சரஸ்வதி ஹோமம்
------------------------------
நினைத்துப் பார்க்கிறேன், அப்படி என்ன charisma என்னிடத்தில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்
அருகே இருந்த பள்ளி சிறார்களுக்குப் பரிசுகள் வழங்க அந்த நண்பர் அழைத்திருந்தார்
ஒன்பதாம் தேதி பள்ளியில்சரஸ்வதி ஹோமம் நடைபெற இருப்பதாகவும் அதில் நாங்கள்
கண்டிப்பாகக் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து எங்களைக்
கூட்டிப்போக வண்டியும் அனுப்பி இருந்தார்வலைப் பதிவர்களுக்குத் தெரியும் நான்
அப்படி ஒன்றும் பூஜை புனஸ்காரங்களில் ஈடு பாடு கொண்டுள்ள பக்திமான் ஒன்றும் அல்ல
என்று. என் மனைவிக்கு ஈடுபாடு உண்டு. அவளது சுதந்திரத்தில் நான் தடையாக இருப்பது
இல்லை. ஒரு வேளை அவள் பின்னிருக்கும் பிரபை எனக்கும் பின்னிருக்கிறதோ என்னவோ.
அன்புடன் விடுத்த அழைப்பைத் தட்ட முடியவில்லை. பூஜை வளாகம் சென்ற போது ஏற்பாடுகள்
பலமாக இருப்பது கண்டோம். என் மனைவி இந்த வெய்யில் எனக்கு ஒத்து வருமோ என்னும்
ஐயப்பாடைத் தெரிவித்தாள். வெய்யில் தாங்க முடியவில்லை என்றால் அறையில் ஃபான் கீழ்
அமர்ந்து கொண்டு ஓய்வு எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். நல்ல வேளை பிரச்சனை ஏதும்
இல்லாமல் ஹோமம் பார்க்க முடிந்தது,.பூஜையை நடத்த ஆறு புரோகிதர்கள் வந்திருந்தனர்.
சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லியபடி ஹோம குண்டத்தில் பல பொருட்களை ஆஹுதி செய்தனர்.
அது ஒரு பெரிய ஹோமகுண்டம் எனக்கு சிறு பிள்ளைகளுக்கு வரும் fantasy போல திடீரென ஹோம குண்டத்தில் இருந்து ஏதாவது பகவான் தோன்றுவாரோ என்னும்
எதிர்பார்ப்பு......! இத்தனை பேரை வரவழைத்து இவ்வளவு பணம் செலவு செய்து இந்த மாதிரி பூஜை
செய்வது அவர்களின் நம்பிக்கையின் வலிமையைக் காட்டுகிறது/ AS USUAL நான் ஸ்கெப்டிகலாக பூஜையை கவனித்துக்
கொண்டிருந்தேன்
ஹோம குண்டத்தில் ஏதேதோ மந்திரங்களைச்சொல்லிப் பல விதமான
பொருட்களை ஸ்வாஹா என்று சொல்லிப் படைக்கிறார்கள் முடியும் தருவாயில் நெய் யை ஒரு
பலகையின் வழியே நெருப்பில் ஊற்றுகிறார்கள் அது முடிந்த பின் பூர்ணாஹுதி என்று தீப
ஆராதனை காட்டுகிறார்கள் அதன் பிறகு சுமங்கலிப் பெண்ண்டிருக்குப் பாத பூஜை செய்து வெற்றிலை
பாக்கு தேங்காயுடன் ஒரு முறத்தில் அரிசி வெல்லம் கண் மை குங்குமம் போன்றவற்றுடன் புடவை ஜாக்கெட் வைத்துக் கொடுக்கிறார்கள். என்
மனைவிக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதன் பிறகு வந்திருந்தவர்களுக்கு எல்லாம்
விருந்து படைத்தார்கள் இதெல்லாம் முடிந்தபோது நாங்கள்சென்று வருகிறோம் என்று
சொன்னபோது என்னைஅழைத்து புரொகிதர்கள்"சதமானம் பவதி சதாயுஷ் புருஷ
சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி"
என்னும் ஆசிர்வாத மந்திரங்களுடன் எனக்கு ஒரு அங்கவஸ்திரம் போர்த்தினார்கள் எங்களை எங்கள் வீட்டில் கொண்டுவந்து விட காரும் ஏற்பாடு செய்தார்கள் ஞாயிறு அன்று நவ சண்டி ஹோமம் இருப்பதாகவும் நாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டது
ஒரு சில புகைப் படங்களைப் பகிர்கிறேன்
ஹோமப் பிரசாதங்கள் |
ஹோம குண்டத்தில் நெய் ஊற்றப்படுகிறது |
ஹோமகுண்டத்தில் நெய் ஊற்றப் படுகிறது, இன்னொரு கோணம் |
ஹோமகுண்டத்தை வலம் வருதல் |
ஸ்ரீசரஸ்வதி தேவி படம் |
ஸ்ரீசரஸ்வதி பூஜை |
ஆசிர்வாதப் பொருட்கள் |
ஜுவாலையில் ஸ்ரீகிருஷ்ண ரூபம் |
குருவாயூரில் ஹோமம் நடத்தும்போது அக்னியில் தெரிந்த கிருஷ்ணரூபம் என்று மலையாளத்தில் எழுதி இருந்தது.
மங்கலகரமான பதிவு..
பதிலளிநீக்குவாழ்வும் வளமும் பெருகட்டும்..
இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ஆம். சில சமயங்களில் அக்னியில் இப்படி உருவங்கள் தென்படும். நான் எடுத்த சில புகைப்படங்களில் கூட இப்படித் தென்படுவதாகத் தோன்றியுள்ளது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம் ஐயா தெய்வீகப்பதிவு புகைப்படங்கள் அருமை கடைசி அக்னி படம் உண்மையிலேயே கிருஷ்ணர் போலவேதான் இருக்கிறது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
நடப்பது கிராபிக்ஸ் யுகம் ,இந்த மாதிரி அக்னி படத்தை சின்னப் பிள்ளைங்க கூட உருவாக்கி காட்டுவார்கள் !
பதிலளிநீக்குமகர ஜோதியே தானாய் தெரிவது என்று நம்புகிறவர்கள் வேண்டுமானால் ,இதையும் அதிசயம் என்று நம்பலாம் !
தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஇது போன்று ஹோமங்களில் அக்னி பல உருவங்களில் தெரிவதுண்டு. அக்னியின் ஜ்வாலையை படம் எடுக்கும் போது என்ன மாதிரி இருக்கிறது எனப் பார்த்து சொல்வார்கள். நான் எடுத்த புகைப்படங்களில் இப்படி வந்ததுண்டு.....
Beliefs are of different kinds.
பதிலளிநீக்குநாங்க கணபதி ஹோமம் பண்ணினப்போ அதிலே பிள்ளையார் தெரிந்தார். இது மாதிரி நேருவது உண்டு. சண்டி ஹோமத்தில் துர்கை தெரிவாள் என்பார்கள். பல படங்களில் பார்த்திருக்கோம்.
பதிலளிநீக்குஇந்தப் படம் ஏற்கெனவே எனக்கு வந்துருக்கு!
பதிலளிநீக்குஹோமத்தீயில் மட்டுமில்லை எங்கே தீ எரிந்தாலும் அந்த ஜ்வாலையில் பல உருவங்கள் தெரியும். மேகத்தில் உருவம் என்று சொன்னீர்கள் பாருங்கள் அதைப்போலவே.
பல சமயங்களில் அது நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட உருவமா நம் கண்களுக்குத் தெரிகின்றன. உள் மனதில் பதிஞ்சு இருக்கும் சித்திரம் அது! குழந்தை முதலே பார்த்த சாமிப்படங்கள், விக்கிரஹங்கள் எல்லாம் எல்லாம் மனசில் கிடக்கே!
எரியும் தீயை கூர்ந்து கவனித்தால் அதிசயங்கள் காணலாம். சமயம் பார்த்து படம் க்ளிக்க முடியாது. ஸ்போட்ர்ஸ் செட்டிங் கேமெராவை செட் செய்து, ஒரே க்ளிக்கில் படபடன்னு மல்ட்டி பிக்ச்சர்ஸ் ஷூட் பண்ணிட்டு அப்புறம் ஒவ்வொன்னாப் பார்த்தால் நம் மனசுக்கும், நினைவுக்கும் ஏற்றாற்போல் உருவங்கள் தெரியும். எனக்கு கை கால்களை அசைத்து நடனமாடும் உருவங்கள் அடிக்கடி தெரியுதே! சிலசமயம் யானை போலவும். புள்ளையாருன்னு உடனே நினைச்சுக்குவேன்:-)
சர்ச்சில் போய் உக்கார்ந்துக்கிட்டு, சாமி கும்பிடும்போது, அந்த ஆல்ட்டரில் திருப்பதி பெருமாள் தரைக்கும் கூரைக்கும் இடையில் ப்ரமாண்டமாய் தெரியறாரே எனக்கு! எல்லாம் மனம் மனக்கண். வேறென்ன சொல்ல?
ஆனால் ஒன்னு நமக்குக் கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாதுன்னாலும், அது கிடைக்க முக்கியமா சாமி ப்ரஸாதமுன்னு கிடைக்க ஒரு பாக்கியம் செஞ்சுருக்கணும். அது கமலாவுக்கு இருக்கு! நல்லா இருக்கணும்.
பின் தொடர...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅவரவர் மனதில் தோன்றுவது போல் தெரியலாம்... இருந்தாலும் படம் ஆச்சரியம் ஐயா...
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
“ மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் “
பதிலளிநீக்குஎன்பான் திருமூலன்.
அடுத்தவர் நம்பிக்கைக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள் என்பது போதும்.
நெருப்பில் கிருஷ்ணன் தெரிவதுபோல சிறு வயதில் மேகத்தில் பல விலங்குகளைப் பார்த்திருக்கிறேன்.
நன்றி சார்.
பதிலளிநீக்கு@ துரைசெல்வராஜு
வருகைதந்து வாழ்த்தியதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
அக்னியில் ஏதோ உருவம் என்பதால் அதைப் பகிரவில்லை. குருவாயூர் ஹோமத்தில் தென் பட்ட கிருஷ்ண ரூபம் என்பதாலேயே பகிர்ந்தேன்.மேடம் துளசிகோபாலின் பின்னூட்டத்தையும் பார்க்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
கிருஷ்ணர் போலவே இருந்ததால்தான் பகிர்ந்தேன் ஜி. வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
பின்னூட்டமிட்டவர்களில் ஒருவராவது இதை அதிசயம் என்று கூறவில்லை ,கவனித்தீர்களா ஜி
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறதுஅறிவு பூர்வமாக சிந்தித்துப் பின்னூட்டம் எழுதி இருக்கிறீர்கள்கிருஷ்ணனையோ பிள்ளையாரையோ ராமனையோ யாராவது பார்த்திருக்கிறார்களா. அவர்களுக்கு என்று நாம் சில அடையாளங்களை கொடுத்திருக்கிறோம்வடிவங்கள் நம் மனதின் பிரதிபலிப்பே அதிசயம் என்றோ தெய்வீகம் என்றோ பகிரவில்லை. வித்தியாசமாக இருந்தது அதுவே காரணம் பல கருத்துக்கள் தெரிவித்திருக்கிறீர்கள் பலவும் தெரியாதது. என் மனைவிக்கும் இதைக் காட்டுவேன் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
படம் ஆச்சரியம் என்பதைவிட வித்தியாசமாக இருந்ததே பகிர்வின் காரணம் வருகைக்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ ஊமைக் கனவுகள்
வானத்து மேக உருவங்களை எப்போதும் பார்க்கலாம். ஆன்கிலத்தில் ஒரு சொல் வழக்கு ஒன்று உண்டு “As the fool thinketh the clock clicketh" வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
நம்பிக்கைகளுக்கு முகாந்திரமே தேவையில்லை போலிருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நம் மனம் கொடுத்த உருவே கடவுள்களுக்கு. அதேபோல் நாம் நினைக்கும் உருவங்கள் மேகங்களிலோ அக்னியிலோ காணலாம் துளசி கோபாலின் பின்னூட்டம் படித்தீர்களா. வருகைக்கு நன்றி மேடம்
ஆன்மீக நம்பிக்கை இல்லாவிட்டாலும் மனைவிக்காகச் சென்று கலந்துகொண்டு போஸ்ட் போட்டுள்ளது அருமை சார். வாழ்த்துகள். !
பதிலளிநீக்குநம்பிக்கைகள் வேறுபட்டாலும் எண்ணங்கள் ஒன்றுபட்டால் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை. இங்கும் உங்கள் இருவருக்குள்ளும் அந்த அழகான புரிதலைப் பார்க்கிறேன். அந்தப் புரிதல் பற்றி அறிந்தவர்களாக இருப்பதால்தான் பள்ளி நிர்வாகத்தினர் தங்களுடைய நல்ல காரியங்கள் ஒவ்வொன்றுக்கும் தங்களை முன்னிலைப்படுத்த அன்போடு அழைக்கின்றனர். இருவருக்கும் இனிய வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குயாகத்தீயில் தெரியும் உருவம் பற்றி பலரும் சொல்லிவிட்டார்கள். எனக்கு அது தொடர்பான அனுபவம் எதுவும் இல்லை என்றாலும் துளசி மேடம் சொல்வது போல் மனமே அனைத்தையும் தீர்மானிக்கிறது.
தாங்கள் குறிப்பிட்டுள்ள படத்தில் நெருப்பை மட்டும் பார்த்தால் எதுவும் தெரியவில்லை. அருகிலிருக்கும் கண்ணன் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் உருவம் புலப்படுகிறது. இது மாதிரியான அனுபவங்களில் புலன்களை விடவும் மனமே பிரதானப் பங்கு வகிக்கிறது என்பேன்.
பதிலளிநீக்கு@ தேனம்மை லக்ஷ்மணன்
அழைப்பை ஏற்று வருகை புரிந்ததற்கு நன்றி மேடம் ஆன்மீக நம்பிக்கை என்றால் என்ன என்னும் கேள்வியைக் கிளப்பி விட்டது உங்கள் பின்னூட்டம் வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
எங்களை நன்றாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி. நெருப்பை மட்டும் பார்த்தால் எதுவும் தெரிவதில்லை. படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உருவம் புலப்படுகிறது என்னும் கோணம் ரசிக்க வைக்கிறது, யாரும் நினைத்துப் பார்க்காதது. பாராட்டுக்கள்மேடம்
நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதுவே தெரியும் என்பார்கள். ஒருவேளை பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தை பொறுத்ததோ என்னவோ!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வே.நடன சபாபதி
வாருங்கள் ஐயா. பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் ஒரு நிம்மதியைத் தருகிறது யாரும் அது ஆண்டவனின் அருள் என்று கூறவில்லை. வருகைக்கு நன்றி.
***ஒன்பதாம் தேதி பள்ளியில்சரஸ்வதி ஹோமம் நடைபெற இருப்பதாகவும் அதில் நாங்கள் கண்டிப்பாகக் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து எங்களைக் கூட்டிப்போக வண்டியும் அனுப்பி இருந்தார்வலைப் பதிவர்களுக்குத் தெரியும் நான் அப்படி ஒன்றும் பூஜை புனஸ்காரங்களில் ஈடு பாடு கொண்டுள்ள பக்திமான் ஒன்றும் அல்ல என்று. என் மனைவிக்கு ஈடுபாடு உண்டு. ***
பதிலளிநீக்குசரஸ்வதி ஹோமம் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் நடத்துவாங்களா சார்? இல்லைனா பலவருடங்களுக்கு ஒரு முறையா?
தங்களது அனுபவங்கள், எங்களுக்குப் பாடங்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வருண்
சரஸ்வதி ஹோமம் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் நடத்துவார்களா என்பது எனக்குத் தெரியாதுநான் அது பற்றிக் கேட்கவும் இல்லை. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அது பாடமாக இருந்தால் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி ஐயா.
உங்களுக்குக் கிடைத்த புகைப்படத்தில் தோன்றும் கிருஷ்ண வடிவம் உண்மையானதல்ல என்று நம்புகிறேன். கேரளத்தில் ஒவ்வொரு கோவிலும் தங்களை வளப்படுத்திக்கொள்ள பல்வேறு மோசடிப் பழக்கங்களில் ஈடுபடுவது தெரிந்ததே! சபரிமலையில் மகரஜோதி தோன்றுவதாக ப் பல ஆண்டுகள் மக்களை ஏமாற்றிவந்ததை அவர்களே ஒப்புக்கொண்டார்களே! கர்ப்பக்ருகத்தில் ஒரு நடிகை நுழைந்துவிட்டதாக ஒரு ஜோதிடர் கிளப்பிய புரளியையும் நாம் மறக்க முடியுமா? கேரளாவில் இதெல்லாம் சகஜம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இம்மாதிரி அக்னியில் ரூபங்களைக் கண்ட அனுபவங்களும் ப்ராபபிள் காரணங்களும் பதிவாயிருக்கின்றன.சபரிமலை எபிசோட் வேறு இது வேறு. வருகைக்கு நன்றி ஐயா.
இப்பதான் ஒரு ஆர்ய சமாஜ ஹோமம் நடக்கும் இடத்துக்குப்போய் வந்தோம். அக்னியில் உருவங்கள் நடனமாடின.
பதிலளிநீக்குஅதுவும் ஒவ்வொரு முறை நெய் ஊற்றும்போதும் எழுந்து நின்னு ஆடின! நாலு பக்கங்களிலும் நாலு பேர் அமர்ந்து நெய் விடும்போது விசித்திரமான உருவங்கள் தெரிஞ்சது. தோழியின் அப்பா சில மாசங்களுக்கு முன் இறந்துட்டார். அவர் நினைவுக்காக நடந்த பூஜை என்பதால் கேமெரா கொண்டு போகலை நான்.
ஆனால்.... மனசில் உங்க பதிவு வந்து போனது உண்மை.
பதிலளிநீக்கு@ துளசிகோபால்
ஏற்கனவே நான் பதிவிட்ட படம் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆர்ய சமாஜ ஹோமத்தில் அக்னிப்பிழம்புகள் நடனமாடிய போது என் பதிவு உங்க்ள் மனசில் வந்து போனது ஒரு நிறைவைத் தருகிறது. மீள் வருகைக்கு நன்றி மேடம்
சார் இது போன்று அக்னியில் உருவம் தோன்றுவது என்பதெல்லாம் அவரவர் மனத்தில் உள்ளவையே அல்லாமல் வேறு இல்லை. மேகத்தில் கூட பல உருவங்கள் தோன்றும்....ஆனால் அவை நகர நகர கலைந்து விடும்...மாறும். இதே போன்று மழை நீரில் பாபா தோன்றினார் என்று சொன்னார்கள்...இதெல்லாம் அவரவர் மனச் சிந்தனைகளே.
பதிலளிநீக்கு(கீதா: நான் எடுத்த புகைப்படங்களில் கூட என் கண்ணுக்குத் தென்படாத உருவங்கள் என் உறவினர்களுக்குத் தென்பட்ட்டதுண்டு. ...பால் ஆத்தும் போது அந்த நுரையில் கூட சில நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்திருந்த பாபா டிவொட்டிக்கு அதில் சீரடி பாபாவின் உருவம் தெரிந்தது. இவை சுத்த ஹம்பக் என்றாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது அவர்கலது நம்பிக்கை.என்று சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு)