Monday, April 20, 2015

போராட்டங்கள் ஒரு அலசல்


                              THE ANATOMY OF BANDH AND HARTAL
                              ---------------------------------------------------
-

வலை நண்பர் திரு. வே/ நடன சபாபதி அவர்கள் கடவுளின் நாடும் கடையடைப்பும் என்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தார். ஒவ்வொரு செயலுக்கும் சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும் கட்சித் தலைவர்களோ அல்லது யாராவது முக்கியஸ்தர்களோ கடை அடைப்புக்கு அறைகூவல் விடுக்கின்றனர் என்றால் அதை முடித்துக் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. இந்தக் கூட்டத்தின் அடிப்படைக் குணங்களை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் இந்த மக்கள் ஜனநாயக நாட்டில் எந்த இரு தலைவருமே கொள்கைகளில் ஒத்துப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு தலைவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வேலை இல்லாதவர்களும் பொறுப்பு என்பது ஏதும் இல்லாதவர்களுமே இந்தக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் இவர்களில் பெரும்பாலோனோர்  கூலிக்கு மாரடிப்பவர்களே ஒரு அரசியல் தலைவன் பேசுகிறான் என்றால் அதற்குக்கூட்டம் சேர்ப்பது முதல் கோஷம் போடுவதுவரை ஏற்பாடு செய்ய அல்லக் கைகள் இருக்கிறார்கள் மீறி இவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்காவிட்டால் அங்கு வன் முறை வெடிக்கும் பெரும்பாலும் இம்மாதிரி வன்முறைகளுக்குப்பயந்தே முழுநேர அடைப்புகள் நடக்கின்றன இவர்கள் நாடுவது அல்லது குறி வைப்பது யாரை மற்றும் எப்படி என்பதை யோசித்துப் பார்த்ததில் எழுந்த எண்ணங்களே இந்தப் பதிவின் சாராம்சம்
                         
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது , தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ  எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய  போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம். இப்போது  அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் . போராட்டம் என்றாலே  ஏதோ   மனக்கசப்பை திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
                    
வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க  இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் , ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  நிலையை விட   தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன .
                    "
நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே  வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற  வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்   முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்   கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது . பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில்  பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
                இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்க்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய  பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்  இருப்பவன் முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
                
ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில்  உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு   இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும்  இருப்பது சமூக  நிலையா  ?
               
காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப்  பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்   வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள்  வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள்
              
தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் , எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம்  இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும் .
            
சாதி  அடிப்படையில்  ஒதுக்கீடு  கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான்  தோன்றுகிறது .
            
கல்வியறிவும்   வாழ்க்கையின்  தரமும்  உயரும்போது சாதிகள் தானாகவே  மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன்  மேலும் மேலும் அதே அடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு  ஒதுங்கி வழி விட வேண்டும் .ஆனால் நடை முறையோ வேறு விதமாக உள்ளது .
             
வாழ்க்கைச் சக்கரம்  உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி  காலத்தில் சமூகத்தை  நான்கு  வர்ணங்களாகப் பிரித்து  அவரவர்களுக்கு  இன்ன  வேலை என்று
பகுத்தளிக்கப்பட்டு  இருதது.----- க்ஷத்ரியர்கள்  பிராமணர்கள்  வைசியர்கள்  சூத்திரர்கள் ---மனித குணம்  எப்போதுமே மற்றவனை  அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில்  க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும்   சக்தி  உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும்  இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள் ( மதகுருக்கள் ) அரசர்களுக்கே  அறிவுரை சொல்லி அதன் மூலம் மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் . பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS)
கை  ஓங்கி எல்லா சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள் இன்னும்  வாழ்ந்துகொண்டும்  இருக்கிறார்கள் .வாழ்க்கையின்  சுழற்சியில்  எஞ்சி நிற்பவன் சூத்திரனே ..அவனுக்குள்ள  வாய்ப்பும் கிடைக்கத்தானே  வேண்டும் ! ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்  சாதியின் அடிப்படையில்  மட்டுமல்ல  வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில்  அவர்கள் மேலே வரும்  காலம்தான்  நிகழப்போவது ,
              
போராட்டங்களின்  முடிவு  ஒரு நல்ல தீர்வுக்கு  மக்களை  கொண்டுபோகுமானால்  அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள்  எதற்கு  போராடுகிறோம்   யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து    மந்தை குணம் நீக்கி   சிந்திக்க  தொடங்குவார்கள்  என்று நம்புவோம் 
.கர்நாடகாவில் 18-04-2015 அன்று மேகதாத்து அணை அமைக்க வலியுறுத்தி ஒரு முழு கடை அடைப்பு நடந்தது. நாளை இந்த அணைக்கட்டு வரக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு முழு அடைப்பு நேரலாம் பொது மக்களில் எத்தனை பேருக்கு இந்த முழு அடைப்பின் காரண காரியங்கள் தெரியும் .அடிப்படை விளைவுகளுக்கான காரண்ங்களை நான் அறிந்தவரை கூறி இருக்கிறேன்  
                                              ------------------------------------------ --------------             


32 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நல்ல விடயத்துக்கு செய்தால் நல்லது.. அருமையாக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. மேகதாது அணை கட்டக்கூடாது எனத் தமிழகம் போராட்டம் நடத்திக் கடை அடைப்பு செய்ததைப் பார்த்த பின்னரே கர்நாடகாவில் அரங்கேற்றினார்கள். ஆகவே தமிழகம் தான் முன்னோடி இதிலே! அதிலே சந்தேகமே இல்லை! :)))))

  ReplyDelete
 3. இன்னமும் அணை கட்ட சுற்றுச் சூழல் அமைப்போ, அந்த அமைச்சரகமோ, அல்லது மத்திய அரசோ அனுமதி அளிக்கவில்லை. வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது. அதற்குள்ளாக இங்கே தமிழகத்தில் அணையே வந்து விட்டது போல் போராட்டங்களை அரசியல்வாதிகள் நடத்துகின்றனர். கர்நாடகாவிலும் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்கின்றனர். மொத்தத்தில் நடுவில் மாட்டிக் கொண்டு அவதிப்படும் ஜனங்கள் பாடு தான் கஷ்டம். :)))

  ReplyDelete
 4. //ஆதி காலத்தில் சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்து அவரவர்களுக்கு இன்ன வேலை என்று
  பகுத்தளிக்கப்பட்டு இருதது.----- க்ஷத்ரியர்கள் பிராமணர்கள் வைசியர்கள் சூத்திரர்கள்//
  அப்படி எல்லாம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. பகுத்தும் அளிக்கப்படவில்லை. அவரவர் தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கேற்ப அந்த அந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். க்ஷத்திரிய குலத்தில் பிறந்த விஸ்வாமித்திரர் பின்னர் பிரம்மத்தை அறிந்த பிராமணனாக மாறியது அதன்படி தான். யார் வேண்டுமானாலும் தவங்கள் செய்து பிரம்மத்தை அறிந்து பிராமணனாக மாற முடியும். பிராமணன் என்பது இப்போது தான் ஜாதியாக ஆகிவிட்டிருக்கிறது. :)

  ReplyDelete

 5. வணக்கம் ஐயா அருமையானதொரு மனஓட்டத்தை அழகாக விவரித்து இருக்கிறீர்கள் அடைப்பு எதற்க்கு ? அதன் காரணம் என்ன ? என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதனே இதை முன் நின்று நடத்துகிறான் அவர்கள்தான் தாங்கள் சொல்லும் கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்லக்கைகள் இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஜடங்கள் ஆனால் பயங்கரவாதிகள் இந்தவகையான அறியாமைவாதிகளால் பணக்கார வர்க்கங்களுக்கு லாபம் நடுத்தர வர்க்கம் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றது 80 உண்மையே.

  ReplyDelete
 6. போராட்டங்கள் நடத்துவதினால் அவர்கள் சொல்லும் குறிக்கோள் நிறைவேறுகிறதா என்பதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. போராட்டங்கள் ஒரு கட்சி அல்லது தலைவனின் பலத்தைக் காட்டவே நடத்தப்படுகின்றன.

  போரட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அன்றையப் பொழுதிற்கான கூலி கிடைத்து விடும். அது போதும் அவனுக்கு. அவனே பல கட்சிகளின் போராட்டங்களிலும் கலந்து கொள்வான். அவனுக்கு கொள்கை கிடையாது.

  வர்க்கப்போராட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இன்று கோயமுத்தூரில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். அதை ஒழுங்காக செலவழித்து சேமித்தால் அந்தக் குடும்பம் முன்னேற முடியும். ஆனால் அவர்கள் செய்வதோ டாஸ்மாக் போவதுதான். இதை அவர்க்ளின் சமூகத்தலைவனும் கண்டுகொள்ள மாட்டான். அவனை அந்த நிலையிலேயே வைத்திருந்தால்தான் அந்தத் தலைவனின் பிழைப்பு ஓடும்.

  இன்னும் பல அவலங்கள் இந்த சமூகத்தில் இருக்கின்றன. அவைகளைத் திட்டமிட்டு அரசியல்வாதிகள் வளர்க்கிறார்கள். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும்.

  ReplyDelete
 7. அரசிடமிருந்து சலுகைகள் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பெறலாம் ; எப்போது என்பதற்கான ஆப்ஷனை பெறுபவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இருக்கலாம்!

  தமிழகத்தில்தான் அந்த அணைக்கட்டு சம்பந்தமாக முதலில் போராட்டம் நடந்தது. இப்போது அவர்கள் செய்திருப்பது பதிலுக்கு பதில்தான்.

  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கர்நாடகம், கேரளம், ஆந்திரம் என்று எல்லோருமே ஏதோ ஒரு வகையில் படுத்துகிறார்கள். மத்திய அரசும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை நாடு நிலையோடு அணுகுவதில்லை. வாக்கு வங்கி அரசியல்தான் நடக்கிறது நாடு முழுவதும்.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. போராட்டங்கள் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான ஒரு வழிமுறை தான். எதற்கானது,யார் முன்னெடுப்பது என்பதிலே தான் அந்த முன்னேற்றம் தொக்கி நிற்கிறது . இந்தக் கட்டுரை தொட்டுச் செல்லும் வர்ணாஸ்ரமம் முதலியவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது.

  ReplyDelete
 10. அரசியல் கட்சித்தலைவர்களின் சுயநலம் காரணமாகவே பந்த்கள் நடைபெறுகின்றன. மக்களில் எவரும் இவற்றால் பயன்பெற்றதில்லை. கர்நாடகத்தைப் பொறுத்தவரையில், வாட்டாள் நாகராசுக்கு 'உரிய மரியாதை' எய்தால் போதும், ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்துத் தமிழர்களுக்கு எதிராகப் போராட்டம் நிகழ்த்திவிடுவார். ஆனால் அவருடைய போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் நூறு பேருக்கும் குறைவானவர்களே என்பதை நான் பலமுறை நேரில் கண்டிருக்கிறேன். கன்னட மீடியாக்கள் அவரைக் கைப்பாவையாகப் பயன்படுத்துவதாக அறிஞரகள் கருதுவர். தமிழ்நாட்டில் அம்மாதிரி யாரும் இல்லை. முக்கிய எதிர்க்கட்சிகள் தாமாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன. கோமாளிகளை கூலிக்கு மாரடிக்கக் கூப்பிடுவதில்லை. எப்படியிருந்தாலும், பாதிக்கப்படுவதென்னவோ, பெங்களூரில் உள்ள அன்றாடம் காய்ச்சிகளான தமிழர்களே.-இராய செல்லப்பா, சென்னை.

  ReplyDelete
 11. தன்னெழுச்சியில்லாத கூலிக்காகக் கூடிக்கலைகின்ற கூட்டங்களால் எந்த நிரந்தமான விளைவும் ஏற்படப் போவதில்லை என்பதே உண்மை.

  ReplyDelete
 12. அனைத்துமே அரசியலாகிவிட்டது ஐயா

  ReplyDelete
 13. முதலில் மந்தை குணம் நீங்கி தெளிவு பெற வேண்டும் என்பது சரி தான் ஐயா...

  ReplyDelete
 14. பல மாற்றங்கள் போராட்டங்களால் நிகழ்ந்துள்ளன. எடுத்ததற்கெல்லாம் போராட்டம் போராட்டத்தின் பயனை குறைத்து விடும். பொது மக்களுக்கு பாதிப்பு உண்டாக்குவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வதும்தான் போராட்டத்தின் வெற்றி என்று கருதப் படுகிறது. ஆனால் அப்படி செய்தால்தான் அரசாங்கமும் கண்டு கொள்கிறது. இல்லையெனில் நியாயமான கோரிக்கைகள் கூட செவிமடுக்கப் படுவதில்லை

  ReplyDelete
 15. // போராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டுபோகுமானால் அது வரவேற்கத்தக்கதே .//
  ஆனால் இந்த போராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வைத் தரக்கூடாது என்பதுதான் போராட்டத்தை தூண்டுவோரின் குறிக்கோள். இல்லாவிடில் மாதாமாதம் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி போராட்டத்தைத் தூண்டுவார்களா? நீங்கள் சொன்னது போல் கல்வியறிவும் வாழ்க்கையின் தரமும் உயரும்போது சாதிகள் மட்டுமல்ல இந்த மந்தை ஆடுகள் குணமும் மறையும் என நம்புவோம்.

  ReplyDelete

 16. @ ரூபன்
  போராட்டங்கள் நல்ல விஷயத்துக்கு செய்தால் நல்லது என்கிறீர்கள் நல்லது அல்லாதது என்று வகை பிரித்துப்பார்க்கும் சக்தியற்றவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள்நல்லவிஷயத்துக்கான போராட்டங்கள் பெரும்பாலும் spontaneous ஆக இருக்கும் . யாருடைய தூண்டுதலும் தேவை இல்லை வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 17. @ கீதா சாம்பசிவம்
  முன்னர் தமிழகம் பின்னர் கர்நாடகம் எப்படியானாலும் அவதிக்குள்ளாவது பொது மக்களே வருகைக்கு நன்றி மேட்ச்ம்

  ReplyDelete

 18. @ கீதா சாம்பசிவம்
  மாநில அரசுகள் மத்திய அரசு என இருக்கின்றனஒருவரை ஒருவர் கன்வின்ஸ் செய்ய வேறு பல முறைகள் இருக்கின்றன. எதற்காகவும்போராடத்தூண்டும் அர்சியல்வாதிகள் தாங்களை நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள்இதில் ஈடுபடும் பொதுமக்களின் அறியாமைக்கான காரணங்களைக் காட்டவே இப்பதிவுவருகைக்கு நன்றி.

  ReplyDelete

 19. @ கீதா சாம்பசிவம்
  நான் குறிப்பிட்ட வர்ணபேதங்கள் ஒரு சாரார் மற்றவரை அடக்கி வைக்க உதவியது என்பதே கருத்து.ஆனால் ஏற்ற தாழ்வுகளுக்கு அங்குதான் வித்து விதைக்கப் பட்டது என்பதே என் துணிபு. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி
  வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளே மக்களின் மந்தைகுணத்துக்கு அடிப்படைக்காரணம் என்பதை விளக்கவே இப்பதிவு வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 21. @ டாக்டர் கந்தசாமி
  நடக்கும் அவலங்களைக் கூறி இருக்கிறீர்கள் வர்க்கப் போராட்டத்துக்குக் காரணமே வர்க்கங்களின் இருப்புதானே வர்க்க பேதமில்லாத சமுதாயத்தில் இம்மாதிரி ‘இம்; என்றால் போராட்டம் ‘உம்’ என்றால் போராட்டமென்று இருக்காதுஅடிப்படைக் காரணங்களை ஓரளவு அலசவே இப்பதிவு.

  ReplyDelete

 22. @ ஸ்ரீராம்
  நான் கர்நாடகா பந்த் பற்றிக் கூறியதே ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் வாக்கு வங்கி அரசியலோ வேறெதுவும் ஆகட்டும் மக்கள்தானே பலி ஆடுகள். ஏன் என்பதன் காரணம் பற்றி ஓரளவு அலசுவதே என் குறிக்கோள். வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 23. @ மோகன் ஜி
  / போராட்டங்கள் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான ஒரு வழிமுறை தான். எதற்கானது,யார் முன்னெடுப்பது என்பதிலே தான் அந்த முன்னேற்றம் தொக்கி நிற்கிறது . இந்தக் கட்டுரை தொட்டுச் செல்லும் வர்ணாஸ்ரமம் முதலியவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது./போராடிப் பெறுபவன்தன் அடிப்படை உரிமைகளோ தேவைகளோ புறக்கணிக்கப்படும் போது spontaneous ஆக வீரிட்டு எழவேண்டும் எழுவான் உ-ம் டெல்லியில் ஒரு பெண் சீரழிக்கப் பட்ட போது நடந்தது ஆனால் எதற்காகப் போராடுகிறோம் எனும் அடிப்படைச் சிந்தனையே இல்லாமல்போராட்டத்தில்குதிக்கும் மக்கள் மந்தை குணம் உள்ளவர்கள். ஆதிக்க சக்திகளால் exploit செய்யப் படுபவர்கள். அவர்களின் ஆழ்மன நிலையை ஓரளவு விளக்க முயன்றிருக்கிறேன்நான் சிந்தித்து தெளிவு பெற்றவரை இதன் ஆணிவேர் வர்ணாசிரம் பேதங்களில் இருக்கிறது. கல்வி அறிவு மறுக்கப்பட்டவர்கள் எங்கும் சம வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆழ்மனதில் குமைந்து கிடக்கும் கையாலாகத்தனத்துக்கு அடிமையாகி சொல்வார் பேச்சைக் கேட்டு தங்களது குறைகளுக்கு வடிகாலாக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் இப்போது எல்லோருக்கும் கல்வி என்பது சாத்தியமானாலும் சம வாய்ப்பு இல்லாததால் தேங்கியே கிடக்கிறார்கள். என் சில பதிவுகளில் இதற்குத் தீர்வாக அனைவருக்கும் பேதமில்லாக் கல்வி இலவசமாக சீருடை இலவசமாக. மதிய உணவு கட்டாயமாக இலவசமாக வழங்கப்பட்டால் நம் அடுத்த தலைமுறையினராவது சிந்தனைகளில் ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாய உறுப்பினர்களாக வளர வாய்ப்பிருக்கிறது வருகைக்கு நன்றி ஜீ.

  ReplyDelete

 24. @ செல்லப்பா யக்ஞசாமி

  வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 25. @ ஊமைக்கனவுகள்
  போராட்டங்களால் நன்மையா தீமையா என்பது பற்றி நான் பேசவில்லை அவற்றின் அடிப்படைக் காரணாண்ங்களைக் கண்டாராய்வதே இப்பதிவின் நோக்கம் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ கரந்தை ஜெயக்குமார்
  அனைத்தையும் அரசியலாகவே சிந்திக்கிறோம் ஐயா ஈடுபடும் பலருக்கும் சிந்தனைத் தெளிவு இல்லை என்பதே யதார்த்தம் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 27. @ திண்டுக்கல் தனபாலன்
  மந்தைக் குணம் நீங்க அனைவருக்கும் ஏற்றதாழ்வுஇல்லாத சம கல்வி வாய்ப்பு வழங்கப் படவேண்டும் வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 28. @ டி.என். முரளிதரன்
  போராட்டம்சரியா தவறா என்று எழுதவில்லை அடிப்படைக்காரணாண்ங்கள் பற்றிய பதிவு இது வருகைக்கு நன்றி முரளி.

  ReplyDelete

 29. @ வே.நடனசபாபதி
  சரியான புரிதலுக்கும் மேலான பின்னூட்டத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 30. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
  பாரிசில் பட்டிமன்ற தர்பார்
  http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
  வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 31. சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான் தோன்றுகிறது .// மிக மிகச் சரியே! எல்லாவற்றிலும் சாதி குறிப்பிடச் சொல்லித்தான் கேட்கின்றார்கள் குறிப்பாக அரசு அப்ளிகேஷன்களில்....

  போராட்டம் என்பது நல்லதொரு முடிவைத் தருமானால் நல்லதே. ஆனால் நம்மூரில் போராட்டம் என்பது மக்களுக்கு எந்தப் பயனும் பெற்றுத் தருவதாக அமைவதில்லையே சார்...

  போராட்டம் என்பது அமைதி வழியில் நடந்தது என்றால் பரவாயில்லை.....கடைகளை உடைத்தல், பஸ்ஸை எரித்தல், அடித்தல் போன்றவை அமைதியைக் கெடுக்கின்றதே அல்லாமல் வேறு எந்தாபயனும் இல்லை...

  போராட்டங்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடர்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி ஹர்த்தால்,பந்த் என்று வரும் போது ஒரு எமர்ஜென்சி மருத்துவம் கூட கிடைப்பதற்கு வழியில்லாமல், எத்தனை நோயாளிகள் கஷ்டப்படுகின்றார்கள்...

  எப்படி நோக்கினாலும் அவதிப்படுபவர்கள் சாதாரண மக்கள்தான்...

  வருணம் கூட சரியல்ல சார்...அப்படி என்றால் சூத்திரன் என்பவர் யார்? பிராமணர்கள் என்று சொல்லப்படுபவர்களும் நடத்தைக் கெடும் போது அவர்களை சூத்திரர்கள் என்று அழைக்கலாம் தானே சார்? முடியுமா? ஏற்பார்களா? அப்படி என்றால் அங்கு ஏற்றத் தாழ்வு வந்து விடுகின்றதல்லவா...எனவே வருணம் என்பதும் சரியல்ல...

  வருணம் என்பதும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கத்தான் செய்தன. சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களின் வேலை என்ன என்பது தெரியும்...அப்பொது அவர்களை இந்த ஷத்ரியர்கள், வைசியர்கள், பிராமணர்கள் எல்லோரும் அவர்கள் தொழிலைக் கொண்டு மிகவும் கேவலமாக நடத்திய நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே வர்ணாச்சிரம தர்மம் எனப்தும் சரியல்ல என்பது எங்கள் தாழ்மையான கருத்து.....

  ReplyDelete

 32. @ துளசிதரன் தில்லையகத்து
  உங்கள் பின்னூட்டத்தில் நடத்தை கெட்டவர்கள் சூத்திரர்கள் என்னும் பொருள் தொக்கி நிற்கிறதுவருணாசிரமம் நடத்தையால் தீர்மானிக்கப் படவில்லை. செய்யும் தொழிலால் பிரிக்கப் பட்டார்கள் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுத்ததால் ஏற்ற தாழ்வுகள் உருவாயின. இதுவே நம் சமூக அவலத்தின் மூல முதல் காரணம். என் பதிவில் போராட்டங்களுக்கான காரணங்களைஅலசி யிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete