நெஞ்சம் மறப்பதில்லை நினைவை இழக்கவில்லை
------------------------
அப்பா |
அந்தக்கால நான் 1955-ல் எடுத்தபடம் |
இன்று மார்ச் இரண்டாம் தேதி
இரண்டு மூன்று
நாட்களுக்கு முன் என் சின்ன அண்ணா அண்ணியுடன் எங்களைப்பார்க்க வந்திருந்தார்.
வந்தவர் என்னிடம் ஒரு பழைய கடிதத்தைச் சேர்ப்பித்தார். அது ஒரு இன்லாண்ட் கடிதம்
26-2- 1957 அன்று என் தந்தையார் எழுதி இருந்த கடிதம். என் அண்ணாவுக்குத் தெரியும்
என் தந்தையின் பல பழைய கடிதங்களை நான் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன் என்று.
அவர் அந்தக் கடிதத்தை என்னிடம் சேர்ப்பித்தது என் நினைவுகளைக் கிளறி விட்டது. என்
தந்தையார் அவர் வாழ்நாளில் எழுதிய கடைசிக் கடிதம் அது. ஃபெப்ருவரி 26-ம் தேதி
எழுதி இருந்தார். அவர் மார்ச் இரண்டாம் தேதி(1957) இவ்வுலகை விட்டு நீங்கினார். அவருடைய
கடைசிக் கடிதம் என் அண்ணாவுக்கு எழுதியது. நான்அப்போது பெங்களூருவில் எச் ஏ எல்
ஹாஸ்டலில் இருந்தேன். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்த்துப்
போவேன். அவர் இறப்பதற்கு முன் நான் அவரைப் பார்த்தபோது அவருக்குப் பின் நான் தான்
குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு அந்த வார்த்தைகளின்
முழுப்பொருளும் பின்னால்தான் விளங்கியது.
இந்தக் கடிதத்தின்
விவரங்கள் எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது.”அப்பா, கடிதத்தில் உங்களுக்கு வந்திருந்த
நோயின் அறிகுறிகளை விவரமாக எழுதி இருக்கிறீர்கள். இப்போதைய காலம் போல் இருதயக்
குறைபாட்டுக்கு ஏற்ற மாதிரியான சிகிச்சை முறைகள் அப்போது இருக்கவில்லை. எல்லாம்
முடிந்தபிறகு கோரோனரி த்ரோம்பாஸிஸ் என்று சொன்னார்கள். அது என்னவென்று பல
நாட்களுக்குப் பிறகே தெரிந்து கொண்டேன் உங்களை மருத்துவ மனையில் நாங்கள் பார்க்க
வந்தபோது இருந்த மன நிலையை என் வாழ்வின் விளிம்பில் என்னும் சிறுகதையில் எழுதி
இருக்கிறேன் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதன் கற்பனையே”நான் போய் விடுவேனென்று எண்ணி ரயிலடிக்கு வண்டியேற்ற வந்திருப்பவர்கள்
போலல்லவா தெரிகிறார்கள் இங்கு கூடி உள்ளவர்கள்’ரயில்
புறப்பட இன்னுமிரண்டு நிமிஷங்கள் தானிருக்கிறது’” அது வெறும் கற்பனைதான் அப்பா.
அண்ணாவுக்கு எழுதி
உள்ள கடிதத்தில் நான் உயர் பயிற்சிக்கு தேர்வு செய்யப் பட்டிருந்ததை
மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதைப் பார்க்கும் போது இப்போதும் என்மனம்
கனக்கிறது.
பதினெட்டு வயது கூட
பூர்த்தியாகத நான் என் தலையில் பெரிய பாரம் ஏற்றப் பட்டிருப்பதாக உணர்ந்தேன்
என்மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்ததால்தானே இறப்பதற்கு சில நாட்கள் முன் குடும்பப்
பொறுப்பை நான் ஏற்பேன் என்று நம்பினீர்கள். நான் என்ன செய்திருந்தால் நன்றாக
இருந்திருக்குமோ அதையே செய்தேன். நீங்கள் மறைந்தது மார்ச் மாதம் இரண்டாம் தேதி.
அம்மாவையும்(சிற்றன்னை) தம்பிகளையும்(ஐந்துபேர்) ஆறாம் தேதியே ஊருக்கு அனுப்பி விட்டேன்.
சாவுக்கு வந்திருந்த உறவினர்கள் அதற்கு என்னை கடுமையாக விமரிசித்தார்கள். அப்போது
அவர்களிடம் நான் கேட்ட ஒரே கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. “யாராவது
இக்குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் சொல்வது போல்
நான் செய்கிறேன் என்றேன். ஒருவராவது வாய் திறக்க வேண்டுமே”
ஊரில் என் சிற்றன்னையின் சித்தி ஒருத்தி மட்டுமே இருந்தாள், ஒரு வீடும் இருந்தது. அவர்களுக்குச் செலவுக்காக அப்பாவின் அலுவலக நண்பர்களும் என் நண்பர்களும் கொஞ்சம் பணம் வசூலித்துக் கொடுத்தார்கள். நான் பிச்சை எடுக்கிறேன் என்று உறவினர் துவேஷித்தார்கள். ஆனால் யாரும் எந்த பொறுப்பையும் ஏற்க வரவில்லை.
ஊரில் என் சிற்றன்னையின் சித்தி ஒருத்தி மட்டுமே இருந்தாள், ஒரு வீடும் இருந்தது. அவர்களுக்குச் செலவுக்காக அப்பாவின் அலுவலக நண்பர்களும் என் நண்பர்களும் கொஞ்சம் பணம் வசூலித்துக் கொடுத்தார்கள். நான் பிச்சை எடுக்கிறேன் என்று உறவினர் துவேஷித்தார்கள். ஆனால் யாரும் எந்த பொறுப்பையும் ஏற்க வரவில்லை.
நான் மார்ச் 22-ஆம் தேதி அம்பர்நாத் நோக்கிப்
பயணப்பட்டேன். எனக்காக புது ஷூவும் ஒரு கொசுவலையும் வாங்க ஏற்பாடு
செய்திருந்தார் அப்பா. இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடிந்து பெங்களூரு வந்தபின்
அம்மாவையும் தம்பிகளையும் அழைத்து வந்தேன் இடைப்பட்ட அந்த இரண்டு ஆண்டுகளில் என்
ஸ்டைபெண்ட் முழுவதையும் அம்மாவுக்கு அனுப்பி வந்தேன். என் செலவுக்காக அம்பர்நாதில்
இரு பள்ளிச் சிறார்களுக்கு ட்யூஷன் எடுத்தேன்
”இன்றைக்கு நீங்கள் மறைந்த நாள். நினைவுகளைக் கட்டுப்படுத்த
முடியவில்லை எல்லாவற்றையும் பதிவில் கொட்டி விட்டேன். நான் உங்களுக்காக திதி
கொடுப்பதோ நீத்தார் கடன் என்று செய்வதோ இல்லை. நீங்கள் எனக்குக்
கொடுத்துவிட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன் எனலாம்” அப்பா எனக்கு எழுதிய சில கடிதங்கள்
நினைவுப் பொக்கிஷங்களில் சில |
”அப்பாவுக்கு”
"அந்த நாள் ஞாபகம்”
இப்பதிவின் மூலம் இளம் வயதில் தாங்கள் ஏற்ற பொறுப்பை உணர முடிந்தது. இதுவே தாங்கள் பல அனுபவங்களை எதிர்கொள்ள உதவியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதங்களது அனுபவம் எங்களுக்குப் பாடமாகும், ஐயா.
எது திதி என்பது புரிகிறது. touching and down to earth.
பதிலளிநீக்குஅப்பா சொல்லி சென்ற கடமைகளை சரியாக நிறைவேற்றினதே அவர்களுக்கு நீங்கள் செய்யும் திதி.
பதிலளிநீக்குஆராதனை.
அய்யா வணக்கம்.
பதிலளிநீக்குஇன்மையின் நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தருணங்களுக்கு உதவும் சான்றுகள் நிச்சயம் போற்றப்படவேண்டியவை.
நீங்கள் காட்டும் கடிதத்தை எழுதிப்போன தங்களின் தந்தையாரின் கரங்களைக் கற்பனை செய்கிறேன்.
அவரது இருக்கை...
நெற்றி சுருங்கிய அவரது சிந்தனையை,
நேரம் பார்த்து நெருங்கிக் கொண்டிருந்த நோய்மையின் பசியை,
உட்செரித்து உலர்ந்த அவர் கடிதத்தில் படிந்த அவரது எழுத்துகளினூடே காணமுடிகிறது எனக்கு.
முகமறியாத ஒற்றை வாசிப்பில் என்னால் இவ்வளவு முடிகிறது என்றால்,
பால்யத்தின் நினைவின் மணம் சுள்ளெனப்பரவும் இப்பகிர்வின் தருணத்தில் உங்களுள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை நினைவுச் சுமையை, கால இடைவெளிகளில் மறைந்துறைந்து கிடக்கும் மௌனத்தின் அழுத்தத்தை
பீறிட்டு வார்த்தைகளின் வரம்பிற்குள் அதை உட்படுத்த முடியாமல் தோற்கின்ற எழுத்துகளாய் எதையெதையோ பார்க்கமுடிகிறது என்னால்.........!
வேறென்ன சொல்ல.?
கடமையை நிறைவேற்றியதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குகுடும்பக் கடமைகளை ஏற்றுக்கொள்வது என்பது சாதாரணமானது இல்லை. உங்கள் கடமை உணரவிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குசில கடமைகள் நம்மேல் கட்டாயமாக ஏற்றப் படுகின்றன. சில நாம் விரும்பி ஏற்கிறோம். உங்கள் அப்பாமேல் உங்களுக்கிருந்த அன்பும், மரியாதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
பதிலளிநீக்குமனதைக் கனக்க வைத்த பதிவு. என் தந்தையின் மறைவின்பின் நானும் ஒரு வெறுமையை உணர்ந்தேன்.
பதிலளிநீக்கு//// நான் உங்களுக்காக திதி கொடுப்பதோ நீத்தார் கடன் என்று செய்வதோ இல்லை. நீங்கள் எனக்குக் கொடுத்துவிட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன் எனலாம்” ///
பதிலளிநீக்குமனம் கணத்து விட்டது ஐயா
தாங்கள் செய்து வருவதுதான்
உண்மையான நீத்தார் கடன்
மனம் கனக்க வைத்தது ஐயா கடமை...
பதிலளிநீக்குபடங்கள் என்றும் பொக்கிசங்கள்...
//நான் உங்களுக்காக திதி கொடுப்பதோ நீத்தார் கடன் என்று செய்வதோ இல்லை. நீங்கள் எனக்குக் கொடுத்து விட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன்..//
பதிலளிநீக்குதங்களின் கடமையைச் சரியாக நிறைவேற்றியதே - உண்மையான அஞ்சலி!..
இன்று (மார்ச்,2) உங்கள் தந்தையின் நினைவு தினம். அன்னாரது நினைவஞ்சலியில் நானும் உங்களோடு அஞ்சலி செலுத்துகிறேன்.
பதிலளிநீக்குJust one word. Great.
பதிலளிநீக்குஇந்த பதிவு கூட ஒரு வித நீத்தார் கடன்தான்!
பதிலளிநீக்குகிட்டத்தட்ட அறுபது வருடங்களாகவிருக்கும் நிலையில் அப்பாவை நினைத்தெழுதிய வரிகள் மனம் நெகிழ்த்துகின்றன. அப்பா எழுதிய பல கடிதங்களையும் பத்திரப்படுத்தியுள்ள தங்களுக்கு அவருடைய கடைசிக்கடிதமும் கிடைத்திருப்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. அப்பாவை அவரது அன்பை, நம்பிக்கையை, வாழ்க்கையை நினைவுகூர்வதை விடவும் வேறென்ன சந்தோஷம் தரப்போகிறது திதியும் இன்னபிற சடங்கு சம்பிரதாயங்களும். நெஞ்சம் நெகிழச்செய்யும் அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
நீரில் தூக்கி எறியப் பட்டால் எப்படியாவது வெளி வரத் துடிக்கும் நிலைதான்அப்போதைய நிலை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒரு திருப்தி ஏற்படுவதே வெற்றியின் அறிகுறி. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
ஒவ்வொருவர் அனுபவங்களிலும் பாடங்களிருக்கும் ஜீ. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஏ.துரை
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ ஊமைக்கனவுகள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் நடந்த நிகழ்வுகளை அசை போடும் போது objective ஆக சிந்திக்க முடிகிறது என்றே நினைக்கிறேன் பதிவில் ஒன்று சொல்ல விடுபட்டது. என் தந்தை இறந்தபோது அவருக்கு வெறும் 49 வயதுதான்இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் வாழ்க்கையின் கதியே வேறு விதமாக இருந்திருக்கலாம். இப்படி இருந்திருந்தால் அப்படி இருந்திருந்தால் என்ற சிந்தனையே பல கற்பனைகளுக்கு ஊற்றாகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பாராட்டுதல்களுக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
என் அப்பா வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பார்த்திருப்பாரோ என்பதே சந்தேகம் நாங்கள் எல்லாம் வளர்ந்து அவரை இன்னும் நல்ல நிலையில் வைத்துப் பார்க்க முடியாதது ஏக்கம். ஆனால் அதிலும் நிறைய if சும் butsஉம் கூடவே வருகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன் அன்பானவர்களின் இழப்பு வெறுமையை உணர்த்தும் வருகைக்கு நன்றி உமேஷ்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
இருக்கும் போது உதாசீனப் படுத்திவிட்டு இறந்தபின் திதி என்பது எனக்கு உடன்பாடில்லை ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
மனம் கனத்ததன் விளைவுதான் இப்பதிவு. அவர் நினைவான கடிதங்கள் எனக்குப் பொக்கிஷம் போன்றதே. வருகைக்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
என் நிலையை உணர்ந்ததற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ தமிழ் இளங்கோ
என்னுடன் என் தந்தையாருக்கு அஞ்சலி செய்ததற்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ காரிகன்
ஒற்றை வார்த்தையில் பாராட்டியதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
இந்தப் பதிவு ஒரு நினைவாஞ்சலி. வருகைக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
புரிதல் மிகுந்த உங்கள் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது நன்றி மேடம்
பதிவைப் படித்தபோது மனதை ஏதோ செய்தது. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.’ என்பதை புரிந்து செயல்பட்ட தனயனாக தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்கள் தந்தைக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்!
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்த பதிவு சார். அதே சமயம் பல பாடங்கள் பொதிந்த பதிவு!
பொறுப்புகள் கண்டு ஓடுவதும், அதேசமயம் பொறுப்பு எடுத்துச் செய்பவர்களை விரல் சுட்டி நாவில் நரம்பில்லாமல் கருத்துக்களைக் காரி உமிழ்வதும், அள்ளி வீசுவதும் தான் இந்த சமூகத்தின் அவலத்தின் யதார்த்த நிலை. - துளசிதரன், கீதா
கீதா: //நான் உங்களுக்காக திதி கொடுப்பதோ நீத்தார் கடன் என்று செய்வதோ இல்லை. நீங்கள் எனக்குக் கொடுத்துவிட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன் எனலாம்” // சத்தியமான வார்த்தைகள் சார்....
எனது மகனும், நானும் இந்தக் கருத்தை உடைவர்கள்தான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், நான் இறந்த பிறகு எனக்காக நீ எந்தச் சடங்கும் மேற்கொள்ளவேண்டியதில்லை. அதற்கு பதிலாக இந்தச் சமூகத்திற்கு உன்னால் ஏதேனும் நன்மை செய்ய முடிந்தால் அதைச் செய். என்று. அவனுக்கும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை.
பார்த்தீகள் என்றால் நான் இதைத் சொல்லுவதில் பலரும் முரண்படலாம். எனது அனுபவத்தில் நான் கண்டது, எங்கல் குடும்பத்திலும் கூட இருக்கும் போது பெரியவர்களைச் சிறிதும் கூடக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு அவர்கள் இறந்த பிறகு மாதா மாதம் முதலில் சடங்குகள் செய்தும், பின்னர் ஒரு வருடம் கழிந்து வருடம் தோறும் தெவசம் செய்வதிலும் காட்டும் ஆர்வம் மிகவும் சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. என்ன மனிதர்கள் இவர்கள் என்று. வெகு சிலரே உயிருடன் இருக்கும் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டு பின்னர் சடங்குகளில் நம்பிக்கை யுடன் செய்பவர்கள், ஆத்மார்த்தமாகச் செய்பவர்கள்.
ஏனையோர் எல்லோருமே ஒருவித பயத்தில்தான் செய்கின்றார்கள். அதில் துளியும் உண்மையோ, ஆத்மார்த்தமோ கிடையாது.
நல்ல பதிவு சார்! நீங்கள் தங்கள் அப்பா சொன்னக் கடமைகளைச் செவ்வனே செய்த ஒரு திருப்ப்தி தங்கள் மனதில் ஒரு சந்தோஷத்தையும், நிம்மதியும் தந்திருக்குமே! எங்களுக்கு ஒரு முன்னோடி நீங்கள்!
பதிலளிநீக்கு@ வே,நடன சபாபதி
வருகைக்கும் பாராட்டுக் கருத்துரைக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசிதரன் ,கீதா
நீண்ட பொருள் பொதிந்த பின்னூட்டத்துக்கு நன்றி. பொதுவாகவே எனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. நினைப்பதைச் செயல்படுத்த இது ஒரு வாய்ப்பு/ கோவிலுக்குப் போகிறோம். தன்னிச்சையாகக் கை கூப்புகிறோம். கடவுளிடம் என்ன வேண்டுகிறோம். பொதுவாக எல்லோருக்கும் நலம் விளையத்தான் வேண்டுகிறோம். ஆனால் நம்மால் விளைவிக்கக் கூடிய நலன் களை நாம் செய்கிறோமா. நம் கடமைகளைத் தவறவிட்டுக் கடவுளிடம் அந்தப் பொறுப்பைச் சுமத்துகிறோம் நிறையவே எழுதிக் கொண்டு போகலாம் வருகைக்கு நன்றி நட்புகளே.
கருத்தை பதிவு செய்ய அழைத்தற்கு மிக்க நன்றி.இந்த பதிவு என்னை பல வகையில் பாதித்துள்ளது.என்னிடம் யாராவது உன் முதல் குரு யாரென்று கேட்டால் டக்கென்று சொல்வேன் என் அப்பா என்று. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டப் பாடம் பல.
பதிலளிநீக்குஇன்றும் மேலும் அவரது நினைவிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடமும் பல.மிக்க பொறுமையானவர்,எளிமையானவர்.அவரது மறைவிற்குப் பிறகும் அவரது நினைவே எனக்கு குருவாய் இருக்கிறது
கடைசியாகச் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
பதிலளிநீக்குதங்களுக்கு என் வணக்கங்கள்!
பதிலளிநீக்கு@ Arrow Sankar
பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் தந்தையே ஹீரோ, குரு எல்லாம். உங்கள்தந்தை மீது இன்னும் குறையாத குரு பக்தியுடன் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். பதிவுக்கு வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றிமேடம்.
இவையனைத்தும் வெறும் கடிதங்களல்ல காலத்தின் பொக்கிஷங்கள்!! தந்தைக்கு முன்னமே தெரிந்துள்ளது தான் செதுக்கிய இந்த பாலசுப்ரமணியம் சுமையென்று ஏற்காமல் கடமையாகச் செய்வானென்று.
பதிலளிநீக்குஇதுபோன்ற பொக்கிஷம் என்னிடத்திலில்லாதது குறையாகயும், தங்களின் மேல் பொறாமையாகவும் உள்ளது.
``நீங்கள் எனக்குக் கொடுத்துவிட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன் எனலாம்”
அருமையான பகிர்வு..
பதிலளிநீக்கு@ அருள் மொழி வர்மன்
பதிவில் இருந்த சுட்டிக்குச் சென்று படித்துக் கருத்திட்டதற்கு நன்றி சார்