சனி, 28 மார்ச், 2015

என்னையும் ஒரு பொருட்டாக.....


                      என்னையும் ஒரு பொருட்டாக,,,,
                      ----------------------------------------------                              


இந்த மாதம் 13-ஆம் தேதி  வெள்ளிகிழமை காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். என் வீட்டு தொலை பேசி அழைத்தது. என் மனைவி அதை எடுத்தாள். நாங்கள் அன்று மதியம் ஃப்ரீயாக இருக்கிறோமா, மதியம் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார் நிசர்கா வித்தியாநிகேதன் ப்ரின்சிபால். ஏன் எதற்கு என்று என் மனைவி கேட்க, வண்டி அனுப்புகிறோம் வாருங்கள் என்றார் அவர். இந்தப் பள்ளிக்கூடம் பற்றி ஃபெப்ருவரி மாதம் “கற்ற பாடமும் இன்ன பிறவும் “ என்னும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . எனக்கு பள்ளிச் சிறார்களைக் காண்பதில் மகிழ்ச்சி என்று அவருக்குத் தெரியும். மதிய உணவு பள்ளியில் ஏற்பாடு செய்கிறோம் என்றார். நாங்கள் மதிய உணவை முடித்துவிட்டே வருகிறோம் என்றாள் என் மனைவி. எதற்கு நம்மை கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமலேயே நாங்கள் தயாராகி விட்டோம். மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் கார் வந்தது.எங்களைக்கூட்டிப்போக. பள்ளிக்கு நாங்கள் சென்றவுடன் வாசலிலேயே ப்ரின்சிபால் எங்களை எதிர் கொண்டு அவரது ஆஃபீசுக்குக் கூட்டிச் சென்றார். எங்களை வரவழைத்ததன் காரணம் கேட்டோம். அதற்கு அவர் பிள்ளைகள் முழுப்பரீட்சைக்கு தயார் ஆகும் நிலையில் . காலையில் சரஸ்வதி பூஜை நடந்ததென்றும். மதியம் அதுவரை தேர்வுகளில் சிறந்த மாணவ மாணவிகளுக்கும் , மற்றும் விடுப்பே எடுக்காத மாணவ மாணவிகளுக்கும் பரிசு தர இருப்பதாகவும் அதை அச்சிறார்களுக்கு எங்கள் கையால் தரவேண்டும் என்றும் கூறினார். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள் பதவி ஏதும் இல்லாதவர்கள் எங்களை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதவிகளில் இருப்பவரைவிட நல்லவர்களிடம் இருந்து மாணவ மாண்விகள் ஆசி பெறுவது சிறந்தது என்று அவர் சொன்னபோது நாங்கள் நெகிழ்ந்து விட்டோம். அதுவுமல்லாமல் இன்னொரு நாள் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நான் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்தமாதிரி மரியாதைக்கு நாங்கள் தகுதி உடையவர்களா என்னும் சிந்தனையே மேலோங்கி இருந்தது.
இந்த நிகழ்வு என்னை 1967-க்கு இட்டுச் சென்றது. நான் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் வேலையில் இருந்தபோது அருகில் துவாக்குடி என்னும் கிராமம் இருந்தது( இருக்கிறது) அங்கு இருந்த ஒரு பள்ளிச் சிறார்களுக்குப் புத்தகங்களும் பேனா பென்சில்களும் இலவசமாக வழங்க மெஷின் ஷாப் பணியாளர்கள் முடிவு செய்திருந்தனர்,.அதை வழங்க என்னைக் கூப்பிட்டு விழாமாதிரி செய்தது நினைவிலாடியது. அது அப்போதைய தமிழ் தினசரி ஒன்றில் படத்துடன் வெளியானது. எந்தத் தகுதி என்னை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது என்பது எனக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. I WAS ONLY FEELING VERY HUMBLE THEN AND NOW.
வழக்கம் போல இறைவணக்கத்துக்குப் பிறகு என்னை அறிமுகப் படுத்தினார்கள்.குழந்தைகளின் முகங்களைப்பார்ப்பதே மகிழ்வாக இருந்தது. எங்களுக்கு மரியாதையாக ஒரு ஃப்ரேம் செய்த ஆஞசநேயர் படமும்  என் மனைவிக்கு பூ. பழம் அரிசி, வெல்லம் போன்றவையும் தரப் பட்டன. நாங்கள் மேடையிலிருந்ததால் எங்களால் ஃபோட்டோ ஏதும் எடுக்க முடியவில்லை. அவர்கள் எடுத்த ஃபோட்டோக்களை அஞ்சலில் அனுப்பி உள்ளனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினோம் அதை வாங்கும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது 

அன்று எடுக்கப் பட்ட சில படங்களைப் பகிர்கிறேன் 

சரசுவதி பூஜை
பள்ளியில் மேடையில் அறிமுகம்
பள்ளி விழா மேடையில்
பரிசுக்காகக் காத்திருக்கும் சிறார்கள்
சிறார்கள் இன்னொரு காட்சி.
நான் பரிசு வழங்கிய இரு சிறார்களுடன்
என்னிடமிருந்த பரிசு வாங்கிய  வேறு இரு குழந்தைகள்.
பரிசு பெற்ற இரு சிறார்களுடன்
பரிசு வழங்கிய என் மனைவியுடன் இரு மாணவிகள்
என் மனைவியிடம் பரிசு வாங்கிய  மாணவிகள் இருவர்
என் மனைவியுடன் பரிசு பெற்ற இரு மாணவிகள்
எங்களுக்கு நினைவுப் பொருட்கள் வழங்கப் படுகிறது
என் மனைவிக்குக் கூடுதலாக-அரிசி வெல்லம் தேங்காய் பழம் -கன்னட வழக்கமோ
எனக்குக் கொடுக்கப்பட்ட ஆஞ்சநேயர் படம்
    .      


33 கருத்துகள்:

  1. நாம் பெருமைப்படுத்தப்படுகிறோம் என நினைக்கும்போதே மனதிற்கு ஒருவித நிம்மதி கிடைக்கும். தாங்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு. பெருமைப்படவேண்டிய நிகழ்வு. இவை போன்ற நிகழ்வுகள் மனதில் என்றும் பதிந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //”பதவிகளில் இருப்பவரைவிட நல்லவர்களிடம் இருந்து மாணவ மாணவிகள் ஆசி பெறுவது சிறந்தது”//

    மிகவும் அருமையான தேர்வு தான்.

    படங்களெல்லாம் அழகோ அழகு !
    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ஐயா. உங்கள் இருவரின் கைகளாலும் பரிசு வாங்கிய குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். இத்தகைய சிறப்புக்கு நீங்கள் தகுதி படைத்தவர்களே. மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!..

    தங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கின்றேன் ஐயா!..

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கரங்களால் பரிசு பெற்றேர் வாழ்வில் மேன்மையடைவர்
    மகிழ்ந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
  6. நம்மையும் சரி, குழந்தைகளையும் சரி, சந்தோஷப்படுத்தும் நிகழ்வு. பள்ளித் தாளாளர் ஏற்கெனவே அறிமுகமானவரா?

    பதிலளிநீக்கு
  7. Happy to that you are honoured by the school. One becomes great by humbleness and not by any post. Congratulations.

    From my new tablet.

    பதிலளிநீக்கு
  8. Happy to that you are honoured by the school. One becomes great by humbleness and not by any post. Congratulations.

    From my new tablet.

    பதிலளிநீக்கு

  9. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பெருமைப் படுத்தப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. அதுவே இதைப் பகிரத் தூண்டியது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  10. @ கோபு சார்
    ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது படங்கள் எல்லாம் அவர்கள் எடுத்தது. அவை கிடைக்கச் சற்று தாமதம் ஏற்பட்டதால் பதிவும் தள்ளிப் போயிற்று. பாராட்டுக்கு மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு

  11. @ கீதா சாம்பசிவம்
    வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி என்று கேட்பது போல் இருக்கிறது. மிக்க நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு நிகழ்வு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  13. @ துரை செல்வராஜு
    நான் கற்றது கடுகளவு என்று நினைப்பவன் நான். என் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  14. @ கரந்தை ஜெயக்குமார். பரிசு பெற்ற சிறார்கள் வாழ்வில் வளம் பெற வேண்டிக்கொண்டோம் ஐயா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  15. @ ஸ்ரீராம்
    பரிசு பெறுவதில் பிள்ளைகளுக்கு சந்தோஷம். கொடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி
    பள்ளி பிரின்சிபால் அறிமுகமானவரே. ஃபெப்ருவரி பதிவொன்றில் எங்களைக் கூப்பிட்டு பொன்னாடை போர்த்தியதை பகிர்ந்திருக்கிறேனே. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  16. @ டாக்டர் கந்தசாமி
    The honour bestowed on us makaes us feel very humble.புதிய டாபில் இன்னும் தமிழ் பதிவிறக்கவில்லையா. பாராட்டுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  17. @ பரிவை சே குமார்
    அதுவே என்னை பகிர வைத்தது. வருகைக்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

  18. தங்கள் கையால் பரிசும், வாழ்த்தும் பெற்ற குழந்தைகள் மென்மேலும் சிறப்படைவார்கள் ஐயா.
    துவாக்குடி 1992 ல் வந்திருக்கிறேன்.
    தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் பணிச்சுமை.

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் கலந்து சிறப்படைந்த மாணவ-மாணவிகள் பரிசு பெறும் விழாவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சார். :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    ஐயா

    இவைகள் எல்லாம் மறக்கமுடியாத நினைவுகள் ஐயா... மகிழ்ச்சியடைந்தேன்..தங்களின் மனதுக்கு கிடைத்த மரியாதை...த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  21. நல்லவரை கண்டு கொண்ட நல்லவருக்கும் பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  22. தங்களைப் போன்றவர்கள் பெருமைப் படுத்தப் படவேண்டியவர்களே.சரியான நபரைத் தான் தேர்ந்டுத்து அழைத்திருக்கிறார்கள். தங்கள் அனுபவம் ஆலோசனை அறிவுரைகள் நிச்சயம் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பயன் தரக்கூடியவை

    பதிலளிநீக்கு
  23. தகுதி வாய்ந்தவர்கள் கையால் பரிசளித்து ஆசி கூறுவது ஏற்புடையதே. அந்த வகையில் எல்லாவகையிலும் தகுதி உள்ள தங்களை அழைத்து சிறார்களுக்கு பரிசளிக்க செய்த அந்த பள்ளியின் நிறுவனர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். தங்ளுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. மகிழ்ச்சி. நல்ல நிகழ்வு. அருமையான பகிர்வு. வாழ்த்துகள் sir.

    பதிலளிநீக்கு

  25. @ கில்லர் ஜி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  26. @ வருண்
    என் பகிர்வுக்கு வருகைதந்து ஊக்கமூட்டுவதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  27. @ ரூபன்
    ஆம் ஐயா மறக்க முடியாத நிகழ்வுதான். இதுவே என் அந்தகால நினைவையும் தூண்டி இருக்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  29. @ டி.என்.முரளிதரன்
    பெருமைப்படுத்தியவர்களுக்கும் அதை சுட்டிக்காட்டிய உங்களுக்கும் நன்றி முரளி.

    பதிலளிநீக்கு

  30. @ வே.நடனசபாபதி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  31. @ ராமலக்ஷ்மி
    என்றாவது வந்தாலும் நன்றாகவே வாழ்த்து கூறும் உங்களுக்கு நன்றி மேம்.

    பதிலளிநீக்கு
  32. தங்கள் நல்ல மனத்தைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். வாழ்க்கையில் துளிர்நிலையில் உள்ள மாணவக் கண்மணிகளுக்கு மகிழ்வு தரும் விஷயம் தங்களைப் போன்ற வயதிலும் அனுபவத்திலும் மூத்த நல்லோர்கள் கையால் பரிசு வாங்குவதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்? இத்தகைய பெருமைகள் தங்களைத் தேடிவருகின்றன என்றால் தாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்பதுதானே உண்மை. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும்.

    பதிலளிநீக்கு

  33. @ கீத மஞ்சரி
    வாருங்கள் மேடம். முதலில் எதற்கு அழைக்கப் பட்டோம் என்பதே தெரியாமல் போனபோது விஷயம் விளக்கப் பட்டவுடன் எங்களால் நம்பமுடியவில்லை. ஏதோநன்மதிப்பைப் பெற்றிருக்கிறோம் என்று தெரிந்தபோது மகிழ்ச்சி இருந்தது நிஜம். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு