற்படுகிறது என்பதே இதனால் ஆய பயன்.

    இதனால் என் பதிவுகளிலும் நான் பேசுகிறேன், என் பின்னூட்டங்களிலும் நான் பேசுகிறேன் என்கிற வாய்ப்பை நானாகவே ஏற்படுத்திக் கொள்கிறேன்.

    ஒருவர் பதிவுக்கு இருபது பின்னூட்டங்கள் வந்திருந்தால்
    அதில் நான் இடும் பின்னூட்டம் மட்டும் வித்தியாசமாகத் தெரிவதற்கு இதுவே காரணம்.


    நான் சொல்லியிருக்கிற கருத்தில் மறுபடியும் என் பின்னூட்டத்தை நீங்கள் வாசித்துப் பார்த்தால் மன உறுத்தல் இருக்காது.

    நானே அறியாமல் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  37. உங்களது பதிவினைப் படித்ததும் சேக்ஸ்பியரின் நாடகம் (க்ளியோபாட்ராவா ஒத்தெல்லாவோ என தெரியவில்லை)
    நினைவிற்கு வந்தது. அதில் வரும் ஒரு வசனம் There should not be ifs and buts in life. யதார்த்தம். நன்றி.

    ReplyDelete
  38. ஆஹா.... நாடகமா!!!!

    எனக்கும் நாடகம் ரொம்பப் பிடிக்கும். நம்ம தமிழ்ச்சங்கத்தில் மூணு நாடகங்களை இயக்கியும் நடித்தும் இருக்கேன்:-)

    உங்கள் நாடக ஆர்வமும் புரிகிறது. ஆனால் உமக்கு அது வழி இல்லைன்னு வேற தொழிலிலுக்குள் காலம் இழுத்துக்கொண்டு போய்விட்டதே:(

    ReplyDelete
  39. ****ஜீவி said...

    என் பின்னூட்டங்களைஎப்பொழுதுமே மிகுந்த யோசனையுடன் தான் பதிவிடுவேன். அது என் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிற மாதிரியும் இருக்கும்.

    மற்றவர்கள் குறிப்பிடாத ஏதேனும் செய்தி இருந்தாலே பின்னூட்டம் இடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். பதிவிடுபவரும் அதைத் தொடர்ந்து ஏதாவது தன் கருத்தைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி அவர் சிந்தனைக்கு வழிவிடுகிற மாதிரி பின்னூட்டங் களை அமைத்துக் கொள்வதும் வழக்கம். இதனால் பலருக்கு பலவும் தெரிகிற ஒருவர் கருத்தை இன்னொருவர் பகிர்ந்து கொள்கிற கருத்துப் பரிமாற்றம் நிகழ இங்கே வாய்ப்பேற்படுகிறது என்பதே இதனால் ஆய பயன்.

    இதனால் என் பதிவுகளிலும் நான் பேசுகிறேன், என் பின்னூட்டங்களிலும் நான் பேசுகிறேன் என்கிற வாய்ப்பை நானாகவே ஏற்படுத்திக் கொள்கிறேன்.

    ஒருவர் பதிவுக்கு இருபது பின்னூட்டங்கள் வந்திருந்தால்
    அதில் நான் இடும் பின்னூட்டம் மட்டும் வித்தியாசமாகத் தெரிவதற்கு இதுவே காரணம்.****

    Jeevee Sir,

    You are the HERO in your world. Let it be post or responses you can think of yourself highly. There is absolutely nothing wrong in that thought. But you need to understand the fact that everybody feels that they are unique in their own way. You don't need to accept that but you need to realize how others' think about themselves too.

    If you had realized that you would not have said what you have said above.

    There is no absolute truth when it comes to rating oneself. It is all relative. I can be the worst and I can be the best as well. It is all relative. If I claim myself as unique or better than others, that only shows my ignorance. This is how I think. These are just my thoughts. of course they are NOT FLAWLESS!

    ReplyDelete

  40. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    சில நினைவுகள் ”இப்படி நிகழ்ந்திருந்தால்... ஆனால்..”என்னும் எண்ணங்களைத் தோற்றுவிக்கிறதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  41. @ துளசி கோபால்
    ’நம்ம தமிழ் சங்கத்தில’ என்றால் நியூஜிலாந்திலா.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  42. @ வருண்
    கருத்துக்கள் வெளிப்படுத்தும்போது சில நேரங்களில் பிறரது எண்ணங்களைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறோம் . நான் என் கருத்துக்களை (பலரும் நினைக்கிறார்கள் எதிர்மறை என்று)வெளியிடும்போது பிறரது மனம் புண்படாதபடி இருக்க முயற்சி செய்கிறேன் தர்க்கங்களில் வெல்லலாம் ஆனால் அதில் நண்பர்களை இழக்க நேரலாம்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  43. ஆமாங்க ஐயா.

    1995 இல் தமிழ்ச்சங்கம் தொடங்கிய குழுவில் நானும் கோபாலும் இருக்கோம்.

    கடந்த 10 வருடங்களில் நிறைய எழுதிட்டேன்,சங்கத்தைப் பற்றி.

    சாம்பிளுக்கு ரெண்டு லிங்க் இங்கே. நேரம் இருக்கும்போது பாருங்க.

    http://thulasidhalam.blogspot.co.nz/2006/01/blog-post_23.html

    http://thulasidhalam.blogspot.com/2007/10/blog-post_25.html

    ReplyDelete
  44. ஜீவி அவர்களின் சாரதா கருத்தில் எந்தவித insinuationம் இருப்பதாகத் தெரியவில்லையே?

    ReplyDelete

  45. @ A.Durai
    நான் என் பதிவில் ஆண்மையற்றவன் கருத்துக்கு மூலம் எனது என்று கூறி இருக்கவில்லை. அப்படி இருக்கையில்
    /
    இந்தக் கதைக்கருவுக்கும் மூலம் ஒன்று உண்டு.

    பொதுவாகப் பார்த்தீர்களென்றால்
    நமக்குத் தெரியவந்த ஏதாவது ஒரு விஷயம் அல்லது வாசித்த ஏதாவது ஒரு செய்தி தான் மேற்கொண்டான யோசனையை நம்மில் கிளர்த்தி
    வேறுபட்டதாகக் காட்டுவதற்கு கற்பனை முலாத்தைப் பூசி 'நமது'
    என்றாக்குகிறது என்பது தெரியும்./என்று எழுதியது ஏதோ அந்தக் கருத்துக்கு மூலம் (“நமது”)என்றாக்குகிறேன் என்னும் தொனியில் நான் புரிந்து கொண்டேன்நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் Let me bury the hatchet.

    ReplyDelete
  46. There are lots of ifs and buts in life....

    This says it all!

    ReplyDelete

  47. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  48. nothing to bury sir ;-)

    ஒரு சுவாரசியமான சிக்கலை சும்மா விடலாமோ?

    படைப்பாளிக்கு எது சொந்தம்? கருவா அல்லது கருவைக் உருக்கொண்டு வந்த கற்பனையா?

    ஜெயமோகன் மகாபாரதத்தை தமிழில் (?) அவர் பாணியில் எழுதுகிறாராம். ஜீவி அவர்கள் விரும்புவது போல ஜெயமோகனுக்கு இந்தப் படைப்பு காரணமாக ஞானபீட விருது கிடைத்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. இதில் விவாதிக்க ஒண்ணுமில்லை. இன்னும் விவாதம் செய்யணும்னு சொல்பவர்கள் கவனிக்க!!

    -------------

    அப்படிப் பார்த்தால் எல்லாமே "நமது" தான் என்றால் இன்றைய நிலையில் ஒரிஜினல் சிந்தனை என்பதே இல்லை என்றுகூட சொல்லலாம்.

    ஏன் இன்றைய? அன்றைய? என்றிக்குமே அப்படித்தானே??

    யாருக்குமே ஒரிஜினல் சிந்தனை என்றுமே இல்லை என்றாகி விடுகிறது.

    Le me go back to திருக்குறள்.

    திருக்குறளை நாம் திருவள்ளுவருடைய ஒரிஜினல் சிந்தனைகளாகத்தான் சொல்கிறோம்.

    திருவள்ளுவருடைய அச்சிந்தனைகளுக்கு "மூலம்" என்னவென்று ஆராயலாமே?

    ஆராய்வோமா??

    ஒவ்வொரு குறளுக்கும் மூலம் கொடுத்தது யாரோ இன்னொரு மூத்தவர் என்றாகிறது. ஆக திருவள்ளுவர் படைப்பே இல்லை திருக்குறள் என எடுப்போமா??

    அப்போ திருவள்ளுவரை ஏன் நாம் பெரிதாகப் பேச வேண்டும்?

    திருக்குறள் "நமது" தானே? எதற்காக திருவள்ளுவருக்கு "க்ரிடிட்"???

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    எதுவுமே "எனதல்ல", எல்லாமே "நமது" என்கிற வாதத்தை எந்த "கலைஞனும்" ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை புரிந்து கொள்வதில் இங்கு யாருக்கு என்ன பிரச்சினை?

    புரியாமலே பேசிக்கொண்டு இருக்கீர்களா?

    ReplyDelete

  51. @ A.Durai
    /
    ஒரு சுவாரசியமான சிக்கலை சும்மா விடலாமோ?/ என்ன செய்யலாம், சொல்லுங்கள்./ஜீவி அவர்கள் விரும்புவது போல ஜெயமோகனுக்கு இந்தப் படைப்பு காரணமாக ஞானபீட விருது கிடைத்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?/இதை அவரிடம் அல்லவா கேட்க வேண்டும். மீள்வருகைக்கு நன்றிசார்

    ReplyDelete

  52. @ வருண்
    இதில் விவாதிக்க ஒண்ணுமில்லை. விவாதம் எந்த பலனையும்தரப் போவதில்லை. நீண்ட எடுத்துக் காட்டலுடனான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  53. exactly வருண். எல்லாமே எனதல்ல எல்லாமே நமது என்பதற்கு இடைப்பட்டது படைப்பாளியின் உரிமை என்றே நினைக்கிறேன். நல்ல உதாரணம் காட்டயிருக்கிறீர்கள், why didn't I think I that ;-). பொய் சொல்லக்கூடாது, மழை உதவும், பெற்றோர்கள் முதல்வர்கள், சாமி கண்ணைக் குத்தும், பெண்ணும் சைட் அடிப்பாள்..... இந்த கருத்துக்களில் வள்ளுவர் எதை ஒரிஜினலாகச் சிந்தித்தார்? சொன்ன விதம் ஒரிஜினல். தெரிந்த கருவாக இருந்தால் என்ன? கொடுத்த உரு தான் ஏறக்குறைய கருவே உடமையான பெருமையை வழங்கியது.

    ReplyDelete
  54. உங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்பதை ஜீவியிடம் கேட்க வேண்டுமா? சரிதான்.

    ReplyDelete
  55. ஒரு சுவாரசியமான சிக்கலை விவாதிப்பதில் என்ன தவறு?

    ReplyDelete

  56. @ A.Durai
    முதலில் இருந்தே வருகிறேன் கதாநயகன் ஆண்மையற்றவன் என்னும் கருத்து எனது என்று நான் கூறவில்லை. வருண் சொல்வது போல் எந்தக் கருத்துக்கும் மூலம் தெரிய வருவதில்லை. அப்படி இருக்கும்போது /நம்மில் கிளர்த்தி
    வேறுபட்டதாகக் காட்டுவதற்கு கற்பனை முலாத்தைப் பூசி 'நமது'
    என்றாக்குகிறது என்பது தெரியும்/ என்று எழுதினால் அந்தக்கருத்தில் என் கற்பனை என்று ஏதும் இல்லை என்று சொல்வது போல் தெரிகிறதே,
    /ஜீவி அவர்கள் விரும்புவது போல ஜெயமோகனுக்கு இந்தப் படைப்பு காரணமாக ஞானபீட விருது கிடைத்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?/என்று கேட்டதால் அவர் விரும்புவதுபோல் என்றிருப்பதால் அவரிடமல்லவா கேட்கவேண்டும் என்று எழுதினேன் இன்னும் எப்படி விவாதிக்கலாம் சொல்லுங்கள்.

    ReplyDelete